Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சி­ய­ம்.!

Featured Replies

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சி­ய­ம்.!

 

 
 

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என் றும்  மத்­தியில்  பகி­ரப்­பட்ட  அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கை யில்  இரண்டாம் தர சபை­யாக  மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய  செனட் சபை அமைக்­கப்­பட வேண்டும் எனவும்  வலி­யு­றுத்தி  அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­விற்கு இடைக்­கால  பின்­னி­ணைப்பு  முன்­மொ­ழி­வினை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  சமர்ப்­பித்­துள்­ளது. 

அர­சியல் யாப்பு சபையின்  வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான  இரா. சம்­பந்தன், வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­ச­ளா­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் கையொப்­ப­மிட்டு இந்த பின்­னி­ணைப்பு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

இது குறித்து  நேற்று நடை­பெற்ற  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில்   எடுத்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன்   இந்த விடயம் குறித்து  விளக்கம் அளித்­துள்ளார்.

கூட்­ட­மைப்பு சமர்ப்­பித்­துள்ள பின்­னி­ணைப்பு  முன்­மொ­ழிவின்   வடக்கு, கிழக்கு  இணைந்த  சமஷ்டித் தீர்வு  அவ­சி­ய­மாகும். மத்­தியில் பகி­ரப்­படும் அதி­காரம் மீளப்­பெ­றப்­ப­டா­த­வ­கையில்   மாகாண  பிர­தி­நி­தித்­து­வத்தை   உள்­ள­டக்­கிய வகையில்  இரண்டாம் தர சபை­யாக செனட் சபை  அமைக்­கப்­ப­ட­வேண்டும்.  உச்­ச­நீ­தி­மன்­றத்தின்  மீயுயர்  தன்மை பாதிக்­கப்­ப­டா­த­வ­கையில்   அர­சியல் அமைப்பு  நீதி­மன்றம்  உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். சமயம் சம்­பந்­த­மாக சமத்­து­வ­மான நிலைமை  பேணப்­ப­ட­வேண்டும் என்றும்  யோசனை  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

இத்­த­கைய விட­யங்­களை உள்­ள­டக்கி இடைக்­கால வரைபு  உறுதி செய்­யப்­படும் பட்­சத்தில்  நியா­யத்­தன்மை  பேணப்­பட்டால்  அந்த வரைபை கூட்­ட­மைப்பு சாத­க­மாக பரி­சீ­லிக்கும் என்றும்  இந்தப் பின்­னி­ணைப்பில் கூறப்­பட்­டுள்­ளது. 

இந்த விடயம் குறித்து நேற்று முன்­தினம் நடை­பெற்ற  அர­சி­யல்­யாப்பு சபையின் வழி­ந­டத்தல்  குழுக்­கூட்­டத்தில் உறுப்­பி­னர்­க­ளுக்கும்   விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.  மீண்டும்  வழிநடத்தல் குழுவானது எதிர்வரும் 20, 21, 22 ஆகிய தினங்களில்  கூடவுள்ளது. 21 ஆம்திகதி அரசியல் யாப்புக்கான  பின்னிணைப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டு  இறுதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

http://www.virakesari.lk/article/24129

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்

 

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் எனவும் அதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என அரசாங்கத்திடம் தெளிவுபடுத்தியுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் காலம், பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் காலம் என்பன குறித்து எங்களுக்கு எதுவும் உறுதியாகத் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவை உரிய முறையில் இடம்பெறும் என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், எனினும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தாம் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/referendum-is-necessary-new-Constitution

04.png

வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அதிகூடிய அதிகாரப் பகிர்விலான தீர்வு அவசியம் என புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையுடன் இணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையுடன் ஒவ்வொரு கட்சியும் ஒரு இணை அறிக்கையை இணைத்துள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவரினால் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், மாகாண ஆளுநருக்கு அதிகூடிய அதிகாரங்களை இல்லாமல் செய்யவேண்டுமெனவும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திரும்பப் பெறப்படாமலும், நாடாளுமன்றத்தினால் பிரயோகிக்கப்படாமலும் இருக்கவேண்டும்.

அத்துடன், இதற்காக இரண்டாவது சபையொன்றும் நிறுவப்படவேண்டுமெனவும், அந்தச் சபைக்கு மாகாணங்கள் சார்பாக பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பு விவகாரங்கள், சர்ச்சைகள், பொருள் கோடல் போன்றவற்றில் முடிவுகளை எடுப்பதற்காக அரசமைப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் இணை அறிக்கையை வெளியிடுவதற்கு இரா.சம்பந்தன் மறுப்புத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=78204

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.