Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

 

 
gurmeet

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என தீர்ப்பு.   -  கோப்புப் படம்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை என்னவென்பது வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் குர்மீத்.

இந்தத் தீர்ப்பு மற்றும் கைது நடவடிக்கை காரணமாக ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளில் போலீஸ் மற்றும் துணைராணுவப் படையினர் வன்முறைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங், ஆசிரமத்திலுள்ள இரு பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.

பெயரிடப்படாத ஒரு கடிதத்தில் தொடங்கியது இந்த வழக்கின் விதை. அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் அதை எழுதிய சந்யாசினி கூறியது இதுதான். இவரைத் தனது அறைக்கு வருமாறு குர்மீத் ராம் ரஹீம் சிங் கூறினாராம். அங்கு சென்றபோது பாபா படுக்கையில் இருந்தார். அவருக்கு அருகே ஒரு ரிவால்வர் இருந்தது. அப்போது தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த சூழலில் தன்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறியிருந்தார் சந்யாசினி. அதற்குப் பின் மூன்று வருடங்களுக்கு மிரட்டலுடன் பாலியல் பலாத்காரம் தொடர்ந்ததாகவும், இந்த அநீதி தன்னைப்போல் மேலும் 35 பெண்களுக்கு நடைபெற்றது என்றும் சொல்லியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சில மாதங்களில் அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார். கடிதம் அனுப்பப்பட்டதற்குப் பின்னணியில் இவர் இருந்திருப்பார் என்ற செய்தி பரவ... பரபரப்பு கூடியது.

மேற்படி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு நடத்தத் தீர்மானித்தது. இந்த விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது. டி.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகியிருந்த 18 சந்யாசினிகளை விசாரித்தது சிபிஐ. அவர்களில் இருவர் தாங்களும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறினர். ஆசிரமத்தில் நடக்கும் சட்டமீறலான விஷயங்களைக் குறித்து தொடர்ந்து எழுதி வந்த பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அந்த அமைப்பின் ஓட்டுநராகப் பணியாற்றிய கட்டா சிங் என்பவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு எதிராக சாட்சியம் கொடுத்தார்.

தீர்ப்பின் எதிரொலி காரணமாக வன்முறை வெடிக்கலாம் என்ற காரணத்தினால் ஹரியாணாவில் பல இடங்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக சண்டிகரிலுள்ள அத்தனை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை. தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் வளாகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பீப்பாய்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. கற்களும் கூரிய ஆயுதங்களும் அதன் மற்றொரு பகுதியில் நிரப்பப்பட்டுள்ளன. சண்டிகர் காவல்துறை அந்த நகரின் அத்தனை நுழைவிடங்களையும் ‘சீல்’ செய்துள்ளது. ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் ராம் ரஹிம் சிங் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் ரோத்தக் கொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது. இங்குள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி ஓய்வு இல்லம் சிறப்புச் சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்ச்குலாவில் நிலைமை பதற்றமாக உள்ளது காரணம், தேரா சச்சா ஆதரவாளர்கள் ஏற்கெனவே வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

http://tamil.thehindu.com/india/article19559902.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாலியல் வழக்கில் ராம் ரஹீம் சிங் சாமியார் குற்றவாளி: கலவரத்தில் 13 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்

Published by Priyatharshan on 2017-08-25 18:48:16

 

இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

201708251726172819_Five-people-dead-in-P

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002 ஆம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

201708251726172819_1_policetwo._L_styvpf

இதையடுத்து, பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தனது பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ குர்மீத் ராம் ரஹிம் சிங் நீதிமன்றுக்கு வந்தார்.

gurmeet.jpg

இதற்கிடையே, தனக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டால் அமைதி காக்க வேண்டும் என குர்மீத் ராம் ரஹிம் சிங் இன்று காணொளி மூலம் தனது அபிமானிகளுக்கு செய்தியை அனுப்பினார். அவரது தலைமையில் 500 க்கும் அதிகமானவர்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.

25-1503658527-police3444.jpg

இதையடுத்து, அமைதியாக இருந்த அவரது ஆதரவாளர்கள் தீர்ப்புக்கு பிறகு கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்று மாநில உளவுத்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

25-1503658494-polic65.jpg

இந்நிலையில், கலவரச் சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவைக்கேற்ப ஆயுதங்களை பயன்படுத்தி பதற்றத்தை தணிக்கலாம் என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் இன்று காலை அனுமதி அளித்தது. 

அதேவேளையில், இந்த தீர்ப்பு தொடர்பாக வன்முறையை தூண்டி விடாமல் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்வருமாறு மக்களுக்கு அரியானா முதல் மந்திரி கத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில்,  இன்று பிற்பகல் 3 மணியளவில் தனது இருக்கைக்கு வந்த நீதிபதி இவ்வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்கை குற்றவாளி என உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தார். 

sfsfefeff.PNG

14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹிம் சிங்-கை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிய பொலிசார் அவரை சிறைக்கு அழைத்து சென்றனர்.

தீர்ப்பு வெளியானதும் பஞ்ச்குலா நீதிமன்றம் பகுதியில் திரண்டிருந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறையில் குதித்தனர். அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. இதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது. 

சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை அலுவலகம் அருகே மிக மோசமான அளவில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். 

636392814009945615..gif

 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மலவுட் மற்றும் பல்லுஅன்னா ரெயில் நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் குதம் தீக்கிரையானது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி அரியானாவில் நடந்த கலவரங்களில் பத்துக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், சுமார் 200 பேர் காயமடைந்ததாகவும் சண்டிகரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வெடித்துள்ள வன்முறை தொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில முதல் மந்திரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் அங்குள்ள நிலவரங்களை கேட்டறிந்தார்.

டில்லியிலும் கலவரம் வெடிக்காமல் இருக்க புதுடெல்லி மற்றும் டெல்லியின் பிறபகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் அருகில் உள்ள உத்தரபிரதேசம் மாநில போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23610

  • தொடங்கியவர்

ஹரியானா வன்முறையில் 23 பேர் பலி, டெல்லியில் 144 தடை உத்தரவு

Getty imagesபடத்தின் காப்புரிமைMONEY SHARMA

"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 23 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள் எனக் கூறிக் கொள்ளும் ஆயிரக்கணக்கானோர் தீர்ப்பு வழங்கப்பட்ட பஞ்ச்குலா பகுதியிலும் ஹரியானாவின் பல்வேறு இடங்களில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மலோட் மற்றும் பலுவானா ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் பொது சொத்துகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

Getty imagesபடத்தின் காப்புரிமைMONEY SHARMA

ஹரியானா, பஞ்சாப் மாநில எல்லைகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக டெல்லியில் 11 காவல் சரக மாவட்டங்களில் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும்வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Skip Twitter post by @DelhiPolice

End of Twitter post by @DelhiPolice

தலைநகர் டெல்லியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் யாராவது ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர காவல்துறை எச்சரித்துள்ளது.

டெல்லியில் ரயில், பேருந்துக்கு தீ வைப்பு

டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

இதேபோல டெல்லி, ஜஹாங்கீர்புரியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கும் ஒரு கும்பல் தீ வைத்து விட்டு தப்பி ஓடியது.

Getty imagesபடத்தின் காப்புரிமைMONEY SHARMA

"வடகிழக்கு டெல்லி, லோனியில் சுமார் ஆயிரம் பேர் திரண்டு, இரண்டு அரசு பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியது. இதனால் டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்" என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.தட்வாலியா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் உயிரிழப்பு குறித்து கூறுகையில், "கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மத்திய உள்துறைக்கு வந்த தகவலின்படி, பஞ்ச்குலாவில் 15 பேர், சண்டீகரில் காயம் அடைந்த 45 பேரில் 7 பேர், சிர்ஸாவில் ஒருவர் என மொத்தம் 23 பேர் பலியாகியுள்ளனர்" என்றார்.

மாநில எல்லைகளில் கண்காணிப்பு

பஞ்சாப், ராஜஸ்தான் வழியாக டெல்லிக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டீகர் உள்ளது. அதன் புறநகர் பகுதியில் பஞ்ச்குலா உள்ளது. அந்த இடத்திலும் சண்டீகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

getty imagesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த வன்முறைகளைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு ஏற்கனவே மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப் படையினரும் உள்ளூர் காவல்துறையினரும் வன்முறையைத் தடுக்க தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

getty imagesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு தீர்ப்பு பற்றி விவரம் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், பஞ்ச்குலாவில் நீதிமன்ற வளாகத்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ஏராளமான காவல்துறை வாகனங்கள், தனியார் வாகனங்கள், கடைகள் ஆகியவற்றின் கண்ணாடிகளை குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள் அடித்து நொறுக்கினர்.

அரசு பேருந்துகள், வாகனங்கள் ஆகியவற்றையும் சிலர் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்த வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதுவரை பன்னிரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பஞ்ச்குலாவில் உள்ள சிவில் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

getty imagesபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

குர்மீத் சிங் மீதான வழக்கின் தீர்ப்பையொட்டி வன்முறை வெடிக்கலாம் எனக் கருதி ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் சில இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகளான இணையதளம், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், சமூக ஊடகங்களின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஹரியானா மாநில அமைச்சரவை முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் கூடி அவசரமாக ஆலோசனை நடத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முதல்வர் மனோகர் கட்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலைமைகளை கேட்டறிந்தார்.

Skip Twitter post by @mlkhattar
 
-5ht6ZsEdww2MojR.jpg

मैं सभी प्रदेश वासियों से शांति बनाये रखने एवं प्रशासन का सहयोग करने की अपील करता हूँ, धन्यवाद!

 
 

End of Twitter post by @mlkhattar

இதேபோல, ராஜ்நாத் சிங்கை அண்டை மாநிலமான பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது ராஜ்நாத் சிங்கிடம் கூறியதாக அம்ரிந்தர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் அமைதி ஏற்பட மத்திய அரசு அனைத்து உதவிகளும் வழங்கும் என்று அப்போது ராஜ்நாத் சிங் உறுதியளித்தார் என்று மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவு

இதற்கிடையே, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பரவலாக ஏற்பட்ட வன்முறையில் சேதம் அடைந்த சொத்துகளுக்குரிய இழப்பீட்டுக்கு தேரா சத்தா செளதா அமைப்பின் சொத்துகளை ஜப்தி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

http://www.bbc.com/tamil/india-41051236

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.