Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்வேடமிட்டு சென்ற இளைஞன் நள்ளிரவில் படுகொலை - தம்புள்ளையில் சம்பவம்

Featured Replies

பெண்வேடமிட்டு சென்ற இளைஞன் நள்ளிரவில் படுகொலை - தம்புள்ளையில் சம்பவம்

 

பெண்வேடமிட்டு சென்ற இளைஞன்  நள்ளிரவில் படுகொலை  - தம்புள்ளையில் சம்பவம்

தம்புள்ளை நகரத்தில் பெண் வேடமிட்டு சென்ற ஆணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை நகரத்தில் அமைந்துள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை களுன்தேவ வல்கம வௌ பிரதேசத்தை சேர்ந்த சனத் குமார என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த இளைஞன் இரவு நேரங்களில் பெண் ஆடையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிவதாகவும் தெரிவிக்கும் பொலிசார் பலத்த தாக்குதலின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பெண் ஆடைக்கு சமமான ஆடை குறித்த இளைஞன அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் நீண்ட காலமாக பெண் ஆடை அணிந்து இரவில் சுற்றித் திரிவதாகவும், பெண்ணைப் போன்றே நடந்து கொள்வதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவ்வாறான பலமுறையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பல சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை(05) 2 மணியளவில் இந்த நபர் விழுந்து கிடந்ததனை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பலகைத் துண்டும், குடை ஒன்றும், கைக்கடிகாரம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/young-man-killed-in-dambulla

  • தொடங்கியவர்

பெண் உடையில் ஆண் : நடந்தது என்ன?

Published by Vijithaa on 2017-09-06 11:11:59

 
 

தம்புள்ளை  நகரிலுள்ள வாடகை வாகனத் தரிப்பிடத்தில் இருந்து பெண்கள் அணியும் உடைக்கு சமமான உடையணிந்திருந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை தம்புள்ளை  பொலிஸார்  மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்ட தடியில் படிந்துள்ள இரத்தக் கரை மற்றும் சடலத்தில் காணப்படும் தழும்புகளை கொண்டு குறித்த இளைஞர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

12356.jpg

சம்பவத்தில்  உயிரிழந்துள்ள இளைஞர் இதற்கு முன்னர்  பலமுறை தம்புள்ள   நகரில் பெண்கள் அணியும் உடையுடன் நடமாடி கைது செய்யப்பட்டவராகுமெனப் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

Local_News.jpg

சம்பவ இடத்தில் குடை ஒன்றும், கைக்கடிகாரம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது வரை குறித்த கொலை சம்பந்தமாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு சடலத்திற்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை தடயவியல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையில் தம்புள்ளை பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/24052

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.