Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் காணாமல்போனோரின் 27வது நினைவேந்தல் இன்று

Featured Replies

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் காணாமல்போனோரின் 27வது நினைவேந்தல் இன்று

 
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் காணாமல்போனோரின் 27வது நினைவேந்தல் இன்று
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் 27வது நினைவு நிகழ்வு இன்று ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.

1990ஆம் ஆண்டு செப்ரெம்பெர் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது அங்கு தஞ்சமடைந்திருந்தோரில் 158 ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர்களில் எவரும் வீடு திரும்பியிருக்கவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல்போன உறவினர்களின் நினைவுக் குழுவின் சார்பில் அதன் ஏற்பாட்டாளர்கள், அரியமலர் தலைமையில், பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ இ. கோபாலசிங்கம் சிவாச்சாரியார் விசேட பூஜை வழிபாடுகளை நடாத்தினார்.

Capture-2.jpgCapture-3.jpgCapture-4.jpgCapture-1.jpgDSC06995.jpgDSC07003.jpgDSC07006.jpg

http://newuthayan.com/story/25971.html

  • தொடங்கியவர்

கடத்தப்பட்ட 158 தமிழர்கள் எங்கே; 27 வருடங்கள் ஆகியும் பதில் இல்லை

 
கடத்தப்பட்ட 158 தமிழர்கள் எங்கே; 27 வருடங்கள் ஆகியும் பதில் இல்லை

 

கிழக்குப் பல்கலைக்கழத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு தஞ்சமடைந்திருந்து நிலையில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் உட்பட 158 இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கொல்ப்பட்டதாகக் கருதப்படுகின்ற போதிலும் தமது பிள்ளைகள் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பும் இளைஞர்களது பெற்றோர் உட்பட உறவினர்கள், காணாமற் போனவர்கள் தொடர்பிலான உண்மையை உலகிற்கு அறிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் 1990 ஆண்டு சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில், போர்நிறுத்த உடன்படிகை முடிவடைந்து யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு முதல் வாழைச்சேனை பிரதேசங்களில் வசித்து வந்த பெரும்பாலான தமிழ் மக்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

இவ்வாறு தஞ்சமடைந்திருந்தவர்களில் மாணவர்கள் உட்பட 158 இளைஞர்களை 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு வந்திருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் விசாரணைக்கென கூறி அழைத்துச் சென்றனர்.

எனினும் அவர்கள் அனைவரும் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்ப்பட்டதாகக் கருதப்படுகின்ற போதிலும் தமது பிள்ளைகள் இன்னும் உயிருடன் இருப்பதாகவே அவர்களது உறவினர்கள் நம்புகின்றனர்.

சம்பவ தினத்தன்று அதிகாலை வேளை, பல்கலைக்கழத்தை சுற்றிவழைத்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தஞ்சமடைந்திருந்தவர்களில் இளைஞர்களை மைதானத்திற்கு அழைத்துச் சென்று வரிசையாக நிறுத்தி அவர்களில் 158 பேரை கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் அவர்கள் கைதாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், அவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியவில்லை. கடந்த காலங்களில் பல ஆணைக்குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும், இதுவரை எவ்வித முடிவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இச்சம்பவத்தின் 27ஆவது ஆண்டு நினைவுகூறல் நிகழ்வு  இன்று கிழக்குப் பலக்லைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் உலக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

ஆறுமுகத்தான் குடியிருப்பு மாவடிப்பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூஜை மற்றும் பிரார்தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், பிரதேசவாசிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்   உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Where-158-Tamils-were-kidnapped-no-answer

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.