Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுவதே தீர்வுக்கு வழி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவிப்பு

Featured Replies

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுவதே தீர்வுக்கு வழி

Gayantha1-7894e6b9a7c7abfae023003452788e278b32ae8d.jpg

 

அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவிப்பு

(ஆர்.யசி)

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் பாதை யில் சர்­வ­தேச அழுத்­தங்­களை விடுத்து சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வதே தீர்­வி­னைப்­பெறும் ஒரே வழி­மு­றை­யாகும். நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் அமைப்பின் மூல­மாக தீர்வு பெற்­றுத்­த­ரப்­படும் என அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். நாட்டை பிள­வு­ப­டுத்­தவோ அல்­லது சர்­வ­தேச தலை­யீ­டு­களை ஏற்­ப­டுத்­தவோ அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை எனவும் குறிப்­பிட்டார்.

இலங்­கையின் தீர்வு விட­யத்தில் தொடர்ந்தும் சர்­வ­தேச அழுத்தம் வழங்­கப்­பட வேண்டும் என சர்­வ­தேச மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கங்கள் வலி­யு­றுத்­தி­ வரும் நிலையில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு குறித்து வின­வி­ய ­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ஆட்சி மாற்­றத்தின் மூல­மாக நல்­லாட்­சியில் பாரிய மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அர­சியல் தீர்வு தொடர்பில் பாரிய முன்­னேற்­றங்கள் கண்­டுள்­ளது. கடந்த காலத்தில் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது நிலங்­களை, காணி­களை விட்டு அக­தி­க­ளாக வசித்த நிலையில் நாம் மீண்டும் காணி­களை பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். இரா­ணு­வத்தின் வசம் இருந்த வடக்கு மக்­களின் காணிகள் இன்று பாரிய அளவில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய பாது­காப்­புக்கு அவ­சி­ய­மாக காணி­களை விடுத்து ஏனைய பொது­மக்­களின் காணிகள் முழு­மை­யாக விடு­விக்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ளது. அதேபோல் வடக்கின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் பாரிய அளவில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அதேபோல் அர­சியல் தீர்வு தொடர்பில் அர­சாங்கம் முக்­கி­யத்­துவம் கொடுத்து வரு­வதன் கார­ண­மா­கவே புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை நோக்­கிய நகர்­வு­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். குறிப்­பாக அதி­காரப்பர­வ­லாக்கல், தமிழ் மக்­க­ளுக்­கான சுய உரி­மை­களை பெற்றுக் கொடுத்தல் மற்றும் அநா­வ­சிய கட்­டுப்­பா­டு­களில் இருந்து விடு­விக்கும் வகையில் அர­சாங்கம் புரிந்­து­ணர்வு ரீதியில் செயற்­பட்டு வரு­கின்­றது. புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக நாட்டை பிள­வு­ப­டுத்­தவோ அல்­லது பிரி­வி­னைக்கு துணைபோகும் வகையில் எந்த முயற்­சி­க­ளையும் நாம் முன்­னெ­டுக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் முன்­னைய ஆட்­சியை விடவும் ஜன­நா­யக ரீதியில் இந்த அர­சாங்கம் பல­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. அதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. எனினும் இன்னும் நீண்­ட­தூர பய­ணத்தை நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை எமக்கு உள்­ளது. அர­சாங்­க­மாக நாம் எமது மக்­க­ளுக்­கான பாது­காப்­பு­களை வழங்கி, நாட்டின் அபி­வி­ருத்தி, தேசிய பாது­காப்பு மற்றும் மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

எனினும் மறு­புறம் சர்­வ­தேச அழுத்­தங்கள் இருந்த வண்­ணமே உள்­ளது. இலங்­கையில் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் பல­மாக முன்­னெ­டுத்த போதிலும் ஒரு சாரார் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்த வண்­ணமே உள்­ளனர். எனினும் அழுத்­தங்­களை தவிர்ந்து ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி நீண்­ட­கால பிரச்­சி­னை­களை சரி­யாக கையாள சர்­வ­தே­சமும் உதவி செய்ய வேண்டும். நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கமாக நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அதேபோல் இராணுவத்தை தண்டித்து அதன் மூலமாக தீர்வு ஒன்றை பெறவும் முடியாது. எனினும் நல்லிணக்கத்தை பலப்படுத்த இழந்த உரிமைகளை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுத்து எதிர்கால செயற்பாடுகளை பலப்படுத்த முடியும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-16#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.