Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்படுகிறது'': இன்ஸ்டாகிராமில் வருந்திய கோலி

Featured Replies

''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்படுகிறது'': இன்ஸ்டாகிராமில் வருந்திய கோலி

''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது'': இன்ஸ்டாகிராமில் வருந்திய கோலிபடத்தின் காப்புரிமைVIRAT.KOHLI

இந்தியாவில் உள்ள சமூக ஊடகங்களில், பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டே சிரமப்பட்டு வீட்டுப்பாடத்தை படிக்கும் காணொளி மிகவும் வைரலாக பரவிவரும் நிலையில், இந்த காணொளி குறித்து தன்னுடைய அதிர்ச்சியை, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களான வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்றவற்றில் ஒரு குழந்தை அழுது கொண்டே சிரமப்பட்டு வீட்டுப்பாடத்தை படிக்கும் காணொளி பரவி வந்தது.

''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது'': இன்ஸ்டாகிராமில் வருந்திய கோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதில், குழந்தைக்கு பாடம் சொல்லித் தருபவர் குழந்தையை மிரட்ட, குழந்தை அழுது கொண்டே நோட்டில் எழுதப்பட்டிருக்கும் எண்களை மீண்டும் மீண்டும் படிக்கிறது.

ஒருகட்டத்தில், அழுகையும், கோபமுமாக கலந்து மறந்து போகும் எண்களை சத்தமாக படிக்கிறது குழந்தை. இந்த காணொளியின் ஒரு பகுதியை இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராட் ஜாீகோலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு செய்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

The fact that the pain and anger of the child is ignored and ones own ego to make the child learn is so massive that compassion has totally gone out of the window. This is shocking and saddening to another dimension. A child can never learn if intimidated. This is hurtful.

கோலி பதிந்த காணொளியை இதுவரை 2.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்பட்டு, குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஒருவரின் சுயநலமே மேலோங்கி இருக்கிறது என்றும், இரக்கம் என்பதே தற்போது ஜன்னலுக்கு வெளியே மொத்தமாக போய்விட்டது என்றும் கோலிகுறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு பரிமாணத்தில் இந்த காணொளி தனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துவதாகவும், ஒரு குழந்தை மிரட்டப்பட்டால், ஒருபோதும் அதனால் கற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india-40991414

  • தொடங்கியவர்

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ: குழந்தை படிக்காததால் தாய் அடித்தார் - நியாயப்படுத்தும் உறவினரும் பாடகருமான டோஷி சாப்ரி

 

 
24chkanSharib-Toshi-Sabri

தன்னை அடித்த தாயிடம் கெஞ்சும் குழந்தை, உறவினரும் பாடகருமான டோஷி சாப்ரி.

படிக்காமல் அடம் பிடித்ததால்தான் எனது உறவினர் தனது குழந்தையை அடித்தார் என பாடகர் டோஷி சாப்ரி நியாயப்படுத்தி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் ஒரு வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் 3 வயது பெண் குழந்தையை தாய் படிக்க வைக்கிறார். அப்போது அந்தக் குழந்தை தவறாக சொன்னதற்காக கண்டிக்கிறார். அதனால் அந்தக் குழந்தை அழுதபடி படிக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த தாய் குழந்தையின் கன்னத்தில் அறைகிறார். பிறகு அந்தக் குழந்தையும் ஆத்திரமடைகிறது.

இந்த வீடியோ காட்சியை கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, யுவராஜ் சிங் மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் முதலில் பகிர்ந்துள்ளனர். அத்துடன் குழந்தையின் தாயைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

அதன் பிறகு வேகமாக வலம் வந்த இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், சின்னக் குழந்தையை இப்படியா கண்டிப்பது என்று வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்தக் குழந்தை, பாடகரும் இசையமைப்பாளருமான டோஷி சாப்ரியின் உறவினர் குழந்தை என தெரியவந்துள்ளது. அவர் அந்தக் குழந்தையை அடித்ததை குறைகூறமுடியாது என நியாயப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து டோஷி சாப்ரி கூறும்போது, “இந்த வீடியோ காட்சியில் வருவது எனது உறவினரின் குழந்தை. அந்தக் குழந்தை அடம்பிடிப்பதை தனது சகோதரர் மற்றும் கணவரிடம் காட்டுவதற்காக படம் பிடித்துள்ளார். பொதுமக்களின் பார்வைக்காக இந்த வீடியோவை எடுக்கவில்லை. ஆனால், இது இவ்வளவு பிரச்சினை ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எங்களைப் பற்றி விராட் கோலிக்கோ ஷிகர் தவனுக்கோ தெரியாது. எங்கள் குழந்தையைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். விளையாடச்செல்வதற்கு கூட அவள் அடம் பிடிப்பாள். அவளது சுபாவம் அப்படி. அடுத்த நிமிடமே சகஜமாக விளையாடச் சென்று விடுவாள். கண்டிக்காவிட்டால் சரியாக படிக்க மாட்டாள்” என்றார்.

http://tamil.thehindu.com/india/article19551094.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.