Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் நடக்கட்டும்

Featured Replies

தேர்தல் நடக்கட்டும்

 

மாகாண சபை­கள் தேர்­தல் விரை­வில் நடத்­தப்­ப­ட­லாம் என்­கிற பேச்சு மீண்­டும் அடி­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதம் தேர்­தல் நடக்­க­லாம் என்­றும் எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

மாகாண சபை­கள் அனைத்­துக்­கும் ஒரே நாளில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அர­ச­மைப்­புத் திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தா­னால், நாடா­ளு­மன்­றில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யை­யும், மக்­க­ளின் பெரும்­பான்மை ஆத­ர­வை­யும் பெற­வேண்­டும் என்று உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டும் நிலை­யி­லேயே தேர்­தல் சூடு பிடிக்க ஆரம்­பித்­துள்­ளது.

கிழக்கு, வட­மத்தி, சப்­ர­க­முவ ஆகிய மூன்று மாகா­ணங்­க­ளின் ஆயுள் இந்த மாதத்­து­டன் நிறை­வ­டை­கின்­றது. புதிய ஆளும் தரப்­பைத் தேர்­தெ­டுப்­ப­தற்­காக மூன்று மாதங்­க­ளுக்­குள் இந்த மாகா­ணங்­க­ளில் தேர்­தலை நடத்­தி­யா­க­வேண்­டும்.

இத­னைத் தடுத்து நிறுத்தி அனைத்து மாகா­ணங்­க­ளுக்­கும் ஒரே நாளில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களே அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்தத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்­டன.

நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் அதனை நிறை­வேற்­றி­வி­ட­லாம் என்று அரசு எண்­ண­மிட்­டது.

ஆனால், அதற்கு மக்­க­ளின் ஆத­ர­வும் பெறப்­ப­ட­வேண்­டும் என்­கிற நெருக்­கடி ஏற்­பட்­டுள்ள நிலை­யில் அர­ ச­மைப்­புத் திருத்­தத்­தைக் கைவிட்டு அரசு தேர்­த­லுக்கே நேர­டி ­யா­கச் செல்­லக்­கூ­டும் என்­கிற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

இப்­போது உள்ள சூழ­லில் தேர்­தலை நடத்­தி­னால் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைப் பலப்­ப­டுத்­து­வ­தா­கி­வி­டும் என்­கிற அச்­சம் கார­ண­மா­கவே அரசு தேர்­த­லைப் பிற்­போட எத்­த­னிக்­கி­றது என்­கிற விமர்­ச­னம் ஒன்­றுண்டு.

எனவே அரசு எதிர்­பா­ராத விதத்­தில் இந்த விட­யத்­தில் இப்­போது சிக்­க­லுக்­குள் மாட்­டுப்­பட்­டுக்­கொண்­டு­விட்­டது என்­கிற பார்­வை­யும் உண்டு.

ஒரு­வேளை மாகாண சபைத் தேர்­தல் நடந்­தது என்­றால் அது அர­சுக்­குச் சிக்­க­லாக இருக்­கக்­கூ­டும். மகிந்த தரப்­புக்­கும் மைத்­திரி தரப்­புக்­கும் இடை­யி­லான பலப் பரீட்­சை­யா­க­வும் அது நிச்­ச­யம் இருக்­கும் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை.

அதே­நே­ரத்­தில் யார் பல­சாலி என்­ப­தும் தெரிந்­து­வி­டும். அந்­தப் பல­ சாலி யார் என்­ப­தைத் தெரிந்­து­கொள்­வது தமிழ் மக்­க­ளின் எதிர்­கால அர­சி­ய­லுக்கு மிக முக்­கி­ய­மா­னது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­க­மா­கட்­டும், காணி விடு­விப்­பா­ கட்­டும், காணா­மற்­போ­னோர் விவ­கா­ர­மா­கட்­டும், வடக்­குக் கிழக்­கில் படை­க­ளைக் குறைப்­ப­தா­கட்­டும், அர­சி­யல் கைதி­கள் விடு­த­லை­யா­கட்­டும், பொறுப்­புக் கூறலை நிறை­வேற்­றா­மல் இருப்­ப­தா­கட்­டும் எல்­லா­வற்­றுக்­குமே மகிந்­தவை ஒரு தடை­யாக இந்த அரசு இது­நாள்­வ­ரை­யில் காட்டிவந்­தது.

புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக மகிந்த தரப்­பி­னர் பரப்­புரை செய்­கின்­ற­னர், எனவே அதில் வேக­மாக நகர முடி­யாது என்­ற­னர்.

படை­யி­னர் வசம் உள்ள மக்­க­ளின் காணி­களை விடு­வித்­தால், மகிந்த அணி­யி­னர் அத­னைத் தெற்கு மக்­க­ளி­டம் தவ­றா­கப் பரப்­புரை செய்­கி­றார்­கள் என்­ற­னர்.

போர்க்­குற்ற விசா­ர­ணையை நடத்­தி­னால், அது படை­யி­ன­ருக்­குச் செய்­யும் துரோ­கம் என்று விச­மப் பரப்­புரை செய்து சிங்­கள மக்­க­ளி­டம் நஞ்சை விதைக்­கின்­ற­னர் என்­கி­ன்ற­னர்.

இப்­ப­டி­யெல்­லாம் மகிந்த தரப்­பி­னர் செய்­வ­தால், இந்த விட­யங்­க­ளில் எல்­லாம் தாம் கவ­ன­மா­க­வும், பொறு­மை­யா­க­வும் மட்­டுமே செயற்­பட முடி­யும் என்று இது­வ­ரை­யில் கார­ணங்­கள் கூறி­வந்­த­னர்.

தமி­ழர்­க­ளுக்கு எதை­யா­வது செய்­தால், அதை மகிந்த தரப்­பி­னர் சிங்­களத் தரப்­பி­ன­ரி­டம் தவ­றாக எடுத்­துச் சொல்லி, இன­வா­தம் பேசி தமது செல்­வாக்கை வளர்த்­துக் கொண்­டு­வி­டு­வார்­கள், பலம்­பெற்­று­வி­டு­வார்­கள் என்று சொல்­லிச் சொல்­லியே செய்­யப்­ப­ட­வேண்­டிய பல­வற்­றைச் செய்­யா­மல் விட்­டு­விட்­டது இந்த அரசு.

3 மாகாண சபை­க­ளுக்­கும் தேர்­தல் நடந்­தால் மகிந்­த­வுக்கு உள்ள உண்­மை­யான பலம் தெரி­ய­வந்­து­வி­டும். மைத்­திரி – ரணில் அர­சின் எதிர்­கா­லம் குறித்த தெளி­வும் கிடைத்­து­வி­டும்.

அதற்கு மேலாக, தேர்­த­லில் தமி­ழர்­க­ளி­டம் இருந்து ஆத­ர­வைப் பெற­வேண்­டு­மா­னால் எதை­யா­வது கொஞ்­சம் செய்தே ஆக­வேண்­டும் என்­கிற இக்­கட்­டும் ஏற்­பட்­டு­வி­டும். அந்த வகை­யில் பார்த்­தால் மாகாண சபைத் தேர்­தல் நடப்பது நல்லதே!

http://newuthayan.com/story/29407.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.