Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கம் இறுதி சந்தர்ப்பம்

Featured Replies

ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கம் இறுதி சந்தர்ப்பம்

 

வீ.ஆனந்தசங்கரி 
(செயலாளர், தமிழர் விடுதலைக் கூட்டணி

 

மிக அவ­தா­ன­மாக பரி­சீ­லித்­ததன் பின் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நட­வ­டிக்­கைகள் கவலை தரு­கின்­றது என்றும், அதி­லி­ருந்து தமிழ் மக்­களை காப்­பாற்ற வேண்டும் என்­பதால் அக்­கூட்­ட­மைப்பை உட­ன­டி­யாக கலைக்­கும்­படி தமிழர் விடு­தலை கூட்­டணி வேண்­டு­கின்­றது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­ய­வர்கள் தமிழர் விடு­தலை கூட்­ட­ணி­யி­ன­ரா­கிய நாமே என்­பதால் அதனை கலைக்­கு­மாறு கேட்­ப­தற்கு எமக்கு சகல உரி­மையும் உண்டு. தப்­பான வழியில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பெயரை ஒரு சிலர் சுய­நலம் கருதி பயன்படுத்துவதால் நாம் எடுக்கும் நட­வ­டிக்­கைக்கு தமிழ் மக்­களின் பூரண ஆத­ரவை தமிழர் விடு­தலை கூட்­டணி கோரு­கின்­றது. அத்­த­கைய ஒத்­து­ழைப்பு கிடைக்­காத பட்­சத்தில் தமிழ் இனத்தை மீட்க முடி­யாத நிலைமை உரு­வாகும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் பாது­கா­வலர் என்ற கருத்தை தமிழ் மக்­க­ளையும் சர்­வ­தேச சமூ­கத்­தையும் நம்ப வைத்­துள்­ள­மைக்கு முர­ணாக இவ்­வ­மைப்பு தமிழ் மக்­க­ளிற்கு ஓர் சாபக்­கே­டாக அமைந்­துள்­ளது என்­பது சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நிரூ­ப­ண­ப­மா­கி­யுள்­ளது. அது சிலரின் சுய­ந­லத்­திற்­காக உப­யோ­கிப்­ப­தற்கு ஆண்­ட­வனால் கொடுக்­கப்­பட்ட வரப்­பி­ர­சா­த­மாக எமக்கு தோன்­று­கின்­றது. அந்த நிலைப்­பாட்டை சாத­க­மாக்கி் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பெயரில் உரு­வாகும் பல நன்­மை­களை ஒரு­சிலர் தாமே அனு­ப­வித்து வரு­கின்­றனர். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் அமைந்­துள்ள ஏனைய அமைப்­புக்­க­ளிற்கு விரோ­த­மாக தமி­ழ­ரசு கட்சி என்ற அமைப்பு தீவி­ர­மாக செயற்­ப­டு­வது தெட்­டத்தெளி­வாக தெரி­கின்­றது. அவர்­களில் உள்ள சிலர் கடந்த கால சம்­ப­வங்­களை தமக்கு சாத­க­மாக பாவித்தே தமி­ழ­ரசு கட்சி ஏனை­ய­வற்றை கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய அதி­கா­ரத்தை பெற்­றுள்­ள­தாக உல­கிற்கு எடுத்து காட்­டு­கின்­றது. தமி­ழ­ரசு கட்சி தவிர்ந்த ஏனைய இயக்­கங்கள் ஆயுத போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் என்­பது யாரும் மறுக்க முடி­யாத உண்மை. ஆனால் அவர்கள் ஆயுத போராட்­டத்தை கைவிட்டு ஜன­நா­யக பாதைக்கு வந்­த­வர்கள் என்­பதும், இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தின் கீழ் வழங்­கப்­பட்ட பொது மன்­னிப்பு வச­தியை குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­ட­வர்­கூட தமக்கு சாத­க­மாக உப­யோ­கித்­துள்­ளனர். மிக அண்­மையில் தமி­ழ­ரசு கட்சி செய­லா­ளர் ­நா­யகம் அவர்­களின் அறிக்­கையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் தமது கட்சி மாத்­தி­ரம்தான் ஆயுதம் தாங்கி போரா­ட­வில்லை என பெரு­மை­யாக தம்­பட்­ட­ம­டித்­ததை மக்கள் அவ­தா­னித்­தி­ருப்­பார்கள். ஆனால் தமி­ழ­ரசு கட்­சியை ஆரம்­பித்த தந்தை செல்­வ­நா­யகம் அவர்கள் தமிழர் விடு­தலை கூட்­ட­ணியை ஆரம்­பித்­த­வுடன் தமி­ழ­ரசு கட்­சியை செய­லி­ழக்க வைப்­பது போலவே செயற்­பட்டார். 1974 ஆம் ஆண்டு மூத­றிஞர் பட்டம் வழங்­கு­வ­தற்­காக கட்சி பேத­மின்றி வெள்ளவத்தை இரா­ம­கி­ருஷ்ணன் மிஷன் மண்­ட­பத்தில் நடந்த வைப­வமே தமி­ழ­ரசு கட்­சி­யி­னு­டைய வெள்ளிவி­ழா­வா­கவும் அமைந்­தது. அதன்பின் தந்தை செல்வா 1977 ஆம் ஆண்டு இறக்­கும்­வ­ரைக்கும் தமி­ழ­ரசு கட்­சியின் நாமத்தை ஓர் இயங்கும் கட்­சி­யாக எவரும் பாவிக்­க­வில்லை. 1977 ஆம் ஆண்டு பெரி­யவர் இறப்­ப­தற்கு இரண்டு ஆண்­டுளுக்கு முன்பு தொடக்கம் இறந்து 28 ஆண்­டு­க­ளுக்கு தமி­ழ­ரசு கட்சி செய­லி­ழந்தே இருந்­தது.

தமிழர் விடு­தலை கூட்­டணி தலை­வ­ராக இந்த தந்தை செல்­வா­விற்கு அவர் இறந்து இரண்டு வரு­டங்­களின் பின் யாழ். முற்றவெளியில் நிறு­வப்­பட்ட தூபியின் உச்­சத்தில் உதய சூரியன் சின்­னமே பொறிக்­கப்­பட்டு உலகம் அழி­யும்­வரை அத்­தூபி அழி­யாது என்­ப­தையும் மக்­க­ளுக்கு ஞாப­க­மூட்ட விரும்­பு­கின்றேன். ஆகவே தமி­ழ­ரசு கட்­சியின் நாமத்தை உச்­ச­ரிப்­பது, புத்­து­யி­ர­ளிப்­பது, அக்­கட்­சியின் பெயரால் எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் அத்­த­னையும் சட்­ட­வி­ரோ­த­மா­னவை. இப்­ப­டி­யான நிலை­மையில் தமி­ழ­ரசு கட்சி தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­ப­டு­வதும், தந்தை செல்வா, ஜி. ஜி. பொன்­னம்­பலம் ஆகியோரால் உரு­வாக்­கப்­பட்டு செயற்­படும் கட்­சி­யா­கிய தமிழர் விடு­தலை கூட்­ட­ணியை விலக்கி வைப்­பதும், ஏனைய பங்­கா­ளி­களை உதாசீனம் செய்­வதும் இன்னும் இது போன்ற பல விடயங்களில் தமிழரசுக் கட்சியின் செயற்­பா­டுகள் நாற்­ற­மெ­டுக்­கின்­றன. பொது மக்கள் மத்­தியில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு விடு­தலை புலி­களால் ஆரம்­பிக்­கப்­பட்­டது என்றும், அவ்­வ­மைப்பு விடு­தலை புலி­களின் கட்­டுப்­பாட்­டிலும், அவர்­களின் வழி­ந­டத்­த­லிலும் இயங்கி வரு­கின்­றது என்ற மாயையை மக்கள் மத்­தியில் பரப்பி இன்றும் இவர்கள், தம்­மிஷ்­டம்போல் செயற்­ப­டு­கின்­றார்கள். 2004 முதல் 13 ஆண்­டுகள் மக்­களை ஏமாற்­றி­ய­தற்கு இவர்கள் பதில் கூறி­யாக வேண்டும். ஏனெனில், இவர்­களின் கூற்­றுகள் நடை­மு­றைகள் அத்­த­னையும் பொய்­யென நிரூ­பிக்க மிக நம்­பிக்­கை­யாக ஓர் ஆவணம் என் ­கையில் சிக்­கி­யுள்­ளது. தராக்கி என அழைக்­கப்­படும் சிவராம் என்ற எழுத்­தாளர் நேர்­மை­யான சிறந்த நாட்­டுப்­பற்­றாளன். புலி­க­ளையும் மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து செயற்­ப­ட­வைக்க கனவு கண்­டவர். அவர் 2015 ஆம் ஆண்டு சுட்­டுக்­கொல்லப்­பட்­ட­மைக்கு கார­ண­மா­ன­வர்கள் சில சமயம் எங்கள் மத்­தி­யிலே இன்றும் ஊச­லா­க ­கூடும். 13 ஆண்டு கால­மாக என்னால் சேக­ரிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களில் ஒன்­றாக திரு தராக்­கி­யி­னு­டைய 2004 ஆம் ஆண்டு மாசி மாதம் 11 ஆம் திகதி ஆங்­கில பத்­தி­ரி­கையில் வெளியா­கிய கட்­டுரை என் கூற்­று­க­ளிற்கு சிறந்த ஆதா­ர­மாக என்­கை­வசம் உள்­ளது. எவர் விரும்­பி­னாலும் அதன் பிர­தியை என்னால் வெளியிட முடியும். அவ­ரு­டைய கட்­டு­ரையில் மிக தெளிவாக கூறி­யி­ருப்­ப­தா­வது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உண்­மையில் எப்­ப­டியோ அதிலும் பார்க்க கூடுதலாக­ மிகைப்­ப­டுத்­தியே காட்­டப்­ப­டு­கின்­றது என்­றும் விடு­த­லைப்­பு­லி­க­ளா­லேயே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு வழி­ந­டத்­தப்படுகின்­றது என்­பது பெரும் மாயை என்றும், சில முன்­னணி அர­சியல் தலை­வர்கள் மனச்­சாட்­சிக்கு விரோ­த­மாக செயற்படு­கின்­றனர். அவர்­களில் சிலர் தமிழ் மக்­களின் போராட்­டங்கள், அபி­லா­சைகள் ஆகி­ய­வற்றில் அக்­க­றை இல்­லா­த­வர்கள் என்றும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு வழங்­கப்­படும் முக்­கி­யத்­துவம், அது விடு­தலை புலி­களின் அதி­காரம் என்றும் கரு­து­வது உண்­மைக்கு மாறா­னது என்றும், வடக்கு, கிழக்கில் ஆத­ரவு தேடும் குழுக்கள், தமிழ் கட்­சிகள், அமைப்­புக்கள் ஆகி­யன தங்­க­ளி­டையே காணப்­படும் ஆழ­மான வேறு­பா­டு­க­ளையும் மறந்து நீண்ட காலம் இரா­ணு­வத்­துடன் தொடர்­புகள் கொண்­டி­ருந்­த­தையும் உரிமை மீறல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டு­க­ளையும் பொருட்­ப­டுத்­தாது ஒரே கிளையின் கீழ் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்றும், தமிழர் விடு­தலை கூட்­டணி பிர­முகர் ஒருவர் ஈபி­ஆர்­எல்எப், ரெலோ ஆகி­ய­வற்றை கூட்­ட­மைப்பில் இணைப்­பதை விடு­தலை புலிகள் விரும்ப மாட்­டார்கள் என்றும், கிழக்கு மாகாண விடு­தலை புலி­களின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒருவர் ஈபி­ஆர்­எல்எப், ரெலோ ஆகி­ய­வற்றை கூட்­ட­மைப்பில் இணைத்­துக்­கொள்­வதில் விடு­த­லைப்­பு­லி­க­ளிற்கு எவ்­வி­த­மான மறுப்பும் இல்லை என்றும், அவ்­விரு குழுக்­க­ளையும், புளொட் இயக்­கத்­தையும் ஒரே குடையில் கொண்டு வர வேண்டும் என்றும் அக்­கட்­டு­ரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது போன்று சகல கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஒரு குடையின் கீழ் ஒரே கொள்­கை­யோடு உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யிட வேண்டும் என்று அந்த அமைப்­புக்கள் தீர்­மா­னித்­தி­ருந்­தன. அதற்கு முழு ஆத­ர­வையும் விடு­தலைப் புலி­களும் தெரி­வித்­தி­ருந்­தது. எத்­த­னையோ விட­யங்கள் என் கருத்­திற்கு ஆத­ர­வாக தெரி­விக்க முடியும். இவ்­வ­றிக்கை விடும் நோக்­கத்தை கூறி தமிழ் மக்­களின் ஆத­ரவை தமிழர் விடு­தலை கூட்­டணி வேண்டி நிற்கின்­றது. பின்­வரும் விட­யங்கள் மிக தெளிவா­கின்­றது. சகல கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஒரு கட்­சி­யாக, ஒரு கொள்­கை­யுடன், ஒரே சின்­னத்தில் 2004 ஆம் ஆண்டு போட்­டி­யி­டு­வ­தற்கு சின்­னத்தில் பிரச்­சி­னையை கிளப்­பி­யி­ருந்த கடைசி நேரத்தில் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யிட தமிழ் காங்­கிரஸ் ஒப்­புக்­கொண்­டது. விடு­தலை புலி­களும், ஏனைய பல அமைப்­புக்­களும், போராட்­டக்­கு­ழுக்­களும் இதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கின. ஆயுத குழுக்­க­ளாக இயங்­கிய ஈபி­ஆர்­எல்எவ், ரெலோ, புளொட் ஆகிய அத்­தனை குழுக்­களும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தமிழர் விடு­தலை கூட்­டணி பொருத்­த­மா­னது என்­பதை அவர்­க­ளது மனச்­சாட்­சியே கூறும். தமிழர் விடு­தலை கூட்­டணி பழம்­பெரும் தலை­வர்­க­ளா­கிய பொன்­னம்­பலம், செல்­வ­நா­யகம் தொண்­டமான் போன்­றோரின் வழி­ந­டத்­தலில் இயங்கி இன்­று­வ­ரைக்கும் எது­வித களங்­கத்­தையும் தமக்கோ, தம்­மி­னத்­திற்கோ ஏற்­ப­டுத்­தாத கட்­சி­யாகும். ஆகவே தந்தை செல்வா, அமரர் ஜி. ஜி. பொன்­னம்­பலம், மலை­யக பெரும் தலைவர் தொண்­டமான், அமிர்­த­லிங்கம், சிவ­சி­தம்­பரம் ஆகியோர் ஒன்­றி­ணைந்து ஒரே காலத்தில் உரு­வாக்கி வளர்த்­தெ­டுத்த கட்சியில் நம்பிக்கை வைத்து எதிர்வரும் தேர்தல்கள் அத்தனையிலும் ஒன்றிணைந்து போட்டியிட இணையுமாறு தமிழர் விடுதலை கூட்டணி அழைப்பு விடுக்கின்றது.

தேர்தல் முடிந்ததும் வெற்றி பெற்ற அத்தனைபேரும் ஏனைய பிரமுகர்களும் இணைந்து தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைக்கப்படுவதுடன், தலைவர்களின் இலட்சியத்திற்கமைய செயற்படுவார்கள். தராக்கி, விடுதலைப் புலிகள், பொது அமைப்புக்கள் ஆகியோரின் அபிலாஷைக்கிணங்க 2004 ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்டிருந்தால் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமோக வெற்றியிட்டியதோடு தொடர்ந்து 5 வருடங்கள் இடம்பெற்ற யுத்தம் நிறுத்தப்பட்டு அக்காலத்தில் ஏற்பட்ட 50 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையான அப்பாவிமக்கள், போராளிகள், இராணுவம் ஆகியோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதோடு, பல கோடி சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இந்த நிலைமை ஏற்பட யார் காரணம் என்பதை மக்களே ஆராய்ந்து எமது வேண்டுகோளுக்கிணங்க எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் வலியுறுத்துகின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.