Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.,வவு­னியாவில் இன்று கவ­ன­யீர்ப்பு போராட்­டங்கள்

Featured Replies

யாழ்.,வவு­னியாவில் இன்று கவ­ன­யீர்ப்பு போராட்­டங்கள்

 

 

அநு­ர­ாத­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்ட தமது வழக்கை மீளவும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­று­மாறு வலி­யு­றுத்தி அநு­ர­ாத­புரம் சிறைச்­சா­லையில் செங்கன் எனப்­படும். 

இரா­ஜ­துரை திரு­வருள்  மதி­ய­ழகன் சுலக்ஷன்  கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் முன்­னெ­டுத்து வரும் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்தும் நாடா­ள­விய ரீதியில் உள்ள சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்க கோரியும் யாழ்ப்­பா­ணத்­திலும் வவு­னி­யா­விலும் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

இந்த போராட்­டங்­களை பொது மற்றும் சிவில் அமைப்­புக்கள் கூட்­டாக இணைந்து முன்­னெ­டுக்­க­வுள்­ளன. அதன் பிர­காரம்  யாழ்ப்­பா­ணத்தில்  காலை 9மணி முதல் 12 மணி­வ­ரையில் யாழ் மத்­திய பேருந்து நிலை­யத்­திற்கு முன்னால் நடை­பெ­ற­வுள்­ள­தோடு வவு­னி­யாவில் முற்­பகல் 10 மணிக்கு வவு­னியா மத்­திய பஸ் நிலையம் முன்­பாக நடை­பெ­ற­வுள்­ளது. 

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்யும் தேசிய அமைப்பின் அமைப்­பாளர்  அருட்­தந்தை சக்­திவேல் தலை­மையில் அண்­மையில் நடை­பெற்ற கூட்­டத்தின் போது யாழில் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்­தினை நடத்­து­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்தக் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்­திற்கு சிவில் அமைப்­புக்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், பொது­மக்கள் என அனை­வ­ரையும் கலந்து கொண்டு அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­து­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

 சமூக விஞ்­ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்­வு­ரி­மைக்­கான செயற்­பாட்டு மையம், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு. தமிழ் மக்கள் பேரவை, கிரா­மிய உழைப்­பாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி, ஜன­நா­யக மக்கள் விடு­தலை முன்­னணி, ஐக்­கிய சோஷ­லிச கட்சி, சமூக நீதிக்­கான வெகு­ஜன அமைப்பு, புதிய ஜன­நா­யக மாக்­கிச லெனின் கட்சி, வலி­காமம் வடக்கு மீள்­டி­யேற்ற மற்றும் புனர்­வாழ்வு குழு, யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊழியர் சங்கம், ஆசி­ரியர் சங்கம், மாணவர் ஒன்­றியம் ஆகி­ய­னவும் ஆத­ரவை வழங்­க­வுள்­ளன.   

அதே­போன்று வவு­னியா மாவட்ட பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் ஆகி­யோ­ருக்கு இடையில் நடை­பெற்ற சந்­திப்பில் சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து அர­சியல் கைதி­க­ளையும் எந்­த­வித நிபந்­த­னை­யு­மின்றி உட­ன­டி­யாக விடு­விக்க அழுத்­த­மாக வலி­யு­றுத்த வேண்டும் என எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம்  நடைபெறவுள்ள போராட்டத்தில் வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம், சமூக அமைப்புக்கள், தனியார் பஸ்  உரிமையாளர்கள் சங்கம், மகளிர் அமைப்புக்கள், கிராம அமைப்புக்கள் என 20 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/25486

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம்

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஸ்ரீலங்கா சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்றும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 அரசியல் கைதிகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நகர மத்தியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், காணாமல் போனவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம்

அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு நிற மையினால் பெருவிரல் அடையாளத்தையும் பதித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம்

https://news.ibctamil.com/ta/internal-affairs/release-of-political-prisoners-jaffna

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
யாழில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம்
 

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணதில் தற்போது மேற்கொள்ளப்படும் போராட்டத்தில், யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள வைத்தியசாலை வீதியை இடைமறித்து வீதியில் போராட்டக்காரர்கள் அமர்ந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழில்-வீதிகளை-மறித்து-ஆர்ப்பாட்டம்/71-205192

  • தொடங்கியவர்

“உயிர் ஊசலாடுகிறது நல்லாட்சி நாடகமாடுகிறது” (வீடியோ இணைப்பு)

 

 

அநுராதபுர சிறைச்சாலையில் மரணதண்டனை கைதிகளோடு சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி வவுனியா இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று காலை 9 மணி முதல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Local_News.jpg

சிவில் சமூகம், மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள இப் போராட்டத்தில் “உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பதில் கூறு” “பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே ரத்து செய்” “அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லையா” “சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்” “நீதி அமைச்சரே பதில் கூறு” “தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பிரஜைகளா” “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் என்ன?” “தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன் வை” “நாட்டில் நடப்பது நல்லாட்சியா? பேயாட்சியா?” “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்” “உயிர் ஊசலாடுகிறது நல்லாட்சி நாடகமாடுகிறது” போன்ற வாசகங்கள் பொதிந்த பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் உணர்ச்சி மிகு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Local_News.jpg

இப் போராட்டத்தில் சிவில் சமூகத்தினர் பொது அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் தனியார் அரச ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.youtube.com/watch?v=GYDXjYuWvYE

 

http://www.virakesari.lk/article/25506

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாணம், வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

 
 
 
Jaffna-Protest-Political-Prisoners-3_0.j
 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அரசியல் கைதிகள் அனைவரது விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றது.
 
Jaffna-Protest-Political-Prisoners-1.jpg
 
இன்று (09) முற்பகல் 10 மணி முதல், யாழ். நகரிலுள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
 
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. 
 
Jaffna-Protest-Political-Prisoners-2-750
 
பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர், திடீரென வீதி மறியலிலும் ஈடுபட்டனர். 
 
(செல்வநாயகம் ரவிசாந்)
 

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

 
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
 
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பேரூந்து நிலையம் முன்பாக இன்று (09) காலை 11 மணியிலிருந்து ஒரு மணி நேரம் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
Vavuniya-Protest-Political-Prisoners-1.j
 
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்குளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றியுள்ள நிலையில், அவர்கள் தொடர்ச்சியாக கடந்த 16 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும்  இப் போராட்டம் நடைபெற்றது.
 
Vavuniya-Protest-Political-Prisoners-2.j
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களே! சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுங்கள், கௌரவ பிரதமர் அவர்களே! அரசியல் கைதிகளின் விடயத்தை மனிதாபிமானத்துடன் அணுகி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதமளித்த உங்களது உத்தரவாதத்தை நிறைவேற்றுங்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே! ஜனாதிபதியின் வாக்குறுதியை அரசியல் கைதிகளுக்குத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தீர்களே, அதன் அடிப்படையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி அரசிற்கு அழுத்தம் கொடுங்கள்,
 
Vavuniya-Protest-Political-Prisoners-3-7
 
அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களே! ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த காரணிகள் இன்னமும் அப்படியே இருக்கிறது, என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காமல், அதனை ஏற்றுக்கொண்டுள்ள தாங்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துங்கள், சர்வதேச சமூகமே! எந்த வழியில் பார்த்தாலும் பல்லாண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் அரசியல் காரணங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்திற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும், எனவே, நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காகவும், நாங்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை அங்கீகரிப்பதற்காகவும் சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுங்கள், தமிழ் அரசியல் தலைவர்களே, மக்கள் பிரதிநிதிகளே! அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாங்கள் வீதிகளில் இறங்கிவிட்டோம். இனியாவது நீங்கள் எம்முடன் இணைவீர்களா? என அவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
 
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புதிய மாக்சிச லெனினிச கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
(கோவில்குளம் குறூப் நிருபர் - கந்தன் குணா)
 

http://www.thinakaran.lk/2017/10/09/உள்நாடு/20378

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.