Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பொன்­சே­கா­வுக்கு மாலை­ அணிவிக்கவேண்­டும் முத­ல­மைச்­சர் விக்கி யாழ்ப்­பா­ணத்­தில் வலி­யு­றுத்து

Featured Replies

வடக்கில் பொன்­சே­கா­வுக்கு மாலை­ அணிவிக்கவேண்­டும்

முத­ல­மைச்­சர் விக்கி யாழ்ப்­பா­ணத்­தில் வலி­யு­றுத்து

 
வடக்கில் பொன்­சே­கா­வுக்கு  மாலை­ அணிவிக்கவேண்­டும்
 

“தெற்­கில் சரத் பொன்­சே­கா­வின் கொடும்­பாவி எரிக்­கின்­றார்­கள் என்­றால் வடக்­கில் அவ­ரின் படத்­துக்கு மாலை போட வேண்­டும்” என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­தார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஏற்­பாட்­டில், புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான தெளி­வு­ப­டுத்­தல் கூட்­டம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­றது.இதில் கலந்து கொண்டு அவர் உரை­யாற்­றி­னார்.

“தமிழ் மக்­க­ளின் பேரி­யக்­க­மாக இயங்க வேண்­டிய தமிழ் மக்­கள் பேரவை இரண்டு பிர­மாண்­ட­மான எழுக தமிழ் கூட்டங்­க­ளின் பின்­னர் கும்­ப­கர்­ணன் போல் தூங்­கப் போய்­விட்­டதா? என்ற கேள்வி எழுந்­த­தால்த்­தான் நாங்­கள் விழிக்­கத் தொடங்­கி­யுள்­ளோம்” என்று அவர் தனது உரையை ஆரம்­பித்­தார்.

அர­ச­மைப்பு விட­யத்­தில் பெரும்­பான்­மை­யி­னர் முகத்­தைச் சுளிப்­பார்­கள் என்­ப­தால் எமது தேவை­க­ளை­யும், முன்­னு­ரி­மை­க­ளை­யும், வேண­வாக்­க­ளை­யும், நோக்­கு­க­ளை­யும் மூட்டை கட்டி வைத்­தால் எமது தனித்­து­வம் பறி­போய்­வி­டும்” என்­றும் முத­ல­மைச்­சர் குறிப்­பிட்­டார்.

“வெறு­மனே அரை­கு­றைத் தீர்வை ஏற்­றுக் கொள்­வது எந்­தக் கார­ணத்­தைக் கொண்­டும் எந்­தக் காலத்­தி­லும் ஏற்­றுக் கொள்ள முடி­யா­த­தொன்று. பிரச்­சி­னை­யைத் தீர்ப்­போம் எனக் கூறிக் கொண்டு ஒரு பெய­ரில் என்ன இருக்­கின்­றது என்று கூறிக் கொண்டு குறைந்­த­ளவு அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் ஒன்­று­டன் இணங்­கிச் செல்­வ­தை­விட தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­க­ளை­யும் அவர்­க­ளது நீண்ட கால அர­சி­யல் கோரிக்­கை­க­ளை­யும் முன்­வைத்து உரிய தீர்வு வரும் வரை சளைக்­காது முன்­னெ­டுத்­துச் செல்­வது அவ­சி­ய­மா­ன­தொன்று என்றே நான் கரு­து­கின்­றேன்” என்­றார்.

போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பில் முத­ல­மைச்­சர் குறிப்­பி­டு­கை­யில், “எமது இரா­ணுவ வீரர்­களை விட்­டுக் கொடுக்க மாட்­டோம், அவர்­க­ளுக்­கெ­தி­ராக விசா­ரணை செய்ய விட­மாட்­டோம் என்று அமைச்­சர்­கள் மட்­டத்­தில், அரச தலை­வர் மட்­டத்­தில் அடித்­துக் கூறும் போது தமது இரா­ணுவ வீரர்­கள் போர்க் குற்­றங்­க­ளில் கட்­டா­ய­மாக ஈடு­பட்­டி­ருந்­தார்­கள் என்­பதை மறை­மு­க­மாக ஏற்­றுக்­கொள்­கின்­றார்­கள் தெற்­கத்­தைய அர­சி­யல்த் தலை­வர்­கள்.

அது எமக்கு சார்­பாக அமை­கின்­றது. தற்­போது தள­பதி சரத் பொன்­சேகா, ஜெகத் ஜய­சூ­ரிய போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­டார் என்­பது பற்றி சாட்­சி­யம் அளிக்­கப்­போ­வ­தாக பகி­ரங்­க­மா­கக் கூறி­யுள்­ளார்.

குற்­ற­வா­ளி­கள் தாமா­கவே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றார்­கள். பன்­னாட்டு நீதி­ப­தி­க­ளு­டன் போர்க் குற்ற விசா­ர­ணை­யா­னது விரை­வில் நடை­பெற வேண்­டும் என்று கோரு­கின்­றோம். அரச தலை­வர் தமது போர் வீரர்­களை எப்­ப­டி­யும் காப்­பாற்­று­வோம் என்று கூறும் போது உள்­ளூர் நீதி­ப­தி­கள் உரி­ய­வாறு நீதி­யைப் பெற்­றுத் தரு­வார்­கள் என்று நாங்­கள் எப்­படி எதிர்­பார்க்க முடி­யுமா? என்று கேள்வி எழுப்­பி­னார்.

பொன்­சேகா கூறி­யது தொடர்­பில் அவ­தா­னம் தேவை என்று தெரி­வித்த முத­ல­மைச்­சர், அவர் தனது சொந்த வாழ்க்­கை­யில் நடை­பெற்ற கசப்­பான அனு­ப­வங்­க­ளின் பிர­தி­ப­லிப்­பா­கவே ஜெகத் தொடர்­பில் கூறி­யுள்­ளார் என்­பதை மறந்து விடக் கூடாது என்­றார்.

இறு­தி­யாக, ‘அறிவு வேறு சாமர்த்­தி­யம் வேறு என்­பதை நாங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். எம்­மி­டம் அறிவு உள்­ளது, ஆற்­றல் உள்­ளது. திறமை உள்­ளது. ஆனால் எந்த அள­வுக்கு சாமர்த்­தி­யம் உள்­ளது என்­பதை நீங்­களே பரி­சீ­லித்­துப்­பார்த்து கொள்ள வேண்­டும். நான் இவ்­வாறு கூறு­வ­தால் என்­னி­டம் சாமர்த்­தி­யம் இருக்­கின்­றது என்று கூற­வ­ர­வில்லை. அவ்­வா­றான அர­சி­யல் சாமர்த்­தி­யம் என்­னி­டம் இல்லை என்­பதை வெளிப்­ப­டை­யா­கவே நான் ஏற்­றுக் கொள்­வேன்.
மற்­ற­வர்­க­ளின் சாமர்த்­தி­யத்தை அடை­யா­ளம் காணும் அரு­கதை எனக்­குண்டு என்­பதை ஏற்­றுத்­தான் ஆக வேண்­டும்.

சிங்­கள மக்­க­ளின் தலை­வர்­க­ளி­டம் சாமர்த்­தி­யம் உள்­ளது. அதே போல் காலஞ்­சென்ற சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மா­னி­டம் சாமர்த்­தி­யம் இருந்­தது. ஆகவே அதை உணர்ந்து நாங்­கள் எங்­கள் காய்­களை நகர்த்த வேண்­டும். அதற்கு எமது அடிப்­ப­டை­க­ளில் விடாப்­பி­டித்­தன்­மை­யும் எம்­முள் ஒற்­று­மை­யும் அத்­தி­யா­வ­சி­யம்.

எமக்கு ஆத­ர­வாக அண்­மை­யில் தரப்­பட்ட கூட்­டாட்சி பற்­றிய உயர் நீதி­மன்­றத் தீர்ப்பு அமை­கின்­றது. அவர்­கள் என்ன நினைப்­பார்­கள் என்­றும் கூட்­டாட்­சிப் பற்­றிப் பேசு­வது தகா­த­தென்­றும் எம்­ம­வர் இனிக் கூறத்­தே­வை­யில்லை. அந்­தத் தீர்ப்பை முன்­வைத்தே எமது காரி­யங்­களை நாம் முன் நடத்­திச் செல்ல வேண்­டும்” என்­றார் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

http://newuthayan.com/story/26112.html

  • தொடங்கியவர்

சமஷ்டித் தீர்­வினை பெறு­வது தமிழர் தலை­மையின் கடமை

p2-50cb7c673659d697ebf3232d277c964d599c793b.jpg

 

தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை இடை­ந­டுவில் விடு­வ­தற்கு  எவ­ருக்கும் உரி­மை­யில்லை என்­கிறார் முத­­ல­மைச்சர் விக்­கி­
(ஆர். ராம்)

வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தின் சுய நிர்­ணய உரி­மை­யுடன் எம்மை நாமே ஆளும் சமஷ்டி தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது

தமிழர் தலை­மை­க­ளு­டைய கட­மை­யாகும். தமிழ் மக்கள் தமது கோரிக்­கை­களை அடை­வ­தற்­காக இது­வரை விலை­ம­திப்­பற்ற தியா­கங்­களை செய்­த­துடன் பல்­வேறு இழப்­பு­க­ளையும் சந்­தித்­துள்­ளனர். இத்­த­கைய நிலையில் தமிழ் மக்­க­ளது நீண்ட

நாளைய அபி­லா­ஷை­க­ளையும் கோரிக்­கை­க­ளை

யும் இடை­ந­டுவே கைவி­டு­வ­தற்கு

எவ­ருக்கும் உரி­மை­யில்லை என்று வட­மா­காண முத­ல­மைச்சர்

சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான சமஷ்டி கோரிக்கை என்­பது இன்று நேற்று தொடங்­கப்­பட்­ட­தல்ல. அத்­த­கைய தீர்­வினை விடுத்து அரை­குறை தீர்வை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. பிரச்­சி­னையைத் தீர்ப்போம் எனக் கூறிக்­கொண்டு ஒரு பெயரில் என்ன இருக்­கின்­றது என்று கூறிக்­கொண்டு குறைந்­த­ளவு அதி­காரப் பர­வ­லாக்கம் ஒன்­றுடன் இணங்கிச் செல்­வ­தை­விட தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளயும் அவர்­க­ளது நீண்­ட­கால அர­சியல் கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்து உரிய தீர்வு வரும்­வரை சளைக்­காது போராட வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தமிழ் மக்கள் பேர­வையின் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான தெளி­வு­ப­டுத்தல் கூட்டம் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே தமிழ் மக்கள் பேர­வையின் இணைத்­த­லை­வரும் முத­ல­மைச்­ச­ரு­மான விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான சமஷ்டி கோரிக்கை என்­பது இன்று நேற்று தொடங்­கப்­பட்­ட­தல்ல. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்த ஒரு­சில ஆண்­டு­க­ளி­லேயே தந்தை செல்­வ­நா­ய­கத்­தினால் சமஷ்டி கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இந்த சமஷ்டி கோரிக்­கை­யினை 65 வரு­ட­கா­ல­மாக தொடர்ந்து தமிழ் மக்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஆகவே வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தில் சுய­நிர்­ணய உரி­மை­யுடன் எம்மை நாமே ஆளும் சமஷ்டித் தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­களை இடை­ந­டுவில் கைவி­டு­வ­தற்கு எந்­த­வொரு தனிப்­பட்ட தலை­வ­ருக்கோ அர­சியல் கட்­சிக்கோ அல்­லது அமைப்­புக்கோ உரித்­தில்லை என நான் கரு­து­கின்றேன்.

எமக்கு ஆத­ர­வாக அண்­மையில் தரப்­பட்ட சமஷ்டி பற்­றிய உச்ச நீதி­மன்றத் தீர்ப்பு அமை­கின்­றது. அவர்கள் என்ன நினைப்­பார்கள் என்றும் சமஷ்டி பற்றிப் பேசு­வது தகா­தது என்றும் எம்­ம­வர்கள் இனி கூறத்­தே­வை­யில்லை. அந்தத் தீர்ப்பை முன்­வைத்தே எமது காரி­யங்­களை நாம் முன்­னெ­டுத்துச் செல்ல வேண்டும்.

சிலர் தேர்தல் காலம் வரு­கின்­றது என்றோ என்­னவோ பேரிகை கொட்டி பெரிய பேச்­சுக்­களில் ஈடு­பட எத்­த­னித்­துள்ள்னர். நேர்­மை­யுடன் மனச்­சாட்­சிப்­படி அவர்கள் இவ்­வா­றான பயிற்­சி­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்றால் நாம் அதனை வர­வேற்­கின்றோம்.

யுத்தக் குற்றம் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும். சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் யுத்தக் குற்ற விசாரணை விரைவில் நடைபெறவேண்டும். ஜனாதிபதி தமது போர் வீரர்களை எப்படியும் காப்பாற்றுவோம் என்று கூறும்போது உள்ளூர் நீதிபதிகள் உரியவாறு நீதியைப் பெற்றுத்தருவார்கள் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும். சர்வதேச உள்ளீடுகளுடனான விசாரணையொன்றே எமக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்றார்.

(முழுமையான உரை ...ஆம் பக்கத்தில்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-06#page-1

Page-10-copy-c0ed476edbed062505b218175d2

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-06#page-10

Bild könnte enthalten: Text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.