Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!!

Featured Replies

பல்கலை. மாணவர் மீதான சூட்டுச் சம்பவத்தில் கைதான பொலிஸாருக்குப் பிணை!!

 

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்­பாணம் காங்கேசன்துறை வீதி குளப்­பிட்டி பகு­தியில் பொலி­ஸாரின் துப்­பாக்கி சூட்டில் யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்கள் இருவர் உயிரிழந்தனர்.

யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டது. குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரது விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சம்­பவ இடத்தில் இருந்து துப்­பாக்கி ரவைகளின் வெற்­றுதோட்டாக்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.

சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பொலிஸ் நிலை­யத்தின் ஐந்து பொலிஸ் அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியில் வைக்­கப்­பட்டனர்.

அவர்கள் கடந்த 11 மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://newuthayan.com/story/28479.html

  • தொடங்கியவர்

மாணவர் படுகொலை; நீதிபதி இளஞ்செழியன் முன்வைத்த கடுமையான நிபந்தனை!

 
மாணவர் படுகொலை; நீதிபதி இளஞ்செழியன் முன்வைத்த கடுமையான நிபந்தனை!

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொலிஸார் ஐந்து பேரும் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே மாதம் நள்ளிரவை நெருங்கிய நேரத்தில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த மாணவர்கள் இருவரும் கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த 11 மாதங்களாக நடந்துவந்துள்ளது. இந்த விசாரணைகள் அனைத்தும் தற்பொழுது நிறைவடைந்த காரணத்தினால் அரச தரப்பு சட்டத்தரணி தனது ஆட்சேபனை எதனையும் தெரிவிக்காததை அடுத்தே 5 சந்தேக நபர்களுக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்தார்.

மேலும் இந்த பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேருக்கும் நீதிபதியினால் கடுமையான உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பிணை நிபந்தனைகளாக,

  • ஆளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்படவேண்டும்
  • நீதவானால் ஏற்றுக்கொள்ளத்தக்க 2 லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆட்பிணை ஒப்புவிக்கவேண்டும்
  • தத்தமது கடவுச்சீட்டுக்களினை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேனும்.
  • ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை ஒன்பது மணிதொடக்கம் நண்பகல் பன்னிரண்டு மணிக்குள் கொழும்பு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையெழுத்து இடவேண்டும்.
  • எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டை விட்டுச் செல்ல கூடாது.

போன்ற கடுமையான நிபந்தனைகளுடன் மேற்படி சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/university-students-murder-jaffna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.