Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்

Featured Replies

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்
card-bg-img
 

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக ஒரு சிலர் படம் பார்ப்பார்கள். அப்படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருந்தவர் இயக்குனர் சரண். ஆனால், இவர் அசல் படத்திற்கு பிறகு எந்த படங்களையுமே இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வினய் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார். சரண் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

வினய் இரட்டையர்கள், அம்மா வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுப்போவதில்லை. அந்த சமயத்தில் வினய் அப்பாவிற்கு ஏற்கனவே பங்காளி வீட்டு சண்டை உள்ளது.

ஒருநாள் அனைவரும் குடும்பத்துடன் கண்ணியாகுமரி டூர் செல்ல, அங்கு ஒரு பெண்ணை பார்த்து ஒரு வினய் பின்னாடியே செல்கின்றார். அப்போது தன் அப்பாவின் பல நாள் எதிரியின் காரில் ஏறி செல்ல, அதை எல்லோரும் பார்த்துவிடுகின்றனர்.

அந்த பெண்ணின் மீது கொண்ட காதலால் அப்படியே வினய் ஐதராபாத் செல்ல, இங்கு வினய்யை கொன்றுவிட்டதாக தகவல் வருகின்றது. பிறகு என்ன இரட்டையர்கள் படம் என்றாலே ஆள் மாறாட்டம் இருக்க தானே செய்யும், அவர் இடத்திற்கு இவர் வர, இவர் இடத்திற்கு அவர் போக, பிறகு என்னென்ன ஆனது என்பதை மீண்டும் ஒரு அட்டகாசமான கதைக்களத்தில் எடுத்து வைத்துள்ளார் சரண்.

படத்தை பற்றிய அலசல்

என்னது அட்டகாசம் கதையா? படம் அப்படித்தானா? என்று தயவு செய்து நினைக்கவேண்டாம். உண்மையாகவே ஜெமினி, வசூல் ராஜா, அட்டகாசம், அமர்க்களம், வட்டாரம் எடுத்த சரண் தானா இந்த படத்தை எடுத்தார் என்று கேட்க தோன்றுகின்றது.

வினய் தற்போது தான் துப்பறிவாளனில் ப்ரேக் கொடுத்தார். அடுத்த வாரமே இப்படி ஒரு படம், பல வருடங்களாக எடுத்து இருப்பார்கள் போல, எதற்கு பாட்டு வருகின்றது, எதற்கு சண்டை வருகின்றது என்று நமக்கு மட்டுமில்லை இயக்குனருக்கே தெரியவில்லை போல.

கருப்பு பணம், ஹவாலா பிஸினஸ் என சரணுக்கே பேவரெட்டான ஒரு கதைக்களத்தில் தேவையில்லாத பல காட்சிகளில் பொறுமையை சோதிக்கின்றார். அதிலும் பாடல்கள் எல்லாம் என்ன ஆச்சு பரத்வாஜ் சார் என்று கேட்க தோன்றுகின்றது.

ஐதராபாத், திருநெல்வேலி என்று படம் இரண்டு தளங்களில் பயணிக்கின்றது. எதற்குமே ஒரு வித்தியாசமில்லை, ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போலவே ஓர் உணர்வு, படத்தின் ஒரே ஆறுதல் மயில்சாமி, அருள்தாஸ் டீமின் காமெடி காட்சிகள் மட்டுமே.

க்ளாப்ஸ்

மயில்சாமி ஒரு சில காட்சிகள் வந்தாலும் ரசிக்க வைக்கின்றார். அருள்தாஸ் தன் டீமுடன் அடிக்கும் லூட்டி.

பல்ப்ஸ்

மற்ற அனைத்துமே.... சரண் நீங்கள் பழைய பலத்துடன் மீண்டு(ம்) வரவேண்டும்.

மொத்தத்தில் ஆயிரத்தில் இருவரில் ஒருவர் கூட திருப்திப்படுத்தவில்லை

  • தொடங்கியவர்

கமல், அஜித், விக்ரம் என சொல்லியடித்த சரணா இது?! - 'ஆயிரத்தில் இருவர்' விமர்சனம்

 

ஏரியாவில் வாழ்ந்து கெட்டவர்களை 'ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்' என சலித்துக்கொள்வோமே, அப்படித்தான் இயக்குநர் சரண் பற்றியும் சொல்லவைக்கிறது அவர் இயக்கத்தில் வெளியான 'ஆயிரத்தில் இருவர்' படம். 

ஆயிரத்தில் இருவர்

 

செவத்தக்காளை, செந்தட்டிக்காளை என்ற இரட்டையர்கள் எதற்கெடுத்தாலும் "ஏல செந்தட்டி... ஏல செவத்த" எனத் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ரகம். சின்ன வயதில் குடும்பப் பகையால் ஏற்படும் ஒரு குழப்பத்தில் செந்தட்டிக் காளை வீட்டைவிட்டு ஓடி ஹைதராபாத்தில் தஞ்சமடைகிறார். அவர் இறந்துவிட்டாரென மொத்தக் குடும்பமும் நம்புகிறது. மற்றொரு பக்கம், அரசியல்வாதியின் பினாமி ஒருவர் தன் சுவிஸ் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை தன் மகளின் உடம்பில் பச்சை குத்தி (க்யூ ஆர் கோட் உட்பட) வைக்க அந்தப் பெண் காணாமல் போகிறார். இன்னொரு பக்கம், தன் அப்பாவின் சாவிற்கு செவத்தக் காளைதான் காரணம் என நினைக்கும் ரவுடி தன் கும்பலோடு ஹீரோவைத் தேடி அலைகிறார். மற்றொரு பக்கத்தில் நான்கு பேர் ஒரு படம் பார்க்க திரையரங்கிற்கு வந்து வசமாக மாட்டிக்கொள்கிறார்கள். (வேற யாரு, நாங்கதேன்!)

வினய்

ஹீரோவாக இரட்டை வேடத்தில் வினய். கடைசியாக ஹிட் கொடுத்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது என்ற குறையை கடந்தவாரம் வந்த துப்பறிவாளன்தான் போக்கியது. அதற்குள் கண் திருஷ்டி. அதுவும் திருநெல்வேலி பாஷை பேசுகிறேன் என 'ஏல அல்வால டேஸ்ட்டுல கம்மில' என வார்த்தைக்கு வார்த்தை 'ல' போட்டுப் பேசி அந்த வட்டார மொழியை வதைக்கிறார். டிம் மோரியார்டியாக போன வாரம் மிரட்டிய வினய்க்கு இதில் பெரிதாக வேலையே இல்லை. சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என பேரைப் போலவே அழகான ஹீரோயின்கள். ஹீரோவைப் பார்க்கிறார்கள், காதலில் விழுகிறார்கள், பாட்டுப் பாடுகிறார்கள், க்ளைமேக்ஸில் சிரிக்கிறார்கள். தட்ஸ் ஆல். பிரதீப் ராவத், இளவரசு, அருள்தாஸ், ஶ்ரீஜித் ரவி என எக்கச்சக்க திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள்... ம்ம்ம் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் மயில்சாமியும் அருள்தாஸோடு வரும் ரவுடியும் சிரிக்க வைக்கிறார்கள். மற்றபடி காமெடிக்கும் பஞ்சம்தான். ஒருவேளை நீங்கள் படம் பார்த்தால் இடைவேளைக்குப் பிறகு வரும் அருள்தாஸ் - காஜல் ஜோடிக்கு வைத்திருக்கும் காதல் எப்பிசோடு வரை பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நிச்சயம் ஜென் நிலைக்கு சென்றிருப்பீர்கள். அடுத்து எதைக் காட்டினாலும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை வந்துவிடும். 

Vinay

இரட்டை சகோதரர்கள், அதில் ஒருவர் சின்ன வயதிலேயே தொலைந்து போகிறார், அதற்குக் காரணமானவர்களை பழிவாங்க ஆள்மாறாட்டம் செய்கிறார் - யெஸ், அதே 'அட்டகாசம்' கதைதான். ஆனால் சரண் ஆக்‌ஷன் படமாக எடுக்க நினைத்து, ரொமான்ஸ் கதையாக எழுதி காமெடி படமாக எடுத்திருப்பதால்... திரைக்கதை அநியாயத்திற்கு குழப்பியடிக்கிறது. அதனால் பாவம் எடிட்டர் கெவினும் இருக்கும் காட்சிகளை தொகுத்து படமாக்கியிருக்கிறார். அதனாலேயே படத்தில் இரண்டு வினய் இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளவே நேரம்பிடிக்கிறது. படத்தில் இதுவரை பார்க்காத புதிய விஷயம் என்றால் சண்டைக்காட்சிகள்தான். ரெண்டு வினயும் தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு கண்களைக் கட்டிக் கொண்டு சண்டை போடும் அதிசயமான சண்டைக் காட்சிகளை இதற்கு முன்பு பார்த்ததுண்டா யுவன் ஹானர்? என்னதான் அஜித் உங்கள் நண்பராக இருந்தாலும், "உங்க தல கழுத்த பாத்துப் பேசுறவரு இல்லடி, கண்ணப் பாத்து பேசுறவரு" போன்ற அஜித் ரெஃபரன்ஸ் வசனங்கள் எல்லாம் அவசியம் வைத்திருக்க வேண்டுமா?

Saran

சரண் - பரத்வாஜ் இணை ஒரு காலத்தில் இளசுகளின் ஹார்ட்பீட்டாக பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் ஈர்க்க மறுக்கின்றன. அதிலும் "மாங்கா பீஸுல இந்த மாங்கா பீஸுல மொளகாப் பொடி முத்தத்தால் கலகம் செஞ்சுபுட்ட" பாடல் எல்லாம் ஏலியன் லெவல். 2012-ல் "செந்தட்டிகாளை செவத்தகாளை"யாகத் தொடங்கப்பட்ட படம் 2017ல் "ஆயிரத்தில் இருவர்" ஆக வெளியாகியிருக்கிறது. இந்த ஐந்தாண்டுகளில் தமிழ் சினிமா இசை நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிவிட்டது கூட காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்காகக் கூட அந்த "ஏலேய்ய்ய்ய்" பாடலை ஏற்றுக் கொள்ள முடியாது பரத்வாஜ். ஒளிப்பதிவு ஒன்றிரண்டு காட்சிகளில் பளிச். படத்தில் ஒரு வினய் வெளிநாட்டுக்கு செல்வதாக காட்டப்படும் காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு கேமிராவில் ஒளிப்பதிவு செய்து பிக்ஸல் உடைந்து புள்ளியடிக்கிறது. 

இருட்டுக்கடை அல்வா போல ஹீரோயினின் அம்மா வெளிச்சக்கடை அல்வா செய்பவர் என யோசித்த அளவுக்காவது வசனத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் மிகப்பெரிய மைனஸ் வாட்ஸ் அப் ஃபார்வேர்டு பாணியில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்... 

 

 

'என்னண்ணே இப்படி கொலைப் பட்டினியா கிடக்கீங்க?'

'கொலை பண்ணத்தான் இப்படி பட்டினியா கிடக்கேன்டா' என வில்லனும் அடியாளும் பேசிக்கொள்ளும் இந்த டயலாக் ஒரு சோறு பதம். 

 

கமல், அஜித், விக்ரம் என டாப் ஸ்டார்களை வைத்து சொல்லியடித்த சரணுக்கு இது சொல்லிக்கொள்ளும்படியான படம் இல்லை. பழைய ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க ப்ரோ!

http://cinema.vikatan.com/movie-review/103120-aayirathil-iruvar-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.