Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலமைப்பின் பராமுகம்

Featured Replies

அர­சி­ய­ல­மைப்பின் பரா­முகம்

 

மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை மக்கள் இந்த நாட்டில் அதி­ருப்­தி­யுடன் வாழ்­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பும் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. சம­கால அர­சி­ய­ல­மைப்பும் கடந்­த­கால அர­சி­ய­ல­மைப்பும் இதில் உள்­ள­டங்கும். பல்­லின மக்கள் வாழு­கின்ற ஒரு நாட்டில் அர­சி­ய­ல­மைப்பு என்­பது பக்­கச்­சார்பு இல்­லா­த­தாக காணப்­ப­டுதல் வேண்டும். எனினும் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­பு­களில் இந்த நிலையை காண முடி­ய­வில்லை. ஒரு இனத்தை, ஒரு மதத்தை முன்­னி­லைப்­ப­டுத்தும் வகையில் அமைந்த அர­சி­ய­ல­மைப்­பு­க­ளினால் நாட்டின் ஐக்­கியம், அபி­வி­ருத்தி என்­பன சீர்­கு­லைந்­துள்­ளன. மக்­களின் பிரச்­சி­னைகள் நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கின்­றன. மலை­யக மக்கள் இந்த நாட்டில் பின்­தங்­கிய நிலை­மையில் வாழ்ந்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இவர்­க­ளி­டையே அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்த விசேட திட்­டங்கள் சலு­கைகள் எதுவும் அர­சி­ய­ல­மைப்­பு­களில் உள்­ளீர்க்­கப்­ப­ட­வில்லை. எனவே தான் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று முன்­வைக்­கப்­ப­டு­மி­டத்து நேர் நிலை பார­பட்­சத்தின் அடிப்­படை­யில் மலை­யக மக்­க­ளுக்­கென்று சில விசேட உத­விகள் வழங்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் வலு­வ­டைந்து வரு­கின்­றன. ஒரு நாட்டின் தலை­யெ­ழுத்தை நிர்­ண­யிக்கும் முக்­கிய ஆவ­ண­மாக அந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு விளங்­கு­கின்­றது. ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­திலும் மக்­க­ளி­டையே ஐக்­கி­யத்தைப் பேணி நாட்டை அபி­வி­ருத்திப் பாதைக்கு இட்டுச் செல்­வ­திலும் அர­சி­ய­ல­மைப்பின் வகி­பாகம் மிகவும் அதி­க­மாகும். பல்­லின மக்கள் வாழும் நாடு­களில் அர­சி­ய­ல­மைப்­பா­னது நடு­நி­லை­யா­னதும், சக­லரின் உரி­மை­க­ளையும் உரி­ய­வாறு உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவும் இருக்க வேண்டும். எனினும் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­புகள் இவ்­வி­ட­யத்தில் தோல்வி கண்­டி­ருக்­கின்­றன என்­ப­தனை சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. நாட்டு மக்கள் இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­புகள் மீது நம்­பிக்கை இழந்­தி­ருக்­கின்­றார்கள். நாடு சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் அர­சி­ய­ல­மைப்பு விடயம் குறித்து அடிக்­கடி பேசப்­பட்டு வந்­தி­ருக்­கின்­ற­மை­யையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 1956 இல் எஸ்.டபிள்யு..ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க அதி­கா­ரத்­துக்கு வந்த போது அர­சியல் திட்­டத்­தினை மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு ஏற்ப உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிகள் பல­வற்­றையும் மேற்­கொண்­டி­ருந்தார். எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக 1952 இல் பண்­டா­ர­நா­யக்க கொலை செய்­யப்­பட்டார்.

1970 இல் இடம் பெற்ற தேர்­தலின் போது ஐக்­கிய முன்­னணி தேர்தல் விஞ்­ஞா­பனம் ஒன்­றினை வெளி­யிட்­டி­ருந்­தது. இதில் ''நீங்கள் தெரிவு செய்யும் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள் அங்­கத்­த­வர்­க­ளா­யி­ருக்கும் அதே வேளையில் ஒரு புதிய அர­சியல் திட்­டத்­தினை வரை­யவும் அங்­கீ­க­ரிக்­கவும், செயற்­ப­டுத்­தவும், அதி­கா­ர­முள்ள அர­சியல் நிர்­ணய சபை­யா­கவும் இயங்க உங்­களின் அனு­ம­தியை நாம் கோரு­கின்றோம்'' என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. சுதந்­தி­ரத்தின் பின்னர் 1972 ஆம் ஆண்டு முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பும், 1978 ஆம் ஆண்டு இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பும் உரு­வாக்­கப்­பட்­டது. முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­பட்ட அதி­ருப்தி நிலைகள் இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தன. 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு சம­கா­லத்தில் நடை­மு­றையில் உள்­ளது. இந்த அர­சி­ய­ல­மைப்பில் பல திருத்­தங்கள் இது­வ­ரை­யிலும் மேற்­கொள்­ளப்­பட்­டன. இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வது குறித்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். அர­சி­ய­ல­மைப்­பு­களில் மனித உரி­மைகள் மற்றும் சிறு­பான்­மை­யி­னரின் நலன் சார்ந்த விட­யங்கள் எனப் பலவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ள­தனை எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. எனினும் இவைகள் எந்­த­ள­வுக்கு நடை­முறை சாத்­தியம் உள்­ள­தாக காணப்­ப­டு­கின்­றன என்­பது கேள்விக் குறி­யா­கவே உள்­ளது.

 

சோல்­பரி யாப்பும் சிறு­பான்­மை­யி­னரும்

1947 இல் சோல்­பரி குழு­வி­னரால் சிபா­ரிசு செய்­யப்­பட்ட அர­சியல் யாப்பு அமு­லுக்கு கொண்டு வரப்­பட்­டது. இது 1972 இல் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பு அமு­லுக்கு வரும் வரை நடை­மு­றையில் இருந்­தது. சிறு­பான்­மை­யி­னரின் நலன்­களை பேணும் பொருட்டு இதில் சில ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. அர­சி­ய­ல­மைப்பின் 29 ஆவது பிரிவு இதில் முக்­கி­ய­மா­ன­தாக விளங்­கி­யது. இதன்­படி ஓர் இனத்­தையோ அல்­லது ஒரு மதத்­தையோ அல்­லது ஒரு சமூ­கத்­தையோ பாதிக்­கக்­கூ­டிய எச்­சட்­டங்­க­ளையும் பாரா­ளு­மன்றம் இயற்­றக்­கூ­டாது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு போதிய பிர­தி­நி­தித்­துவம் மற்றும் பாது­காப்பு என்­ப­வற்றை பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்கில் செனட்­சபை பங்­க­ளிப்பு செய்யும் என்று கரு­தப்­பட்­டது. பொதுத்­தேர்­தலின் மூலம் போதிய பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெறாத சிறு­பான்மை இனங்கள் பாரா­ளு­மன்­றத்தில் பிரதிநிதித்­து­வத்­தினை பெற்­றுக்­கொள்ள உதவும் முக­மாக நிய­மன உறுப்­பினர் பத­விகள் உரு­வாக்­கப்­பட்­டன. பல்­வேறு இனங்கள் செறிந்து வாழு­கின்ற பிர­தேசங்­களில் குறிப்­பிட்­ட­ளவு செறி­வாக உள்ள இனங்கள் ஒவ்­வொன்றும் தங்­க­ளு­டைய பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­காக அப்­பி­ர­தே­சங்கள் பல அங்­கத்­தவர் தொகு­தி­க­ளாக உரு­வாக்­கப்­பட்­டன. கோமறைக் கழ­கத்தின் மூலம் சிறு­பான்­மை­யினர் நன்­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் கருத்­துகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. சிறு­பான்­மை­யோ­ருக்கு பார­பட்சம் காட்­டக்­கூ­டாது என்­ப­தனை கருத்திற் கொண்டு பொதுச்­சேவை ஆணைக்­குழு, நீதிச் சேவை ஆணைக்­குழு என்­பன ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. இவ்­வா­றாக சிறு­பான்­மை­யி­னரின் நலன் பேணும் பல விட­யங்­களை சோல்­பரி யாப்பு வலி­யு­றுத்தி இருந்­தது.

 

முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு  

முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு 1972 இல் அமு­லுக்கு வந்­தது. இதில் அடிப்­படை உரி­மை­களும் சுதந்­தி­ரங்­களும் என்ற தலைப்பில் நோக்­கு­கையில் பல விட­யங்கள் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. சட்­டத்தின் முன் யாவரும் சமம். சட்­டத்தின் மூலம் கிடைக்கும் சம­மான பாது­காப்­பிற்கு உரி­மை­யு­டை­ய­வர்கள். சட்­டப்­ப­டி­யின்றி பிர­ஜைகள் எவரும் காவலில் வைக்­கப்­ப­டவோ, சிறையில் அடைக்­கப்­ப­டவோ, தடுத்து வைக்­கப்­ப­டவோ முடி­யாது. தமது சொந்த கலா­சா­ரத்தை அனு­ச­ரிக்­கவும் அபி­வி­ருத்தி செய்­யவும் பிர­ஜை­க­ளுக்கு உரிமை உள்­ளது. பிர­ஜைகள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அமை­தி­யான முறையில் ஒன்று கூடும் உரிமை உண்டு. பிர­ஜைகள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பேச்சு, கருத்து, வெளிப்­பாடு, வெளி­யீட்டு உரிமை உண்டு. இப்­ப­டி­யாக பல விட­யங்­க­ளையும் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பு வலி­யு­றுத்தி இருந்­தது. இது தொடர்பில் சாத­க­மான கருத்­து­களும் முன்­வைக்­கப்­பட்­டன. மனித உரி­மை­க­ளுக்கு முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு முக்­கி­யத்­துவம் கொடுத்­துள்­ளமை மகிழ்ச்­சிக்­கு­ரி­யது என்று கருத்­துக்கள் வெளிப்­பட்­டன.

அர­சாங்க துறை­களில் இன ரீதி­யான இன, மத, சமூக, அர­சியல் ரீதி­யான பார­பட்சம் ஏற்­ப­டு­வதை அர­சி­ய­ல­மைப்பு தடுக்­கின்­றது என்றும் பாராட்­டுகள் தெரி­விக்­கப்­பட்­டமை குறித்தும் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள்.

 

இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு

1978 ஆம் ஆண்டில் இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு அமு­லுக்கு வந்­தது. இந்த அர­சி­ய­ல­மைப்பில் விகி­தா­சார தேர்தல் முறை­யான ஐக்­கிய தேசிய கட்சி அறி­மு­கப்­ப­டுத்தி இருந்­தது. இத்­தேர்தல் முறையை அறி­முகம் செய்தால் தாமே தொடர்ந்தும் ஆட்­சியில் இருக்­கலாம் என்ற சொந்த நலன் கரு­திய எண்­ணமும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் காணப்­பட்­டது. 1956 ஆம் ஆண்டு தேர்தல் தவிர 1960 ஜுலை தேர்­த­லிலும் 1970 ஆம் ஆண்டு தேர்­த­லிலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியே பெரும்­பான்மை ஆச­னங்­களைப் பெற்று ஆட்­சி­ய­மைத்­தது. எனினும் வாக்கு விகி­தா­சா­ரத்தை பொறுத்த வரையில் நாடு தழு­விய ரீதியில் ஐ.தே.க.வே கூடு­த­லான வாக்கு விகி­தா­சா­ரத்தை பெற்­றி­ருந்­ததை நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். எனவே வாக்கு விகி­தா­சார அடிப்­ப­டையில் உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­கின்ற ஓர் தேர்தல் முறை­யினை அறி­மு­கப்­ப­டுத்­தினால் தானே தொடர்ச்­சி­யாக ஆட்­சியில் இருக்க முடியும் என்று ஐ.தே.க. எண்ணம் கொண்­டி­ருந்­த­தாக புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர்.

1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பிலும் அடிப்­படை உரி­மைகள் பலவும் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தன. சமத்­து­வத்­திற்­கான உரிமை உண்டு. இலங்கை பிர­ஜைகள் அனை­வ­ருக்கும் தான் விரும்பும் மதத்தை அல்­லது நம்­பிக்­கையை கைக்­கொள்ளும் சுதந்­திரம் உட்­பட சிந்­தனை செய்யும் சுதந்­திரம் மனச்­சாட்­சியை பின்­பற்­று­கின்ற சுதந்­திரம், மதச் சுதந்­திரம் என்­பன உண்டு. இனம், மொழி, மதம், சாதி, பால், அர­சியற் கொள்கை, பிறப்­பிடம் என்­ப­வற்றின் கார­ண­மாக எந்­த­வொரு பிர­ஜைக்கும் பார­பட்சம் காட்­டுதல் ஆகாது. எனினும் நியா­ய­மான ஒரு காலப்­ப­கு­தியில் பொது நீதி உள்­ளூ­ராட்சி, கூட்­டுத்­தா­பன சேவையில் இருக்கும் எவ­ரையும் எந்த ஒரு மொழி­யிலும் போதிய அறிவைப் பெற வேண்டும் எனக்­கோ­ரு­வது சட்­ட­பூர்­வ­மா­ன­தாகும். சட்­டத்­தினால் ஸ்தாபிக்­கப்­பட்ட நட­வ­டிக்கை முறைக்­கி­ணங்­க­லன்றி ஆள் எவரும் கைது செய்­யப்­ப­ட­லா­காது. கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கான காரணம் கைது செய்­யப்­படும் எவ­ரேனும், ஆளுக்கு அறி­விக்­கப்­பட வேண்டும். வெளி­யி­டுதல் உட்­பட பேச்சு சுதந்­தி­ரமும் கருத்து சுதந்­தி­ரமும் அனை­வ­ருக்கும் உண்டு என்­பது போன்ற பல விட­யங்­களை 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு வலி­யு­றுத்­தி­யது.

இதே­வேளை 1972 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் அடிப்­படை உரி­மை­களின் பிர­யோகம் இலங்கை பிர­ஜை­க­ளுக்கு மட்­டுமே காணப்­படும் என்­கிற வலி­யு­றுத்தல் காணப்­பட்­டது. இதனால் அக்­கா­லத்தில் நாடற்­ற­வர்­க­ளாக இருந்த இந்­திய வம்­சா­வளி மக்கள் அடிப்­படை உரி­மை­களின் பயன்­களை அனு­ப­விக்க முடி­யாத நிலையில் இருந்­த­தாக புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். எனினும் 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் இந்­நிலை நீக்­கப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு அமு­லாக்­கப்­பட்ட திக­தியில் இருந்து பத்து வருட காலத்­திற்கு இலங்கை பிர­ஜைகள் அல்­லாத நாடற்­ற­வர்­களும் அடிப்­படை உரி­மை­களின் பிர­யோ­கத்­திற்கு உட்­ப­டு­வார்கள் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் உள்ள அடிப்­படை உரி­மைகள் பற்றி கருத்து தெரி­வித்த கலா­நிதி விக்­கி­ரமவீர­சூ­ரிய, முன்­னைய அர­சியல் திட்டம் அடிப்­படை உரி­மை­களில் சில அம்­சங்­க­ளையே கொண்­டி­ருந்­தது. புதிய அர­சியல் திட்­ட­மா­னது பொரு­ளா­தார சுதந்­திரம், நிர்­வா­கத்­தினை பர­வ­லாக்­குதல், சமூக பாது­காப்பு, குழந்­தைகள்,தனியார் துறையை பாது­காத்தல் என்­ப­தோடு, சூழல் சம்­பந்­தப்­பட்­ட­வற்­றையும் பாது­காக்­கி­றது என்று குறிப்­பி­டப்­பட்­டிரு க்கின்றார்.

 

அர­சி­ய­ல­மைப்­பு­களும் நடை­மு­றையும்

இலங்­கையில் கடந்த காலங்­களில் முன்­வைக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பு­களுள் சோல்­பரி மற்றும் 1972, 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­புக்­களை நோக்­கு­கையில் மனித உரி­மைகள் பல வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளன. எனினும் இவற்றின் நடை­முறை சாத்­தி­யப்­பா­டுகள் எவ்­வா­றுள்­ளன என்று சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. சோல்­பரி யாப்­பினை எடுத்­துக்­கொண்டால் சிறு­பான்மை காப்­பீடு குறித்து ஆழ­மாக வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. எனினும் இதன் சாதக விளை­வு­களை பெற்­றுக்­கொள்­வதில் இடர்­பா­டுகள் காணப்­பட்­டன. சிறு­பான்மை காப்­பீ­டுகள் இருந்தும் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் பறி­போ­வதை தடுத்து நிறுத்த முடி­யாத நிலையே காணப்­பட்­டது. ஐக்­கிய தேசிய கட்சி ஆட்சி புரிந்த 1947 –1952 க்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் முக்­கிய மூன்று சட்­டங்கள் கொண்டு வரப்­பட்­டன. 1948 ஆம் ஆண்டின் இலங்கை குடி­யு­ரிமைச் சட்டம், 1949 ஆம் ஆண்டின் இந்­திய– பாக்­கிஸ்­தா­னியர் சட்டம், 1949 ஆம் ஆண்டின் பாரா­ளு­மன்ற தேர்­தல்கள் திருத்த சட்டம் என்­பன இம் மூன்­று­மாகும். 1948 இல் இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிர­ஜா­வு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் பறிக்­கப்­பட்டு அம்­மக்கள் நிர்க்­கதி நிலைக்கு உள்­ளாக்­கப்­பட்­டனர். அர­சி­யலில் அநா­தை­க­ளாக்­கப்­பட்­டனர். சோல்­பரி யாப்பின் சிறு­பான்மை காப்­பீடு இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரான சிறு­பான்­மை­யி­னர்­க­ளுக்கு எவ்வி­த­மான பாது­காப்­பி­னையும் வழங்­க­வில்லை. பிர­சா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் இழந்த எம்­மக்கள் அதனால் ஏற்­பட்ட இடை­வெ­ளியை இன்னும் சீர் செய்ய முடி­யாது அல்­லல்­ப­டு­வ­த­னையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

1947 ஆம் ஆண்டு தேர்­தலில் இந்­தியத் தமி­ழர்கள் மலை­யக தேர்தல் தொகு­தி­களில் ஐ.தே.க.விற்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இத்­தேர்­தலில் 07 இலங்கை – இந்­திய காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் வெற்றி பெற்­றனர். இலங்கை– இந்­திய காங்­கிரஸ் வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டாத இடங்­களில் இட­து­சாரி வேட்­பா­ளர்­க­ளுக்கு இந்­திய தமி­ழர்கள் ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தனர். இதனால் 14 இட­து­சாரி வேட்­பா­ளர்­களின் வெற்றி உறு­தி­யா­னது. இந்­நி­லையில் பெரு­ம­ள­வி­லான இந்­திய தமி­ழர்கள் குடி­யு­ரி­மையும், வாக்­கு­ரி­மையும் பெற நேர்ந்தால் தமது கட்­சியின் வெற்­றியும் எதிர்­கா­லமும் பாதிக்­கப்­படும் என்று அஞ்­சிய நிலையில் ஐ.தே.க இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் குடி­யு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் பறிக்க எண்ணம் கொண்டு வெற்­றியும் கண்­டது. மலை­யக தேர்தல் தொகு­தி­களின் வாக்­காளர் பதி­வேட்­டி­லி­ருந்து இந்­தி­யர்­களின் பெயர்கள் நீக்­கப்­பட்­டன. இதனால் 1952 ஆம் ஆண்டு தேர்­தலில் ஐ.தே.க.அதிக இடங்­களில் வெற்­றி­பெற்­றது. 1964 ஆம் ஆண்டு நாடற்­ற­வர்­களின் தொகை ஒன்­பது இலட்­சத்து 71 ஆயி­ரத்து 73 ஆக இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட கால குடி­யு­ரி­மையும் சட்­டங்­களும் இலங்­கை–-­இந்­திய ஒப்­பந்­தங்­களும் பலரின் விமர்­ச­னத்­துக்கும் உள்­ளாகி இருந்­தன. இவற்­றினால் இலங்கை வாழ் இந்­திய தமி­ழர்­களில் ஒரு பகு­தி­யினர் இந்­தியா திரும்­பினர். 1987 ஆம் ஆண்­ட­ளவில் மூன்று இலட்­சத்து 37 ஆயி­ரத்து 41 பேரும், அவர்­க­ளு­டைய பிள்­ளைகள் ஒரு இலட்­சத்து 23 ஆயி­ரத்து 952 பேரும், இந்­தி­யக்­கு­டி­யு­ரிமை பெற்று இந்­தியா சென்­றுள்­ளனர். இந்­தியா செல்­ல­வேண்­டிய 84 ஆயிரம் பேர் தவிர்ந்த ஏனையோர் இலங்கை குடி­யு­ரி­மையை பெற்­றுக்­கொண்­ட­தாக தக­வல்கள் வலி­யு­றுத்­து­கின்­றன.

சோல்­பரி யாப்பு நடை­மு­றையில் இருந்த கால­கட்­டத்தில் 29 ஆம் பிரி­வினை வலு­வி­ழக்கச் செய்யும் ஏனைய பல நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன. பாரா­ளு­மன்ற தேர்­தல்கள் திருத்தச் சட்டம் (1949) தனிச் சிங்­கள சட்டம் (1956) ஸ்ரீமா சாஸ்­திரி ஒப்­பந்த அமு­லாக்க சட்டம் (1967) என்­பன பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டன. மகா­தே­சா­தி­பதி இதற்­கான சம்­ம­தத்­தினை வழங்கி இருந்தார். இந்­நி­லையில் சிறு­பான்மை காப்­பீடு இருந்தும் இல்­லாத ஒரு நிலை­யினை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருந்­தது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு போதிய பிரதி நிதித்­து­வத்­தையும், பாது­காப்­பி­னையும் வழங்க செனட் சபை தவ­றி­யி­ருந்­தது. அர­சியல் அமைப்பை திருத்­து­வதில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை என்­கிற விடயம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு காப்­பீ­டாகும் என்று கரு­தப்­பட்­டது. ஆனால் 1970 வரை ஆட்­சிக்கு வந்த எந்த கட்­சிக்கும் பெரும்­பான்மை கிடைக்­காத போதும் சாதா­ரண பாரா­ளு­மன்ற சட்­டங்­களின் ஊடாக அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்ட 29 ஆவது பிரி­விற்கு எதி­ராக சட்­டங்கள் இயற்றி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பு­களில் சுதந்­திரம், சமத்­துவம், உரி­மைகள், சட்டம் என்று பல்­வேறு விட­யங்­களும் வலி­யு­றுத்­தப்­பட்­டன. எனினும் இவை­ய­னைத்தும் ஏட்­ட­ள­வி­லேயே முற்று பெற்ற நிலையில் இன­வா­தமும், புறக்­க­ணிப்­பு­க­ளுமே மேலோங்கி காணப்­பட்­டது. கல்வி, தொழில், சமூக நிலை, பொரு­ளா­தாரம் என்ற ரீதியில் அமைந்த பல புறக்­க­ணிப்­பு­களின் கார­ண­மாக அகிம்சை தொடக்கம் ஆயுதம் வரை­யி­லான போராட்­டங்­களை இலங்கை சந்­தித்­துள்­ளமை தெரிந்­த­தே­யாகும். இன ஐக்­கி­யத்­துக்கும் அபி­வி­ருத்­திக்கும் வித்­திட வேண்­டிய அர­சி­ய­ல­மைப்­புகள் விரி­சல்­க­ளுக்கு வலு­சேர்த்த வர­லா­றுகள் அதி­க­மாக உள்­ளன. இலங்­கையில் அதி­ருப்தி நிலைகள் தோன்­று­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பும் கார­ண­மாகி இருக்­கின்­றது. இந்த அதி­ருப்தி நிலை­மை­க­ளினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இந்­திய வம்­சா­வளி சமூ­கத்­தி­ன­ரான மலை­யக மக்கள் இருந்து வரு­கின்­றனர்.

 

மலை­யக தமி­ழர்கள் பாதிப்பு

இலங்­கையில் ஒவ்­வொரு கால கட்­டத்­திலும் அதி­ருப்தி நிலைகள் மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றன. 1956 1958, 1981,1983 போன்ற கால­கட்­டங்­களை நாம் குறிப்­பாக கூ றலாம். இக்­கால கட்­டத்தில் இடம்­பெற்ற விரும்­பத்­த­காத முரண்­பாட்டு நிலை­மைகள் மலை­யக மக்­க­ளையும் பாதித்­துள்­ளன. வடக்கு கிழக்கு மக்கள் உரி­மைக்­காக போரா­டினர். இந்த நிலையில் சிங்­க­ள­வர்கள் மத்­தியில் இலங்கை தமிழர் அல்­லது இந்­தியத் தமிழர் என்று வேறு­பாட்­டு­ணர்வு காணப்­ப­டாத நிலையில் அனை­வ­ரையும் அவர்கள் தமி­ழர்­க­ளா­கவே நோக்­கினர். இந்த பொதுப்­பார்வை மலை­யகத் தமி­ழர்­களின் மீது வக்­கிர பார்­வையும், முரண்­பாட்டு செயற்­பா­டு­களும், இடம்­பெ­று­வ­தற்கு மேலும் வலு­சேர்த்­த­தாக பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் போன்ற கல்­வி­மான்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். பாதிக்­கப்­பட்ட இந்­திய வம்­சா­வளி மக்கள் வடக்கு பகு­திக்கும் இந்­தி­யா­விற்கும் இடம் பெயர்ந்­துள்­ளமை

யும் நோக்­கத்­தக்க விட­ய­மாக உள்­ளது. இனி வன்­மு­றைகள் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் இருப்­பினை சிதைத்­தி­ருக்­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ள விட­யங்­களை நடை­மு­றையில் காண முடி­ய­வில்லை. மொழி­யு­ரி­மையும் இதற்கு ஒரு உதா­ர­ண­மாகும். பின்­தங்­கிய மலை­யக மக்­களின் நிலை­மை­யினை கருத்தில் கொண்டு அம்­மக்கள் விசேட உத­வி­களை பெற்­றுக்­கொ­டுக்கும் ஏற்­பாடு அர­சி­ய­ல­மைப்பில் கிடை­யாது. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் மலை­யக மக்­களின் நலன்­க­ருதி முன்­வைக்­கப்­பட வேண்­டிய விட­யங்­களை புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் அமைப்­பு­களும், குழுக்­களும், தனி நபர்­களும் முன்­வைத்­தி­ருந்­தனர்.

 

முன்­வைப்­புகள்

மலை­யக சமூக அபி­வி­ருத்தி கருதி பல கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவற்றுள் பிர­தா­ன­மா­ன­வற்றை நாம் நோக்­குவோம். பின்­தங்­கிய சமூகம் என்­ப­தனை கருத்திற் கொண்டு நேர் நிலை பார­பட்­சத்தின் அடிப்­ப­டையில் உத­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் வழங்க அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். (இந்­தியா போன்ற நாடு­களில் இத்­த­கைய திட்­டங்கள், விசேட ஏற்­பா­டுகள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் மலை­ய­கத்­த­வர்­களின் கல்வி பொரு­ளா­தார அர­சியல், தொழில் வாய்ப்பு நிலை­மை­க­ளுக்கு உதவ வேண்டும். குறிப்­பிட்ட ஒரு காலத்­திற்கு இத்­த­கைய உத­விகள் வழங்­கப்­பட வேண்டும். ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இம்­மக்­க­ளுக்கு உரிய பங்கு வகிக்க இட­ம­ளிக்­கப்­ப­டுதல் வேண்டும். ஜன­நா­யக ரீதியில் மலை­யக மக்­க­ளுக்கும் ஆட்­சி­ய­தி­காரம் பங்­கி­டப்­படல் வேண்டும். குறைந்­தது இரு­பது பிர­தி­நி­தி­க­ளா­வது மலை­ய­கத்தின் சார்பில் பாரா­ளு­மன்­றதில் அங்கம் வகிக்கும் வண்ணம் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். கிராம இராச்­சி­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் ஊடான சேவைகள் விஸ்­த­ரிக்­கப்­பட வேண்டும்.

இந்­திய வம்­சா­வளி மக்­களின் நலன்­க­ருதி சமு­தாயப் பேரவை அல்­லது சமு­தாய சபை என்ற ஒன்­றினை ஏற்­ப­டுத்த வேண்டும். மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும். சமுதாய பேரவையின் மூலம் மலையக மக்களை ஒன்றிணைத்து அபிவிருத்திக்கு வலுசேர்க்க வேண்டும். மலையக மக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். மலையக மக்களுக்கென்று தனியான ஒரு மாகாணம் ஏற்படுத்தப்படல் வேண்டும். மேலும் இம்மக்களுக்கென்று ஒரு நிர்வாக மாவட்டமாவது ஏற்படுத்தப்படல் வேண்டும். மலையக மக்களுக்கென்று அதிகாரப் பகிர்வு அலகு ஒன்று உருவாக்கப்படுதலும் வேண்டும். மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா பகுதியில் இம்மக்களுக்கான பிராந்தியம் என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதனடிப்படையில் அதிகாரப் பகிர்வு இடம் பெறுதல் வேண்டும். நிலத் தொடர்புடைய அதிகாரப் பகிர்வு, நிலத்தொடர்பற்ற அதிகாரப் பகிர்வு என்பன கவனத்தில்கொள்ளப்படுவது மிகவும் அவசியமாகும். மூன்று சிறுபான்மை இனங்களையும் சார்ந்தவாறு பிரதி ஜனாதிபதிகள் மூவருக்கு வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என்பன ஏற்படுத்தப்படுதல் வேண்டும். செனட் சபையில் மலையக பிரதிநிதிகளுக்கு உரியவாறு இடங்களை வழங்குதல் வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் சபையை காட்டிலும் செனட் சபையானது சிறுபான்மை மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பினை வழங்குவதாக இருக்கும்.

 

மலையக மக்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி புதிய அரசியலமைப்பில் பொருத்தமானதும், நடைமுறை சாத்தியமானதுமான திட்டங்கள் முன்வைக்கப்படுதல் வேண்டும். அரசியலமைப்பில் எல்லா மதங்களுக்கும், இனங்களுக்கும் சமவாய்ப்புகள் அளிக்கப்படுதல் வேண்டும். தொழில் வாய்ப்புகளில் மலையக மக்களின் விகிதா சாரத்திற்கேற்ப சலுகைகள் வழங்கப்படவேண்டும். கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களும் அவசியமாகும்.

 

நெருக்கீடுகளும் தீர்வுகளும்

மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இந்த நாட்டில் நெருக்கீடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அரசியலமைப்பு அவர்களுக்கு மென்மேலும் அழுத்தங்களை கொடுப்பதாகவே உள்ளது.

'இலங்கையர்' என்ற பொது வரையறையில் இல்லாது, இனம் என்கிற குறுகிய வட்டத்தில் நின்று கொண்டு அரசியலமைப்பை தயாரிக்க முற்படுவார்களானால் பிரச்சினைகள் புற்று நோயாகிவிடும். எனவே கடந்த கால தழும்புகளை கருத்தில் கொண்டு இதிலிருந்தும் விலகி புதிய பாதையில் ஐக்கியத்துடன் பயணிக்க புதிய அரசியலமைப்பு உதவ வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

– துரை­சாமி நட­ராஜா –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-26#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.