Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாடு இன்று ஆரம்பம்

Featured Replies

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாடு இன்று ஆரம்பம்

p7-a4ddbba6f24490bc7d1e941203c5ca7ff61a62d5.jpg

 

டொனால்ட் ட்ரம்ப், மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் முதல் நாளில் உரை
(நியூ­யோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி)

ஐக்­கிய நாடு­களின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொட ரின் அரச தலை­வர்கள் பங்­கேற்கும் மாநாடு இன்று 19 ஆம் திகதி

செவ்­வாய்க்­கி­ழமை நியூ­யோர்க்கில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை கட்­ட­டத்தில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடர் அதன் தலைவர் மிரோஸ்லோவ் லஜ்கெக் தலை­மையில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

கூட்டத் தொடரின் முதல்நாள் அமர்வில் பல முக்­கிய தலை­வர்­களின் உரைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் மற்றும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஆகி­யோரும் முதல்நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முதல்நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இதே­வேளை ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்கும் நோக்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரை வந்­த­டைந்தார்,

இரவு 8.45 மணி­ய­ளவில் நியூயோர்க் சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டைந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முதற் பெண்­மணி ஜயந்தி சிறி­சேன ஆகி­யோரை ஐக்­கிய நாடு­க­ளுக்­கான இலங்கை தூதுவர் ரொஹான் பெரெரா வர­வேற்றார்,

பின்னர் வாகன தொட­ரணி ஊடாக நியூ­யோர்க்கில் அமைந்­துள்ள லோவஸ் ரிஜன்ஸி ஹோட்­ட­லுக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் பிரசாத் காரி­ய­வசம் வர­வேற்றார்,

அத்­துடன் இந்த வர­வேற்பு நிகழ்வில் ஐக்­கிய நாடு­க­ளுக்­கான இலங்கை தூத­ர­கத்தின் அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்­டனர்.

மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உரையின் போது பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக உல­க­நா­டு­களின் கவ­னத்தை ஈர்ப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் வேலைத்­திட்­டங்கள் போன்­றவை தொடர்­பாக உல­க­நா­டு­களின் தலை­வர்­க­ளுக்கு அவர் விளக்­க­ம­ளிக்­க­வி­ருக்­கிறார்.

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக அர­சாங்கம் மேற்­கொண்­டு­வரும் முயற்­சிகள் மற்றும் அதனை முன்­னெ­டுத்து செல்­வதில் காணப்­படும் தடைகள் என்­பன குறித்தும் ஜனா­தி­பதி தனது உரையில் விட­யங்­களை முன்­வைப்பார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அது­மட்­டு­மன்றி உலக அமை­திக்­காக தலை­வர்கள் தம்மை அர்ப்­ப­ணித்­துக்­கொள்­ள­வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் ஜனா­தி­பதி தெளிவுபடுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது,

மேலும் இலங்கையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பாகவும் ஜனாதிபதி சர்வதேசத்தை தெ ளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.