Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாது­காப்­பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்­கீடு

Featured Replies

பாது­காப்­பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்­கீடு

 
 
 
 

2018ஆம் நிதி­யாண்­டுக்கான அர­சின் செல­வி­ன­மாக 39 லட்­சத்து 82 ஆயி­ரத்து 367 மில்­லி­யன் ரூபா மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது 2017ஆம் ஆண்­டுக்­கான அர­சின் செல­வி­னத்­திலும் பார்க்க 3 லட்­சத்து 54 ஆயி­ரத்து 257 மில்­லி­யன் ரூபா அதி­க­மா­கும்.

வழ­மை­போன்று பாது­காப்பு அமைச்­சுக்கு அதிக நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் அலு­வ­ல­கத்துக்கும், தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத்துக்கும் கடந்த ஆண்டை விட அதி­க­ளவு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

2018ஆம் ஆண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்­டுச் சட்­டத்தை பதில் நிதி அமைச்­சர் எரான் விக்­கி­ர­ம­ரட்ன நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் சமர்ப்பித்­தார்.

பாது­காப்பு அமைச்­சுக்கு 2 லட்­சத்து 90 ஆயி­ரத்து 711 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இது கடந்த ஆண்­டை­விட 6 ஆயி­ரத்து 667 மில்­லி­யன் ரூபா அதி­க­மா­கும்.

அரச தலை­வர் மைத்­தி­ரிக்கு, 9 ஆயி­ரத்து 983 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இது கடந்த ஆண்­டை­விட 3 ஆயி­ரத்து 530 மில்­லி­யன் ரூபா அதி­க­மா­கும்.

தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் அலு­வ­ல­கத்­திற்கு, ஆயி­ரத்து 772 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இது கடந்த ஆண்டை விட 517 மில்­லி­யன் ரூபா அதி­க­மா­கும்.

நிதி மற்­றும் ஊட­கத்­துறை அமைச்­சுக்கு 2 லட்­சத்து 27 ஆயி­ரத்து 572 மில்­லி­யன் ரூபா­வும், தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார அலு­வல்­கள் அமைச்­சுக்கு 25 ஆயி­ரத்து 734 மில்­லி­யன் ரூபா­வும், நீதி அமைச்­சுக்கு 11 ஆயி­ரத்து 149 மில்­லி­யன் ரூபா­வும், சுகா­தார அமைச்­சுக்கு ஒரு லட்­சத்து 78 ஆயி­ரத்து 399 மில்­லி­யன் ரூபா­வும், அய­லு­ற­வுத்­துறை அமைச்­சுக்கு 10 ஆயி­ரத்து 778 மில்­லி­யன் ரூபா­வும், உயர் கல்வி அமைச்­சுக்கு ஒரு லட்­சத்து 82 ஆயி­ரத்து 757 மில்­லி­யன் ரூபா­வும், கல்வி அமைச்­சுக்கு ஒரு லட்­சத்து 2 ஆயி­ரத்து 880 மில்­லி­யன் ரூபா­வும், மாகா­ண­ச­பை­கள் உள்­ளூ­ராட்சி அமைச்­சுக்கு 2 லட்­சத்து 18 ஆயி­ரத்து 217 மில்­லி­யன் ரூபா­வும் ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/35486.html

  • தொடங்கியவர்

பாதுகாப்புக்கு 29000 கோடி

 

மொத்த செலவீனம் 398 ஆயிரத்து 236 கோடி; நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

எதிர்­வரும் 2018 ஆம் நிதி­யாண்­டுக்­கான  அர­சாங்­கத்தின் நிதி ஒதுக்­கீட்டுச் சட்­ட­மூலம் நேற்று சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இதன்­மூலம் 3 இலட்­சத்து 98 ஆயி­ரத்து 236 கோடியே 78 இலட்­சத்து 18 ஆயிரம் ரூபா அர­சாங்­கத்தின் மொத்த செல­வீ­ன­மாக மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.   

2017 ஆம் ஆண்­டுக்­கான அர­சாங்­கத்தின் மொத்த செல­வி­னத்தை விடவும் 35 ஆயி­ரத்து 425 கோடி ரூபா அடுத்­த­வ­ரு­டத்­துக்­காக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தோடு இம்­மு­றையும் பாது­காப்பு அமைச்­சுக்கே அதி­க­பட்­ச­மாக தொகை ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அடுத்­த­வ­ரு­டத்தின் பாது­காப்பு செல­வாக 29 ஆயி­ரத்து 71 கோடியே 13 இலட்­சத்து 75 ஆயிரம் ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

2018 ஆம் ஆண்­டிற்­கான அர­சாங்­கத்தின் மதிப்­பீட்டு மொத்த செல­வி­னத்தில் பாது­காப்பு அமைச்சு, ஜனா­தி­பதி அலு­வ­லகம் மற்றும் பிர­தமர் அலு­வ­லகம் ஆகி­ய­வற்­றுக்­கான செல­வி­னங்­க­ளுக்­கான மதிப்­பீட்டுத் தொகை­களும் வெகு­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்டுச் சட்­ட­மூ­லத்தை பதில் நிதி அமைச்­ச­ரான எரான் விக்­கி­ர­ம­ரட்ன முதலாம் வாசிப்­புக்­காக சபையில் சமர்ப்­பித்தார்.

அந்த ஒதுக்­கீட்டுச் சட்­ட­மூ­லத்தில் மதிப்­பீடு செய்­யப்­பட்டு செல­வீ­னங்­களும் கடந்த ஆண்டு ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட செல­வீ­னங்­களும் வரு­மாறு,

அர­சாங்­கத்தின் 2017ஆம் நிதி­யாண்­டுக்­கான மொத்த செல­வினம் 3 இலட்­சத்து 62 ஆயி­ரத்து 811 கோடியே 4 இலட்­சத்து 36 ஆயிரம் (362,811,04,36,000) ரூபா­வாகும். இந்­நி­லையில் 2018 ஆம் நிதி­யாண்­டுக்­கான மொத்த செல­வி­ன­மா­னது 35 ஆயி­ரத்து 425 கோடியே 73 இலட்­சத்து 82 ஆயிரம் (35,425,73,82,000) ரூபா­வினால் அதி­க­மாக மதிப்­பீடு செய்­யப்­பட்டு 3 இலட்­சத்து 98 ஆயி­ரத்து 236 கோடியே 78 இலட்­சத்து 18 ஆயிரம் ரூபா­வாக காணப்­ப­டு­கின்­றது.

2017 ஆம் ஆண்டு 28 ஆயி­ரத்து 404 கோடியே 43 இலட்­சத்து 44 ஆயிரம் (28,404,43,44,000) ரூபா பாது­காப்பு அமைச்­சுக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு 666 கோடியே 70 இலட்­சத்து 31 ஆயிரம் (666,70,31,000) ரூபா அதி­க­மாக 29 ஆயி­ரத்து 71 கோடியே 13 இலட்­சத்து 75 ஆயிரம் (29,071,13,75,000) ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

2017 ஆம் ஆண்டில் 654 கோடியே 26 இலட்­சத்து 79 ஆயிரம் (645,26,79,000) ரூபா ஜனா­தி­ப­திக்­கான செல­வீ­ன­மான ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் 2018 ஆம் ஆண்­டுக்­கான செல­வி­ன­மாக353 கோடியே 8 இலட்­சத்து 46 ஆயிரம் (353,08,46,000) ரூபா அதி­க­ரிக்­கப்­பட்டு 998 கோடியே 35 இலட்­சத்து 25 ஆயிரம் (998,35,25,000) ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

2017 ஆம் ஆண்டு பிர­தமர் அலு­வ­ல­கத்­திற்­கான செல­வி­ன­மாக 125 கோடியே 52 இலட்­சத்து 71 ஆயிரம் (125,52,71,000) ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் 2018ஆம் ஆண்டு 51 கோடியே 74 இலட்­சத்து 9 ஆயிரம் (51,74,09,000) ரூபா அதி­மாக 177 கோடியே 26 இலட்­சத்து 80 ஆயிரம் (177,26,80,000) ரூபா மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை 2018 ஆம் நிதி­யாண்­டுக்­காக நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்­சுக்கு 22,757,20,88,000 ரூபாவும் தேசியக் கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்­சுக்கு 2,573,48,30,000 ரூபாவும் நீதி அமைச்­சுக்கு 1,114,99,11,000 ரூபாவும் சுகா­தார அமைச்­சுக்கு 17,839,99,98,000 ரூபாவும் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சுக்கு 1,077,85,50,000 ரூபாவும் ஒதுக்­கீடு செய்­வ­தாக மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்­சுக்கு 18,275,70,00,000 ரூபாவும் கல்வி அமைச்­சுக்கு 10,288,00,00,000 ரூபாவும் தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 287,03,18,000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு 4,213,67,37,000 ரூபாவும் மாகாண சபைகள் மற்றும் உள்;ராட்சி அமைச்சுக்கு 21,821,73,79,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யவதாக மதிப்பீடுசெய்யப்பட்டுள்ளது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-10#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.