Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றிணைந்து பயணிப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு வழி

Featured Replies

ஒன்றிணைந்து பயணிப்பதே பொருளாதார வளர்ச்சிக்கு வழி

p18-d400fbefce014d0921691db831cc3d16cfadd210.jpg

 

எதிர்வரும் 8 வருடங்களுக்கான பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை  வெளியிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக அறிவிப்பு

(க.கம­ல­நாதன்)

நாடு தற்­போது எதிர்­கொண்­டு­வரும் கடன் சுமை­யினை உங்கள் மீது சுமத்­த­மாட்டோம். 2025 ஆம் ஆண்­ட­ளவில் நாட்டின் கடன் சுமையை குறைப்போம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று உறு­தி­ய­ளித்தார்.

இதே­வேளை ஒற்­று­மையே நாட்டின் பல­மாகும். நாம் பிளவு பட்டு பய­ணிப்­பதால் எத­னையும் அடைய முடி­யாது. தனி­யாக தமது அதி­கா­ரத்தை பற்றி மாத்­திரம் சிந்­திப்­ப­வர்­களும் எம்­முடன் ஒன்­று­பட்டால் மாத்­தி­ரமே 100 வீத இலக்­கு­களை எம்மால் அடைய முடியும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

அத்­துடன் 60 வரு­டங்­க­ளுக்கு மேலாக பிளவுபட்­டி­ருந்த கட்­சிகள் ஒன்­றி­ணைந்து

ஆட்சி செய்­வ­தென்­பது கடி­ன­மான விட­ய­மா­கவே அமைந்­துள்­ளது. அதனால் எதிர்­பார்த்த இலக்கை 100 வீதம் அடைய முடி­ய­வில்லை. இருப்­பினும் சவால்கள் நிறைந்த பய­ணத்தை ஒழுக்­கத்­துடன் முன்­னெ­டுப்­பதால் தவ­று­க­ளையும் எதிர்­கா­லத்தில் திருத்­திக்­கொள்ள முடியும் என எதிர்­பார்க்­கின்றோம் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

கொழும்பு பண்­டா­ரா­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற வள­மான நாடு என்ற 8 ஆண்டு பொரு­ளா­தார திட்­டத்­தினை வெளி­யிட்டு வைக்கும் நிகழ்வில் இளைஞர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வின­விய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

அதா­வது அடுத்த 8 வரு­டங்­க­ளுக்­கான நாட்­டிற்­கான பொரு­ளா­தாரம் அபி­வி­ருத்தி திட்­டமே நேற்­றைய தினம் ஜனா­தி­ப­தி­யி­னாலும் பிர­த­ம­ரி­னாலும் வெ ளியி­டப்­பட்­டது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மற்றும் அமைச்­சர்கள் பிரதி அமைச்­சர்கள் இரா­ஜ­தந்­தி­ரிகள் அரச உயர் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் இளைஞர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

நிகழ்வில் இளைஞர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் எழுப்­பப்­பட்ட கேள்­வி­களும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அறித்த பதில்­களும் வரு­மாறு,

கேள்வி தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை அமர்­வுகள் ஆரம்­ப­மாகி இன்­றுடன் இரு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன?

பதில் (ஜனா­தி­பதி) தேசிய அர­சாங்கம் என்­பது எமது நாட்­ட­வ­ருக்கு புதிய விட­ய­மாகும். குறிப்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் கூட புதிய விட­ய­மா­கவே இருக்­கின்­றது. எமது புதிய அர­சியல் வியூ­கங்­க­ளுக்கு அமை­வாக இந்த திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதனால் எமக்கு பல விமர்­ச­னங்­களும் சவால்­களும் வரு­கின்­றன. அவற்றை பொருட்­ப­டுத்­தாமல் முன்னே செல்­கின்றோம். 60 வரு­டங்­க­ளுக்கு மேலாக பிளவு பட்­டி­ருந்த கட்­சிகள் ஒன்­றி­ணைந்து ஆட்சி செய்­வ­தென்­பது கடி­ன­மான விட­ய­மா­கவே அமைந்­துள்­ளது. அதனால் எதிர்­பார்த்த இலக்கை 100 வீதம் அடைய முடி­ய­வில்லை. இருப்­பினும் சவால்கள் நிறைந்த பய­ணத்தை ஒழுக்­கத்­துடன் முன்­னெ­டுப்­பதால் தவ­று­க­ளையும் எதிர்­கா­லத்தில் திருத்­திக்­கொள்ள முடியும் என எதிர்­பார்க்­கின்றோம்.

பதில் (பிர­தமர்) புதிய யுகத்தை நோக்கி பய­ணிக்க புதிய கலா­சா­ரத்தை உண்­டு­பண்­ணி­யுள்ளோம். முன்­னைய போக்­கி­லேயே கட்­சிகள் அடிப்­ப­டையில் நாம் பிள­வுடன் பய­ணித்­தி­ருந்தால் அழிவு மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருக்கும். அதனால் புதிய சவா­லான பய­ணத்தில் கைகோர்த்­துக்­கொள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எம்­முடன் இணைந்­துக்­கொண்ட போது எமக்கு அது சவா­லா­கவே தெரிந்­தது. ஆனால் இளைய தலை­முறை அதனை புரிந்­துக்­கொண்டு ஒத்­து­ழைப்பு வழங்­கினால் நாம் முன்­னோக்கி பய­ணிக்க முடியும்.

கேள்வி பொரு­ளா­தார மாற்றம் மற்றும் 10 இலட்சம் தொழில் வாய்ப்­புக்கள் என்­பன உங்­களால் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் அவற்றை எவ்­வாறு நிறை­வேற்­று­வீர்கள்?

பதில் (பிர­தமர்) அதற்­கான முதற்­கட்ட செயற்­பா­டா­கவே கூட்டு ஆட்­சியை இரு கட்­சிகள் இணைந்து அமைத்­துள்ளோம். நாம் இணைந்து பய­ணிப்­பதே பொரு­ளா­தார வெற்­றிக்கும் வழி­ச­மைக்கும் பிரித்­தா­னியா அமெ­ரிக்கா போன்ற நாடுகள் இந்த சமூக பொரு­ளா­தார விட­யங்­களில் ஒற்­று­மையை பின்­பற்­று­வ­தா­லேயே அபி­வி­ருத்தி அடை­கின்­றனர். அதனால் நாமும் உலக மாற்­றத்­திற்கு ஏற்ப மாற்றம் பெற வேண்­டிய தேவை உள்­ளது.

கேள்வி இரு கட்­சிகள் இணைந்து ஆட்சி செய்ய வேண்டும் என்­பதை தொடர்ந்தும் வழி­யு­றுத்­து­கின்­றீர்கள். தற்­போது இரு கட்சி இணைவு சாத்­தி­யப்­பட்­டுள்­ளது. எனவே அதன் முழு பயனை கடந்த இரு வரு­டங்­களில் அடைந்­துள்­ளீர்­களா?

பதில் (ஜனா­தி­பதி) இல்லை முழு­மை­யான பலன் கிட்­ட­வில்லை. அது சாத்­தி­யப்­பட வேண்­டு­மாயின் தனி­யான தனது அதி­கா­ரங்­களை பற்றி மாத்­தி­ரமே சிந்­திப்­ப­வர்­களும் ஒன்று பட்டு செயற்­ப­டு­வது குறித்து கவனம் செலுத்த வேண்டும். மேற்­கு­றிப்­பிட்ட தரப்­புக்கள் மத்­தியில் வாழ்­கின்ற போது 100 வீதம் எமது இலக்­கு­களை அடை­வது கடி­ன­மான ஒன்­றா­கவே அமையும். பிரிவு என்­பது ஒரு­போதும் பய­ன­ளிக்­காது. நாட்டி எழுச்­சிக்கு ஒற்­று­மையே சக்­தி­யாக அமையும். எவ்­வா­றா­யினும் எந்த திட்­டமும் ஆரம்­பத்­தி­லேயே பய­ன­ளிக்­காது என்­பதும் சிறிது காலத்தின் பின்பே அதன் பெரும் பயனை பெற முடியும் என்­ப­துமே நடை­து­மு­றை­யாகும்.

கேள்வி ஊழ­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க உங்­க­ளி­டத்தில் இருக்­கின்ற திட்டம் யாது?

பதில் (ஜனா­தி­பதி) ஊழல் மோசடி ஆகி­யன நிறைந்து காணப்­பட்ட நாட்­டி­னையே நாம் பொறுப்­பேற்றோம். ஆனால் தற்­போது ஊழலை குறைப்­ப­தற்­கான பல திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதால் சில அமைச்­சர்­களும் கூட மோச­டியில் ஈடு­பட அச்­சப்­ப­டு­கின்­றார்கள். சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள் 19 ஆவது திருத்தம் ஊடாக வலுப்­பெற்­றுள்­ளன. குறிப்­பாக சமூ­கத்தில் வாழ்­கின்­ற­வர்­க­ளுக்கு பயமும் வெட்­கமும் இருக்க வேண்டும். அவை இல்­லா­விட்டால் மிரு­கங்கள் ஆவார்கள். அவற்­றி­னா­லயே ஒழுக்­கமும் வளரும். அதனால் அர­சி­யல்­வா­திகள் தம்மை திருத்­திக்­கொண்டால் அரச சேவை­யா­ளர்­களும் ஒழுக்­கத்தை பின்­பற்­றுவர். அதனால் சமூ­கமும் ஒழுக்கம் மிக்­க­தாக மாறும்.

கேள்வி பெரும் கட­னி­லி­ருந்து நாட்­டிளை மீட்­டெ­டுக்க நீங்கள் கொண்­டுள்ள திட்டம் யாது?

பதில் (பிர­தமர்) தற்­போது நாட்டின் வரு­மா­னத்­தி­னா­லேயே கடனை செலுத்தும் அள­விற்கு பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­தி­யுள்ளோம். அதனால் 2025 ஆம் ஆண்­ட­ளவில் கடன் சுமையும் குறையும். அடுத்த தலை­மு­றைக்கு கடன் எஞ்­சி­யி­ருக்­காது. அதனால் யார் விமர்­சித்­தாலும் அதனை கருத்­திற்­கொள்ள போவ­தில்லை. கடந்த காலங்­களில் இரு­பெரும் இயற்கை அனர்த்­தங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்தும் கூட அதற்­கான முழு­மை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­கான வரு­மா­னத்தை எம்மால் ஈட்ட முடிந்­தது.

கேள்வி எமது நாட்டின் தனி­நபர் வரு­மா­னத்தை நீங்கள் 5 ஆயிரம் அமெ­ரிக்க டொலர்கள் வரையில் அதி­க­ரிப்­ப­தற்கு எவ்­வா­றான திட்­டங்­களை கொண்­டுள்­ளீர்கள்?

பதில் (பிர­தமர்) முதலில் எமது நாட்­டிற்கு வரும் முத­லீ­டு­களை அதி­க­ரிக்கச் செய்ய வேண்டும். அதனால் உற்­பத்தி அதி­க­ரித்து தொழில்­நுட்­பத்தின் உள்­வ­ரு­கையும் அதி­க­ரிக்கும். அதனால் அதற்­கான நிலை­யான ஒரு சமூ­கத்தை உரு­வாக்கும் முயற்­சி­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதன் பின்னர் உலக நாடு­க­ளுடன் சென்று உலக சந்­தை­களில் போட்­டி­யிட வேண்டும். அதனால் நாம் இந்து சமுத்­தி­ரத்தின் கேந்­திர நிலை­ய­மாக உரு­வெ­டுப்போம்.

கேள்வி சர்­வ­தேச நாடுகள் மத்­தியில் இலங்­கைக்கு கிடைக்­கெப்­பெற்­றுள்ள மதிப்பை கருத்­திற்­கொண்டு எவ்­வாறு நீங்கள் இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த போகின்­றீர்கள் ?

பதில் (ஜனா­தி­பதி) எமது செயற்­பா­டு­களின் பல­னாக சர்­வ­தே­சத்தின் மத்­தியில் எமக்கு வர­வேற்பு கிடைத்­துள்­ளது. கடந்த அர­சாங்­கத்தின் தவ­றான செயற்­பா­டுகள் அந்த அர­சாங்­கத்­துடன் சர்­வ­தேச நாடுகள் பகைத்­துக்­கொள்ள கார­ண­மா­கின. அதனால் சர்­வ­தேச சமூ­கத்­துடன் ஐ.நா. அமைப்பில் இருக்­கின்ற அங்­கத்­துவ நாடு என்ற வகையில் இலங்கை அதன் ஒழுங்­கு­மு­றை­களை பின்­பற்ற வேண்டும். குறிப்­பாக ஊடக சுதந்­திரம், சமூக சுதந்­திரம், வருமை ஒழிப்பு, சட்­டத்தின் ஆட்சி, சமூக நீதி ஆகி­ய­வற்றை ஏற்­ப­டுத்­தினால் சர்­வ­தே­சத்தின் மத்­தியில் எமக்கு வர­வேற்பு கிடைக்கும். கடந்த காலங்­களில் போன்று தனியாட்சி செய்ததையும் 18 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியதையும் உலகினதும் எமது நாட்டினதும் கற்ற சமூகம் முற்றாக புறக்கணித்தது.

பதில் (பிரதமர்) நாம் ஒரு நாடு என்ற வகையில் ஒன்றுபட வேண்டும் குறிப்பாக யுத்தகாலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பேசிவிட்டு பின்னர் நாம் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கியதால் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களும் இல்லாது போயின. அந்த வாய்ப்புக்களை கொண்டு பங்களாதேஷ் வளர்ச்சியடைந்தது. ஆனால் அப்போதைய தலைவர்கள் எமது நாட்டிம் உலகமே மண்டியிடும் என்று பார்த்தார்கள். அது நடக்கவில்லை. எமக்கு உலக நாடுகள் தேவை. அவர்களுக்கு நாம் தேவை. அதனால் உலகை பகைத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. எவ்வாறாயினும் இன்று நாம் உலக நாடுகள் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.