Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் திருத்தம். சுமந்திரன் மீது வசைபாடிய கூட்டு எதிர்க்கட்சி

Featured Replies

தேர்தல் திருத்தம். சுமந்திரன் மீது வசைபாடிய கூட்டு எதிர்க்கட்சி

 

மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்ட மூலத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியமை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை முற்பகல் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதும் மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்டமூலத்தை அமைச்சர் பைசல் முஸ்தபா சமர்ப்பித்தார்.

அதனை வழிமொழிந்து சுமந்திரன் உரையாற்றியபோது ஆத்திரமடைந்த கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அழுத்தகமகே, உதயகம்பின்வில ஆகியோர் சுமந்திரனை நோக்கி காரசாரமாக ஏசினர். இந்த நகல் சட்டமூலத்தை வழிமொழிய நீ யார் என்று மஹிந்தானந்த அழுத்தகமகே கேள்வி தொடுத்தார்.

சபை நடுவாக நின்று கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்த நகல் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மாகாண சபைகளை கட்டுப்படுத்தும் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டு செயற்பாட்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் திருத்தச்சட்டம் எதற்கு என்றும் கேள்வி தொடுத்தனர்.

மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டு தோல்வியைத் தவிர்ப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டம் என தினேஸ் குணர்த்தன குற்றம் சுமத்தினார். இது அரசாங்கத்தின் சதி நடவடிக்கை எனவும் கூறி ஆவேசமாக ஏசினார். இதனால் அரசாங்கத் தரப்புடன் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தமிழ் கட்சி ஒன்றின் உறுப்பினராக இருந்து கொண்டு சுமந்திரன் அரசாங்கத்திற்கு வால்பிடிப்பதாகவும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரே குரலில் சத்தமிட்டனா. இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அதேவேளை மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கி மாகாண சபைத் தேர்தலை பிற்போட தமிழரசுக் கட்சியும் விரும்புவதாக கூட்டமைப்பின் ஏனயை கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த திருத்தச் சட்டமூலத்தில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டமூல வரைபில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர் சுமந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/politics/PC

  • தொடங்கியவர்
திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது
 

 

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பிலான இரண்டாவது மதிப்பீட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தார்.

இதனடிப்படையில், இன்றுமாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தச்-சட்டமூலம்-நிறைவேறியது/175-204210

  • தொடங்கியவர்

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரானார் சுமந்திரன். ஏனைய கட்சிகள் கிண்டல்

 

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்ட விவாதத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின பேச்சாளர் சட்டத்திரணி சுமந்திரன் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் அமைச்சர் போன்று செயற்பட்டதாக எமது ஜ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த திருத்தச் சட்டத்தை இன்று புதன்கிழமை முற்பகல் அமைச்சர் பைசல் முஸ்தபா சமர்ப்பித்த பின்னர் அதனை வழி மொழிந்து உரையாற்றிய சுமந்திரன் அரசாங்கத்தின் இந்த சட்டமூலத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை இந்த சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்தபோது நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை நடத்திய சுமந்திரன் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்கினார்.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இந்த சட்டமூலத்தில் உள்ள விடயங்கள் எதுவும் முழுமையாக தெரியாது என்றும் இதன் உள்ளடக்கத்தை வாசித்து அறிய கால அவகாசம் தேவை எனவும் கோரிக்கை விடுத்தார்.

சட்ட மூலம் ஆக, நான்கு பக்கங்கள் மாத்திரமே எனவும் ஆனால் அதற்கான திருத்தங்கள் குறைந்தது 15 பக்கத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய தினேஸ் குணவர்த்தன நல்லாட்சி அரசாங்கத்தின் இருட்டடிப்பு என்றும் குற்றம் சுமத்தினார்.

சுமந்திரன் மீது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/politics/suma

Parliament-1.jpg

மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையிலான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 30 வீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த திருத்தச் சட்ட வரைவு அமைந்திருந்தது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, சிறிலங்கா அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரைவை முன்வைத்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்பட்டு பிற்பகலில் அமர்வு ஆரம்பமானது.

இந்த திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமா அதிபர் ஆலோசனை கூறியிருந்தார்.

இதையடுத்து, இரண்டாவது வாசிப்பின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக, 157 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 44 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தொடர்ந்து மூன்றாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, 159 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 37 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் 122 மேலதிக வாக்குகளால் மாகாணசபைகள் திருத்தச்சட்ட நிறைவேற்றப்பட்டது.

http://thuliyam.com/?p=79284

 

  • தொடங்கியவர்

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

 

அரசாங்க பங்காளிக்கட்சிகளின் கோரிக்கைகளுக்கும் பிரதமர் இணக்கம்
(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் நேற்று பெரும் சர்ச்­சைக்கு மத்­தியில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்­டது. சட்ட மூலத்­திற்கு ஆத­ர­வாக 159 வாக்­கு­களும் எதி­ராக 37 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டன. 

இந்த திருத்த சட்­ட­மூ­லத்­திற்கு கூட்டு எதி­ரணி கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­த­துடன் அரசாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­களும் தாம் முன்­வைத்த திருத்­தங்­களும் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­ய­மை­ யினால் பெரும்­ சர்ச்­சைக்கு மத்­தி­யி­லேயே வாக்­கெ­டுப்பு நடை­பெற்­றது.

மாகாண சபை­களை கலைத்து

 ஒரே­த­ட­வையில் தேர்­தலை நடத்தும் வகையில் 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மூ­லத்­தினை அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருந்­தது. அந்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மானால் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட ­வேண்டும் என்று உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து இந்­தத்­ தி­ருத்­தத்தை கைவிட்­டி­ருந்த அர­சாங்கம் ஏற்­கெனவே மாகாண சபை தேர்­தலில் பெண்­களின் பங்­க­ளிப்பை 30 வீத­மாக அதி­க­ரிக்கும் திருத்தச் சட்­ட­மூலம் ஒன்றை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருந்­தது.

அந்தச் சட்­ட­மூ­லத்தில் மேலும் திருத்­தங்­களைச் செய்து அதனை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­தது. இதற்­கி­ணங்க நேற்­றை­ய­தினம் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் மாகாண சபை உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இந்­தச்­சட்­ட­மூ­லத்­திற்கு பொது எதி­ர­ணி­யினர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர். இதனால் சபை நட­வ­டிக்­கைகள் நேற்று காலை ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. பிற்­பகல் 1.30 மணிக்கு மீண்டும் சபை கூடி சட்­ட­மூலம் மீதான விவாதம் இடம்­பெற்­றது.

இதே­வேளை இந்த திருத்தச் சட்­ட­மூ­லத்தில் மாகாண சபை தேர்­தலை 60 வீத­ம் தொகு­தி­வாரி அடிப்­ப­டை­யிலும் 40 வீத­ம் விகி­தா­சார முறை­மை­யிலும் நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் இதற்கு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் கடும் எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தன. அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­டணி, அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­யன இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­துடன் திருத்­தங்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்­தன.

இந்த விடயம் குறித்து நேற்று முன்­தினம் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­திலும் கடும்­ வா­தப்­பி­ர­தி­வாதங்கள் இடம்­பெற்­றி­ருந்­தது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் இந்தக் கட்­சி­களின் தலை­வர்கள் நேற்று முன்­தினம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.

50 வீதம் தொகு­தி­வாரி அடிப்­ப­டை­யிலும் 50 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் அடிப்­ப­டையில் தேர்தல் திருத்தம் இடம்­பெ­ற­ வேண்டும் என்று இந்தக் கட்­சி­களின் தலை­வர்கள் கோரி­ய­துடன் வேறு­சில திருத்­தங்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்­தனர். இந்த நிலையில் நேற்­றுக்­ காலை மாகாண சபை உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­த­பாவை சந்­தித்து இந்­தத்­ தி­ருத்­தங்­களை இவர்கள் கைய­ளித்­தி­ருந்­தனர். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.

இந்த நிலையில் தமது திருத்­தங்கள் தேர்தல் திருத்தச் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கப்­ப­டா­விட்டால் வாக்­க­ளிப்பில் தமது உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என்ற நிலைப்­பாட்டில் இந்த மூன்று கட்­சி­களின் தலை­மை­களும் முடிவு எடுத்­தி­ருந்­தன.

இதே­போன்று தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்., பு .ௌாட் ஆகிய கட்சி உறுப்­பி­னர்­களும் இந்தத் திருத்­தத்­திற்கு வாக்­க­ளிப்­ப­தில்லை என்று முடிவு செய்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் நேற்று மாலை 6.30 மணி­ய­ளவில் வாக்­கெ­டுப்பு நடை­பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. இதன்போது இந்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

இருந்தபோ­திலும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று கூட்­டுக்­கட்சி உறுப்­பி­னர்­களின் வாக்­குகள் இல்­லாது மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாத சூழ்­நிலை அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , தமிழ்­முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யூதீன் ஆகி­யோரை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இந்தப் பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­பாடு ஏற்­பட்­ட­தை­ய­டுத்து நேற்று இரவு 7.30 மணி­ய­ளவில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

பங்காளிக் கட்சிகளின் திருத்தங்கள்

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் சமர்ப்பித்த திருத்தங்களுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன் திருத்தச் சட்டமூலத்தில் இந்த விடயங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டன.

50 வீதம் தொகுதி அடிப்படையிலும் 50 வீதம் விகிதாரசார அடிப்படையிலும் உறுப்பினர்களை தெரிவுசெய்வது என்றும் மாகாண எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கான எல்லை மீள் நிர்ணய குழுவில் பிரதான இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் அமைய வேண்டும் என்றும் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பான அறிக்கையினை இந்த உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நான்கு மாத காலப்பகுதிக்குள் எல்லை மீள்நிர்ணய நடவடிக்கை முடிவடைவதுடன் ஆறு மாத காலத்திற்குள் இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் திருத்தங்களை இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து முன்வைத்திருந்தன.

இதனைவிட எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படாதவிடத்து பாராளுமன்றத்தின் அவதானிப்புடன் மற்றுமொரு மீளாய்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த மீளாய்வுக் குழுவுக்கு தலைவராக பிரதமர் செயற்படுவதுடன் மேலும் நான்கு உறுப்பினர்களும் குழுவின் அங்கத்தவர்களாக இருப்பார்கள். இந்த அங்கத்தவர்கள் பிரதான இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இடம்பெற வேண்டும். எல்லை மீள் நிர்ணயத்தில் விசேடமாக சிறுபான்மையினரை கருத்திற்கொண்டு பல் அங்கத்துவ தொகுதிகளும் சிறிய மக்களைக் கொண்ட தொகுதிகளும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் திருத்தங்கள் இந்தக் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களுக்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டு இந்த யோசனைகளும் மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டன.

இதனையடுத்து தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இரண்டு 7.30 மணியளவில் ஆரம்பமானது. முதலாம் வாசிப்பு, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்களின் போது 159 பேர் ஆதரவாகவும் 37 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

வாக்­கெ­டுப்­பின்­போது சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜே.வி.பி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக பொது எதிரணி உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பு.ௌாட் அமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் வாக்கெடுப்பினை புறக்கணித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்குபற்றியிருக்கவில்லை. இந்த நிலையிலேயே மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-21#page-1

  • தொடங்கியவர்

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு கூட்டு எதிரணி கடும் எதிர்ப்பு சபை நடுவே வந்து குழப்பம்

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தல் திருத்­தச்­சட்­ட­மூலம் நேற்று சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டதை­ய­டுத்து குறித்த சட்­ட­மூ­லத்தில் ஷரத்­து­களை பார்க்­கிலும் திருத்­தங்கள் அதி­க­மாகும்.குறித்த திருத்­தங்கள் மேற்­பார்வை குழு­வுக்கு

அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வில்லைஎன்றும் இந்த சட்­ட­மூ­லத்­திற்கு மாகாண சபை­களின் அங்­கீ­காரம் பெறப்­ப­ட­வில்லை எனவும் குற்றம்சாட்டி கூட்டு எதிரணியினர் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தை நடத்­த­வி­டாமல் கோஷ­மிட்டு சபை நடுவே வந்து குழப்பம் விளை­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து சட்­டமா அதி­ப­ரு­டனும் பிர­த­ம­ரு­டனும் இது குறித்து நண்­பகல் 12 மணிக்கு பேச்சு நடத்தும் நோக்கில் சபை நட­வ­டிக்­கை­களை 40 நிமி­டங்­க­ளுக்கு சபாநா யகர் கருஜயசூரியா ஒத்­தி­வைக்கும் நிலை ஏற்பட்டது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சட்­டமா அதி­ப­ரு­ட­னான பேச்­சு­வார்த்தை அடுத்து சபை, நட­வ­டிக்­கைகளுக்காக பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் கூடிய போது திருத்­தங்­கள் மேற்­பார்­வை­கு­ழு­வுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்­டி­ய­தில்லை என்றும் மாகாண தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தை மாகாண சபை­க­ளுக்கு அனுப்­பி­வைக்க வேண்­டி­ய­தில்லை எனவும் சட்­டமா அதி­பரின் எழுத்து மூல ஆவ­ணத்தை மேற்கோள் காட்டி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான வினா , நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் மீதான‍ கேள்வி நிறை­வ­டைந்த பின்னர் ஒழுங்கு பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டதன் பிர­காரம் மாகாண சபை தேர்தல் திருத்­தச்­சட்­ட­மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தனை அடுத்தே சபையில் சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்ச்­சட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்­பினை அடுத்து நேற்­றைய தினம் மாகாண சபை தேர்தல் திருத்­தச்­சட்­ட­மூலம் சமர்ப்­பிக்கப்­பட்­டது. இதன் போது சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித்து உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா விவா­தத்தை ஆரம்­பித்து உரை­யாற்ற முனைந்த போதே கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் எழுந்து கோஷ­மிட்­டனர்.இதன்­கா­ர­ண­மாக சபையில் சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டது.

இதன்­போது கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுவின் தலைவர் தினேஷ் குண­வர்­தன எம்.பி எழுந்து கருத்துத் தெரிவிக்கையில்;

அர­சி­ய­ல­மைப்பின் 84 ஆவது ஷரத்தின் பிர­காரம் மாகாண சபை­யுடன் தொடர்­பான சட்­ட­மூ­லத்தை மாகாண சபை­க­ளுக்கு அனுப்­பி­வைத்து மாகா­ணங்­களின் அங்­கீ­கா­ரத்தை பெற­வேண்டும். இது போலவே அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்திற்கும் மாகாண சபை­களின் அங்­கீ­காரம் பெறப்­பட்­டது. ஆனால் குறித்த இந்த சட்­ட­மூ­லத்­திற்கு மாகாண சபை­க­ளின் அங்­கீ­காரம் பெறப்­ப­ட­வில்லை. ஏன் மாகாண சபை­க­ளுக்கு அனுப்­ப­வில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்­ட­மூலத்திற்கு மாகாண சபை­களின் அனுமதியைப் பெற வேண்­டி­ய­தில்லை. இதனை சபை முதல்­வரும் சுட்­டிக்­காட்­டினார் என சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறினார்.

விமல் கருத்து

இத­னை­ய­டுத்து கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் எழுந்து கோஷ­மிட்­டனர். இதன்­போது விமல் வீரவன்ஸ் எழுந்து பேசு­கையில்,

இந்த சட்­ட­மூ­லத்தின் ஷரத்­து­களை பார்க்­கிலும் திருத்­தங்கள் அதி­க­மாகும். இவ்­வாறு மறை­மு­க­மாக திருத்­தங்கள் கொண்டு வரும் போது 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நீதி­மன்­றத்தில் சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய முடி­யாது போகும். அத்­துடன் குறித்த சட்­ட­மூலத்திற்கு மாகாண சபையின் அங்­கீ­காரம் பெற­தே­வை­யில்லை என்ற சட்­டமா அதி­பரின் கூற்று உங்­க­ளிடம் உள்­ளதா? அப்­ப­டி­யாயின் அதனை சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்த முடி­யுமா? என்றார்.

ஆம் முடியும். சட்­டமா அதி­பரின் அனு­மதி உள்­ளது. அத்­துடன் திருத்­தங்­கள் தொடர்பில் எனக்கு எதுவும் கூற­மு­டி­யாது. அர­சாங்­கமே தீர்­மா­னிக்க வேண்டும் என சபா­நா­யகர் கூறினார்.

காமினி லொக்­கு­கேவின் எதிர்ப்பு

இத­னை­ய­டுத்து இடை­ந­டுவே எழுந்த காமினி லொக்குகே எம்.பி,

சபா­நா­யகர் அவர்­களே, மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமை தொடர்­பான பாரா­ளு­மன்ற மேற்­பார்வை குழுவின் தலைவர் நானே. எனினும் நாம் அனுப்­பிய சட்­ட­மூலம் தற்­போது சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. அதற்கு முற்­றிலும் மாற்­ற­மான சட்­ட­மூ­லமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்­வேறு திருத்­தங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. எமது மேற்­பார்­வைக் குழு­வுக்கு திருத்­தங்கள் வர­வில்லை. இது பெரும் அநீ­தி­யாகும் என்றார்.

இதன்­போது எழுந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஹெக்டர் அப்­பு­ஹாமி எம்.பி பேசு­கையில்,

சபா­நா­யகர் அவர்­களே, காமினி லொக்­குகே தவ­றான கருத்தை முன்­வைத்தார். நானும் குறித்த மேற்­பார்வை குழுவில் உறுப்­பி­ன­ராக உள்ளேன். ஆனால் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்றி அனுப்­பு­மாறு காமினி லொக்­குகே தான் கூறினார் என்றார்.

சபை முதல்­வரின் பதில்

சட்­ட­மூ­லத்தின் திருத்­தங்­களை மேற்­பார்வை குழு­வுக்கு அனுப்ப வேண்­டி­ய­தில்லை. குழுக் கூட்­டத்தின் போதே திருத்­தங்கள் முன்­வைக்க வேண்டும். இதற்கும் முன்னர் மேற்­பார்வை குழு­வுக்கு திருத்­தங்கள் முன்­வைக்­கப்­ப­ட­வேண்டியதில்லை. சம்­பி­ர­தா­யங்­களை மீறி எம்மால் செயற்­பட முடி­யாது என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல காட்­ட­மாக கூறினார்.

இதன்­போது டலஸ் அழ­கப்­பெ­ரும எம்.பி. கூறு­கையில்,

இது சாதா­ரண விட­ய­மல்ல. மாகாணசபை தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தின் திருத்­தங்கள் எமக்கு கிடைக்­க­வில்லை. இதற்கு மத்­தியில் எப்­படி நாம் வாக்­க­ளிப்­பது. இது பார­தூ­ர­மான விட­ய­மாகும் என்­றார்.

சபா­நா­ய­கரின் எச்­ச­ரிக்கை

தயவு செய்து சபையில் அம­ருங்கள். சபை நட­வ­டிக்­கை­களை குழப்ப வேண்டாம். திருத்­தங்கள் மேற்­பார்வை குழு­வுக்கு அனுப்ப வேண்­டி­ய­தில்லை. விவா­தத்தை நடத்­த­வி­டுங்கள் என சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய இதன்போது கோரிக்கை விடுத்தார்.

பைசரின் உரையை அடுத்து கூச்சல் குழப்பம்

இதற்­கி­டையில் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தை ஆரம்­பித்து உரை­யாற்ற முனைந்த போது சபையில் எதி­ர­ணி­யினர் கூச்­சலும் குழப்­பமும் விளை­வித்து அமைச்­சரின் உரையை திசை­தி­ருப்ப முனைந்­தனர். எனினும் அமைச்சர் பைசர் முஸ்­தபா கடும் கூச்­ச­லுக்கு மத்­தியில் தனது உரையை தொடர்ந்து முன்­னெ­டுத்து வந்தார்.

இதன்­போது அமைச்சர் பைசர் முஸ்­தபா கூறுகையில்,

இது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த சட்­ட­மாகும். எனினும் எதி­ர­ணி­யினர் இதற்கு எதி­ரப்பு வெளி­யி­டு­கின்­றனர். தினேஷ் குண­வர்­தன எம்.பி ஏற்­க­னவே கொண்டு வந்த தேர்தல் முறை­மையின் பிர­காரம் குறித்த சட்­ட­மூலம் கொண்டு வந்­துள்ளோம். எனவே தினேஷ் குண­வர்­த­னவின் யோச­னை­க­ளையே நாம் சட்­ட­மூ­லத்தில் உள்­ள­டக்­கி­யுள்ளோம். பெண்­க­ளுக்கு 30 வீதம் பிர­நி­தித்­துவம் வழங்க வேண்டும் என்­பதே இதன்­நோக்கம். இதில் திருத்­தங்கள் உள்­ளன என்று கூறி தனது உரையை முடித்­துக்­கொண்டார்.

சுமந்­தி­ரனின் உரைக்கு கூட்டு எதி­ரணி இடை­யூறு

இத­னை­ய­டுத்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் உரை­யாற்ற ஆரம்­பித்­ததை தொடர்ந்து பொது எதிரணியினர் அனை­வரும் சபைக்கு நடுவே வந்து செங்­கோ­லுக்கு அரு­கா­மையில் நின்றனர். இதன்­போது விவா­தத்தை உடன் நிறுத்­துங்கள், உடன் நிறுத்­துங்கள், இது முறை­யற்ற செயற்­பாடு என சபா­நா­ய­கரின் ஆச­னத்­திற்கு முன்­னால் இருந்து பொது எதிரணி எம்.பி.க்கள் கோஷ­மிட்டு கொண்­டி­ருந்­தனர். இதன்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, விமல் வீர­வன்ச, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே ஆகியோர் கோஷ­மிட்­டனர்.

சபைக்கு நடுவே ஆளும், கூட்டு எதி­ரணி எம்.பிக்கள்

அது­போன்றே கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் சபைக்கு நடுவே வரு­வ­தனை கண்ட ஆளும் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சபைக்கு நடுவே வந்­தனர். இத­னை­ய­டுத்து பரப்­பான நிலைமை ஏற்­பட்­டது. இரு தரப்­பி­னரும் சபைக்கு நடுவே வந்­தி­ருந்­தனர். குறிப்­பாக ஆளும் கட்­சியில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நளின் பண்­டார, ஹெக்டர் அப்­ப­ஹாமி, முஜிபூர் ரஹ்மான் உள்­ளிட்ட பலர் சபைக்கு மத்­தியல் வந்­தி­ருந்­தனர்.

இந்த வேளையில் சுமந்­திரன் எம்.பி.யின் உரையின் போது கூட்டு எதிர்க்­கட்­சியினர் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர். குறிப்­பாக விம­ல­வீர திஸா­நா­யக்க, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, வாசு­தேவ நாண­யக்­கார ஆகியோர் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்டு இடை­யூறு விளை­வித்­தனர். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு செல்­லுங்கள், அளும் தரப்பு ஆச­னத்­திற்கு சென்று அம­ருங்கள் என்­ற­வாறு அவர்கள் கோஷ­சுமந்திரனைப் பார்த்து கோஷமிட்­டனர்.

இதன்­போது சுமந்­திரன் எம்.பியின் உரை நிறை­வ­டைந்த பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டனும் சட்­டமா அதி­ப­ருடன் நண்­பகல் 12 மணிக்கு பேசு­வ­தாக சபாநாயகர் கூறினார். எனினும் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோஷ­மிட்டு 12 மணி வரை பொறுக்க முடி­யாது. அப்­ப­டி­யாயின் உடன் விவா­தத்தை நிறுத்­து­மாறு கோரினர்.

இந்த சர்ச்­சை­யான நிலை­மையின் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபைக்குள் நுழைந்தார். இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு சபா­நா­யகர் பேசு­வ­தற்கு அனு­மதி வழங்­கினார்.

சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைத்த பிர­தமர்

இந்த சந்­தர்ப்­பத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பி­டு­கையில்,

மாகாண சபை தேர்தல் திருத்த சட்­ட­மூலம் தொடர்பில் சட்­டமா அதி­ப­ருடன் பேச­வுள்ளேன். இதன்­போது கட்சி தலை­வர்­களும் கலந்துகொள்ள முடியும். எனினும் சட்­டமா அதி­பரை 12 மணிக்கு முன்னர் அழைப்­ப­தற்கு வாய்ப்­புகள் இல்லை. ஆகையால் சுமந்­திரன் எம்.பி உரை நிறைவடைந்த பின்னர் நண்பகல் 12 மணிவரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்போம் என்றார்.

சபை ஒத்திவைப்பு

இதனையடுத்து சுமந்திரன் எம்.பி உரை நிறைவடைந்தவுடன் சட்டமா அதிபருடன் பேச்சு நடத்தும் நோக்கில் 12 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்பிரகாரம் 11.20 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பிற்பாடு 12 மணி வரை ஒத்திவைத்தாலும் மதியம் 1.30 மணிக்கே சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.

சபாநாயகரின் தீர்மானம்

இதன்போது சட்டமா அதிபரின் எழுத்துமூல ஆவ ணத்தை எடுத்துகாட்டி சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிடுகையில்,

திருத்தங்கள் மேற்பார்வைகுழுவுக்கு அனுப்பி வைப்பட வேண்டியதில்லை என்றும் மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூலத்தை மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்காக அனுப்பிவைக்க வேண்டியதில்லை என சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவித்ததாக கூறியதன் பின்னர் விவாதம் சுமுகமாக முன்னெடுத்து செல்லப்பட்டது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.