Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை

Featured Replies

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை

 

 

சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர மஹிந்த சார்பு கூட்டு எதிர்கட்சியினர் கையொப்ப வேட்டையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20953650_1894233120789380_41796666201080

20992530_1894233114122714_14097687065623

20953782_1894233184122707_24282880794176

20992578_1894233177456041_84889915310137

21105764_1894233164122709_47185354319247

20993099_1894233160789376_53264878728229

21078867_1894233134122712_20361672965233

20992668_1894233130789379_11768317845935

 
 

Tags

http://www.virakesari.lk/article/23545

  • தொடங்கியவர்

எனக்கு எதிராக எத்தனை நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வந்தாலும் வெற்றிபெறுவேன் ; ராஜித அதிரடி அறிவிப்பு

Published by Gnanaprabu on 2017-08-24 19:29:31

 

சுகாதார அமைச்சரான ராஜித சேனாரட்னவிற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரட்ன,

எனக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினை சேர்ந்த 39 அமைச்சர்கள் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா பிரேரணையினை கையத்துள்ளனர். குற்றங்கள் இல்லாமையாலும், அறியாமையின் நிமித்தமாக குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையளிக்கப்பட்டுள்ளது.

நான் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு மூன்று முறை ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளேன். அதனால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றங்களை கண்டு நான் வியப்படைகின்றேன்.

Capture.JPG

நான் நீதிக்கு மதிப்பளித்து என் வேலையினை செய்துவருகின்றேன். கடந்த ஆட்சியின் போது ஊழல் குற்றங்களில் ஈடுப்பட்ட குழுவினர் இணைந்து எனக்கு இன்று நம்பிக்கையில்லா பிரேரணையினை முன்வைத்துள்ளனர். கடந்த அரசாங்கத்திற்கு எதிராக நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வினை கொண்டுவர கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் நான் பணியாற்றி வருகின்றேன். ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையல்ல, 10 நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தாலும் ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாது ஒழிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

நான் நம்பிக்கையில்லா பிரேரணையினை இலகுவில் வெற்றி பெறுவேன். இதற்கு ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.  

http://www.virakesari.lk/article/23560

  • தொடங்கியவர்

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டோரின் பின்னணி என்ன?

 

 

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டோரின் பின்னணி என்ன?
 

அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிடவில்லை.

இதில் கையொப்பமிட்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 39 பேரில் அநேகர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் முதலாவதாக தினேஷ் குணவர்தன
கையொப்பமிட்டுள்ளார்.

இதில் கையொப்பமிட்டுள்ள விமல் வீரவங்சவுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்தமை, 306 மில்லியன் ரூபா பெறுமதியான காணியொன்றை மனைவிக்கு பெற்றுக்கொடுத்தமை, அரசாங்க வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை, உரிய திட்டமின்றி வீடுகளை வழங்கியமை போன்ற அவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அவர் ஒரு வருடம் சிறையில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இன்று கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக, தனியார் காணியொன்றில் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்காக அனுமதியை வழங்க 1.5 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கொழும்பு 7-இல் வீடொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டும், 5 கோடி நட்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் வகையில் 14 ,000 கரம் மற்றும் தாம் போர்ட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இன்று சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹெலோ கோப் என்ற நிறுவனத்தில் முறையற்ற விதத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டமை தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்தமை தொடர்பில் மற்றுமொரு விசாரணை இடம்பெறும் பின்புலத்திலேயே நாமல் ராஜபக்ஸ இதில் கையொப்பமிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட பாரியளவிலான நிதி மோசடி தொடர்பில் உதய கம்மன்பிலவிற்கு எதிராகவும் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரண இடம்பெறுகின்றது.

முறையற்ற விதத்தில் சொத்து குவித்த குற்றச்சாட்டில் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராகவும் விசாரணைகள் இடம்பெறுவதுடன், அதிக நச்சுத்தன்மையுடைய பாம்பொன்று கடித்ததாகத் தெரிவித்து அவர் ஒரு தடவை விசாரணைகளை புறக்கணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களே இன்று அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

http://newsfirst.lk/tamil/2017/08/ராஜிதவிற்கு-எதிரான-நம்பி/

  • தொடங்கியவர்

ராஜிதவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை

01-7222ad6620c4107dff9d66ad978ac943f240ee06.jpg

 

39 பேரின் கையொப்பங்களுடன் சமர்ப்பிப்பு

(எம்.சி.நஜி­முதீன்)

சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­வுக்கு எதி­ராக கூட்டு எதி­ரணி நேற்று நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை பாரா­ளு­மன்ற சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பித்­தது. . கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் 39 எம்.பி. க்களின் கையொப்­பங்­க­ளுடன் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ராக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பாடு தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு அவர் ஒத்­து­ழைப்பு வழங்­காமை என்ற குற்றச்சாட்டுடன்11 குற்­றச்­சாட்­டு­க்களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அவ­ருக்கு எதி­ரான  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

நேற்று மாலை 3.30 மணி­ய­ளவில் பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில் அமைந்­துள்ள சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யவின் அலு­வ­ல­கத்­திற்கு, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே தலை­மையில் சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பிர­சன்ன ரண­துங்க, உதய கம்­பன்­பில, ஷெஹான் சேம­சிங்க உள்­ளிட்ட கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களே நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­துள்­ளனர்.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சமர்ப்­பித்த பின்னர், இது தொடர்பில் விரைவில் பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறும் சபா­நா­ய­க­ரிடம் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் கேட்­டுக்­கொண்­டுள்­ளனர்.

அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பின்­வரும் பதி­னொரு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ள­டங்­க­லாக சில தரப்­பினர் அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ராக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் செய்­துள்ள முறைப்­பாடு தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு அவர் ஒத்­து­ழைப்பு வழங்­காமை,

 அவ்­வி­சா­ர­ணைக்கு முகங்­கொ­டுக்­கா­மை­யினால் அக்­குற்­றச்­சாட்டில் அவர் குற்­ற­வாளி என்­கின்ற மனோ­நிலை மக்கள் மத்­தியில் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ளமை,

இலங்­கையின் மருத்­தவக் கல்­வியை வணிக ரீதி­யி­லான பின்­ன­ணி­யுடன் வர்த்­தக வச­மாக்­கு­வ­தற்கு அரச அதி­கா­ரத்தை தவ­றான முறையில் பிர­யோ­கித்து இலங்கை மருத்­துவக் கல்வித் துறையில் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வழி­ய­மைத்­தமை,

நெவில் பிர­னாந்து மருத்­து­வ­ம­னையை அர­சு­ட­மை­யாக்­கி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்டு தனியார் மருத்­து­வ­னை­யொன்றை பொது­மக்கள் நிதியில் கொண்­டு­ந­டத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தமை,

வழக்­கொன்­றின்­போது நீதி­மன்­றிற்கு சமர்ப்­பிக்க வேண்­டிய தக­வல்­களை சமர்ப்­பிக்­காமல் சட்­டமா அதி­ப­ரூ­டாக சைட்டம் நிறு­வ­னத்­திற்கு சார்­பான கருத்­து­களைத் தெரி­வித்து சுகா­தார அமைச்சு அதி­கா­ரத்தை முறை­கே­டாகப் பயன்­ப­டுத்­தி­யமை.

இலங்கை மருத்­துவ சபை­யினால் உரு­வாக்­கப்­பட்ட வைத்­திய கல்­வியின் தரத்தை வர்த்­த­மானி அறி­வித்­லூ­டாக பிர­சு­ரிப்­பதை வேண்­டு­மென்றே புறக்­க­ணித்து இலங்கை மருத்­துவக் கல்­வியின் தரம் தொடர்பில் குழப்ப நிலையை ஏற்­ப­டுத்­தி­யமை,

நாட்டில் டெங்கு நோய் தீவி­ர­ம­டைந்த காலப்­ப­கு­தயில் அதற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­த­துடன், டெங்கு நோயா­ளர்­களை அரச மத்­து­வ­ம­னையில் உள்­வாங்­கு­வதை நிரா­க­ரித்தன் மூலம் மக்­களின் உயிர் வாழும் அடிப்­படை உரி­மையை மீறி­யமை,

மார்­பகப் புற்­று­நோய்க்குத் தேவை­யான மருந்துக் கொள்­வ­னவு விலை­ம­னுக்­கோ­ரலில், அரச மருந்­தக கூட்­டுத்­தா­ப­னத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­நி­று­வ­னத்­திற்கு விலை­மனு வழங்­கிமை உடட்­பட அதில் இடம்­பெற்­றுள்ள மேலும் சில மோச­டிகள்,

கடற்­றொழில் அமைச்­ச­ராகப் பதவி வகித்த காலப்­ப­கு­தி­யில கொழும்பு முகத்­து­வாரம் மீன்­பி­டித்­து­றை­மு­கத்­துடன் தொடர்­பு­டைய விலை­ம­னுக்­கோ­ரலின் போது உரிய நடை­மு­றை­களைப் பின்­பற்­றாது மிகக்­கு­றைந்த பெறு­மா­னத்­திற்கு விலை­மனு வழங்­கி­யதில் இடம்­பெற்­றுள்ள மோசடி,

கடற்­றொழில் அமைச்­ச­ராகப் பதவி வகித்த காலப்­ப­கு­தியல் “புளூ ஓஷன் பிஷரிஸ்” நிறு­வ­னத்­திற்கு ஆழ்­க­டலில் மீன்படிப்பதற்கான அனுமதிப்பத்திர வழங்கலில் இடம்பெற்றுள்ள மோசடி ,வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் விசாரணை நடத்தல் தொடர்பில் நீதிமன்றம் , சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுக்கு அழுத்தம் கொடுத்தமை மற்றும் அச்சுறுத்தி நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்குப் பாதகம் ஏற்படுத்துயமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.