Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடமையில் இருந்த பெண்கள் திடீர் மயக்கம் ; 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

கடமையில் இருந்த பெண்கள் திடீர் மயக்கம் ; 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 

 

ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண்  பணியாளர்கள் 200 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

noorwood.jpg

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

அடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் மயக்கம்  ஏற்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25291

  • தொடங்கியவர்

பெண் ஊழியர்கள் மயங்கியமைக்கான காரணம் வெளியாகியது ( படங்கள் இணைப்பு )

 

 

நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையினுள் சுவாசிப்பதற்கு போதுமான  ஒட்சிசன்  வாயு போதுமானதாக இல்லாமையாலே 235 பெண்  ஊழியர்கள் மயக்கமடைந்ததாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை தலைமை வைத்திய அதிகாரி திலின பெரேரா தெரிவித்தார்.

01-_6_.jpg

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்று  காலை 9.45 மணியளவில் கடமையிலிருந்த பெண் ஊழியர்கள் திடீரென மயைக்கமுற்று வீழ்ந்துள்ளனர்.

 

 

மயக்கமுற்றவர்களில் 135 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலும் மிகுதி ஊழியர்கள் 100 பேர் கொண்ட வைத்திய குழுவினரால் ஆடைத்தொழிற்சாலை வளாகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

02-_4_.jpg

ஆடைத்தொழிற்சாலையானது  கண்ணாடிகளினால் முடப்பட்ட நிலையில் காணப்படுவதாலும் 850 பேர் வரையில் கடமையாற்றும் நிலையில் சுவாசிப்பதற்கு போதுமான காற்று உள்வராமையாலும்  வெப்பகால நிலையாலும்  இவ்வாறு மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக நோர்வூட் பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

02-1.jpg

மேலும் திடீரென மயக்கமுற்றவர்களை வைத்தியசாலையில் கொண்டு சென்ற போதும்  வைத்தியசாலை வளாகத்திற்கும்  ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கும்  நோர்வூட் பிரதேச மக்கள் படையெடுத்தமையினால்  பதற்ற நிலை தோன்றியது 

20171004_110615.jpg

சம்பவத்தில் யாருக்கும் உயிராபத்துக்கள் இல்லை என்றும் சிகிச்சை பெற்று சில வீடு திரும்புவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

20171004_111148.jpg

20171004_110832.jpg

DSC00044.jpg

DSC00045.jpg

DSC00049-_1_.jpg

 

http://www.virakesari.lk/article/25300

  • தொடங்கியவர்

பெண்களுக்கு தொழிற்சாலைக்குள் நடப்பது என்ன? புரியாத புதிராகவுள்ள நோர்வூட் தொழிற்சாலை

 

 

ஹட்டன் - நோர்வூட் பகுதியில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றி வரும் யுவதிகள் திடீரென வித்தியாசமான சைகைகளை காண்பித்து தனியாக பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

Local_News.jpg

இச் சம்பவம் நேற்று மாலை வேளையில் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் மயக்கமுற்ற 200ற்கும் மேற்பட்ட பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள் மயக்கமுற்ற யுவதிகள் தொழிற்சாலையினுள் சிறந்த காற்றோற்றம் இல்லாத காரணத்தினாலேயே அனைவருக்கும் சுவாச தடை ஏற்பட்டதாக கூறி அதற்கேற்ற சிகிச்சைகளை வழங்கினர்.

பின்னர் குறித்த தொழிற்சாலை காற்றோற்ற வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது

ஓய்வு பெற்று மீண்டும் நேற்று பணிக்கு திரும்பிய யுவதிகளில் 20 பேர் வேலை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துக் கொள்வதும் கழுத்து பகுதியினை இறுக்கி பிடிப்பதும் அலறி கத்துவதும் கூச்சலிட்டு புன்னகைப்பதுமாக வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யுவதிகளின் இது போன்ற விசித்திரமான செயற்பாட்டினால் குறித்த 20 யுவதிகள் தவிர்ந்த ஏனையோர் தொழிற்சாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஏனையவர்கள் வெளியேறிய பின்னர் குறித்த யுவதிகள் தொழிற்சாலையினுள் ஓடித்திரிந்து தனது விருப்பத்திற்கு சத்தமிட்டு கதைத்து காற்று வெளியில் சைகைகளை காட்டி உரையாடி புன்னகைத்து திரிந்துள்ளனர்.

இவர்களின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த முடியாமலும் செய்வது அறியாமலும் பயத்தினால் திகைத்திருந்த ஏனைய பணியாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கும் தகவல் வழங்கி பொலிஸாரும் வைத்தியர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த யுவதிகளை சிகிச்சைக்குட்படுத்திய வைத்தியர்கள் ஒரு வித மன அழுத்தத்தினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறி மனநல வைத்தியர்களிடம் சிகிச்சை பெறுமாறு சிபாரிசு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏனைய ஊழியர்கள் தெரிவிக்கையில் ஆடைத்தொழிற்சாலைக்கருகில் உள்ள முனீஸ்வரர் ஆலயத்தில் முன்பு பூஜை வழிப்பாடுகள் வருடந்தோரும் செய்து வருவதாகவும் அன்மைக்காலமாக முனீஸ்வரருக்கு வழிப்பாடுகள் செய்யாமல் விடப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/25552

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.