Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் கைது

Featured Replies

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் கைது

 
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் கைது
 

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 777 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி எனவும் ஏனையவர்கள் சாதாரண சிப்பாய்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தில் தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஒரே நாளில் அதிகளவானோர் கைது செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும் எனவும் இராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

http://newuthayan.com/story/20934.html

  • தொடங்கியவர்

சேவையில் இருந்து தப்பியோடிய 4300 இற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் கைது.!

 

 

மீண்டும் பணிக்கு திரும்பாதிருந்த 4300 இற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 777 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

அதன்படி தற்போது வரை சேவையில் இருந்து தப்பிச் சென்றிருந்த 4377 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முப்படைகளையும் சேர்ந்த 5000 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாதுகாப்பு பிரிவின் தரவுகளுக்கு அமைய முப்படைகளையும் சேர்ந்த 36,000 இற்கும் அதிகமானவர்கள் பணியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்து சட்டமுறைப்படி பணியில் இருந்து விலக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/23369

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.