Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கட்டிச்சோலையில் புனரமைக்கப்பட்ட நினைவுத்தூபி

Featured Replies

கொக்கட்டிச்சோலையில் புனரமைக்கப்பட்ட நினைவுத்தூபி

 

கொக்கட்டிச்சோலையில் புனரமைக்கப்பட்ட நினைவுத்தூபி

 

 
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு சந்தியில் உள்ள நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு நேற்று (21) மாலை திறந்துவைக்கப்பட்டது.

1987 ஆம் மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரின் படை நடவடிக்கையின் போது படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் நினைவாக இந்த நினைவுத்தூபி 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்மாணிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு படுவான்கரை நோக்கிய படை நடவடிக்கையின் போது படையினரால் குறித்த நினைவுத் தூபி சேதமாக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை காலம் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்படாத நிலையிலேயே இருந்து வந்தது.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் குறித்த படுகொலை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்ட போதிலும் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்படாத நிலையிலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில் குறித்த பிரதேச மக்கள் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்படாமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் இதனை புனரமைக்கும் பணியை மேற்கொண்டார்.

தனது சொந்த நிதியில் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவிலும் இளைஞர்களின் பங்களிப்புடனும் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு நேற்று திங்கட்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=94608

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.