Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் மீண்டும் போராடுவதற்கான தருணம் இதுவல்ல

Featured Replies

தமிழர்கள் மீண்டும் போராடுவதற்கான தருணம் இதுவல்ல

 

  •  

எம்மை நாமே ஆளும் தீர்­வைப் பெற்­றுக் கொள்ள வேண்­டும். அதை­வி­டுத்து அரை ­கு­றைத் தீர்வை எந்­தக் காலத்­தி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சுய­நிர்­ணய உரி­மை­யின் அடிப்­ப­டை­யி­லான கூட்டாட்சித் தீர்வு கிடைக்­கும் வரை தமி­ழர்­கள் சளைக்­காது போராட முன்­வர வேண்­டும்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஏற்­பாட்­டில் உத்­தேச அர­ச­மைப்ப முயற்சி குறித்த கருத்­துப் பகிர்வு யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் அண்மையில் டம்­பெற்­ற­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டி­ ருந்­தார்.

மேற்­படி நிகழ்­வில் ஏரா­ள­மா­ன­வர்­கள் கலந்­து­கொள்­வார்­க­ளான சில ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­த­போ­தி­லும், சில நூற்­றுக்­க­ணக்­கா­ன­ வர்­களே கலந்து கொண்­ட­னர்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் முக்­கி­யஸ்­தர்க­ளில் ஒரு­வ­ரான, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வ­ரான கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் இந்த நிகழ்­வில் கலந்து கொள்­ளா­தது அங்கு கலந்து கொண்­ட­வர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

மேலும் முக்கிய அறிவிப்புக்கள் வெளி­யி­டப்­பட்­ட­போது, சிறு­தொ­கை­ யி­னரே மண்­ட­பத்­தில் இருந்­த­னர் எனவும், முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ர­னும் மண்­ட­பத்­தை­ விட்டு வெளி­யே­சென்­று­விட்­டார் என­வும் தெரிய வரு­கின்­றது.

அரைத்த மாவையே திரும்­ப­வும் அரைத்த வடக்கு முத­ல­மைச்­சர்

சி.வி. விக்­னேஸ்­வ­ரன் புதி­தாக எதை­யா­வது கூறு­வா­ரென எதிர்­பார்த்­த­வர்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­றமே கிடைத்­தது. அவர் வழக்­கம்­போல அரைத்த மாவையே திரும்­ப­வும் அரைத்­தி­ருக்­கி­றார்.

ஆனால் அவ­ருக்கு வழக்­க­மா­கவே ஒத்து ஊதிக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் முத­ல­மைச்­ச­ரின்­அ­றை­கூ­வல் உடம்­பைப் புல்­ல­ரிக்க வைத்­து­விட்­டது எனக்­கூறி புள­காங்­கி­ தம் அடை­கின்­ற­னர்.

தமிழ் மக்­க­ளுக்கு கூட்டாட்சி முறை­யி­லான தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மென முதன்­மு­த­ லில் குரல்­கொ­டுத்­த­ வர் தந்தை செல்­வாவே என்­பதை எவ­ருமே மறந்­து­விட முடி­யாது. தமது இறு­தித்­மூச்­சு­வரை இதற்­கா­கவே அவர் போரா­டி­னார்.

ஆனால் அவ­ரால் தமது அந்த முயற்­சி­யில் வெற்­றி­பெற முடி­ய­வில்லை. பின்­னர் தனி­நாடு கோரிப் போரா­டிய இளை­ஞர்­க­ளின் முயற்­சி­யும் தோற்­க­டிக்­கப்­பட்­டுத் தமி­ழர்­கள் வெறுங்­கை­யு­டன் நிர்க்­க­தி­ யான நிலை­யில் காணப்­ப­டு­கின்­ற­னர்.

உரி­மைக்­கான போராட்­டம் இருந்த உரி­மை­க­ளை­யும் இழக்­கச் செய்­து­விட்­டது. தற்­போது கையறு நிலை­யில் தமி­ழர்­கள் காணப்­ப­டு­கின்­ற­னர். இன்­னு­மொரு போராட்­டத்­துக்கு முகம் கொடுக்க வேண்­டிய சக்தி அவர்­க­ளி­ட­மில்ல.

இறு­திப் போரின் அவ­லங்­கள் இன்­ன­மும் அவர்­க­ளின் மனங்­க­ளி­லி­ருந்து அக­ல­வில்லை. அவற்றை மீண்­டு­மொ­ரு­த­டவை அனு­ப­விக்­க­வும் அவர்­கள் தயா­ராக இல்லை.

இந்த நிலை­யில் கூட்டாட்சித் தீர்வு கிடைக்­கும்­வரை சளைக்­காது போரா­டு­மாறு வடக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத் துள்­ளமை நகைப்­புக்­கி­ட­மா­னது.

தனது பலம் அறிந்தே  மாற்­றா­னு­டன்  மோத முயல்­வது புத்­தி­சா­லித்­த­னம்

ஒரு­வன் மற்­ற­வர்­க­ளு­டன் போரா­டு­வ­தற்­குச் செல்­லும்­போது, தனது வலிமை, மாற்­றான் வலிமை துணைக்கு வரு­ப­வர்­க­ளின் வலிமை ஆகி­ய­வற்­றைச் சீர்­தூக்­கிப் பார்க்­க­வேண்­டு­மெ­னக் கூறு­வார்­கள்.

ஆனால் வலி­மை­யி­ழந்த நிலை­யில் இருக்­கின்ற நாம் போராட்­டத்­தைப்­பற்­றிச் சிந் திப்­பது எந்த வகை­யி­லும் நியா­ய­மா­ன­தா­கத் தெரி­ய­வில்லை.

தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு தனது அடிப்­ப­டைக் கொள்­கை­யாக கூட் டாட்சியைக் கொண்­டுள்­ளது. இதையே தொடர்ந்து வலி­யு­றுத்­தி­யும் வரு­கின்­றது.

புதிய அர­ச­மைப்­பி­லும் கூட்டாட்சி நடை­முறை இடம்­பெ­ற­வேண்­டும் என கூட்­ட­மைப்­பின் தலை­வர் வற்­பு­றுத்தி வரு­கின்­றார் ஆனால் இதற்­காக மக்­க­ளைப் போராட்­டத்­தில் ஈடு­பட வேண்­டு­மென அவர் ஒரு­போ­துமே வேண்­டு­கோள் விடுத்­த ­தில்லை.

தமி­ழர்­க­ளின் யதார்த்­த­பூர்­வ­மான தற்­போ­தைய நிலையை சம்­பந்­தன் அறிந்து கொண்­ட­தால் அவர் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­மாறு மக்­க­ளி­டம் வேண்­டு­கோள் விடுக்­க­வில்லை.

போராட வரு­மாறு அழைப்பு விடுக்க முத­ல­மைச்­ச­ருக்கு அரு­கதை கிடை­யாது

வடக்­குக் கிழக்­கில் உக்­கி­ர­மான போர் இடம்­பெற்­ற­போது அதைப்­பற்றி அலட்­டிக் கொள்­ளாது கொழும்­பில் பாது­காப்­பாக வாழ்ந்­த­வர், இன்­றைய வடக்கு முத­ல­மைச்­சர். போரில் தமி­ழர்­கள் அனு­ப­வித்த அவ­லங்­கள், கொடு­மை­கள் தொடர்­பாக வாயே திறக்­கா­மல் அமை­தி­யாக இருந்­த­வர் தான் அவர்.

தமி­ழர்­க­ளின் துய­ரங்­களை அறிந்து கொள்­வ­தில் அவர் அக்­கறை காட்­டினாரா என்றும் தெரி­ய­வில்லை. மரத்­தில் கனிந்த பழம் தானாக மடி­யில் வீழ்­வது போன்று முத­ல­மைச்­சர் பதவி அவ­ரைச் சென்­ற­டைந்­துள்­ளது. இதற்­காக அவர் எந்­தத் தியா­கத்­தை­யும் புரி­ய­வில்ல போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுச் சிறை­வா­சம் அனு­ப­விக்­க­வில்லை.

எந்­த­வி­த­மான நோவை­யும் எதிர்­கொள்­ளாது முத­ல­மைச்­சர் என்­கிற பத­விச் சுகத்தை அனு­ப­விக்­கிறார். இவர் மக்­க­ளைச் சளைக்­காது போரா­டு­வ­தற்கு முன்­வ­ரு­மாறு கோரிக்கை விடு­வ­தற்கு எந்­த­வித அரு­க­தை­யும் உள்­ள­வ­ரா­கத் தெரி­ய­வில்லை. மக்­க­ளும் இதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள்.

மேலும் முத­ல­மைச்­சர் உரத்த குர­லில் தமது கருத்­துக்­க­ளைக் கூறி­யி­ருந்­தா­லும் அதில் ஆழ­மான, காலத்­துக்கு உகந்த கருத்­தை­யும் காண முடி­ய­ வில்லை. சுமார் 50 ஆண்­டு­க­ளுக்க முன்­னர் தேர்­தல் மேடை ­யொன்­றில் உள்­ளூர் அர­சி­யல்­வா­தி­யொ­ரு­வர் மக்­களை உசுப்­பேற்­றும் வகை­யில் ஆற்­றிய உரையை ஒத்­த­தா­கவே முத­ல­மைச்­ச­ரின் உரை­யும் அமைந்­தி­ருந்­தமை ஏமாற்­றத்­தைத் தரு­கின்­றது.

அரசு இரக்­கப்­பட்­டுத் தரு­வதை ஏற்­றுக் கொள்ள வேண்­டிய நிலை­ யில்­தான் நாம் தற்­போது இருக்­கின்­றோம். போரில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்­களை மட்­டு­மல்ல எமது தன்­மா­னத்­தை­யும் பறி­கொ­டுத்து ஏதி­லி­க­ளாக நிற்­கின்­றோம்.

முத­லில் தமி­ழர்­கள் ஒரே அணி­ யில் நின்று ஒற்­று­மை­யு­டன் செயற்­பட வேண்­டும். தமக்­குள் காணப்­ப­டு­கின்ற வேற்­று­மை­க­ளைக் களைந்­தெ­றிய வேண்­டும். ஆளுக்­கொரு திசை­யில் நின்­று­கொண்டு மக்­க­ளைக் குழப்­பு ­கின்ற செயற்­பா­டு­கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும்.

முத­லில் இதைச் செய்­யுங்­கள். பின்­னர் உரி­மைப் போராட்­டம் தொடர்­பாக ஆறு­த­லா­கச் சிந்­திக்­க­லாம். மேலும் புனர்­வாழ்­வு­பெற்று சமூ­கத்­து­டன் இணைந்­தி­ருக்­கும் முன்­னாள் போரா­ளி­க­ளை­யும் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.

அவர்­க­ளைப் பலிக்­க­டாக்­க­ளாக மாற்­று­கின்ற எதை­யும் செய்­வ­தற்கு நாம் முன்­வ­ரக் கூடாது. மாண்­பு­மிகு முத­ல­ மைச்­சர் மேற்­கூ­றி­ய­வற்­றைக் கவ­னத்­தில் கொண்­டால் நல்­லது.

 

http://newuthayan.com/story/29695.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.