Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்தர இரசாயனவியல் வினாத்தாள் விவகாரம் ஆசிரியரின் தந்தையும் சகோதரரும் கைது

Featured Replies

உயர்­தர இர­சா­ய­ன­வியல் வினாத்தாள் விவ­காரம் ஆசி­ரி­யரின் தந்­தையும் சகோ­த­ரரும் கைது

 

(எம்.எப்.எம்.பஸீர்)

இந்த வரு­டத்­துக்­கான கல்விப் பொதுத் தரா­தர உயர்தர பரீட்சை இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாட வினா பத்­தி­ரத்தின் பகுதி இரண்டில் கேட்­கப்­பட்­டி­ருந்த வினாக்­க­ளுடன் கூடிய துண்டுப் பிர­சு­ரங்­களை கம்­பஹா மகளிர் பாட­சாலை ஒன்றின் முன்­பாக விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் இருவர் நேற்று பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

பொலிஸ் மா அதி­ப­ருக்கு நேற்று முன் தினம் கிடைக்கப் பெற்ற முறைப்­பாட்­டுக்கு அமை­வாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் முதித புசல்­லவின் நேரடி கட்­டுப்­பாட்டின் கீழான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரீலால் பெரே­ராவின் ஆலோ­ச­னையின் கீழான கம்­பஹா பிராந்­திய குற்றத் தடுப்புப் பிரி­வினர் இவர்­களை நேற்று கைது செய்­த­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் கம்­பஹா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழான விஷேட பொலிஸ் குழு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் கைதா­ன­வர்­க­ளிடம் இருந்து மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்ட துண்டுப் பிர­சு­ரங்கள் அடங்­கிய டெப் ஒன்றும் மீட்­கப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

நடை­பெற்­று­வரும் கல்விப் பொதுத் தரா­தர உயர் தர பரீட்­சையின் இர­சா­ய­ண­வியல் விஞ்­ஞான பாடத்­துக்­கான வினா பத்­தி­ரத்தின் 3 பிர­தான கேள்­விகள், பரீட்சை நேரத்­துக்கு முன்­ப­தா­கவே வெளி­யா­கி­விட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட நிலையில் அது தொடர்பில் பெற்றோர் சிலர் பரீட்­சைகள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தனர்.

 இத­னை­ய­டுத்து பரீட்­சைகள் ஆணை­யாளர் எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மா­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய உதவி பரீட்­சைகள் ஆணை­யாளர் பொலிஸ் மா அதி­பரின் நிவா­ரணப் பிரிவில் அது தொடர்பில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் கவ­னத்­துக்கு குறித்த விவ­காரம் கொண்­டு­வ­ரப்­பட்­டதை தொடர்ந்து , பொலிஸ் தல­மை­ய­கத்தின் உத்­த­ர­வுக்கு அமைய கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் முதித்த புசல்­லவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டன்.

கடந்த 19 ஆம் திகதி சனிக்­கி­ழமை உயர் தரப் பரீட்­சையின் இர­சா­ய­ண­வியல் பாடத்­துக்­கான பரீட்­சைகள் இடம்­பெற்­றன. பகுதி 2 இற்­கான பரீட்­சைகள் இவ்­வாறு இடம்­பெற்ற நிலையில் இர­சா­ய­ண­வியல் பகுதி இரண்டின் மூன்று கேள்­வி­களை உள்­ள­டக்­கிய துன்டுப் பிர­சு­ரங்கள் கம்­பஹா பகு­தியில் பெண்கள் பாட­சாலை ஒன்­ருக்கு முன்­பாக விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன.

இம்­முறை தாம் அனு­மா­னித்த கேள்­விகள் பரீட்­சைக்கு வந்­துள்­ளதால் எனவே வெற்­றியை உறுதி செய்ய தமது தனியார் கல்வி நிறு­வ­னத்தில் மேல­திக வகுப்­பு­க­ளுக்­காக மாண­வர்­களை அழைக்கும் வித­மா­கவே இந்த துண்டுப் பிர­சுரம் தயார் செய்­யப்­பட்டு பரீட்­சையை எழு­தி­விட்டு வெளியில் வந்த மாண­வர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த துண்டுப் பிர­சு­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த மூன்று வினாக்கள் அப்­ப­டியே பரீட்சை வினா­தாளில் இருந்­ததை அவ­தா­னித்­துள்ள மாண­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ள நிலையில் வினா பத்­திரம் ஏற்­க­னவே வெளி­யா­கி­விட்­டதா என்ற சந்­தேகம் எழ அது தொடர்பில் பெற்றோர் ஊடாக பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே பரீட்­சைகள் ஆணை­யாளர் விட­யத்தை பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­துள்ள நிலையில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இது­தொ­டர்பில் விசா­ர­ணை­களை நடாத்­திய பொலிஸார் நேற்று குறித்த துண்டுப் பிர­சு­ரத்தை விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் கந்­தான, பட்­ட­கம பகு­தியைச் சேர்ந்த இரு­வரை நேற்று கைது செய்­தனர். 67 வய­தான நபர் ஒரு­வ­ரையும் அவ­ரது 29 வய­தான மகன் ஒரு­வ­ரை­யுமே இவ்­வாறு பொலிஸார் கைது செய்­தனர். கைதா­ன­வர்­க­ளிடம் இருந்து டெப் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் அதில் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் கேள்­விகள் அடங்­கிய துண்டுப் பிர­சு­ரமும் இருந்­துள்­ளது.

கைதான இரு­வரும் மேல­திக வகுப்பு ஆசி­ரியர் ஒரு­வரின் தந்­தையும் சகோ­த­ரரும் என தெரி­ய­வரும் நிலையில், குறித்த மேல­திக வகுப்பு ஆசி­ரியர் தல­ம­றை­வா­கி­யுள்­ள­தா­கவும் அவரைக் கைது செய்ய விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ரணை குழுவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

குறித்த துன்டுப் பிர­சுரம் விநி­யோ­கித்­தமை முதல் அதன் பின்­ன­னியில் உள்ள அனைத்து விட­யங்­க­ளையும் வெளிப்­ப­டுத்த விசா­ர­ணைகள் கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இதனிடையே, உயர்தரப் பரீட்சை தொடர்பில் அனுராதபுரம் - பதவிய பராக்கிரமபுர 1407 ஆம் இலக்க பரீட்சை மத்திய நிலையத்தில் கடந்த சனியன்று விநியோகிக்கப்பட்ட இரசாயணவியல் விஞ்ஞான கேள்விப் பத்திரம் பகுதி இரண்டில் ஒரு கேள்விப் பத்திரம் காணாமல் போயிருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கள் குற்றம் சுமத்தியுள்ளமையும் இங்கு சுட்டிக்கடடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.