Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் 20 வருடங்களில் வடக்கின் நிலை இது தான்! விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 20 வருடங்களில் வடக்கின் நிலை இது தான்! விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

 

மற்றவர்கள் முகத்தைச் சுழிப்பார்கள் என்பதற்காக நாம் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்தால் இன்னும் இருபது வருடங்களில் வடக்கில் எல்லா இடங்களும் சிங்கள மயமாகி விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியல் அமைப்புத் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் இன்று காலை 09 மணி முதல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியலமைப்பு விடயத்தில் பெரும்பான்மையினர் முகத்தைச் சுழிப்பார்கள் என்பதற்காக எமது தேவைகளையும், உரிமைகளையும், அபிலாசைகளையும், விருப்புக்களையும் மூட்டை கட்டி வைக்க வேண்டுமா?

அண்மையில் ஒரு மத்திய அமைச்சர் வடமாகாணத் திணைக்களமொன்றுக்குச் சில நிதியுதவிகள் செய்து அதன் மூலம் கட்டிடமொன்று கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தைத் திறக்கவிருந்த போது அந்தக் கட்டிடத்துக்கு ஒரு சிங்களப் பெயர் வைக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.

எமது அலுவலர்கள் அதற்கு என்ன? என்று கூறி அந்தக் கட்டிடத்தைத் திறப்பதற்கான நாளும் குறிக்கப்பட்டு விட்டது. அந்தச் சமயத்தில் குறித்த விடயம் எனக்குத் தெரியவரவே ஏன் சிங்களப் பெயரை எமது மாகாணத்தில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு வைக்கச் சம்மதித்தீர்கள்? எனக் கேட்டேன்.

அவர்கள் பணம் தானே என்று எனக்குப் பதில் வழங்கப்பட்டது. இந்தக் கட்டிடத்துக்குச் சிங்களப் பெயர் வைக்க வேண்டுமென்பதற்காகப் பணம் தர முடியாது எனக் கூறினார்களா? எனக் கேட்டேன். அதற்கு இல்லை என்று கூறினார்கள்.

அப்படியானால் அவர்கள் பணம் தந்தார்கள் என்பதற்காக அவர்கள் கூறும் பெயரை வைக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? எனக் கேட்டேன்.

முன்னரே சிங்களப் பெயர்கள் வடக்கில் வைக்கப்பட்டுள்ளன தானே என்று கூறினார்கள். அப்போது எமது மக்கள் பிரதிநிதிகளிருக்கவில்லை. உங்களைப் போன்ற அலுவலகர்கள் தானிருந்திருப்பார்கள்.

நீங்கள் இப்போது சிந்திப்பது போன்று தான் முன்னரிருந்த அலுவலர்களும் சிந்தித்திருப்பார்கள். எனவே எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிருக்கும் போது அவ்வாறான விடயத்துக்குச் சம்மதம் தெரிவிப்பது தவறான விடயமல்லவா எனக் கூறினேன்.

அதற்குப் பதிலில்லை. அடுத்த நாள் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் என்னோடு பேசினார். நாங்கள் நாடளாவிய ரீதியில் ஒரே பெயரையே குறித்த கட்டிடங்களுக்கு வைக்கிறோம்.

நீங்களும் அதற்கு உடன்பட வேண்டும் எனக் கூறினார். ஏன் அதற்கு உடன்பட வேண்டும்? எனக் கேட்டேன். ஒரே நாடு என்பதால் பெயர்களில் ஒற்றுமையிருக்க வேண்டுமென்றார். அதற்கு நான் சிரித்து விட்டு நாடு ஒன்று தான். ஆனால், நாங்கள் வேறு. நீங்கள் வேறு.

உங்கள் மொழி வேறு. எங்கள் மொழி வேறு. உங்கள் மதம் வேறு. எங்கள் மதம் வேறு. உங்கள் வாழ்க்கை முறை வேறு. எங்கள் வாழ்க்கை முறை வேறு.

இதற்காகத் தானே நாங்கள் ஒரு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காகப் போராடி வருகின்றோம். எனவே, எங்கள் தனித்துவத்தை நீங்கள் மதிக்க வேண்டும் எனக் கூறினேன்.

இதன் பின்னர் குறித்த கட்டிடத்தைத் திறக்க சம்பந்தப்பட்ட அமைச்சர் வரவேயில்லை. இதன் காரணமாக அந்தக் கட்டிடம் இன்னமும் உத்தியோக பூர்வமாகத் திறக்கப்படவில்லை.

மற்றவர்கள் முகத்தைச் சுழிப்பார்கள் என்பதற்காக நாம் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுத்தால் இன்னும் இருபது வருடங்களில் வடக்கில் எல்லா இடங்களும் சிங்கள மயமாகி விடும்.

http://www.newsvanni.com/archives/27730

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.