Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மரணத்தில் இன்னும் விலகாத 16 மர்மங்கள்!

Featured Replies

ஜெயலலிதா மரணத்தில் இன்னும் விலகாத 16 மர்மங்கள்!

 
 

ஜெயலலிதா உடல்

'தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கப்படும்' என அறிவித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'எந்த நீதிபதி விசாரணையைத் தொடங்கப் போகிறார்?' என தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ‘75 நாள்களாக ஜெயலலிதாவைச் சுற்றி என்ன நடந்தது? அவர் இயற்கையாகத்தான் இறந்தாரா?' என்ற சந்தேகம் இன்றளவும் பொதுமக்கள் மத்தியில் உலவி வருகிறது. 'எங்கள் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த விசாரணைக் கமிஷன் உதவும்' என அப்போலோ மருத்துவமனையும் அறிக்கை வெளியிட்டுவிட்டது. ஆனால், 'ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவருக்கு உண்மையில் என்ன ஆனது என்பதை வெளிக்கொண்டு வருவதில் அரசு இயந்திரங்கள் ஏன் இவ்வளவு மெத்தனம் காட்டுகின்றன?' என்ற கேள்வி எழாமல் இல்லை. 

ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்குவதற்காக அவர் இறந்து 60 நாள்கள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பெயலும் அப்போலோ மருத்துவர்களும். இந்த சந்திப்பில், 'முதல்வருக்கு வீட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டபோது அவரது மூச்சுத்திணறல் மேலும் அதிகமாகியது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது மூச்சு மண்டலம் திடீரென்று செயலிழந்துபோனதுதான் (Acute Respiratory Failure) அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலுக்கான காரணம் என்ற முதல்கட்ட முடிவுக்கு வந்தனர். 'திடீரென்று அவரது மூச்சு மண்டலம் ஏன் செயலிழந்து போக வேண்டும்' என்ற கேள்விக்கான பதிலை அவர்கள் தேடுகையில், 'கிருமித் தொற்றுதான் (Infection) அதற்கான காரணம்' என்ற முடிவை எட்டினர்.  'இந்தக் கிருமித் தொற்றானது சிறுநீரகம் அல்லது நுரையீரலில் துவங்கியிருக்கலாம்' என்று கருதினர்.

இதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டபோது அவரது ரத்தத்திலேயே பாக்டீரியா கிருமித் தொற்று இருப்பதை அறிய முடிந்தது. 'இந்தக் கிருமிகள் அவரது இதயத்தின் உள் அடுக்கில் குடிகொண்டு Endocarditis (இருதய உள்ளடுக்கு அழற்சி) என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன' என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும், இந்தக் கிருமித் தொற்றானது உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புகளையும் முடுக்கிவிட்டிருந்தது; அவை நோயை எதிர்த்ததோடு நிற்காமல் அவரது உடல் உறுப்புக்கள் பலவற்றையும் தாக்கத் தொடங்கியிருந்தன என்பதை அறிந்துகொண்டனர். இந்த செயல்பாடே செப்சிஸ்(Sepsis) என்று அழைக்கப்படுகிறது. இதுவே முதல்வரின் மூச்சு மண்டலத்தைத் தாக்கியிருப்பதையும் அதன் விளைவாகவே அந்த மண்டலம் திடீரென்று செயலிழந்து போயிருப்பதையும் அவர்கள் அறிந்துகொண்டனர். இதன் காரணமாக அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. கூடுதலாக, முதல்வருக்கு இருந்த பிற நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவையும் இந்தப் பிரச்னைகளை சிக்கலாக்கின' - இது லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் கருத்து. 

“அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல்வர் கொண்டுவரப்பட்டபோது அவர் அரைத் தூக்க நிலையில்(drowsy) இருந்தார். முதல் ஆறு நாள்களுக்கு மாஸ்க் மூலம் பிராண வாயுவைக் கொடுத்தோம். அதன்பிறகும் அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை; எனவே, அவரது மூச்சுக் குழாய்க்குள் செயற்கை மூச்சுக் குழாய் நுழைக்கப்பட்டு (intubate) செயற்கை சுவாசக் கருவியுடன் (ventilator) இணைக்கப்படவேண்டி வந்தது. இதன் பிறகும் கூட அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை. செயற்கை மூச்சுக்குழாய் நுழைக்கப்பட்டதற்கு 10 நாள்களுக்குப் பிறகு அவரது மூச்சுக் குழாயிலேயே துளைபோட்டு (Tracheostomy) செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது” - இது மருத்துவர் பாபு ஆப்ரஹாமின் கூற்று.

“முதல்வர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்த் தொற்று இருந்ததை அறிந்துகொண்டோம்” - இது டாக்டர். பாலாஜியின் வாதம்.

புகழேந்திமருத்துவர்களின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பை அடிப்படையாக வைத்து விரிவான ஆய்வை நடத்தி முடித்தனர் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மற்றும் கோவை மருத்துவர் ரமேஷ். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இவர்கள் முன்வைத்த ஆய்வுக் குறிப்புகள் பொதுவெளியில் அதிர்வை ஏற்படுத்தின. ஜெயலலிதா மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை இவ்விரு மருத்துவர்களின் ஆய்வுகளில் இருந்தே பார்ப்போம். 

1. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், மருத்துவர்கள் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழகப் பத்திரிகைகளில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிக்குள் வெளிவந்த பெரும்பாலான தகவல்களோடு ஒத்துப்போகின்றன. இதே பத்திரிகைகளில், 'முதல்வர் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் அவதியுற்றார்' என்ற செய்திகள் உள்ளன. செப்டம்பர் 21-ம் தேதியன்று அவரால் திறக்கப்படவிருந்த 107 அம்மா உணவகங்களுக்கான திறப்புவிழா நிகழ்ச்சி காரணம் ஏதுமின்றி ரத்துசெய்யப்பட்டது என்பதும், அதேநாளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட மெட்ரோ ரயில் துவக்கவிழா நிகழ்ச்சியில் மிகவும் சிரமப்பட்டே அவர் கலந்துகொண்டார் என்பதும் அவருக்கு இருந்துவந்த உடல் நலப்பிரச்னைகளால்கூட இருந்திருக்கக் கூடும் என்றே கருதத் தோன்றுகிறது. 'அவருக்கு ஏற்கெனவே இருந்து வந்த பிரச்னைகளைத் திறம்பட கையாளாமல், தாமதமாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றதே அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம்' என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 

2. தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருவர், சசிகலாவிடம் 2017 பிப்ரவரி 8-ம் தேதியன்று நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில், 'மருத்துவமனைக்கு முதல்வரைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதா?' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, “தாமதமின்றி, உடனடியாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். அதனால் பிரச்னை இல்லை என்று அப்போலோ மருத்துவர்கள் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என்னிடம் கூறினார்கள்” என்ற பதிலை சசிகலா அளித்துள்ளார். ஆனால், முதல்வரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, “முன்கூட்டியே முதல்வரைக் கொண்டுவந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது அனுமானம் தொடர்பான கேள்வி; என்னால் அதற்குப் பதிலளிக்க முடியாது; மேலும், எமது பணி முதல்வர் மருத்துவமனைக்கு வந்த பிறகே என்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்” என்றும் டாக்டர். பாபு ஆப்ரஹாம் பதிலளித்தார். ஆனால், நோயாளியை மருத்துவர் ஒருவர் புதிதாகப் பரிசோதனை செய்யும்போது அந்த நோயாளியின் மருத்துவ மற்றும் உடல்நலம் குறித்த வரலாறு அனைத்தையும் மருத்துவர் சேகரித்தாக வேண்டும் என்பதும் இந்தத் தகவல்கள் அந்த நோயாளியின் சிகிச்சைக்கு இன்றியமையாதவை என்பதும் பாபு ஆப்ரஹாம் அறியாததல்ல. அப்போலோ மருத்துவமனையில் உலகத்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஒரு திறந்த புத்தகம் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகமே கூறிவருகிறது. அப்படி இருக்கும்போது டாக்டர்.பாபு ஆப்ரஹாமோ அவரைச் சார்ந்தவர்களோ மேற்கூறிய தகவல்களை பொதுவெளியில் வைக்க ஏன் தயங்க வேண்டும்?

3. செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் முன்வைத்த தகவல்களில் பெரும்பாலான தகவல்களை, பல்வேறு நாள்களில் அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகளில் காணமுடியவில்லை. “அரைத் தூக்க நிலை, மூச்சுத் திணறல், மூச்சு மண்டல செயலிழப்பு, கிருமித் தொற்று, கிருமித் தொற்றால் தூண்டப்படும் உடலின் எதிர்வினைகளால் ஏற்படும் விளைவு (Sepsis), கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு, இதய உள் அடுக்கு அழற்சி (Endocarditis), எளிய பிராண வாயு சிகிச்சை, கிருமிகளைக் கண்டறியத் தேவையான பரிசோதனைகள்” -ஆகியவையே செப்டம்பர் 22-29-ம் தேதிவரை நடந்த நிகழ்வுகள் என்று 2017 பிப்ரவரி 6 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட டாக்டர் பெய்ல் மற்றும் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறினர்.

இந்தக் காலகட்டத்தை முதல் காலகட்டம் என்று அழைப்போம். ஆனால், அப்போலோ மருத்துவமனையால் இந்த முதல் காலகட்டத்தின்போது (செப்டம்பர் 22-29) முன்வைக்கப்பட்ட செய்திக்குறிப்புகளில் இவை எதுவும் இடம் பெறவில்லை. மாறாக. 'காய்ச்சல்; நீர்ச்சத்துக் குறைவு; பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; சிகிச்சையால் உடல் நலம் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறது; வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கியுள்ளார்'  என்ற குறிப்புகளையே காணமுடிகிறது. முதலாம் காலகட்டத்தின்போது, 'முதல்வருக்கு காய்ச்சல் குறைந்தது என்றும், ஆனால் அவரது மூச்சுத் திணறல் கூடுதலாகிப் போனது என்றும், அதனால் எளிய முறையில் அளிக்கப்பட்டுவந்த பிராண வாயுவுக்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்க வேண்டி வந்தது' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

4. ஆனால், அப்போலோ அறிக்கைகளோ இந்த முதலாம் காலகட்டத்தின்போது முதல்வரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது என்றே அறிவித்தது. 2016 செப்டம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 7-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தை இரண்டாம் கால கட்டமாகக் கொள்ளலாம். முதல்வரது மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்ததில் இருந்து (endotracheal intubation) மூச்சுக் குழாயில் துளையிட்டு (Tracheostomy) அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கும் செயல்பாடு வரை உள்ள காலகட்டமே இது. இந்த இரண்டாம் காலகட்டத்தின்போது -அதாவது அக்டோபர் 2,3,4 மற்றும் 6-ம் தேதியன்று அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில்-'முதல்வரது உடல்நிலை தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவே' கூறப்பட்டது. ஆனால், முதல்வருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதியன்று இந்த காலகட்டத்தைப் பற்றிக் கூறும்போது, 'முதல்வரின் மூச்சுத் திணறல் வெகுவேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது' என்றனர்; இதன் காரணமே, செப்டம்பர் 29-ம் தேதியன்று செயற்கை மூச்சுக் குழாயை அவரது மூச்சுக் குழாய்க்குள் நுழைத்தும் பின்னர் அது எதிர்பார்த்த பலனைத் தராத காரணத்தால் அக்டோபர் 7-ம் தேதியன்று அவரது மூச்சுக்குழாய் துவாரமிடப்பட்டது என்றும் கூறினர். 

மருத்துவர் ரமேஷ்5. முதல்வரின் மூச்சுக் குழாய் துளையிடப்பட்ட நாளுக்கு அடுத்த நாளான அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாளான டிசம்பர் 4-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தினை மூன்றாம் காலகட்டம் என்று கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தின்போது இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் பெரிதளவில் மாறுபடவில்லை. 

6. அப்போலோ அறிக்கைகளின்படியும் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவர்களின் விளக்கத்தின்படியும் ' அக்டோபர் மாத இறுதியில் இருந்தே முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. என்றாலும் கூட, டிசம்பர் 4-ம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவரது இதயம் திடீரென செயலற்றுப்போய், துடிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது' என்றும் அவர்கள் கூறினர். நின்றுபோன இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முதல்வருக்கு ஏற்கெனவே இருந்து வந்த நோய்கள் காரணமாகவே (அவை என்ன என்பதை அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை) தோல்வியில் முடிந்தன என்று அப்போலோ நிர்வாகத்தின் டிசம்பர் 5-ம் தேதிக்கான அறிக்கை கூறியது. இதுவரை நன்றாக இருந்து வந்த முதல்வரின் இதயம் திடீரென்று செயலிழந்து நின்றுபோனதற்கான (Cardiac Arrest) காரணம் தங்களுக்குத் தெரியாது என்று மருத்துவர் பெய்லும் பாபு ஆப்ரஹாமும் அடித்துக் கூறினார்கள். 'முதல்வரின் வயது, அவரது இதயத்தைப் பாதித்திருந்த கிருமித் தொற்று, கிருமித் தொற்றினால் ஏற்பட்ட உடலின் எதிர் விளைவுகள், அவரைப் பல ஆண்டுகள் பாதித்திருந்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்கள் ஆகியவற்றால் ஒருவேளை இது நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் உறுதியாகக் கூற இயலாது' என்று டாக்டர் பெய்ல் கூறினார்.

7. ரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவின் மாற்றம், குறிப்பாக உயர் அளவு இதயத் துடிப்பை செயலிழக்கும் தன்மை (Cardiac arrest) கொண்டது. அவருக்கு இதயத் துடிப்பில் மாற்றம் அடிக்கடி வந்து போயுள்ள நிலையில், குறிப்பாக ரத்தத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பிற தேவையான விஷயங்கள் அளக்கப்பட்டு, தேவைக்கேற்ப உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி காலையில் அது உயர் விளிம்புக்குச் சென்றுள்ளது. அதற்காக மருந்துகளில் மாற்றம் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் மறுநாள் காலை அது வழக்கமான அளவை எட்டியது. அன்று மாலை 4:20 மணிக்கு அவருக்கு இதயத் துடிப்பு செயலிழந்த பாதிப்பு, (Cardiac arrest) ஏற்பட்டபின் செய்த ரத்தப் பரிசோதனையில் (Venous Blood Gas Analysis)-ல் பொட்டாசியத்தின் அளவு 6.2 என இருந்ததால் அதைக் குறைப்பதற்காக, கால்சியம் குளூக்கோனெட், இன்சுலின்/டெக்ஸ்ட்ரோஸ், பை கார்பனேட் சிகிச்சை அளிக்கப்பட்டது.

8. இவையனைத்தும் ரத்தத்தில் உள்ள பொட்டாஷியத்தின் அளவைக் குறைக்க கொடுக்கப்பட்ட சிகிச்சைகள். எனவே, இதயத் துடிப்பு செயலிழந்து போனதற்கு உயர் பொட்டாசிய அளவு ஏன் காரணமாக இருக்கக்கூடாது? டிசம்பர் 3-ம் தேதி காலையில் அவருக்கு பொட்டாஷியத்தின் அளவு உச்சத்தை எட்டிய நிலையில், அவரை ஏன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றவில்லை. இதில், மருத்துவமனையின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. பிப்ரவரி 6 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இதயத்துடிப்பு செயலிழந்து போனதற்கு பொட்டாஷிய அளவு காரணமா? என்று கேள்வி எழுப்பியபோது, அன்று காலை செய்த பரிசோதனையில் ரத்தத்தில் பொட்டாசிய அளவு வழக்கமானதாக இருந்தது என்று பாபு ஆபிரகாம் பதிலளித்தார். ஆனால், முந்தைய நாளில் வழக்கமான அளவின் உச்சத்தை அது எட்டியிருந்தது என்பதையும், இதய முடக்கம் வந்தபின் அதன் அளவு அதிகரித்தது (6.2 meq/Dl) என்பதையும் ஏன் மறைக்க வேண்டும்?

9. 'முதல்வரின் இதயம் செயலிழந்து நின்ற பிறகு அதை மீண்டும் இயங்கச் செய்யும் நடவடிக்கைகள் (Cardio Pulmonary Resuscitation-CPR) உடனடியாக எடுக்கப்பட்டது' என்று பாபு ஆப்ரஹாம் கூறினார். இந்த நடவடிக்கை 20 நிமிடம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இறுதியில் அதனால் பலனில்லை (Refractory Cardiac Arrest - CPR நடவடிக்கைக்கு 15 நிமிடங்களுக்கு மேலும் இதயம் செயல்படாது நிற்கும் நிலை) என்று அறிந்த உடனேயே, முதல்வர் இருந்த அறையிலேயே தயாராக வைக்கப்பட்டிருந்த (உடம்புக்கு வெளியில் நுரையீரலாக செயல்பட்டு உடல் உறுப்புகளுக்குத் தேவையான பிராண வாயுவை அளிக்கும்) ECMO (Extra Corporeal Membrane Oxygenation) கருவியுடன் முதல்வரின் ரத்த நாளங்கள் இணைக்கப்பட்டன' என்றார்; 'அடுத்த 24 மணி நேரம் அந்தக் கருவி இயக்கப்பட்ட பிறகும்கூட முதல்வரின் இதயத்தால் மீண்டும் இயங்கமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி அவரை மீட்க விளையும் மருத்துவ நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்திக் கொண்டோம்' என்று கூறினார்.

இந்த நடவடிக்கையை சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கிக் கொள்ள மேலும் சில தகவல்களை அவர் அளித்திருக்க வேண்டும். 'இதயம் செயலிழந்து போயுள்ளது' என்பதை அறிந்த உடன் அடுத்த 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நின்றுபோன இதயத்தை மீண்டும் துடிக்கச்செய்வதே CPR நடவடிக்கையின் நோக்கமாகும். 8-10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவானது தடைபட்டால் மூளைச் சாவு ஏற்படும். இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முதல்வர் எக்மோ கருவியில் இணைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. முதல்வரை எக்மோ கருவியில் இணைக்க எவ்வளவு நேரம் எடுத்தது. ரத்த நாளங்களுக்குள் எக்மோ குழாய்களைப் பொருத்த ஆகும் சராசரி நேரமே 32 நிமிடங்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. அப்படியென்றால், எக்மோ கருவி எப்போதிருந்து இயங்கத் தொடங்கியது, இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் அவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது மிக முக்கியமான கேள்விகள்.  

10. 'முதல்வரை (எக்மோ கருவியுடன் சேர்த்து?) அன்று இரவு 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றார்கள்' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர்.பாலாஜி கூறியிருக்கிறார். 'எதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?' என்று பாபு ஆப்ரஹாம் பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். '75 நாட்கள் போடப்பட்ட அனைத்து முயற்சிகளும் ஒரு வினாடியில் வீணாகிப் போயின. இதுபோன்ற நிகழ்வு இன்னொருமுறை நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்ற கேள்வியை அப்போலோ நிர்வாகமோ, மதிப்பிற்குரிய இந்த மருத்துவர்களோ எழுப்ப மறந்துவிட்டனர். தீவிர சிகிச்சையில் உலக அளவில் புகழைப் பெற்ற மருத்துவர் பெய்ல் அவர்களே இந்தக் கேள்வியை எழுப்ப மறந்துபோனதுதான் ஆச்சர்யம் மற்றும் கவலையை அளிப்பதாக இருக்கிறது. 'இதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்றுபோன இதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் ரிச்சர்ட் பெயலும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. உலகம் முழுவதும் கடந்த இருநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் செயல்பாடுதானே இது? 

ரிச்சர்ட் பெயல்

11. உண்மை இப்படியிருக்க, முதல்வரின் உடல் மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை; உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை உலகத்தரம் வாய்ந்த அப்போலோ மருத்துவமனையோ, முதல்வருக்கு இரவு பகல் பாராது சிகிச்சை அளித்த மருத்துவர்களோ முன்வைக்கவில்லை. என்றாலும்கூட, உயிரற்ற அவரது உடலில் இருக்கும் ரத்தத்தை வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது ரத்த நாளங்களிலும், வயிறு-நெஞ்சு-கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் நச்சுத் தன்மை மிகுந்த வேதித் திரவங்களின் கலவையை ஏற்றி உடலினை வறண்டு-கெட்டுப் போகாமல் இருக்க வைக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ளவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டபோது அதற்கான மாற்றுக் கருத்தினை எவரும் முன்வைக்கவில்லை. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட முதல்நாள் தொட்டே அவரது உடல்நிலை மற்றும் அதற்கான சிகிச்சை குறித்தான கவலைகள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பொதுவெளியில் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான, முழுமையான பதில்களை இன்றளவும் அப்போலோ நிர்வாகமோ, சிகிச்சை அளித்த மருத்துவர்களோ, தமிழ்நாடு அரசோ முன்வைக்கத் தவறியுள்ளன என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தாமல், அதன் ரத்தம் அனைத்தையும் வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாகக் கடுமையான நச்சுத் திரவக் கலவையை உள்ளே செலுத்துவதென்பது அவரது உடலின் உண்மை நிலைமையை அழிக்கும் செயலாக அமைந்துவிடும் என்பது அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தெரியாதா என்ன? 

12. ஒருவேளை, அவரது இறப்புக்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தாக வேண்டும் என்ற முடிவை நீதிமன்றம் எடுக்கும்பட்சத்தில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடம்பானது ரத்தம் நீக்கப்பட்டு, கடுமையான நச்சுத் திரவங்களால் அடைக்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கும்? அந்தத் திரவக் கலவையானது உடலின் அனைத்து இடுக்குகளிலும் புகுந்து உடல் உறுப்புக்களின் இயல்புத் தன்மைகளை அறவே மாற்றி அமைக்கும் திறனைக்கொண்டது என்பதை உறுதிசெய்யும் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன என்பது அப்போலோ நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தமிழக-இந்திய அரசுகளுக்கும் தெரியாதா என்ன? இதற்குப் பதிலாக, அவரது இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இதய செயலிழப்புக்கான காரணங்களை அறிய உதவிடும் மருத்துவரீதியான பிரேதப் பரிசோதனையை நடத்தியிருப்பதுதானே அறிவுகூர்ந்த செயலாக இருந்திருக்க முடியும்? மேற்கத்திய உலகில் நடைமுறையில் உள்ள நிகழ்வுதான் இது என்றாலும் கூட, மேற்கத்திய உலகுக்கும் மருத்துவம் செய்யும் அப்போலோ நிர்வாகமோ, மருத்துவர்களோ இந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்டோர் மேற்கொள்ள வேண்டும் என்று ஏன் நிர்ப்பந்திக்கவில்லை? தமிழக - இந்திய அரசுகள் இந்த நடவடிக்கையில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடலைக் காப்பாற்ற ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை? 

13. 2016 டிசம்பர் 5-ம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. அதையடுத்த ஐந்து நிமிடத்தில் (இரவு 11.35 மணி) தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையின் தலைவரான டாக்டர். சுதா சேஷய்யனிடம், 'முதல்வர் மரணமடைந்து விட்டார். அவரது உடலை உடனடியாகப் பதப்படுத்தியாக வேண்டும்' என்றும் அதற்காக அவர் அவரது பணியாளர்களுடன் அப்போலோ மருத்துவமனைக்கு விரைய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். டாக்டர். சுதா சேஷய்யனும் அவரது பணியாளர்களும் அடுத்த 45 நிமிடங்களில் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள். 6-ம் தேதியன்று அதிகாலை 12.20 மணிக்கு முதல்வரின் உடலைப் பதப்படுத்தும் பணி துவங்கியது. வலது தொடையில் உள்ள ஃபெமோரல் தமணியின் வாயிலாக அவர்கள் 5.5 லிட்டர் பதப்படுத்தும் திரவத்தை உடலுக்குள் செலுத்தினர். இதற்காக அவர்கள் தானியங்கி பம்ப் ஒன்றை உபயோகித்தனர். இந்தப் பணி அடுத்த 15 நிமிடங்களில் - அதாவது, டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 12.35 மணிக்கு - முடிவுக்கு வந்தது. வழக்கமாகப் பயன்படுத்தும் உடல் பக்குவத் திரவத்தை (embalming fluid) முதல்வரின் தோல் நிறத்தை மனதில் கொண்டு  சற்று மாற்றி அமைக்க மருத்துவர். சுதா முடிவு செய்தார். '5.5 லிட்டர் திரவத்தில் 2.5 லிட்டர் அளவுக்கு ஃபார்மலின் திரவத்தையும் கூடுதலாக ஐசோ புரோப்பைல் ஆல்கஹாலையும் கலந்தது இதற்காகத்தான்' என்று கூறினார். ரத்தக் குழாய்களைத் தவிர, நெஞ்சு - வயிறு - கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் இந்த உடல் பக்குவத் திரவத்தை செலுத்த வேண்டும் என்பது நியதி. ஆனால், அவ்வாறு செலுத்தப்பட்டதா என்பது பற்றி 6 பிப்ரவரி 2016 அன்று தமிழக அரசால் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அவர் தெளிவுபடுத்தவில்லை. முதல்வர் அவர்களின் இடது கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகளுக்கான காரணம் என்ன என்பதையும் அவரால் விளக்க முடியவில்லை.

14. முதல்வர் அவர்களின் எடை 105 கிலோ என்று கூறப்படுகிறது. இந்த எடையைக் கொண்ட ஒருவருக்குத் தேவைப்படும் பதப்படுத்தப்படும் திரவத்தின் அளவு என்ன? வெறும் 5.5 லிட்டர் திரவத்தால் இது சாத்தியம்தானா? முதல்வரின் உடலைப் பக்குவப்படுத்தும் செயலைத் தொடங்கும் முன்பு அதற்கான விண்ணப்பப் படிவம் யாரிடம் பெறப்பட்டது என்பது பற்றியோ, காவல்துறையிடமிருந்து ‘இந்த உடம்பைப் பதப்படுத்துவதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை’ என்பதற்கான சான்றிதழ் வாங்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவமனையில் இருந்து இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனை நடத்த அப்போலோ நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அவர் தன்னைத் தெளிவுபடுத்திக் கொண்டாரா என்பது பற்றியோ மருத்துவர் சுதா ஏதும் பேசவில்லை. முதல்வரின் உடல் எவ்வாறு அடக்கம் செய்யப்பட உள்ளது என்பது பற்றியும் எத்தனை நாள்களுக்கு அது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது என்பது பற்றியும் சிந்தித்து அதற்கேற்ற உடல்பக்குவ திரவத்தை அவர் தேர்வு செய்தாரா என்பது பற்றியும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் ஏன் தெளிவுபடுத்தவில்லை? இறந்தவர் ஒருவரின் உடலைப் பக்குவப்படுத்தும்போது அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்பதை பக்குவப்படுத்தும் குழுவினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்பது நியதி. ஏனெனில், மரணமடைந்தவர் கடுமையான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது ரத்தம் மற்றும் உடலில் இருக்க வாய்ப்புள்ள கிருமிகளால் பக்குவப்படுத்தும் பணியினை மேற்கொள்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாக முடியும். முதல்வர் அவர்களின் ரத்தத்தில் கலந்திருந்த நோய்த்தொற்று குறித்து அப்போலோ மருத்துவர்கள் சுதா சேஷய்யனிடம் விளக்கினார்களா என்பது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. முதல்வரின் ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு  அதற்குப் பதிலாக உடலைப் பதப்படுத்தும் நச்சுத் திரவத்தை அவரது உடலுக்குள் செலுத்தும் பணியை சுதா சேஷய்யன் குழுவினர் அப்போலோ மருத்துவமனையில் எங்கு மேற்கொண்டார்கள் என்பது குறித்தும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை.

15. இறந்தோரின் உடல் இரண்டு காரணங்களுக்காகப் பக்குவப்படுத்தப்படுகிறது. அடக்கம் செய்வதற்கு முன்பாகவே அந்த உடம்பு கெட்டுப்போய்விடக்கூடாது என்பது ஒரு காரணம். உடற்கூறு கல்விக்காக நீண்டகாலம் பதப்படுத்த வேண்டியது மற்ற காரணம். முதலாவது காரணத்துக்காகவே முதல்வரின் உடல் பக்குவப்படுத்தப்பட வேண்டியிருந்தது என்று டாக்டர். சுதா சேஷய்யன் குறிப்பிடுகிறார். அடுத்த 19 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படவுள்ள, இரண்டு கம்ப்ரெஸ்ஸர்களைக் கொண்ட சிறப்பு குளிர்சாதன சவப் பெட்டியில் வைக்கப்படவுள்ள ஓர் உடலைப் பதப்படுத்த வேண்டியது அவசியம்தானா என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? முதல்வர் அவர்கள் ஐயங்கார் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது உடல் எரியூட்டப்படுவதே மரபு. அப்படி இருக்கும்போது அதற்கேற்ற பதப்படுத்தும் வேதிப்பொருள்களைத் தேர்வு செய்யாமல், எளிதில் வெடிக்கும் தன்மை கொண்ட ஐசோபுரப்பைல் ஆல்கஹால்(Iso propyl alchohol)ஐ உடலைப் பதப்படுத்தும் திரவத்தில் கலந்ததற்கான காரணம்தான் என்ன? 

16. முதல்வர் அவர்களின் தோலின் நிறத்தை நாள் முழுதும் குன்றாமல் வைக்கவேண்டுமென்றால், அதற்கான சிறப்பு பதப்படுத்தும் திரவங்கள் அனேகம் உள்ளனவே… அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் மிகவும் விலை குறைந்த, மலிவான வேதிப்பொருள் ஒன்றை மருத்துவர் சுதா சேஷய்யன் எதற்காக தேர்வு செய்தார்? உடலைப் பதப்படுத்துவதற்குக் குறைந்தது 3-4 மணி நேரமாவது தேவை. மிக விரைவில் அதை முடிக்க வேண்டும் என்றால்கூட குறைந்தது ஒரு மணி நேரமாவது அவசியமாகும். உடலைப் பதப்படுத்தக் கோரும் விண்ணப்பப் படிவத்தை சரிபார்க்க வேண்டும். உடலைப் பதப்படுத்தும் திரவத்தை ரத்த நாளங்களுக்குள் செலுத்துவதற்கு முன்பாக ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். பின்னர் வயிறு, நெஞ்சு மற்றும் கபால உள் வெளிகளுக்குள்ளும் திரவத்தை செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் பணியாளர்களுக்குக் கேடு ஏற்படாத வண்ணம் செய்து முடிக்க வேண்டும். திரவத்தை உடலுக்குள் ஏற்றிய பிறகு அது எங்காவது கசிகிறதா என்று பார்க்க வேண்டும். பின்னர் அந்த உடம்பை சுத்தம்செய்து, அடக்கத்துக்குத் தயார் செய்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்பாடுகளையும்  வெறும் 15 நிமிடங்களில் முடித்துவிட்டதாக அவர் கூறுகிறார். 

இதுதான் முதல்வர் ஜெயலலிதா மரணம் மீதான பல கேள்விகளை எழுப்புகின்றன. 

 

http://www.vikatan.com/news/tamilnadu/103011-16-mysterious-facts-behind-jayalalithaas-death.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

பாதுகாப்பு... பரபரப்பு... ஜெயலலிதா இருந்த அப்போலோ அறை எண் 2008-ன் இப்போதைய நிலவரம்!

 
 

அப்போலோ மருத்துவமனை

செய்தித் தொலைக்காட்சிகளில் 'பிரேக்கிங் நியூஸ்' புகழ் மாநிலமாக தமிழகம் உருவெடுத்து இன்றோடு ஓராண்டு ஆகிறது. ஆம், கடந்த ஆண்டு இதே நாளில்தான், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஓராண்டு கடந்த நிலையிலும் ஜெயலலிதா விஷயத்தில், அவர் அனுமதிக்கப்பட்ட ஒரு நிகழ்வு மட்டும்தான் இந்த அப்போலோ விவகாரத்தில் உறுதியான ஒரே செய்தி என்பதுதான் மென்சோகம். சிகிச்சைக்காக ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்ட பின்னர் புதிர் பங்களாவாகிப் போன அப்போலோ மருத்துவமனை இப்போது எப்படி இருக்கிறது? நாட்டின் பிரதான குடிமக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்ட இரண்டாம் தளத்தில் இப்போது என்னதான் நடக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள அங்கு 'ஸ்பாட் விசிட்' அடித்தோம்...

சென்னை சத்யம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறார் ஒரு செய்தியாளர். அப்போது 'சர்... சர்ரென...' அண்ணாசாலையில் வண்டிகள் படுவேகமாகப் பறக்கின்றன. சொல்லிவைத்தாற்போல, எல்லா வண்டிகளுமே கிரீம்ஸ் சாலையில் 'பட் பட்டென' அதேவேகத்தில் திரும்புகின்றன. செய்தியாளருக்கு கை, கால்கள் பரபரக்க....விஷயம் ஊடகங்களுக்குப் பரவுகிறது. அதுதான், இந்த ஓராண்டு மர்மக்கதையின் தொடக்கப்புள்ளி. அன்று ஐ.சி.யு-வில் இருந்த 'பேஷன்ட் அப்பல்லோ' இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா

காற்றில் பறந்துவரும் மருந்துகளின் வாசம், காதுச்சவ்வை கிழிக்கும் வகையில் ஸ்ட்ரெச்சரின் 'க்ரீச்' சத்தம், பரபரக்கும் வண்டிகள்... இப்படியாக வரவேற்கிறது அப்போலோவின் நுழைவாயில். உள்ளே நுழைந்ததும் நேரே முதல் தளத்துக்குச் சென்றோம். அங்கு எக்கச்சக்க கூட்டம். ஒரு காலத்தில் இந்தியாவின் சீனியர் தலைவர்கள் எல்லோரும் இந்தப் படிகளுக்கு அருகே நின்றுவிட்டுத்தான் வெளியே வந்து, "அவங்களைப் பார்த்தோம், ரொம்ப நல்லா இருக்காங்க" என நம்மை நம்ப வைத்தார்கள். இரண்டாவது மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள் அடைக்கப்பட்டிருக்க, ஸ்ட்ரெச்சர் செல்லும் பாதை வழியே மேலே ஏறினோம்.

ஏறியவுடனேயே தென்படுகிறது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த சி.சி.யூ (க்ரிடிக்கல் கேர் யூனிட்). இறுக்கப் பூட்டப்பட்டிருந்த கதவுகளுக்கு வெளியே செக்யூரிட்டிகள் கண்கொத்திப் பாம்பாய் எல்லோரையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஜெ. இருந்த 2008-வது அறையில் இப்போது யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உள்ளே செல்ல நினைத்தோம். சாதாரண மருத்துவமனைகளிலேயே சி.சி.யூவில் அவ்வளவு எளிதாக அனுமதிக்க மாட்டார்கள். அதிலும் அப்போலோவில், சர்ச்சைக்குரிய நிகழ்வு நடந்த இடத்தில்...?! எப்படி அனுமதிப்பார்கள்? வெளியே இருப்பவர்களிடமாவது பேசலாம் என பேச்சு கொடுத்தோம். 

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாம் தளம்

"ஜெயலலிதாவுக்கு இந்த வார்டுலதான் சிகிச்சை கொடுத்தாங்களாம். அதுக்கப்பறம், அவரோட மரணத்தில மர்மம் இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா, இன்னைக்கு வரைக்கும் அவருக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல. அவங்க இங்க அட்மிட் ஆகி இருக்கிறப்போ யாருமே உள்ளே வரமுடியாதாம். ஆனா, இப்போ எல்லோருமே சகஜமா இங்க வந்துட்டு போய்ட்டு இருக்கறாங்க. ஆனா, இந்த வார்டைக் கடந்து போகும்போது ஜெயலலிதா, அப்போலோ பரப்பரப்பு, தொலைக்காட்சி பிரேக்கிங் செய்தி எல்லாமே நியாபகத்துக்கு வந்துட்டு போகுது" என்றார்கள்.

அப்போலோவில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது "ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சில வாரங்கள் மட்டும், அந்த வார்டு பகுதியில் எந்த நோயாளிகளையும் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது எல்லா மருத்துவர்களாலும் அந்த அறைக்கு மட்டுமல்ல; அந்த தளத்துக்கேச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகுகூட, குறிப்பிட்ட சில மருத்துவர்கள்தான் அங்கு செல்ல முடியும். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரின் பெட், அவருக்கு மருத்துவம் பார்க்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் இங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக இங்கு பணிபுரியும் சிலர் சொன்னார்கள். ஆனால், இன்றுவரை நான் அந்தப் பகுதிக்குச் சென்றதில்லை. நான் பணியில் சேர்ந்தே சில வாரங்கள்தான் ஆகின்றன" என்றார்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அந்த வார்டுக்கு முன்பு ஒரு போலீஸ்காரர் காவலுக்காக நின்று கொண்டிருந்தார். 'இங்கு எதற்காகப் பாதுகாப்பு?' என்று கேட்டோம்... "ஒரு குற்றவாளியை இந்த வார்டில், அவசர சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறோம். அதற்காகவே நான் காவல்பணியில் இருக்கிறேன்" என்றார் அந்தக் காவலர்.

காவிரி புஷ்கரத்தில் பழனிசாமி

உடல்நலக் குறைபாட்டால் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதித்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்துவிட்டது. இப்போது அப்போலோ, எவ்விதச் சலனமும் இல்லாமல் வழக்கமான நோயாளிகளின் வரத்துகளுடன் இயல்பாக இயங்குகிறது. ஆனால், சென்ற ஆண்டு இதே தினத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் என பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் பதவியைக் காத்துக்கொள்ள அப்போலோ வாசலில் திரண்டிருந்தனர். ஜெயலலிதா மீது உண்மையான பாசமும், பற்றும் கொண்டிருந்த ஏராளமான தொண்டர்களும்கூட அப்போலோ வாசலில் ஒருவித பதைபதைப்புடன் காத்துக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தங்களின் தலைவி பூரண உடல்நலத்துடன் திரும்புவார் என்ற நம்பிக்கையுடனும், அதற்காக கடவுளை வேண்டியும் அப்போலோ மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். இப்போது, முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள், தங்களின் பதவி நிலைக்கவேண்டி 'காவிரி புஷ்கரத்தில்' நீராடி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். 

 

தமிழகத்தில் இந்த ஓராண்டில்தான் எத்தனை எத்தனை அரசியல் பிரேக்கிங் நியூஸ்?

http://www.vikatan.com/news/tamilnadu/103008-one-year-since-jayalalithaa-entry-into-apollo.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மரணத்தில் தொடரும் புதிர்கள்! சாமானியர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமா தமிழக அரசு?

 
 

ஜெயலலிதா

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்து விட்டது. அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பாமல் கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவர்  மறைந்துவிட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அண்மையில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக நாங்கள் பொய் சொன்னோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது வரை ஒரு மாநில முதல்வரின் மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக சாதாரண மக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நம்புகிறார்கள்.  ஆனாலும்  அவரது மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்களும் அதுகுறித்த ரகசியமும் ஒரு சில தனிநபர்களால் பாதுகாக்கப்படுகின்றன. ஜெயலலிதாவின் மரணத்துக்கு விடை சொல்ல வேண்டிய தமிழக அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது.

இப்படியெல்லாம் சொன்னார்கள்

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி, இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா! அன்றைய தினத்திலிருந்தே ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன. ஆனால், அ.தி.மு.க அமைச்சர்களோ, 'அம்மா இட்லி சாப்பிடுகிறார்; பேப்பர் படிக்கிறார்; அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார்' என்றெல்லாம் செய்தியாளர்களுக்கு அப்போலோ வாசலில் பேட்டி மட்டும் கொடுத்துச் சென்றனர். கூடவே, 'உயர் சிகிச்சையில் இருப்பவர் ஒரு பெண்.  அதனால் புகைப்படமெல்லாம் வெளியிடமுடியாது. மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி நோயாளியின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வெளியிடமுடியாது' என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன. 

இந்நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி 'சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா இறந்துவிட்டார்' என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஜெ. மரணம் குறித்த சந்தேகங்கள் அரசியல் அரங்கில் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் எழுப்பப்பட்டன. ஆனாலும், புதிய முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதில் மட்டுமே ஆளும் தரப்பு முழு கவனத்தையும் செலுத்தியது.

விசாரணை எப்போது?

இதில், திடீர் திருப்பமாக, கடந்த பிப்ரவரி மாதம் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமே போர்க்கொடி தூக்கவும் மறுபடியும் ஜெ. மர்ம மரணம் குறித்த சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தன. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்கள் சிறைத்தண்டனை பெற்றதையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், ஓ.பி.எஸ் தரப்பு, 'ஜெ. மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். காலமாற்றத்தில், எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கைகோத்து ஒரே அணியாக மாறினர். அவர்களுக்கு எதிர் அணியாக மாறிப்போனார் டி.டி.வி தினகரன். எனவே, 'ஜெ. மரணம் குறித்து விசாரணைக் கமிஷன்' அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் எடப்பாடி. அறிவிப்பு வெளியானதோடு சரி... அடுத்தக்கட்ட நகர்வு சிறிதும் இல்லாமல் கிணற்றில் விழுந்த கல்லாகிப்போனது விசாரணைக் கமிஷன் விவகாரம். 

இப்போது, ஜெ. மரணம் அடைந்து வருடம் ஒன்றைக் கடந்துவிட்ட சூழலில், மறுபடியும் ஜெ. மரணம் குறித்த சர்ச்சைக்கு திரி கிள்ளியிருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர், ''ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்றெல்லாம் நாங்கள் கூறியது பொய். எங்களை மன்னித்துவிடுங்கள். ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்க்க யாரையுமே அனுமதிக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அந்த மர்மத்தை விசாரணை கமிஷன்தான் வெளிப்படுத்த வேண்டும்.'' என்று மறுபடியும் மர்ம மரணம் குறித்து கேள்வி எழுப்பி அரசியல் அரங்கில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறார்.

சசிகலா தினகரன்

இதற்கு எதிர்வினையாக, டி.டி.வி தினகரனும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராகப் பேட்டி தட்டியுள்ளார். இது இவர்களுக்கு அரசியல். உண்மையில் ஜெயலலிதா மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மம்தான் என்ன? என்பது குறித்த விசாரணையில் சாமான்யனுக்கு எழும் விடை தெரியாக் கேள்விகள் இங்கே...

(1) ஜெ. மரணத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக இப்போது குற்றம் சாட்டும் அமைச்சர்கள் இவ்வளவு நாட்களாக, இதுகுறித்து கேள்வி எழுப்பாமல் இருந்தது ஏன்?

(2)சசிகலா குடும்பத்தினர் பற்றிய 90 விழுக்காடு உண்மைகள் தன்னிடம் இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். அந்த 90 விழுக்காட்டில், ஜெ. மரணம் குறித்த ரகசியங்களும் அடங்கியிருக்கிறதா?

(3)அப்போலோ சிகிச்சை விவகாரங்கள் அனைத்தும் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக இப்போது குற்றம் சுமத்தப்படுகிறது. அப்படியென்றால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களும் சசிகலாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்திருக்கமுடியுமா?

(4)அப்போலோவில் சி.சி.டி.வி பதிவுகளே கிடையாது என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், தற்போது ஜெ. சிகிச்சை பெறும் சி.சி.டி.வி பதிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதில் எது உண்மை?

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்.

(5)இப்படியொரு பதிவு இருக்குமேயானால், இத்தனை நாட்களாக 'ஆதாரம் எதுவும் கிடையாது' என்று பொய் சொல்லி மறைத்து வைத்திருந்தது ஏன்?

(6)ஜெ.மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்த ஆட்சியாளர்கள் இன்னமும் கமிஷன் அமைக்காமல் மவுனம் காப்பது ஏன்?

(7)எய்ம்ஸ் மருத்துவர்கள் வாயிலாக உண்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு மத்திய அரசுக்கு இருக்கும்போது, அவர்களும் இவ்விஷயத்தில் உண்மை நிலையைத் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன்? 

- இப்படி பலதரப்பட்ட சந்தேகக் கேள்விகள் எழுகின்றன. விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு சுதந்திரமான விசாரணை நடைபெற்று, அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போதே இந்தக் கேள்விகளுக்கான விடைகளும் தெரியவரும். அதுவரை இதெல்லாம் அரசியலாகவே கடந்துபோகும்!

http://www.vikatan.com/news/tamilnadu/103154-questions-over-mystery-behind-jayalalithaas-death.html

  • தொடங்கியவர்
'எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்'
ஜெ., மரணத்தில் அமைச்சர் 'அடம்'
 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

 
 

திண்டுக்கல்:''ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் உண்மை தெரிந்தாக வேண்டும்,'' என அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

 

'எனக்கு, உண்மை,தெரிஞ்சாகணும்', ஜெ., மரணத்தில்,அமைச்சர் 'அடம்'

திண்டுக்கல்லில் நேற்று அவர் கூறியதாவது: ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, சசிகலா குடும்பத்தினர் தான், உள்ளே சென்று அவரை பார்த்து வந்தனர். 'இட்லி சாப்பிட்டாங்க, காபி சாப்பிட்டாங்க, சுவீட் கொடுத்தாங்க' என, தெரிவித்தனர். அதை நாங்கள் மக்களிடம் தெரிவித்தோம்.
அப்பல்லோ மருத்துவமனையில் தான் கண்காணிப்பு கேமரா இருந்தது.

ஜெ., சிகிச்சையில் இருந்த வீடியோ குறித்து, மருத்துவமனை நிர்வாகம் தான் விளக்க
வேண்டும். ஜெ.,யை யாரும் பார்க்க விடாமல்

செய்த மர்மம் என்ன என்பது தான் எங்களின் கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல் எதை, எதையோ பேசுகின்றனர். எனக்கும் ஓர் உண்மை தெரிந்தாக வேண்டும்.

ஜெ., மரணம் குறித்து, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், வெளியில் இதை பற்றி பேசக்கூடாது. அமைச்சரான நான், சி.பி.ஐ., விசாரணை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டாலின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
 

ஜெ., சிகிச்சை ஆதாரம்: தினகரனுக்கு வைத்தி சவால்


''ஜெ., சிகிச்சை வீடியோ ஆதாரத்தை தினகரன் வெளியிட வேண்டும்,'' என, அ.தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., வைத்திலிங்கம் தெரிவித்தார்.தஞ்சையில் நேற்று அவர் அளித்த பேட்டி:பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை,தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். இன்னும், 15 நாளில் இரட்டை இலை சின்னத்தை மீட்டு, உண்மையான, அ.தி.மு.க., நாங்கள் தான் என, நிரூபிப்போம்.

உள்ளாட்சி, லோக்சபா என, எந்த தேர்தலாக

 

இருந்தாலும், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா பெற்றதை விட, அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த வீடியோ ஆதாரம் இருந்தால், தினகரன் வெளியிடலாம். அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரத்தில் நேற்று, தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டியில்,
''அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் குறித்து, நீதிமன்றத்தில், அக்., 6ல், விசாரணை நடக்கிறது. இரட்டை இலை சின்னத்தை மீட்டு, நாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க., என, மக்கள் மத்தியில் நிரூபிப்போம்,'' என்றார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1862188

  • தொடங்கியவர்

அவிழுமா அப்பலோ மர்மம்?

 

மக்­க­ளுக்­காக நான் மக்­களால் நான் என்று கம்­பீ­ர­மாக ஒலித்த அந்த குரல் கடந்த வருடம் இதே மாதத்தில் தான் முடங்­கிப்­போ­னது. அது முடங்­கி­போ­னதா அல்­லது முடக்­கப்­பட்­டதா என்­பதன் மர்மம் இன்னும் வெளிப்­ப­ட­வில்லை.

அர­சி­யலில் எதி­ரிகள் எத்­தனை பல­மா­ன­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்­களை எதிர்த்து ஒற்றை மனு­ஷி­யாக களம் இறங்கி வெற்றி பெற்­றவர் ஜெய­ல­லிதா. மோடி அலையில் இந்­தி­யாவே மூழ்­கிய போது மோடியா இந்த லேடியா என்று எதிர்த்து நின்­றவர். கடந்த வருடம் இதே போன்ற செப்­டெம்பர் மாதத்தில் 21 ஆம் திகதி பச்சை நிற சேலையில் பச்சைக்கொடி அசைத்து மெட்ரோ ரயில் திட்டத்தை காணொளிக் காட்சி மூல­மாக திறந்து வைத்தார். தமி­ழக மக்கள் மட்டும் அல்ல, உல­கமும் இறு­தி­யாக அவரை கண்­டது அன்­றுதான்.

அதே மாதத்­தில்தான் தமி­ழ­கத்தை உலுக்­கிய சுவாதி கொலையில் கைது செய்­யப்­பட்டு பிணையில் வெளியே வர இருந்த ராம்­குமார் என்ற கிரா­மத்து இளைஞர் தற்­கொலை என்னும் பெயரில் பொலிஸ் நிலை­யத்­தி­லேயே படு­கொலை செய்­யப்­பட்டார். இது தொடர்பில் சுவா­தியை கொன்­றது ராம் குமார் அல்ல. அது கௌரவ கொலை. அவ­ரது உற­வி­னர்­களே அதை செய்­தனர் என்றும் நீதி விசா­ரணை செய்து உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை கண்­டுபி­டிக்க வேண்டும் எனவும் தமி­ழ­கத்தில் குரல்கள் ஒலித்­தன. இந்­நி­லையில் தான் அப்­பாவி என்றும் பிணையில் வெளியே வந்து உண்­மையை கூறுவேன் என்றும் ராம் குமார் தெரி­வித்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார். ஆனால் யாரும் எதிர்­பா­ராத வித­மாக சிறை­யி­லேயே அவர் மர­ணித்தார். திட்­ட­மிட்டு பொலி­ஸாரே அவரை கொலை செய்­து­விட்­ட­தாக எதிர்க்­கட்­சிகள் குற்றம் சாட்­டின.

இச்­சம்­பவம் நடை­பெற்று ஒரு­வாரம் ஆவ­தற்குள் ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டார். ஆனால் சட­ல­மாகவே அவர் வெளியே கொண்­டு­வ­ரப்­பட்டார். முதல்நாள் ரயில் திட்­டத்தை தொடங்கி வைத்த அவ­ரது உடல்­நிலை எப்­படி உயி­ரி­ழக்­கு­ம­ளவு சென்­றது என்­பது இன்னும் மர்­மமே. சுவாதி, ராம்­குமார் போன்ற சாதாரண பிர­ஜை­களின் மரணம் மட்டும் அல்ல, மக்­களின் தலை­வ­ரான முதல்­வரின் மர­ணத்தில் உள்ள மர்­மமும் இன்னும் விலக்­கப்­ப­டா­தது வேத­னையே.

இந்­நி­லையில் ஜெய­ல­லிதா மரணம் தொடர்பில் சி.பி.ஐ. நீதி விசா­ரணை நடத்த வேண்­டு­மென தொடர்ந்து எதிர்க்­கட்­சிகள் வலி­யு­றுத்­தி­வந்­தன. பன்னீர்செல்­வம்­ கூட இதற்­காக தர்மயுத்தம் நடத்­து­வ­தாக கூறினார். ஆனால் எடப்­பா­டி­யுடன் இணைந்த பின்னர் நீதி­வி­சா­ரணை பற்றி எதுவும் பேச­வில்லை. இந்­நி­லையில் தினமும் கட்­சிக்­குள்­ளேயே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்­களும் எம்.பி.க்களும் அணி­தா­விக்­கொண்டு இருப்­பது தமி­ழக மக்­களை முகம் சுளிக்க வைத்­துள்­ள­தோடு அவர்­க­ளது நட­வ­டிக்­கைகள் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

கமல், ரஜினி போன்றோர் தாம் அர­சி­ய­லுக்குள் களம் இறங்­கப்­போ­வ­தாக தொடர்ந்து தெரி­வித்து வரு­கின்­றனர். ஜெய­ல­லி­தாவின் மர­ணத்­திற்கு பின்னர் தமி­ழ­க அ­ர­சி­யலில் பல்­வேறு மாற்­றங்கள் நடை­பெற்று விட்­டன. அவர் இரா­ணுவம் போல

கட்டிக்காத்த அ.தி.மு.க. துண்­டு­துண்­டாக பிரிந்­துள்­ள­தோடு அமைச்­சர்கள் ஆளுக்­கொரு கருத்தை கூறி வரு­கின்­றனர். தங்கள் இருப்பை தக்­க­வைத்­துக்­கொள்ள எதையும் செய்­வார்கள் என்­பது அண்­மைய நிகழ்­வுகள் மூல­மாக தெட்டத் தெளிவாக விளங்­கு­கின்­றது.

தங்கள் தலைவியான ஜெய­ல­லி­தா­வையும் அவர்கள் விட்­டு­வைக்­க­வில்லை. ஜெய­ல­லிதா அப்­ப­லோவில் சிகிச்சை பெற்­ற­போது பார்த்தேன் என்று சில அமைச்­சர்­களும், பார்க்­க­வில்லை என சில அமைச்­சர்­களும் முன்னுக்குபின் முர­ணாக பேசிவ­ரு­கின்­றனர். அமைச்சர் திண்­டுக்கல் சீனி­வாசன் கடந்த 22ஆம் திகதி மது­ரையில் பொதுக்­கூட்டம் ஒன்றில் பேசி­ய­போது, ஜெய­ல­லி­தாவை தாங்கள் யாரும் பார்க்­க­வில்லை என்று கூறி­யது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

இதை­ய­டுத்து ஜெய­ல­லிதா மரணம் குறித்து விசா­ரணை ஆணை­யகம் அமைக்க அனைத்து அர­சியல் தலை­வர்­களும் மீண்டும் வலி­யு­றுத்­தினர். இந்­நி­லையில் கீழ்ப்­பாக்கம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்­து­கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தானும் மற்ற அமைச்­சர்­களும் மருத்­து­வ­ம­னையில் ஜெய­ல­லி­தாவை சந்­தித்­த­தாக கூறி­யது மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

மறு­புறம் ஜெய­ல­லிதா மூன்று நாட்கள் மட்­டுமே சுய­நி­னை­வுடன் இருந்தார் என ஜெய­ல­லி­தாவின் அண்ணன் மகன் தீபக் பேட்­டி­ய­ளித்த நிலையில் மூன்று தொகுதிகளின் இடைத்­தேர்­தலில் ஜெய­ல­லிதா கைரேகை எப்­படி பெறப்­பட்­டது என்ற கேள்­வியை உயர் நீதி­மன்றம் எழுப்­பி­யுள்­ளது. மேலும், ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னையில் இருந்­த­போது காவிரி விவ­காரம் தொடர்­பான ஆலோ­சனை கூட்­டத்தில் பங்­கெ­டுத்தார் என்றும் அரவ­கு­றிச்சி உள்­ளிட்ட இடை­தேர்­த­லுக்கு அவர் கைநாட்டு இட்டார் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னையில் சுய­நி­னைவு இல்­லாமல் இருந்­த­தாக கூறப்­படும் நிலையில் இது எப்­படி சாத்­தி­ய­மாகும் என்ற கேள்வி பொது­மக்­க­ளி­டமும் எழுந்­தது. இந்­நி­லையில் திரு­ப்ப­ரங்­குன்றம் எம்.எல்.ஏ. போஸ் இடைத்­தேர்­தலில் தான் வெற்­றி­பெற்­ற­தற்கு ஜெய­ல­லிதா வாழ்த்து தெரி­வித்தார். மருத்­து­வ­ம­னையில் அவரை சந்­தித்தேன் என்று கூறி­யுள்ளார். அத்­தோடு ஆளுநர் வந்­த­போது ஜெய­ல­லிதா கட்டை விரலை அசைத்து காட்­டி­ய­தாக அப்­பலோ நிர்­வாகம் அதி­காரபூர்­வ­மாக அறி­வித்­தது. ஆனால் ஜெய­ல­லி­தாவை கூட இருந்து பார்த்­த­தாக கூறும் அவ­ரது அண்ணன் மகன் தீபக் ஆளுநர் வந்த போது ஜெ. சுய­நி­னைவு இன்றி இருந்­த­தாக கூறு­கின்றார். அப்­ப­டி­யென்றால் ஆளுநர் பொய்­யு­ரைக்­கின்­றாரா,அமைச்­சர்கள் பொய்­யு­ரைக்­கின்­றனரா, தீபக் பேசு­வது உண்­மையா, பொய்யா என்ற குழப்பம் நில­வு­கி­றது

இந்­நி­லையில் தமி­ழக அரசு ஜெய­ல­லிதா மரணம் தொடர்பில் நீதி விசா­ரணை நடத்­து­வ­தற்­கான நீதி விசா­ரணை ஆணை­ய­கத்­தை தற்­போது அமைத்­துள்­ள­தோடு. எதிர்­வரும் 3 மாதங்­களில் குறித்த விசா­ர­ணையை முடித்து அறிக்­கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்­த­ர­விட்­டுள்­ளது. இதனால் ஜெ. மரணம் குறித்த சர்ச்சை மீண்டும் சூடுபி­டித்­துள்­ளது. இந் நிலையில் தமி­ழக தொலைக்­காட்சி சேவை ஒன்று இது தொடர்பில் வெளி­யிட்­டுள்ள புதிய அறிக்கை மேலும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த செப்­டெம்பர் மாதம் 22ஆம் திகதி ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட போது அவ­ரு­டைய உடல்­நிலை எந்த நிலையில் இருந்­தது என்­பது தொடர்­பான அறிக்­கையை இந்த தொலைக்­காட்சி சேவை வெளி­யிட்­டுள்­ளது. இரவு 10 மணிக்கு ஜெய­ல­லி­தா­விற்கு உடல்­நிலை சரி­யில்லை என்று அப்­பலோ மருத்­து­வ­ம­னைக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்டு, இரவு 10.25 மணிக்கு அம்­பியூலன்ஸ் வந்­த­தாக தெரி­கி­றது.

அதில் இருந்த முத­லு­தவி சிகிச்­சை­ய­ளிப்­ப­வர்கள் வந்தபோது போயஸ்­கார்­டனில் ஜெய­ல­லிதா இல்­லத்தின் முதல் தளத்தில் தனி அறையில் இருந்­துள்ளார். மயங்­கிய நிலையில் இருந்த ஜெய­ல­லிதா ம், ம்கும் என்று மட்­டுமே பதில் அளித்­துள்ளார். இத­னை­ய­டுத்தே அவர் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து செல்­லப்­பட்­டுள்ளார். அவ­ருக்கு உடலில் சர்க்­க­ரையின் அளவு 500க்கு மேல் இருந்­ததும், செப்­டெம்பர் மாதம் 22ஆம் திக­திக்கு முன்­னரே 3 நாட்­க­ளாக தொடர்ந்து விட்டு விட்டு காய்ச்­சலும், நுரை­யீரல் தொற்றும் இருந்­துள்­ளதும் அறிக்­கையில் தெரி­ய­வந்­துள்­ளது. சரா­ச­ரி­யாக 120/80 ஆக இருக்க வேண்­டிய இரத்த அழுத்தம் 140/70 ஆக அதி­க­ரித்­தி­ருந்­தது என்றும் 120 எம்.ஜி. ஆக இருக்க வேண்­டிய சர்க்­கரை அளவும் 508 எம்.ஜி. என்ற அபாய நிலையில் இருந்­துள்­ளது என்றும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜெய­ல­லி­தாவின் இத­யத்­து­டிப்பு சரா­ச­ரி­யான 72 க்கு பதில் 88 ஆக அதி­க­ரித்­துள்­ளது என்று மருத்­துவ அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது. ஒட்­சிசன் அளவு 100% க்கு பதில் 45% மட்­டுமே இருந்­துள்ளது. மேலும் நிமோ­னியா காய்ச்சல், இரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்­கரை அதி­க­ரிப்பு என்பனவும் ஜெய­ல­லி­தா­வுக்கு இருந்­துள்­ளன. மருத்­து­ம­னையில் ஜெய­ல­லிதா அனு­ம­திக்­கப்­பட்ட போது அவ­ரது உடலில் காயமோ, புண்­களோ இல்லை என்று அப்­பலோ மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட போது பதிவு செய்­யப்­பட்ட அதி­கா­ரபூர்வ அறிக்­கையில் தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அறிக்கை மீண்டும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஒரு முத­ல்­வ­ருடன் எப்­போதும் அம்­பியூலன்ஸ் வண்­டியும் இருக்கும். முதல்வர் வெளியே செல்லும் போது அவ­ருடன் எப்­போ­துமே ஒரு அம்­பியூலன்ஸ் வாகனம் மற்றும் மருத்­து­வர்கள் குழு உடன் செல்வர். ஆனால் முதல்வர் இல்லம் அருகே அன்­றைய தினம் அம்­பியூலன்ஸ் மற்றும் மருத்­துவர் குழு இல்­லா­தது ஏன் என்ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. அவ­ருக்கு உட­னடி உத­விக்கு ஏன் வீட்டு வாச­லி­லேயே அம்­பியூலன்ஸ் நிறுத்தி வைக்­கப்­ப­ட­வில்லை என்று சந்­தேகம் எழுந்­துள்­ளது. மருத்­துவர் ஏன் உடன் இல்லை?

மேலும் ஜெய­ல­லி­தா­விற்கு செப்­டெம்பர் மாதம் 22ஆம் திக­திக்கு முன்­னரே 3 நாட்­க­ளாக விட்டு விட்டு காய்ச்சல் இருந்­த­தா­கவும், நோய் தொற்று இருந்­த­தா­கவும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இங்கு தான் மற்­றொரு சந்­தேகம் எழு­கி­றது. 3 நாட்­க­ளாக விட்டு விட்டு காய்ச்­சலும் நோய் தொற்று ஏற்­பட்­டி­ருக்கும் ஒரு­வ­ருக்கு, அதிலும் முதல்­வ­ருக்கு மருத்­துவர் ஒரு­வரை உடன் அமர்த்தி பரி­சோ­தனை செய்­யா­தது ஏன்? ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட போது அவ­ருக்கு சுவாசப் பிரச்­சினை இருந்­துள்­ளது. அதா­வது அவ­ரு­டைய மூச்­சு­விடும் திறன் 48 சத­வீதம் என்ற அளவில் தான் இருந்­துள்­ளது.

சுவாசக்கோளாறு ஏன் சரி­செய்­யப்­ப­ட­வில்லை? 3 நாட்­க­ளாக விட்டு விட்டு காய்ச்சல், நோய் தொற்று இருப்­ப­வ­ருக்கு சுவாசக் கோளாறு ஏற்­பட வாய்ப்­பி­ருக்கும் என்று ஏற்­க­னவே சிகிச்சை அளித்த மருத்­து­வர்­க­ளுக்கு தெரி­யாதா? அப்­படி இருக்கும் பட்­சத்தில் முதல்வர் பொறுப்பில் இருந்த ஒரு­வ­ருக்கு வீட்­டி­லேயே வைத்து சுவாசப் பிரச்சி­னையை சரி­செய்ய எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கா­தது ஏன் போன்ற பல்­வேறு கேள்­விகள் எழு­கின்­றன. மேலும் சர்க்­கரை அளவை கட்­டுக்குள் வைக்க முடியும். சர்க்­கரை அளவு என்­பது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க முடிந்த ஒன்றே. ஜெய­ல­லி­தாவின் உடலில் சர்க்­க­ரையின் அளவு 508 என்ற அள­விற்கு செல்லும் வரை அதனை பரிசோதிக்­கா­தது ஏன், சர்க்­க­ரையின் அளவை தெரிந்து கொள்ள பல்­வேறு உப­க­ர­ணங்கள் இருக்கும் போது அதை கவ­னிக்­காமல் ஏன் விட்டார் சசி­கலா என்ற கேள்­வியும் எழு­கி­றது. இந்தக் கேள்­வி­க­ளுக்­கான விடை­களை விசா­ரணை ஆணையகம் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்று மக்கள் விரும்­பு­கின்­றனர்.

இதே­வேளை ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட 75 நாட்­களில் என்ன நடந்­தது என்று யாருக்­குமே தெரி­யாது. அவரைப் பார்த்­த­வர்கள் யாரென்றும் தெரி­யாது. எனவே அவ­ருக்கு வழங்­கப்­பட்ட சிகிச்சை தொடர்பில் அப்­பலோ சி.சி.டி.வி. கெமரா பதிவை வெளி­யிட. வேண்­டு­மென்ற கோரிக்­கையும் வலுப்பெற்றுள்ளது.

இது தொடர்பில் அப்பலோ குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளதாவது, ஜெய­ல­லி­தா­வுக்கு அனைத்து வித­மான சிகிச்­சை­களும் சிறப்­பாக அளிக்­கப்­பட்­டன, 100 சத­வி­கிதம் சிறப்­பான சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. ஜெய­ல­லிதா சிகிச்சை தொடர்­பான ஆவ­ணங்கள் தமி­ழக அர­சிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. ஜெய­ல­லி­தா­வுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்ட அறையில் சி.சி.­டி.வி. கேம­ராக்கள் இல்லை என விளக்கம் அளித்த அவர் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக ஒவ்­வொரு தளத்­திலும் சி.சி­.டி.வி. கேமரா வைக்­கப்­பட்­டி­ருந்­தது எனத் தெரி­வித்தார்.

ஜெய­ல­லி­தாவை பார்த்தோம், பார்க்­க­வில்லை என அமைச்­சர்கள் முன்­னுக்குப்பின் முர­ணாக பேசு­வது குறித்து செய்­தி­யா­ளர்கள் கேட்­ட­தற்கு, அமைச்­சர்கள் முன்­னுக்குப்பின் முர­ணாக பேசு­வது குறித்து விளக்கம் அளிக்க முடி­யாது என அவர் பதிலளிக்க மறுத்­து­விட்டார். இவ­ரது கருத்தும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. ஏ­னெனில் அதிநவீன வச­தி­க­ளு­டைய அப்­பலோவில் ஒரு முதல்­வ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்ட அறையில் சி.சி.டி.வி. கெமரா இல்லை என்­பதை ஏற்க முடி­யாது.

அதே­நேரம், அக்­டோபர் 1ஆம் திக­திக்குப் பிறகு ஜெய­ல­லி­தாவைப் பார்க்க சசி­க­லா­வையே அனு­ம­திக்­க­வில்லை. முறை­யான விசா­ரணை நடந்தால் எங்­க­ளிடம் உள்ள காணொ­ளி­களை சமர்ப்­பிப்போம்' என தினகரன் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து அர­சியல் வட்­டா­ரத்தில் பலத்த சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. திவா­கரன் மகன் ஜெய் ஆனந்தும் தங்­க­ளிடம் காணொளி இருப்­ப­தா­கவும் ஓய்வு பெற்ற நீதி­பதி தலை­மையில் விசா­ரணை செய்­வதை விட சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்டால் நல்­லது என தெரி­வித்­துள்ளார். இவர்கள் சொல்­கின்ற காணொ­ளியை எடுத்­தது சசி­க­லா­தானாம்.

லண்டன் மருத்­துவர் ரிச்­சர்ட்டின் கண்­கா­ணிப்­புக்குள் ஜெய­ல­லிதா வந்த பிறகு, உடல்­நி­லையில் ஓர­ளவு தேறி வந்தார். இந்த நாட்­க­ளில்தான் தன்­னிடம் இருந்த கைபேசியில் காணொ­ளி­களை சசி­கலா எடுத்­துள்ளார். தாதி ஒரு­வ­ரிடம் கைபேசியைக் கொடுத்தும் காணொ­ளி­களை எடுத்­துள்ளார். அவர் ஜெய­ல­லி­தா­வுடன் இயல்­பாகப் பேசு­வது போன்ற காட்­சி­கள்தான் அவை.

சைகையால் அவரை அழைத்து ஏதோ சொல்ல முயற்­சிப்­பது போன்ற காட்­சி­களும் அதில் அடக்கம். சிறிய அளவில் 8 காணொ­ளிகள் வரை எடுத்­தி­ருக்­கிறார். 'அம்­மாவைக் கொடு­மைப்­ப­டுத்­த­வில்லை. அவர் என்­னுடன் இயல்­பா­கத்தான் இருந்தார்' எனத் தொண்­டர்­க­ளுக்கு நம்­பிக்கை அளிப்­ப­தற்கு இது பயன்­படும் என சசி­கலா நினைத்­தி­ருக்­கலாம். ஆனால் வெளித்­தோற்­றத்தில் மக்கள் பார்த்த ஜெய­ல­லி­தா­வுக்கும் சிகிச்கையின் போதிருந்து ஜெயலலிதாவுக்கும் உள்ள வித்­தி­யா­சம்தான் காணொ­ளி­களை வெளி­யி­டு­வதில் தயக்கம் காட்டக் காரணம். 'இப்­படி இருக்கும் அள­வுக்கா அவரைக் கொடு­மைப்­ப­டுத்­தி­னார்கள்?' என்ற தோற்றம் வந்­து­விடக் கூடாது என்­ப­தற்­கா­கத்தான் அவர்கள் வெளி­யிட மறுக்­கி­றார்கள் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறித்த காணொ­ளிகள் அனைத்தும் மன்னார் குடி உற­வினர் ஒரு­வ­ரிடம் பத்­தி­ர­மாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவை வெளியி­டப்­பட்டால் ஜெய­ல­லிதா எந்த நிலையில் சிகிச்­சையின் போது இருந்தார் என்­பது தெரி­ய­வரும். அவை இப்­போது வெளி­யாக வாய்ப்பு இல்லை

இதே­வேளை தமி­ழ­கத்தின் தற்­போ­தைய அமைச்­சர்கள் அனை­வ­ருமே தங்­க­ளது சுய­ந­ல­னுக்­காக எத­னையும் செய்­வார்கள், எதுவும் பேசு­வார்கள் என்­பதை அண்­மைய நிகழ்­வுகள் அனைத்தும் வெளிச்சம் போட்­டு­க்காட்­டு­கின்­றன. சின்­னம்மா.. சின்­னம்மா என்ற சசி­க­லாவை முதல்­வ­ராக்க முயற்­சித்­த­வர்கள் தான் தற்­போது அவரை தூற்­று­கின்­றனர். தற்­போது தங்­க­ளது இருப்பை மக்­க­ளிடம் தக்­க­வைக்க அனைத்து பழிக­ளையும் சசி­கலா குடும்­பத்தின் மீது போடு­கின்­றார்கள் என்­பது வெட்ட வெளிச்சம். ஆனால் ஜெ. மரணம் என்­பது எல்­லோரும் சொல்­வதை போல சசி­க­லா­வுடன் மட்டும் தொடர்புபட்ட ஒன்று அல்ல. அத­னையும் தாண்­டிய ஒரு பெரும் சதி­வலை என்றே எண்ணத் தோன்­று­கின்­றது.

சசி­க­லாவை கொலை­காரி எனக் காட்­டு­வ­தற்­காக திட்டம் போட்டு நடத்­தப்­பட்ட நாடகம் இது. இந்த நாட­கத்­துக்கு மத்­திய அமைச்சர் ஒரு­வரும் உடந்­தை­யாக இருந்தார். எய்ம்ஸ் மருத்­து­வர்கள் வந்­த­போது, அனைத்து மருத்­துவ சிகிச்­சை­களும் வெளிப்­ப­டை­யாகத் தெரிந்­து­விட்­டன. அதையும் மீறி குற்­ற­வாளி எனக் காட்­டு­வதன் பின்­ன­ணியில் மிகப் பெரிய சதி உள்­ளது. இதற்கு தமி­ழக அரசில் உள்­ள­வர்­களும் துணை போகி­றார்கள். சசி­கலா குடும்­பத்­திடம் உள்ள எட்டு காணொளி­களும் ஒருநாள் வெளியில் வரத்தான் போகி­ன்றன என்று மன்னார் குடி உறவு ஒன்று தமி­ழக ஊட­கத்­துக்கு கருத்து தெரி­வித்­துள்­ள­மையை கவ­னிக்க வேண்டும்.

இதே­வேளை நாம் ஒன்றை யோசிக்க வேண் டும் ஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட நேரத்தில், அவர் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் யாரும் எம்.எல்.ஏ.வாகவோ அமைச்­சர்­க­ளா­கவோ இல்லை. எந்த அதி­கா­ரமும் சசி­க­லா­விடம் இல்லை. மோடி நினைத்­தி­ருந்தால் அந்த நிமி­டமே சசி­கலா குடும்­பத்தை அப்­பு­றப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். அதனை அவர் செய்­ய­வில்லை. மோடி ஜெய­ல­லி­தா­வுடன் சுமுக உறவு வைத்­தி­ருந்தார். அவ­ரது இல்லம் தேடி வந்து சந்­தித்து சென்­றவர். ஆனால் ­ஜெ­ய­ல­லிதா மருத்­து­வ­ம­னையில் இருந்த போது ஒருநாள் கூட மோடி நேரில் வர­வில்லை. வெளிநா­டு­க­ளுக்கு சிகிச்­சைக்­காக கொண்டு செல்­வ­தற்­கான முயற்­சிகள் கூட எடுக்­க­வில்லை. ஆளு­நரை விட சசி­கலா பெரி­யவர் அல்ல. ஆளுநர் சசி­க­லா­வுக்கு பயந்து பொய்­யு­ரைக்க வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. அது மட்டும் அல்ல, இஸட் பாது­காப்பில் இருந்த ஜெய­ல­லி­தாவின் பாது­காப்பு எப்­படி நீக்­கப்­பட்­டது. எப்­போது நீக்­கப்­பட்­டது. யார் அதற்­கான அதி­கா­ரத்தை வழங்­கி­யது. மருத்­து­வ­ம­னைக்கு கொண்­டு­செல்­லப்­பட்ட போது ஜெயலலிதாவின் மெய்க்காவ­லர்கள், மத்­திய பாது­காப்பு படைகள் எங்கே என்ற கேள்விகள் எழு­கின்­றன.

அது­மட்டும் அல்ல. இப்­போது ஜெய­ல­லிதா கொல்­லப்­பட்டார் என்று கூறும் அமைச்­சர்கள் அப்­போது ஏன் வாய்­தி­றக்­க­வில்லை? தன் கண்­முன்னே தமது முதல்வர் கொல்­லப்­ப­டு­வதை வேடிக்கை பார்த்து மகி­ழ்ந்தனரா? இல்லை. ஜெயலலிதா இல்லாவிட்டால் யாருக்கும் கட்டுப்பட தேவை இல்லை. விரும்பியவாறு இருக்கலாம் என்று நினைத்தனரா? மேலும் ஜெயலலிதாவின் எக்மோ கருவி அகற்றப்பட்டமை பன்னீருக்கு தெரியும் என்று தகவல் ஆணையகம் நேற்றுமுன்தினம் தெரிவித்தது. ஆனால் ஜெ. சிகிச்சை தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என்று பன்னீர் கூறிவந்தார். அதுமட்டும் அல்ல ஜெயலலிதா முகத்தில் இருந்த ஓட்டைகள். அவரது கால்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பிலான மர்மங்களும் நீடிக்கின்றன.

எனவே ஜெ. மரணம் என்பது அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்ட நாடகம் என்றே தோன்றுகின்றது. ஜெ. மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருந்தாலும் முழுவதுமாக அவர் செய்திருக்க வாய்ப்பில்லை. ஜெயலலிதா என்பது சசிகலாவின் தோழி மட்டும் அல்ல.ஒரு மாநிலத்தின் முதல்வர். அவரை 75 நாட்களாக மறைத்து வைத்து சசிகலா மட்டும் கொலை செய்தார் என்று கூறமுடியாது. அவர் உடந்தையாக இருந்திருக்கலாம். அதற்கு மேல் பல சக்திகள் இதில் தொடர்புபட்டிருக்கிறன. ஜெயலலிதா தமிழகத்தில் இருக்கும் வரை மத்திக்கு நுழைய முடியாது.

 

தமி­ழக மாநில நலன்­களை என்­றுமே மத்­தி­யிடம் விட்­டுக்­கொ­டுக்­காத இரும்பு கோட்­டை­யா­கவே அவர் இருந்தார். ஆகவே அவர் இல்­லாத தமி­ழகம் பல­ருக்கு தேவை. மற்றும் சாத­க­மா­ன­தா­கவே உள்­ளது. இந்­நி­லையில் அ.தி­.மு.க.வின் கடைக்­கோடி தொண்­டன் முதல் சாமானிய தமிழன் வரை அனை­வ­ருக்­குமே ஜெ. மரணம் தொடர்­பான மர்­மத்தை அறிய வேண்டும் என்ற ஆவல் உள்­ளது. ஆனால் அதனை எடப்­பாடி அமைத்­துள்ள ஓய்­வு­பெற்ற நீதி­ப­தியின் நீதி விசா­ரணை எத்­தனை நியா­ய­மாக விசா­ரிக்கும். மர்­மத்தை கண்டுபிடிக்கும் என்று கூறமுடியுமா?

குமார் சுகுனா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-30#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.