Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் காணி­களை விடு­விக்­கத் தடை நீங்கியது பசி­லின் கருத்தை மேற்­கோள்­காட்டி அமைச்­சர் ராஜித நேற்­றுத் தெரி­விப்பு

Featured Replies

தமிழ் மக்களின் காணி­களை விடு­விக்­கத் தடை நீங்கியது

பசி­லின் கருத்தை மேற்­கோள்­காட்டி அமைச்­சர் ராஜித நேற்­றுத் தெரி­விப்பு

 
தமிழ் மக்களின் காணி­களை விடு­விக்­கத் தடை நீங்கியது
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

“காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யி­னரே தடை­யாக இருந்து வந்­த­னர். பசில் ராஜ­பக்ச, காணி விடு­விப்பை தாங்­கள் எதிர்க்­க­வில்லை என்­பது எமக்கு உற்­சா­கத்தைத் தரு­கி­றது. பசில் ராஜ­பக்ச கூறிய விட­யங்­களை மகிந்த அன்று கேட்­டி­ருந்­தால் அவர் இன்­றும் ஆட்­சி­யில் இருந்­தி­ருப்­பார். கோத்­த­பாய கூறி­ய­தைக் கேட்­ட­தா­லேயே மகிந்­த­வுக்கு இந்­த­நிலை”

இவ்­வாறு அமைச்­ச­ரும் அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித தெரி­வித்தார்.
அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

காணி விடு­விப்­புக்கு தாங்­கள் எதிர்ப்­பில்லை என்று வடக்­கில் வைத்து பசில் ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளமை தொடர்­பில் ராஜி­த­வி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

“காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யில் பசில் ராஜ­பக்ச எதிர்ப்பு இல்லை என்று தெரி­வித்­தமை வர­வேற்­கத்­தக்­கது. இதன் பின்­னர் வடக்கு மக்­க­ளின் காணி­களை எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்­லா­மல் விடு­விக்­க­லாம் எனக் கரு­து­கின்­றோம். காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யி­னரே தடை­யாக இருந்­த­னர். பசில் ராஜ­பக்ச கூறி­யுள்ள விட­யம் எமக்கு உற்­சா­கத்தை தரு­கி­றது.

பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­னுள்­ளேயே இலங்கை இருக்­கின்­றது என்­ப­தைப் புரிந்து பசில் ராஜ­பக்ச செயற்­பட்­டார். ஆனால் அவர் கூறி­ய­வற்றை மகிந்த கேட்­க­வில்லை. மகிந்த ராஜ­பக்ச, கோத்தா கூறி­ய­வற்­றையே கேட்­டுக்­கொண்­டி­ருந்­தார்” என்று ராஜித பதி­ல­ளித்­தார்.

http://newuthayan.com/story/34475.html

  • தொடங்கியவர்

பஷிலின் கூற்றுக்கு செவிமடுத்திருந்தால் மஹிந்த இன்றும் ஆட்­சியில் ; புதிய தகவலை வெளியிட்டார் ராஜித

Published by Priyatharshan on 2017-10-05 10:34:01

 

பஷில் ராஜ­பக் ஷ கூறிய விட­யங்­களை அன்று செவி­ம­டுத்­தி­ருந்தால் மஹிந்த ராஜ­பக் ஷ இன்றும் ஆட்­சியில் இருந்­தி­ருப்பார். ஆனால் மஹிந்த, கோத்­த­பாய கூறி­ய­வற்றை கேட்­டதன் கார­ண­மா­கவே இன்­றைய  நிலை ஏற்­பட்­டது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். சர்­வ­தே­சத்­திற்­குள்­ளேயே இலங்கை இருக்­கின்­றது.

mahinda-rajapahsha.jpg

 என்­பதை புரிந்து பசில் ராஜ­பக்ச செயற்­பட்டார். அதனைப் புரிந்­து­கொள்ளக் கூடிய ஒரே ராஜ­பக்­ச­வாக பசில் காணப்­பட்டார். ஆனால் அவர் கூறி­ய­வற்றை மகிந்த கேட்­க­வில்லை. மகிந்த கோத்தா கூறி­ய­வற்­றையே கேட்­டுக்­கொண்­டி­ருந்தார். அத­னால்தான் இந்த நிலை ஏற்­பட்­டது   என்றும்  அமைச்சர் ராஜித்த சுட்­டிக்­காட்­டினார். 

அர­சாங்க  தகவல் திணைக்­க­ளத்தில்  நேற்று  நடை­பெற்ற  வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில்  கலந்­து­கொண்ட   அமைச்சர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய  கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே    மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் 

கேள்வி: வடக்கில் காணி­களைக் கோரி மக்கள் போராடி வரு­கின்­றனர். எனினும் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அண்­மையில் வடக்­கிற்கு சென்­றி­ருந்த பசில் ராஜ­பக்ச காணி விடு­விப்­புக்கு நாங்கள் எதிர்ப்பு இல்­லை­யென தெரி­வித்­தி­ருந்தார். இது தொடர்பில்?

பதில்: காணி விடு­விப்­புக்கு மகிந்த அணியில் பசில் ராஜ­பக்ச எதிர்ப்பு இல்லை என்று தெரி­வித்­தமை வர­வேற்­கத்­தக்­கது. இது ஒரு நல்ல கூற்று இதன் பின்னர் வடக்கு மக்­களின் காணி­களை எந்தப் பிரச்­சி­னையும் இல்­லாமல் விடு­விக்­கலாம் எனக் கரு­து­கின்றோம். 

காணி விடு­விப்­புக்கு மகிந்த அணி­யி­னரே தடை­யாக இருந்து வந்­தனர். தற்­போது பசில் ராஜ­பக்ச கூறி­யுள்ள விடயம் எமக்கு உற்­சா­கத்தை தரு­கி­றது.  பசில் ராஜ­பக்ச கூறிய விட­யங்­களை அன்று கேட்­டி­ருந்தால் மகிந்த ராஜ­பக்ச இன்றும் ஆட்­சியில் இருந்­தி­ருப்பார். ஆனால் மகிந்த கோத்­த­பாய கூறி­ய­வற்றை கேட்­டதன் கார­ண­மா­கவே இந்த நிலை ஏற்­பட்­டது. 

சர்­வ­தே­சத்­திற்­குள்­ளேயே இலங்கை இருக்­கின்­றது என்­பதை புரிந்து பசில் ராஜ­பக்ச செயற்­பட்டார். அதனைப் புரிந்­து­கொள்ளக் கூடிய ஒரே ராஜ­பக்­ச­வாக பசில் காணப்­பட்டார். ஆனால் அவர் கூறி­ய­வற்றை மகிந்த கேட்­க­வில்லை. மகிந்த கோத்தா கூறி­ய­வற்­றையே கேட்­டுக்­கொண்­டி­ருந்தார். அத­னால்தான் இந்த நிலை ஏற்­பட்­டது. பசில் கூறி­யதை கேட்­டி­ருந்தால் இன்றும் மகிந்த ஆட்­சியில் இருந்­தி­ருப்பார்.

கேள்வி: காணாமல் போனோர் தொடர்ந்து போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர். இதற்குத் தீர்வு இல்­லையா?

பதில்: நானும் இந்தப் போராட்டம் நடத்தும் காணா­மல்­போ­னோரின் உறவினர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினேன். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. தமது உறவினர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பதையே அவர்கள் தெரிவிக்கின்றனர். அவை கண்டறியப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன். 

http://www.virakesari.lk/article/25323

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.