Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா - ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சிச் தலைவர் ஆகியோரை சந்தித்தார்

Featured Replies

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா - ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சிச் தலைவர் ஆகியோரை சந்தித்தார்

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

DIneIhiUMAAAo5A-_1_.jpg

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

2-_2_.jpg

இந்நிலையில் இந்து சமுத்திர மாநாட்டிற்காக நேற்று மாலை இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று மாலை அலரி மாளிகையில் வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

DIkHl-7UIAAp3hA.jpg

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தனது விஜயத்தின் போது எதிர்க்கட்சித் தலைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனையும் சந்தித்து அரசியல் விடயதானங்களில் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

DInq6UjUEAIUdWE.jpg

இதேவேளை, இன்று காலை வெளிவிவகார அமைச்சுக்கு சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவையும் சந்தித்துள்ளார்.

DInPC_8UIAEcBrc.jpg

இந்து சமுத்திர மாநாட்டிற்காக நேற்று இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியா திரும்புகிறார்.

DIjpSYSVwAA-MlI.jpg

DIjiLN_UIAAuSM3.jpg

 

 
 

http://www.virakesari.lk/article/23875

  • தொடங்கியவர்

இலங்கைத் தமிழரை ஒருபோதும் இந்தியா கைவிடாது! சம்பந்தனிடம் உறுதியளித்த சுஸ்மா

இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும்.

எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்

இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது' எனவும் அவர் வாக்குறுதியளித்தார்.

கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் பிரதமரின் உத்தியோகபூர்வமான செயலகமான அலரி மாளிகையில் நேற்று மாலை ஆரம்பமானது.

நேற்றும் இன்றும் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றுப் பிற்பகல் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதையடுத்து, அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

நேற்று முதலாம் நாள் கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இராப்போசனத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தன் எடுத்துரைத்தார்.

சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

சந்திப்பின் நிறைவில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை சுஷ்மா சுவராஜ் தெளிவுபடுத்தினார்.

இந்தச் சந்திப்பில் சுஷ்மா சுவராஜுடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோரும்

 

http://www.tamilwin.com/politics/01/157071?ref=home-feed

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, நவீனன் said:

இலங்கைத் தமிழரை ஒருபோதும் இந்தியா கைவிடாது! சம்பந்தனிடம் உறுதியளித்த சுஸ்மா

இந்தியா இலங்கை தமிழரை கைவிடாது எண்டால் என்னமாதிரி!!!!! எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை.....

அது சரி இவை இரண்டுபேரும்   என்ன கதைச்சிருப்பினம் :oO:

DInq6UjUEAIUdWE.jpg

 

தண்ணிப்போத்திலும் வரிசையாய் அடுக்கிவைச்சிருக்கு....விக்கல் வந்தால் குடிக்கவாக்கும்..tw_smiley:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.