Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக மஹிந்த தோல்வியடைவதை பார்க்க அப்பா விரும்பவில்லை

Featured Replies

அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக மஹிந்த தோல்வியடைவதை பார்க்க அப்பா விரும்பவில்லை

p20-82b92217ac902e614a9bee1fefebd565b8413353.jpg

 

அவருக்காக பாடுபட்டார்; இருவருக்குமிடையிலான நட்புறவு குலைவதற்கு பஷில் ராஜபக் ஷவே காரணமானார்

'ஜனாதிபதி அப்பா' நூலில் சத்துரிகா சிறிசேன ஆதங்கம்

(எம்.எம்.மின்ஹாஜ்)

மஹிந்த ராஜபக் ஷவிற்கும் அப்பா வுக்கும் இடையிலான நட்புறவை முறியடிக்கும் வகையில் பஷில் ராஜபக் ஷவே செயற் பட்டார். அவர் தேசிய அமைப்பாளராக பதவி ஏற்ற பின்னர் இது மேலும் உக்கிர  மடைந்தது. கட்சியின் உரிமையாளர் போல் எனது அப்பாவை கட்சிக்கு தேவை  யற்றவராகவே காண்பிக்க முயற்சித்தார். அப்பாவின் மீதான பஷில் ராஜபக் ஷ வின் ஒடுக்குமுறை செயற்பாட்டில் தலை யிட்டு அதனை தீர்க்க மஹிந்த ராஜபக் ஷ முன்வரவில்லை. தனது அரசியல் கெளர வத்தையும் சுயாதீன தன்மையையும் பாது  காக்கும் சிறந்த குணம் மஹிந்த ராஜபக் ஷவிடம் இருக்கவில்லை. அதற்கு பதி லாக சமகால அரசியல்  குறித்தும் அப்பா விமர்சனம் செய்வதனை ஊடகங்கள் வாயிலாக பார்த்த பின்னர் தொலைபேசியின் ஊடாக அப்பாவை தொடர்பு கொண்டு தீட்டி தீர்ப்பார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா சிறிசேன தனது ''ஜனாதிபதி அப்பா'' எனும் சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார். 

அத்துடன் அப்பா பொதுவேட்பாளராக அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் வரைக்கும் எந்த வகையிலும் எந்தநபரும் மாறவில்லை. இந்த காரணங்களே அப்பா அதிருப்தி அடைவதற்கு பிரதான காரணமாக இருந்தது. அப்பா வீட்டிற்கு வரும் போது கவலையான சுபாவம் காணப்படும். இதனை அவரது முகத்தை பார்க்கும்போது வீட்டில் இருந்த எமக்கு இனங்காண முடிந்தது என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம்.எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதா? யுத்தம் காரணமாக சிறார்களையும், சொத்துகளையும் இழந்தோம். எனவே யுத்தத்தினால் யாருமே வெற்றிக்கொள்ளவில்லை என்றும் அந்த புத்தகத்தில் சத்துரிகா சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

''ஜனாதிபதி அப்பா'' என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பற்றி அவரது மகள் சத்துரிகா சிறிசேன எழுதிய சுயசரிதை நூல் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியின் குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட பெரும்தொகையானோர் கலந்துகொண்டனர்.

''ஜனாதிபதி அப்பா'' என்ற நூலில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளம் பருவம், பாடசாலை பருவம், அரசியலில் நுழைந்தமை, ஜனாதிபதி தேர்தல் , அவரது சிறை வாழ்க்கை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு செய்த திட்டமிடல், இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அப்போதைய அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் செயற்பட்ட விதம், ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரத்தியேக செயலாளர் திஸாநாயக்கவின் பங்களிப்பு மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் , மாதுலுவாவே சோபித தேரர் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நூலில் இனங்காணப்பட்ட முக்கியமான விடயதானங்களை நோக்கும் போது, குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனதளவில் பட்ட துயரங்களை சத்துரிகா சிறிசேன நூலில் விளக்குகையில்,

ஆயுத போர் நடந்த போது சர்வாதிகாரத்தை நோக்கிய அரசியல் குறித்து அப்பா அதிருப்தி அடைந்திருந்தார். அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது அவருக்கு எதிரான அநீதிகள் கூடியதே ஒழிய குறையவில்லை. அவர் அரசிலிருந்து விலகும் மனபான்மை வரும் வரைக்கும் அது உக்கிரமடைந்தது. மூன்றாவது முறையும் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு முனைந்த போது போட்டியிட வேண்டாம் என்று நேரடியாகவே பல தடவைகள் அப்பா கூறியிருந்தார். அவ்வாறு கூறுவதற்கு அவர் அஞ்சவில்லை. இந்த சந்தர்ப்பத்தை வேறு ஒருவருக்கு வழங்குமாறு கடிதமும் எழுதியிருந்தார். எனினும் இறுதியில் வைராக்கியம் இன்னும் இன்னும் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அப்பாவுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்பட்டது. இதன்படியே 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து 2004 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக போட்டியிட்டு வெற்றிபெற்றது. இதன்போது பிரதமர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தையில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அநுர பண்டாரநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார். எனினும் இதற்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் எதிர்ப்பினை வெளியிட்டது. இதனையடுத்து சந்திரிக்கா அம்மையார் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான அப்பாவின் பெயரை முன்வைத்த போது அதற்கு அப்பா இணங்கவில்லை. அதற்கு பதிலாக அவர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரையே முன்வைத்தார். இதன் போது அனைவரின் இணக்கத்தின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை நியமிக்க வேண்டும என யோசித்த சந்திரிக்கா அம்மையார் அநுர பண்டாரநாயக்கவின் பெயரை முன்மொழிந்த போது அப்பா தற்போதைக்கு வேட்பாளர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவே தகுதியானவர் என முன்மொழிந்ததுடன் அதனை அலவி மெளலானா அமோதித்தார். இதன்போது வேறு யார்தான் உள்ளார் என கூறி சந்திரிகா அம்மையார் அதிருப்தியுடனே சென்றார். எனவே தனக்கு கிடைத்த வாய்ப்பை அப்பா தியாகம் செய்தார்.

அதிகார மோகம் கொண்டு அரசியல் ரீதியாக ராஜபக்ஷ தோல்வி அடைவதனை பார்க்க அவர் விரும்பவில்லை.மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக பாடுபட்டார். ராஜபக்ஷவை நண்பராகவே எனது அப்பா காண்பிக்க முயன்றார். ஆனால் அந்த நட்பை பயன்படுத்தி அவருக்கு எதிராக சதியும் பொறாமையும் மோலோங்கியது.

எனினும் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அப்பாவுக்கு இடையிலான நட்புறவுக்கு முட்டுகட்டை போடும் வகையில் பஷில் ராஜபக்ஷ செயற்பட்டமை நட்புறவு பாதிப்புறுவதற்கு பெரும் காரணமாக இருந்தது. அவர் மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து அதிஷ்டம் இல்லா அரசியல்வாதியாக காண்பிக்க முனைந்தார். பஷில் ராஜபக்ஷ தேசிய அமைப்பாளராக பதவி ஏற்ற பின்னர் இது மேலும் உக்கிரமடைந்தது. மேலும் கட்சியின் உரிமையாளர் போல் பொது செயலாளர் பதவி வகித்த எனது அப்பாவை கட்சிக்கு தேவையற்றவராகவே காண்பிக்க முயற்சித்தார். கட்சியின் பிரதான பதவிகளை வகித்த அப்பாவும் பஷில் ராஜபக்ஷவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முடிந்தும், கட்சிக்கு செயலாளர் ஒருவர் இல்லாதவாறு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து அனைத்தையும் தனது விருப்பின் படி செய்தார்.

இதன்படி நாம் விதைப்போம் - நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற எனது அப்பாவின் திட்டம் வெற்றியடைந்ததையடுத்து பஷில் ராஜபக்ஷ அத்திட்டம் தனது திட்டம் என காண்பிக்க முனைந்தார். இதன்பிரகாரமே திவிநெகும திட்டம் ஆரம்பமானது.எனினும் இந்த ஒடுக்குமுறை செயற்பாட்டில் தலையிட்டு தனது அரசியல் கெளரவத்தையும் சுயாதீன தன்மையை பாதுகாக்கும் சிறந்த தன்மை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருக்கவில்லை.

அதற்கு பதிலாக சமகால அரசியல் குறித்தும் அப்பா விமர்சனம் செய்வதனை ஊடகங்கள் வாயிலாக பார்த்த பின்னர் தொலைபேசியின் ஊடாக அப்பாவை தொடர்பு கொண்டு தீட்டி தீர்ப்பார். இந்த மாற்றம் 2010 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேலும் அதிகரித்தது. எனினும் ஐந்து வருடங்கள் அப்பா அவையனைத்தையும் பொறுத்து கொண்டிருந்தார். இது போன்ற பல சம்பவங்கள் உள்ளன.

அப்பா பொதுவேட்பாளராக அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் வரைக்கும் எந்த வகையிலும் எந்தநபரும் இத்தகைய செயற்பாடுகளில் இருந்து மாறவில்லை. இந்த காரணங்களே அப்பா அதிருப்தி அடைவதற்கு மூலமாக அமைந்தன. அப்பா வீட்டிற்கு வரும் போது கவலையான சுபாவத்தை அவரது முகத்தை பார்க்கும் வீட்டில் இருந்த எமக்கு இனங்காண முடிந்தது. இதன்போது எமது அம்மா , தற்போது நாம் இதிலிருந்து விடுதலையாக வேண்டும் என கூறினார்.

அப்பாவின் கவலை மேலும் மோலோங்கியதனை அடுத்து இதனை எந்நேரமும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது மாற வேண்டும் என அம்மா அழுத்தி கூறினார். வீட்டில் இருந்தாலும் அம்மாவுக்கு சிறந்த அரசியல் அறிவு இருந்தது.

எனினும் யுத்த நேரத்தின் போது காணப்பட்ட சமகால அரசியல் போக்கில் அதிருப்தி அடைந்திருந்த அப்பா, அரசியல் இருந்து ஓய்வு பெற நினைத்தாரே ஒழிய சதித்திட்டங்களுக்கு உள்ளாகுவதற்கு ஒருபோதும் நினைக்கவில்லை. சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சுகாதார அமைச்சராகவும் இருந்த தனக்கே இத்தகைய அழுத்தம் எனில் சாதாரண மக்களின் நிலைமையை கருதி அப்பா கவலையடைந்தார்.

இதன்பின்பே சிவில் அமைப்புகள் வந்து பேசின. அதன்பின்னர் பொதுவேட்பாளர் தெரிவு செய்வதில் பலரின் பெயர்கள் முன்வைத்த போதிலும் பின்னர் அப்பாவின் பெயரை சந்திரிகா அம்மையார் ‍முன்வைத்தார்.

உயிருடனான போர்

யுத்ததிற்கு நேரடியாக முகங்கொடுத்த இராணுவ வீரர்கள், யுத்த சூன்ய பிரதேச மக்களின் அனுபங்களை அப்பா அமைச்சர் என்ற காரணத்தின் காரணமாக நாம் பெற்றுக்கொண்டோம். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலை புலிகள் இயக்கமானது அமைச்சர்களை தனது இலக்காக கொண்டு செயற்பட்டது. இதன்படியே ஆர்.பிரேமதாஸ உள்ளிட்ட பல பிரபலங்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த பட்டியலில் எனது அப்பாவும் இருந்தார்.எனினும் விடுதலை புலிகளின் ஐந்து இலக்குகளிலும் தப்பித்தமையினால் அவர் மக்களின் விசேட இடத்தை பெற்றுக்கொண்டார்.

இதன்படி 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட விவாதம் நடந்து முடிந்து வந்த போது இராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் வைத்து அப்பா இலக்குவைக்கப்பட்டார். எனினும் இதன்போது அப்பாவால் தப்பித்து கொள்ள முடிந்தது. இதன்போது என்.எம்.பெரேரா சிலைக்கு அருகிலேயே குண்டு வெடித்தது. இந்த சத்தம் அம்மாவுக்கும் கேட்டதாம். ஆனாலும் தனது கணவர்தான் சிக்குண்டுள்ளார் என அவர் அறிந்திருக்கவில்லை.

2 ஆவது தாக்குதல்

அப்பாவை இலக்கு வைத்து 2000 ஆம் ஆண்டு இன்னுமொரு தாக்குதலும் நடந்தது. திம்புலாகல சேருவில தமிழ் கிராமத்திற்கு மின்விநியோகம் வழங்கு திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் பிரதம அதிதியாக அப்பாவே சென்றார். எனினும் காலை பொழுதில் பல நிகழ்வுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டதனால் திம்புலாகல நிகழ்வுக்கு மூன்று மணிநேரம் தாமதாக செல்ல வேண்டி ஏற்பட்டது.எனினும் அப்பாவை இலக்குவைத்து தாக்குதல் நடத்தவிருந்த விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த பெண், அப்பா வரும் வரை காத்திருந்தார். எனினும் இதன்போது குறித்த பெண்ணை அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் பிடித்தமையினால் அப்பாவினதும் பொது மக்களினதும் உயிரை பாதுகாக்க முடிந்தது. அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தின் அடிப்படையில் அந்தப் பெண் விடுதலையானார்.

3 ஆவது தாக்குதல்

அப்பாவை இலக்கு வைத்து 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வெலிகந்த பிரதேச சபை கட்டடத்தை திறக்க சென்ற போது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் அந்த நிகழ்வுக்கு வரு‍கை தரவிருந்த அப்பாவும் நிகழ்வு நடக்கவிருந்த முதல் நாள் இனந்தெரியாத ஒருவரின் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. இதனையடுத்து அவர் நான் ஐக்கிய தேசியக் கட்சி தான் என்றாலும் உங்கள் மீது எனக்கு மதிப்புள்ளது. ஆகையால் குறித்த நிகழ்வுக்கு செல்ல வேண்டாம் என்றார். இதனையடுத்து அப்பா பொலிஸ் மா அதிபருக்கு தொடர்பு கொண்டு விபரத்தை தெளிவுப்படுத்தி அவரும் தெளிவூட்டினார். இதனையடுத்து அப்பா குறித்த நிகழ்வுக்கு செல்ல தீர்மானித்தார். இதன்போது அப்பா பாதுகாப்பு சவாலுக்கு முகங்கொடுக்க தயாராக இருந்தார்.பொலன்னறுவை சென்ற பின்னர் நிகழ்வுக்கு செல்வதற்கு முன்னர் சந்தேக நபரை கையும் மெய்யுமாக பாதுகாப்பு படையினர் பிடித்து கொண்டனர்.

4ஆவது தாக்குதல்

இதற்கிடையே 2007 ஆம் ஆண்டு தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டின் போது கேக் ஒன்றில் குண்டு வைத்து வீட்டுக்கு வந்தது. எனினும் அதுவும் முறியடிக்கப்பட்டது. இதன்போது விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் நீங்கள்தான் முதலில் உள்ளதாக பல தடவைகள் உளவு பிரிவு அப்பாவை எச்சரித்து இருந்தது.

5ஆவது தாக்குதல்

இதனையடுத்து 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி பொரலஸ்கமுவவில் வைத்து தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் அப்பா தப்பித்தார்.

எனவே தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் யுத்ததினால் பாதிக்கப்பட்டோம். எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதா? யுத்தம் காரணமாக சிறார்கள், சொத்துகள் என பல உயிர்களை இழந்தோம். எனவே யுத்தத்தினால் யாருமே வெற்றிக்கொள்ளவில்லை. இனவாதத்தின் பாரதூரத்தை இராணுவ வாதத்தின் ஊடாக அறிந்து கொண்டோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.