Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எமது மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தனை அனு­ம­திக்க முடி­யாது மட்­டக்­க­ளப்பில் இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன்

Featured Replies

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எமது மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தனை அனு­ம­திக்க முடி­யாது

p18-0b3c3c60032da4cd57d19daaa509da6b1a094733.jpg

 

மட்­டக்­க­ளப்பில் இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் 

(பெரியபோர­தீவு நிருபர்)

சிறு­பான்­மை­யின மக்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எமது மக்கள் பாதிக்­கப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. எமது நிலங்கள் எவ்­வாறு சூறையா­டப்­ப­டு­கின்­றதோ, அதே­போன்­றுதான் எமது கல்­வியும் சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றது. இதனால் எமது மாண­வர்­களின் கல்­வியை மேம்­ப­டுத்த நாம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.  

வடக்கு, கிழக்கில் தீர்­வுக்­காக பலர் போராடி மடிந்­துள்­ளனர். எனவே தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக நாம் சிறந்த தீர்வை பெற­வேண்டும். இத்­த­கைய சிறந்த தீர்வை பெற­வேண்­டு­மானால் எந்த அர­சியல் கட்­சிக்கு ஆத­ரவு வழங்க வேண்டும் என்­பது குறித்து மக்கள் சிந்­தித்­து­செ­யற்­ப­ட­வேண்டும். கிழக்கில் எமது தமிழ் பேசும் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். எமது பிர­தே­சங்­களில் குடி­யேற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. இத்­த­கைய செயற்­பா­டுகள் இன­வாத நோக்கம் கொண்­ட­வை­யாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் ஏற்­பாட்டில் இலங்­கைக்­கான சீனா தூத­ர­கத்தின் அனு­ச­ர­ணையில் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் களு­தா­வளை கிரா­மத்­தி­லுள்ள 6 படா­ட­சா­லை­க­ளைச ்சேர்ந்த தெரிவு செய்­யப்­பட 1000 மாண­வர்­க­ளுக்கு கற்றல் உப­க­ர­ணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்.களு­தா­வளை மகா­வி­தி­யா­லய கேட்போர் கூடத்தில் பட்­டி­ருப்பு வலயக் கல்விப் பணிப்­பாளர் திரு­மதி.ந.புள்­ள­நா­யகம் தலை­மையில் நேற்று திங்கட் கிழமை நடை­பெற்­றது.

இதன்­போது இலங்­கைக்­கான சீனா தூத­ர­கத்தின் பிரதி தூதுவர் திரு­மதி சாங் உள்­ளிட்ட பல கல்வி அதி­கா­ரிகள் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதன்­போது இரா­ஜாங்க அமைசச்ர் மேலும் உரை­யாற்­று­கையில்;

போருக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மற்றும் மலை­யகப் பகு­திகள் பின்­ன­தள்ளப் பட்­டி­ருக்­கின்­றன. ஆனால் அர­சாங்கம் அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் வடக்கு கிழக்கு மற்றும் மலை­ய­கத்தை உள்­ள­டக்கி செயற்­ப­டு­கின்­றது. ஆனால் எனது அமைச்­சி­னூ­டாக கல்­விக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து செயற்­பட்டு வரு­கின்றோம் யுத்த்­திற்குப் பின்னர் கல்­வியில் பின்­தங்­கிய மாகா­ண­மாக வட­மா­காணம் விளங்­கு­கின்­றது. இத­னை­யிட்டு வெட்­கப்­ப­டு­கின்றோம். எனவே கல்­வியில் வடக்கு கிழக்கு மற்றும் மலை­யக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். கடந்த அர­சாங்கம் எமது பகு­தி­களில் கல்வி முதல் அனைத்து விடை­யங்­க­ளையும் ஸ்த்தம்­பி­தப்­ப­டுத்­தித்தான் செயற்­பட்­டி­ருந்­தது. மேலும் கடந்த அர­சாங்­கத்­தினர் வடக்கு கிழக்கை வௌிநா­டு­களில் காட்டி நிதியைக் கொண்டு வந்து தங்­க­ளு­டைய மாவட்­டங்­க­ளைத்தான் அபி­வி­ருத்தி சொய்து கொண்­டி­ருந்­தார்கள். கடந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து செய்ற்­பட முடி­யாது என்று அந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்த பல உறுப்­பி­னர்கள் தற்­போது ஒதுங்­கி­யுள்­ளார்கள். அந்த ஆட்­சியை மாற்­று­வ­தற்குப் போராடி நல்­லாட்­சியை தற்­போது நாம் கொண்டு வந்­துள்ளோம். கடந்த காலத்தில் எமது மண்­ணுக்­காகப் போரா­டினோம் இன்று கல்­விக்­காகப் போராடி வரு­கின்றோம்.

வடக்கு கிழக்கு மற்றும் மலை­ய­கப்­ப­கு­தி­களில் அதி­க­ளவு வறு­மை­யான மாண­வர்கள் இருக்­கின்­றார்கள் ஆனால் அவை வெளியில் கொண்டு வரப்­ப­டு­வ­தில்லை, தற்­போது இப்­ப­கு­தி­களில் கல்­வியை மேம்­ப­டுத்த திட்­டங்­களைக் கொண்டு வந்­துள்ளோம். நல்­லாட்­சிக்­கா­லத்தில் எமது பகு­தி­களில் கல்­வியை முன்­நி­லைப்­ப­டுத்த வேண்டும். இலங்கை அபி­வி­ருதி அடைந்­து­வரும் நாடாக விளங்­கு­கின்­றது. அந்­நி­லையில் கல்­வியை முன்­னி­லைப்­ப­டுத்­தினால் எதிர் காலத்தில் சிறந்த தலை­வர்­க­ளாக இன்­றைய சிறு­வர்கள் விளங்­கு­வார்கள்.

கல்­வி­யி­ரீ­தி­யிலும் பெரும்­பான்மை இனத்­தைச சேர்ந்­த­வர்­க­ளுக்கு ஒரு நியாயம், தமி­ழர்­க­ளுக்கு இன்­னொரு நியா­மா­கத்தான் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. எனவே அனை­வரும் சம­மாகப் பார்க்­கப்­பட வேண்டும். ஆனாலும் இன­வா­தத்தை தூண்டி செயற்­பட்டால் சுய­மா­கத்தான் நன்­மை­ய­டைவோம் மாறாக ஒட்­டு­மொத்த நாட்­டுக்கு வரு­கின்ற வேவை­யி­லி­ருந்து நாம் பாதிப்­ப­டைந்து தள்­ளப்­ப­டுவோம். கடந்த கால அர­சாங்கம் அவர்­க­ளது குடும்­பங்­களைின் நலங்­களை மாத்­திரம் கருத்­திற்­கொண்டு செய்ற்­பட்டு வந்­துள்­ளது. ஆனால் நல்­லாட்சி அரசில் சர்­வ­தேசம் மதிக்­கத்­தக்க தலை­வர்கள் இருந்து செயற்­பட்டு வரு­கின்­றார்கள்.

எமது சொந்த நிலங்­க­ளுக்குச் செல்­வ­தற்கு கடந்த அர­சாங்கம் விட­வில்லை தற்­போது எமது நல்­லாட்சி அரசு வடக்கு கிழக்கில் பல நிலப்­ப­ரப்­புக்­களை விடு­வித்­துள்­ளது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் எமது தமிழ் போசும் மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள் எமது பிர­தே­சத்தில் எமது மக்கள் வாழாது ஏனைய இடங்­க­ளி­லி­ருந்து வந்து இங்கு குடி­யேற்­றப்­படும் நட­வ­டிக்­கைகள் தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும். எமது மக்­க­ளுக்­கு­ரிய வீட்டு வச­திகள் இல்லை இந்­நி­லையில் வேறு மாகா­ணங்­க­ளி­லி­ருந்து இங்கு வந்து குடி­ய­மர்த்­தப்­ப­டு­வதை எவ்­வ­ராறு ஏற்றுக் கொள்ள முடியும். இவ்­வா­றான செயற்­பா­டு­களை இன­வா­த­மா­கத்தான் நான் பார்க்­கின்றோம்.

கடந்த காலத்தில் கொக்­கட்­டிச்­சோலைப் பிர­தேசம் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்­தது. அதற்­காக வேண்டி அப்­ப­குதி மக்­களை விடு­வித்து செயற்­ப­டக்­கூ­டாது அப்­ப­கு­திக்கு நான் நேற்­ற­ய­தினம் சென்று அங்­குள்ள மக்­க­ளிடம் உரை­யா­டினேன் அங்கு மக்­க­ளுக்கு வீட்­டு­திட்­டங்­க­ளையும், ஏனைய வச­தி­க­ளையும் செய்து கொடுக்க வேண்டும். அங்­குள்ள மக்கள் அர­சியல் கட்­சிகள் ரீதி­யா­கவும் பாதிக்கப் படு­கின்­றார்கள். சிறு­பான்மை இன மக்­களால் கொண்­டு­வ­ரப்­பட இந்த நால்­லாட்சி அர­சாங்­கத்தில் எமது மக்கள் பாதிப்­ப­டை­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.

எமது நிலங்கள் எவ்­வாறு சூறை­யாடப் படு­கின்­றதோ அது­போன்­றுதான் எமது கல்­வியும் சூறை­யா­டப்­பட்டு வரு­கின்­றது. மலை­ய­கத்தில் சிறு­வர்கள் வேலைக்­க­ம­ரத்­தப்­ப­டு­கின்­றார்கள், சிறு­வ­யத்தில் பேலி­யான பிறப்­புச்­சான்­றி­தழைப் பெற்று மட்­டக்­க­ளப்­பி­ல­ருந்து பலர் வௌிநாடு செல்­கின்­றார்கள். வடக்கில் யுத்­தத்­திற்குப் பின்னர் சிறு­வர்கள் பெட்­டிக்­க­டை­களில் வேலை செய்­கின்­றார்கள். இவ்­வா­றான விடை­யங்­களை அடை­யாளம் க்ணடு எமது அர­சாங்கம் தடுத்து நிறுதி செயற்­பட்டு வரு­கின்­றது.

கடந்த அர­சாங்கம் முப்­ப­டை­களின் மூலம் வடக்கு கிழக்கு பகு­தி­களில் போதை­வஸ்த்து பாவ­னை­களை விஸ்த்தரித்து இருந்தது. பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ள கடைகளில் படையினரால் போதைவஸ்த்துக்கள் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு அவை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதற்கு எமது மாணவர்கள் அடிமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறான பல கடைகளை நாம் அடையாளம் கண்டு மூடியிரு்ககின்றோம்.

வடக்கு, கிழக்கில் தீர்வுக்காக பலர் போராடி மடிந்துள்ளார்கள் எனவே தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினூடாக நாம் ஒரு சிறந்த தீர்வைப் பெறவேண்டும். இதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளுக்கெல்லாம் மக்கள் எந்த அரசியல் கட்சியின் பின்னால் நின்று செயற்பட வேண்டும் என்பதையும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.