Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவு சீராக இருப்பதற்கு நசீர் அகமட் தோற்கடிக்கப்படவேண்டும் – மனோகணேசன்!

Featured Replies

217c201d63aeec18cf1e2325bbd35a61_XL.jpg

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவு சீராக இருக்கவேண்டுமானால் கிழக்கு மாகாணசபை நிர்வாகம் தோற்கடிக்கப்படவேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரைத் தோற்கடிக்கவேண்டுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், என்னை இனவாதி என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சொல்லுவாரானால் அவர் ஒரு மூளை சுகமில்லாதவர் என்றுதான் நான் சொல்வேன். மகிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர்கூட எனக்கு எதிரியாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் என்னை இனவாதியென்று சொல்லவில்லை.

கிழக்கு முதலமைச்சர் நசீர் அகமட் அவ்வாறு சொல்வாரேயானால் அவர் மூளை சரியில்லாதவர் என்று நினைக்கின்றேன். அல்லாவிட்டால் அவர் ஒரு இனவாதியாக இருக்கவேண்டுமென நான் நினைக்கின்றேன்.

ஒரு காலத்தில் இரட்டை இலைச் சின்னத்தில் கொழும்பில் அரசியல் வேலைகளைச் செய்தவர். திடீரென கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணசபையில் 11பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள். 7பேர் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள். உண்மையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இருந்தாலும், தமிழ், முஸ்லிம் உறவு உறுதிப்படுத்தப்படவேண்டுமென்பதற்காக, இரா.சம்பந்தன் ஐயா பெருந்தன்மையுடன் முஸ்லிம் காங்கிரசுக்கு அப்பதவியை விட்டுக்கொடுத்துள்ளார். இது நல்ல விடயம்.

ஆனால், நடைமுறையில் அங்கு சென்று பார்க்கும்போது தமிழ் மக்கள் தங்களை ஒரு அநாதையாக உணர்கின்றனர். தமிழ், முஸ்லிம் உறவு அங்கு சீர்கெட்டிருக்கின்றது. இது முஸ்லிம் மக்களுக்கும் நல்லதல்ல.

உண்மையிலேயே, தமிழ், முஸ்லிம் மக்கள் மோதிக்கொண்டதாலேயே, முஸ்லிம் மக்கள் மீது இனவாதம் கக்கிய ஒரு விகாராதிபதியிடம், தமது பிரச்சனைக்குத் தீர்வுவேண்டி தமிழ் மக்கள் அவரிடம் சரணடைந்த சம்பவம் அண்மையில் நடந்தேறியுள்ளது.

உண்மையில் இதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் ஏற்கவேண்டுமெனக் கூறி வைக்க விரும்புகின்றேன்.

நான் சொல்வது உண்மை. இதனை கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் உணர்வார்கள். அத்துடன் கிழக்கிலுள்ள நல்லெண்ணம் கொண்ட முஸ்லிம்களும் உணர்வார்கள் என நினைக்கின்றேன்.

தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்ப்படுத்தவேண்டும். அதேபோல் சிங்கள மக்களையும் அரவணைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தை சிறந்ததொரு முன்மாதிரியான மாகாணமாக மாற்றவேண்டுமென்றால் கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தைத் தோற்கடிக்கவேண்டுமென விரும்புகின்றேன். குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தோற்கடிக்கப்படவேண்டுமென நினைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

 

http://thuliyam.com/?p=78881

  • கருத்துக்கள உறவுகள்

மிகமிகச் சரியான கூற்று.

நான் பலதடவைகள் சொன்னேன்.

தமிழர்களை, சுமணதேரரிடம் அனுப்புமளவுக்கு முஸ்லீம் இனவாதமும் சுஜநலவாதமும் கொடிகட்டிப்பறக்கிறது.

11 ததேகூ மட்டுமல்ல, பிள்ளையான் போன்ற தமிழ் உறுப்பினர்கள் உள்ளனர்.

புதிய அரசியலமைப்பால் தேர்தல் தள்ளிப்போவதால், பதவி நீடிப்பால், முதல்வர் பதவி தமிழருக்கே மீண்டும் வரவேண்டும் எனும் கோரிக்கை வந்தபோது அது பைத்தியக்காரப் பேச்சு என்றார் நசீர்.

மறுபக்கம், ஹிதாவுல்லா, றிசாட் போன்ற பேரினவாதிகள், தமிழர்களை, சிங்களவர்களுடன் நெருங்க வைக்கிறார்கள்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.