Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் இன்று மாறிவிட்டதாக ஆளுநருக்கு கவலை

Featured Replies

மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் இன்று மாறிவிட்டதாக ஆளுநருக்கு கவலை

 

மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் இன்று மாறிவிட்டதாக ஆளுநருக்கு கவலை

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாடசாலை காலத்தில் இருந்த நல்லிணக்க எண்ணங்கள் அரசியலுக்கு வந்தபின்னர் மங்கிப்போய்விட்டதையிட்டு தாம் கவலையடைவதாக தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொலிஸாரும், முப்படையினரும் வடக்கில் எவ்வளது பெரிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டு வடமாகாணத்தில் இருந்து படையினரை துரத்தும் எண்ணம்கொண்டவர்கள், தமது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஷய எனப்படும் தாயக மக்கள் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றையதினம் நடைபெற்றது.

யாழ். குடா நாட்டில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் மீது அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூடு மற்றும் கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் என்பன இடம்பெற்றிருந்தன. தென்மாகாண ஆளுநர் என்ற வனையில் வடமாகாண நிலை குறித்து உங்களது கருத்து என்ன என்று ஊடகவியலாளர்கள் வினா தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார   “எனக்குத் தெரிந்த வகையில் அவர்கள் புலிகள் இயக்கமல்ல. ஆவா போன்று விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்துசென்ற கொள்ளைக் குழுக்களே அவர்கள். இந்தக் குழுவை கைது செய்வதற்கும், சட்டத்தின்முன் நிறுத்துவதற்கும் பொலிஸார் அவசியம். அதனால்தான் வடக்கில் உள்ள பொலிஸார் மற்றும் முப்படையினரின் பணிகளை துச்சமாக மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வடமாகாண முதலமைச்சருக்கு ஒரு செய்தியை வழங்குகிறேன். முதலமைச்சரை சுற்றியும் பாதுகாப்பு பிரிவினர் புடைசூழவிருப்பதால் அவருக்குப் பிரச்சினையில்லை. ஆனால் வடக்கில் அப்பாவி விவசாயிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பை வழங்க பொலிஸாரும், முப்படையினரும் கடமைபட்டுள்ளனர். முப்படையினர் மற்றும் பொலிஸாரை வடக்கிலிருந்து நீக்குங்கள் எனக் கூவிவருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண முதலமைச்சரும், விடுதலைப் புலிகளின் தலைவரது மைத்துனருமான சிவாஜிலிங்கம், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின்போது, உடனடியாக பொலிஸாரை ஈடுபடுத்தி அவர்களை கைது செய்யும்படி வலியுறுத்தினார். தீப்பிடித்த இடத்தைப் பாருங்கள். அதனால் விக்னேஸ்வரனை 12 வயதிலிருந்து எனக்குத் தெரியும். அந்த காலத்தில் விக்னேஸ்வன் அண்ணாவுக்கு இருந்த நல்லிணக்க குணம், இப்போது இனவாதப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதால் குறைவடைந்திருப்பதையிட்டு கவலையடைகின்றேன்” என்றார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/southern-governor-comment-on-CV

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நவீனன் said:

யாழ். குடா நாட்டில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் மீது அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூடு மற்றும் கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் என்பன இடம்பெற்றிருந்தன.

 தங்களையே பாதுகாக்க முடியாதவர்கள். எப்படி மக்களை பாதுகாக்க போகிறார்கள்? உலகிலேயே சிறந்த அணியை முறியடித்த இராணுவத்தினருக்கு ஒரு வாள் வெட்டை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் கூற்றில் ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது.

 

15 hours ago, நவீனன் said:

விக்னேஸ்வரனை 12 வயதிலிருந்து எனக்குத் தெரியும். அந்த காலத்தில் விக்னேஸ்வன் அண்ணாவுக்கு இருந்த நல்லிணக்க குணம், இப்போது இனவாதப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதால் குறைவடைந்திருப்பதையிட்டு கவலையடைகின்றேன்”

முதலமைச்சரை எப்பவும்   மாணவனாக பார்க்க ஆசைப்படுகிறார் இவர். தான் மட்டும் ஆளுநராக இருக்க வேணுமாம்.

  • தொடங்கியவர்

வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் குறித்து கவலையடைகின்றேன் : ஹேம­கு­மார நாண­யக்­கார

Published by Priyatharshan on 2017-09-23 09:30:27

 

வட­மா­கா­ணத்தில் முத­ல­மைச்சர் விக் னேஸ்வரனின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கவ­லை­ய­டை­கின்றேன். யாழ்ப்­பா­ணத்தில் படை­யி­னரின் பாது­காப்பு நட­வ­டிக்­கையை முத­ல­மைச்சர் குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது என மெள­பிம மக்கள் கட்­சியின் தலை­வரும் தென் மாகாண ஆளு­ந­ரு­மான ஹேம­கு­மார நாண­யக்­கார தெரி­வித்தார்.

hemakumara-nanayakkara.jpg

கட்சியினால் நேற்று கொழும்பில் நடத் ­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார்

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

யாழ்ப்­பா­ணத்தில் சட்டம், ஒழுங்கை பாது­காப்­பதில் இரா­ணுவம் மற்றும் பொலி­ஸாரின் செயற்­பாட்டை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது. முத­ல­மைச்­ச­ருக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் சுற்றி இருப்­பதால் பிரச்­சினை இல்லை. 

ஆனால் வடக்கில் சாதா­ரண மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யி­ருப்­பது பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­ன­ரு­மாகும்.

படை­யி­னரை வடக்கில் இருந்து வெளி­யேற்­ற­ வேண்டும் என தெரி­வித்­து­வந்த சிவா­ஜி­லிங்கம், யாழ்ப்­பா­ணத்தில் ஆவா குழு தலை­தூக்­கி­ய­போது அவர்­களை உட­ன­டி­யாக கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­க வேண்டும் என தெரி­வித்தார். அப்­போது அவர்­க­ளுக்கு இரா­ணு­வமும் பொலி­ஸா ரும் தேவை­யா­கின்­றது. மேலும் வட­மா­காண  முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை நான் சிறு­வ­யதில் இருந்து அறி­வேன். எனது மூத்த சகோ­த­ரனின் உற்ற நண்­ப ராக இருந்தார். அதனால் நான் அவரை அண்ணா என்றே அழைக்­கின்றேன்.

முத­ல­மைச்சரிடத்தில் முன்னைய காலத் தில் இருந்த நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களை இப்­போது காண்­ப­தில்லை. இன­வாத செயற்­பாடே அவ­ரிடம் இப்­போது இருந்து வரு­கின்­றது. அவரின் இந்த நிலை குறித்து நான் கவ­லை­ய­டை­கின்றேன். முத­ல­மைச்சர் அண்­மையில் மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து உரை­யா­டி­யுள்ளார். இதன்­போது வடக்­கிற்கு சமஷ்டி முறை­யி­லான அதி­காரம் வழங்­கப்­ப­ட ­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருப்­ப­தாக தெரி­வித்­துள் ளார். ஆனால் மா­நா­யக்க தேரர், நீங்கள் தெரி­விக்கும் சமஷ்டி முறைக்கு செல்­வது கடினம் என தெரி­வித்­துள்ளார்.

எனவே வட­மா­காண முத­ல­மைச்­சரின் இன­வாத நட­வ­டிக்­கைகள் இனங்­க­ளுக்கு மத்­தியில் மீண்டும் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருக்கின்றன. அவர் அரசியலுக்காக இவ்வாறு நடந்துகொள்வதையிட்டு கவ லையடைகின்றேன். முதலமைச்சர் ஆரம்ப காலத்தில் இன நல்லிணக்கத்துக்காக பாடு பட்டவர். ஆனால் தற்போது அந்த செயற் பாடுகள் எதனையும் அவரிடம் காண முடிவதில்லை என்றார்.

http://www.virakesari.lk/article/24823

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.