Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாசுபட்ட கடற்கரையில் இலங்கைக்கு 5ஆவது இடம்

Featured Replies

மாசுபட்ட கடற்கரையில் இலங்கைக்கு 5ஆவது இடம்
 

image_0237e61029.jpgபுள்ளிவிவர தகவலின் பிரகாரம், மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5ஆவது இடத்தில் இலங்கையே இருக்கின்றது என்று கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் பேராசிரியர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். 

தேசிய கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

ஆசிய கடல் வலயத்தில் மத்தியநிலையமாக இருப்பது இலங்கைக்கு முக்கியமானதாகும். புள்ளிவிவர தகவலின் பிரகாரம் எங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற இந்த நிலை, அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நாங்கள் வருடாந்தம் 1.59 மெற்றிக்தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீனை வீசுகின்றோம். அதுதான் கடற்கரை மாசடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.   

1975ஆம் ஆண்டை விடவும், இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு, தற்போது, நூற்றுக்கு 625 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

பிளாஸ்டிக் பொலிதீன் பாவனை தேவையற்றமுறையில் முன்னெடுக்கப்பட்டமை மற்றும் பயன்படுத்தப்பட்டமை, முறையற்ற ரீதியில் அகற்றியமை உள்ளிட்ட காரணங்களினால் சுற்றுசூழலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.   

கடற்கரையில் இருக்கின்ற கழிவுகளில் 10 சதவீதமானவை பிரதேசத்தில் இருந்தே அகற்றப்படுகின்றது.   

ஏனைய 90 சதவீதமானவை, நாட்டின் உள்பாகங்களில் இருந்து, கங்கைகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலிருந்தும் கடலுக்குள் அடித்துவரப்படுகின்றன.   

தாய்லாந்து, இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் கடல்களில் ஏற்படுகின்ற நீரோட்டங்கள் மூலமாக இவ்வாறான கழிவுகள் தொலைதூரத்திலிருந்து, இலங்கை கடற்கரைகளுக்கு இழுத்து வரப்படுகின்றன.  

பல்வேறான நிறுவனங்கள், கழிவுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது, அவற்றை கடலுக்குள் கலக்கச் செய்துவிடுகின்றன. ஆகையால், பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் உள்ளிட்ட வகைகளை தொடர்பில், நிறுவனங்களுக்கு தெளிவுப்படுத்த உள்ளோம்.  

பிளாஸ்டிக் கதிரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும், பாரிய அச்சுறுத்தலானது. அவை தொடர்பில் சமூகத்தில் நல்ல கருத்து இல்லை. சுற்றாடல் பாதுகாப்பதற்கான அறிவு, மனப்பான்மை மற்றும் திறமை ஆகியன மேம்படுத்தப்படவேண்டும்.

அப்போதுதான், கடல்வள சுற்றுச்சூழல் மற்றும் கரையோரங்களை பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.      

http://www.tamilmirror.lk/செய்திகள்/மாசுபட்ட-கடற்கரையில்-இலங்கைக்கு-5ஆவது-இடம்/175-203966

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.