Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் சீரற்ற காலநிலை : கடுமையான வெள்ளம் - இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

Featured Replies

தொடரும் சீரற்ற காலநிலை : கடுமையான வெள்ளம் - இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.!

 

 
 

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

21325998_506838913000499_894212866_n.jpg

இதன்படி, சப்ரகமுவ, ஊவா, மாகாணங்களுடன் களுத்துறை, காலி, மாத்தறை, கொழும்பு, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் 100  மில்லி மீட்டர் மழையை எதிர்பார்ப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பெய்த கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

DI8nEdVUMAA9dQy.jpg

காலி -  பத்தேகம,  உடுகம, நாகொட உள்ளிட்ட வீதிகள் உட்பட ஏராளமான வீதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

காலியை அண்மித்த மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்தில் கடுமையான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அளுத்கம - கந்தவிகாரையைச் சுற்றியுள்ள வீதிகள், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

மாது கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதனை சுற்றிவுள்ள பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகொட பிரதேசத்தில் மாத்திரம் 200 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

DI8nG1EVoAAwRet.jpg

இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண் சரியக்கூடிய இடங்களிலிருந்து மக்கள் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. காலி, நுவரெலிய ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DI8Xiv0VwAEkaeg.jpg

இதேவேளை பொலன்னறுவை – கதுருவெல பகுதியில் நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அப்பகுதியில் மின்சாரம் விநியோகம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.virakesari.lk/article/24024

 

 

நாட்டின் பல பகுதியில் கடும் மழை பெய்யும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

 
 
நாட்டின் பல பகுதியில் கடும் மழை பெய்யும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
 

நாட்டின் பல பகுதியில் 100 – 150 மில்லி மீற்றருக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டத்திலும் 100 – 150 மில்லி மீற்றருக்கு அதிகமான மழையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை 8.30 மணிவரை அடைமழை பெய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைப் பகுதியில் கடும் மழை பெய்யும் எனவும், கடல் பிரதேசத்தில் இடைக்கிடையே கடும் காற்று வீசக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்புடனும் காணப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/26023.html

  • தொடங்கியவர்

சீரற்ற கால­நிலை : அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட கோரிக்கை.!

சீரற்ற கால­நிலை இன்னும் இரு தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் எனவும் அத்­தி­ணைக்­களம் எதிர்­வு­ கூ­றி­யுள்­ளது.

இந்நிலையில்,  அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60 - 80 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Image result for அதிவேக வீதி சாரதிகளுக்கு கோரிக்கை virakesari

மேலும், வாகனங்களுக்கிடையில் சுமார் 50 மீற்றர் அளவில் இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

rain.jpg

இதேவேளை, வாகனத்தின் முன்பக்க விளக்கை எரிய விட்டு வாகனத்தை செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

Image result for அதிவேக வீதி சாரதி virakesari

 

 

http://www.virakesari.lk/article/24028

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.