Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோரம் இல்லாததால் நேற்று மாகாண சபை ஒத்திவைப்பு போரால் பாதிக்கப்பட்ட வடக்கிலேயே இந்த நிலை

Featured Replies

கோரம் இல்லாததால் நேற்று மாகாண சபை ஒத்திவைப்பு

போரால் பாதிக்கப்பட்ட வடக்கிலேயே இந்த நிலை

 
கோரம் இல்லாததால் நேற்று மாகாண சபை ஒத்திவைப்பு
 

வடக்கு மாகாண சபையின் நேற்றைய சிறப்பு அமர்வு போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் ஒத்தி வைக்கப் பட்டது.கோரம் போதவில்லை என்பதால் சபையை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு கைதடியில் உள்ள சபையில் நேற்று இடம்பெற்றது.

அமர்வின் ஆரம்பத்தில் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார். முன்னைய அமர்வு ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேட்ட வினாக்களில் சிலவற்றுக்கு நேற்று அவர் பதிலளித்தார்.

கடந்த அமர்வில் தவராசாவின் வேறு சில கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார். அதன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்று ஆரய்யப்பட்டது.

முதலமைச்சர் தனது கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தமையால் அதற்குப் பதிலளித்து உரையாற்ற எதிர்க் கட்சித் தலைவர் காத்திருந்தார். அதற்காக அவர் அவைத் தலைவரிடம் நேரமும் கேட்டிருந்தார். அது வழங்கப்பட்டும் இருந்தது.

இதற்கிடையே வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தான் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் ஆற்றிய அபிவிருத்தி பணிகள் தொடர்பில் உரையாற்றினார்.

அப்போது சபையில் 14 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிலும் இருவர் இடையில் சபையை விட்டு வெளியேறினர். அதனால் அவைத்தலைவருடன் சேர்த்து 12 பேர் மட்டுமே இருந்தனர். இதனால் சபையில் கோரப் பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பினார்.

நேற்றைய அவை நடவடிக்கையில் இறுதிவரை பசுபதிப்பிள்ளை, கமலேஸ்வரன், சிவநேசன், குணசீலன், சத்தியலிங்கம், சர்வேஸ்வரன், ரவிகரன், டெனிஸ்வரன், ஜெயசேகரம், அகிலதாஸ், சிவஞானம் மற்றும் தவராசா ஆகிய 12 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

அவை இடைநடுவில் ஒத்திவைக்கப்பட்டதும், வெளியில் வந்த உறுப்பினர்களில் சிலர் ‘‘மக்களுக்கு சேவை செய்ய மாகாண சபைக்கு வந்துவிட்டு, மாகாண சபையில் சாப்பிட்டதும் எங்களுக்குள்ளேயே சண்டையிட்டதையும் தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை’’ என்று புலம்பிக் கொண்டே சென்றனர்.

நேற்றைய அமர்வில் கோரப் பிரச்சினையை எழுப்பிய எதிர்வக் கட்சித் தலைவர், முதலமைச்சரின் உரைக்குத் தான் பதிலளிக்கும்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சபையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உடனே எழுந்த கஜதீபன், ‘‘வடக்கு மாகாண சபையின் அமர்வில் உறுப்பினர்கள் முழு நேரமும் இங்கேயே இருக்க வேண்டும் என்று இலங்கைச் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை.

ஆகவே நாம் எமக்கு வேலை இருக்கும்போது சபையில் இருந்து வெளியேறுவோம். சபையில் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்த யாருக்கும் உரிமை இல்லை.

சபையில் ஒருவர் கருத்துக்களை முன்வைக்கும்போது அது எமக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் வெளியில் செல்லலாம். பதிலை மக்களுக்கு நாம் வெளியில் வைத்து வழங்குவோம்’’ என்று ஆவேசப்பட்டுக் கத்தினார்.

http://newuthayan.com/story/25784.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.