Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சியமளிக்க மாட்டேன்

Featured Replies

சாட்சியமளிக்க மாட்டேன்

P14-ab2f5e7214820f2555c7cd912bcde86a84feaa9e.jpg

 

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நேரில் அறிவித்தார் அர்ஜுன் அலோஸியஸ்

(எம்.எப்.எம்.பஸீர்)

பிணைமுறி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தான் சாட்சியம் அளிக்கப் போவதில்லை என்று பேப்பச் சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோ ஸியஸ் நேரடியாக நேற்று ஆணைக் குழுவுக்கு அறி வித்தார்.  

தனது சட்டத்தரணிகளுடன் நேற்று முன்தினம் வழங் கப்பட்ட ஆணைக்குழுவின் தீர்ப்பு மற்றும் சட்டத்தன்மை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் தான் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அர்ஜுன் அலோஸியஸ் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்தி ரசிறி, பி.எஸ். ஜெயவர்தன மற் றும் ஓய்வுபெற்ற உதவி கணக்  காய்வாளர் நாயகம் கே.வேலுப் பிள்ளை ஆகியோர்  அடங்கிய குழுவின் முன்னிலையில் நேற்றைய ஆணைக் குழுவின் சாட்சிப் பதிவுகள் ஆரம்பமான போதே அவர் இதனை அறிவித்தார். 

அர்ஜுன் அலோசியசை சாட்சியம் வழங்க கட்டாயப்படுத்த ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என அவரின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, கடந்த திங்களன்று (11 ஆம் திகதி ) அடிப்படை ஆட்சேபனம் தெரிவித்தமை தொடர்பில், நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இதன் போது பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக அர்ஜுன் அலோஸியசின் சாட்சியம் அவசியமாகின்றது. குறிப்பாக பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் பெரிய அளவில் பிணை முறிகளை ஏலம் கோரியமைக்கான காரணம், இரண்டாம் நிலை சந்தையில் பிணை முறிகள் கைமற்றம், பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மற்றும் சில மத்திய வங்கி அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புகள், உள்ளிட்ட 6 விடயங்கள் குறித்து அவரது சாட்சியம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனைவிட, தற்போது சாட்சியங்களாக , ஆவணக்களாக, ஒலிப்பதிவுகளாக எம்முன்னே ஆதாரங்கள் உள்ள நிலையில், அவை தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் அவர் அறிந்த விடயங்களை சாட்சியமாக நேரடியாக வழங்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம். குறிப்பாக பிணை முறை ஏலம் தொடர்பில் அலோசியஸும் கசுன் பலிசேனவும் உரையாடிய இரகசிய தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பிலான குரல் பதிவுகள், அர்ஜுன் அலோசியஸுக்கும் மத்திய வங்கியின் சில அதிகாரிகளுக்கும் இடையிலான உறவு, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அலோசியஸுக்கு இடையிலான உறவின் தன்மை, பேன் ஏஷியா வங்கியின் ரிஷ்ஷீ டயஸுக்கு அலோஷியஸ் தொலைபேசி அழைப்பெடுத்தமைக்கான காரணம், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தாரின் சொகுசு தொடர்மாடி வீட்டுக்கு குத்தகை செலுத்தியதற்கான காரணம் உள்ளிட்டவை தொடர்பில் (ஏனைய சாட்சியாளர்களிடம் இருந்து வெளிப்படுத்தப்பட்ட 15 விடயங்கள் இவ்வாறு தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.) அலோசியஸின் சாட்சியம் அவசியமாகும்.

 அர்ஜுன் அலோசியஸுக்கு அந்த விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்பதும் அது தொடர்பில் அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாகும் என சுட்டிக்காட்டியிருந்த ஆணைக் குழு எனினும் அர்ஜுன் அலோஸியஸை சாட்சியம் அளிக்க கட்டாயப்படுத்த முடியாது என அறிவித்திருந்தது.

அர்ஜுன் அலோசியஸின் சாட்சியமானது மிக முக்கியமானது. அவரின் சாட்சியம் கட்டாயமானது. எனினும் அவரை சாட்சியம் அளிக்க எம்மால் வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ முடியாது. அவர் சாட்சியம் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர் சாட்சியம் அளிக்க மறுத்தாலோ விலகி நின்றாலோ, ஆணைக் குழுவுக்கு பதிவாகும் சாட்சியங்களின் அடிப்படையின் நாம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும்.' என ஆணைக் குழு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து அலோஸியஸின் சட்டத்தர ணியான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நேற்று முன் தினமே தனது சேவை பெறுநர் அர்ஜுன் அலோஸொயஸுக்கு சாட்சியம் அளிக்க விருப்பமில்லை என கூறியிருந்தார்.

 இதன் போது அலோஸியஸின் சட்டத்தரணி காமினி மாரப்பனவை நோக்கி கருத்து வெளியிட்ட, ஆணைக் குழுவில் அங்கம் வகிக்கும் உயர் நீதிமன்ற நீதியர்சர் பி.எஸ் ஜெயவர்தன, அவசரப் பட வேண்டாம் எனவும், தீர்ப்பின் நகலைப் பெற்று ஆராய்ந்து விட்டு, அர்ஜுன் அலோசியஸ் ஆணைக் குழுவினால் வழங்கப்படும் திகதியொன்றில் ஆஜராகி சாட்சியம் அளிப்பாரா? இல்லையா? என்ற முடிவை நேற்றைய தினம் அறிவிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

 இந் நிலையில் நேற்று காலை 10.00 மணிக்கு ஆணைக் குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பமான போது, ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, எழுந்து நேற்று ( நேற்று முன் தினம் ) ஆணைக் குழு வழங்கிய தீர்ப்புடன் நாம் முழுமையாக உடன்படுகின்றோம். இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். இந் நிலையில் எனது சேவை பெறுநர் ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்க மாட்டார் என அறிவித்தார்.

 இதன் போது தலையிட்ட ஆணைக் குழுவின் தலைவர் கே.டி. சித்ரசிறி, அலோஸியஸ் ஆணைக் குழுவில் ஆஜராகியுள்ளாரா? என வினவினார். இதன்போது அர்ஜுன் அலோஸியஸ் எழுந்து தனது பிரசன்னத்தை உறுதிப் படுத்திய பின்னர், நீதியரசர் சித்ரசிறி, சட்டத்தரணி ஒன்றையும், அர்ஜுன் அலோஸியஸ் இன்னொன்றையும் கூறாமல் இருக்க அவரது நிலைப்பாட்டை அவரே கூறட்டும் என்றார்.

 இந் நிலையில் தனது 5 சட்டத்தரணிகளுடன் ஒரு நிமிடம் கதைத்துவிட்டு சாட்சிக் கூண்டு அருகில் அர்ஜுன் அலோஸியஸ் சென்றார். எனினும் சாட்சிக் கூண்டில் அவர் ஏறவில்லை. அதன் அருகில் இருந்து, ஒலிவாங்கியைப் பெற்று ' எனது பெயர் அர்ஜுன் ஜோசப் அலோசியஸ். இந்த விடயம் தொடர்பில் எனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுள்ளேன். இந் நிலையில் நான் இந்த ஆணைக் குழுவில் சாட்சியமளிக்க விரும்பவில்லை' என அறிவித்து விட்டு ஆணைக் குழுவில் இருந்து வெளியேறிச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து அவரது சட்டத்தரணிகளும் சென்றனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.