Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

Featured Replies

சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

 

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது.

மனு, பரிசீலனைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த மனுவை நிராகரிக்குமாறு, உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

மனுதாரர், தன்னுடைய மனுவில் குறிப்பிடவேண்டிய அடிப்படைத் தகவல் எதனையும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் எடுத்துரைத்தார்.

 இதனையடுத்து மனுமீதான விசாரணையை, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. 

இந்ந மனுவை, அவர் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதியன்று தாக்கல் செய்திருந்தார்.  

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தியே, அவர் இந்த மனுவைத்தாக்கல் செய்திருந்தார்.  

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறைமை தவறானது என்று குறிப்பிட்டுள்ள, முன்னாள் பிரதமர் நீதியரசர் சரத் என்.சில்வா, அந்தச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் கோரியிருந்தார்.  

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவின் அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில் நேற்று (09) ஆராயப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த பிரதிசொலிஸிட்டர் ஜெனரல், தன்னுடைய கடுமையான எதிர்ப்பை முன்வைத்தார். அதனையடுத்தே, அந்த மனுமீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.  

இந்த மனு, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனெக அலுவிஹார மற்றும் நளின் பெரேரா ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையிலேயே, பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.  

இதேவேளை, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் மனுவுக்கு எதிராக, இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் ஜெனரல், நீதியரசர் குழாமின் கவனத்துக்கு கொண்டுவந்தார். அதனையடுத்து, அவ்விரு மனுக்களும், நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டன.  

இவ்விரு மனுக்களும், சட்டத்தரணி உனவட்டுன, கே.அருண லக்சிறி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ராஜகிரிய மொரகஸ்முல்லவை வசிப்பிடமாகக் கொண்ட ராஜித கொடிதுவக்கு ஆகியோரால், தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரால் கடந்த 22ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதற்காக, முன்வைக்கப்பட்ட திருத்தங்களில், இரண்டாவது திருத்தம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. முதலாவது திருத்தம் சேர்க்கப்படவில்லை என்றும் முன்னாள் பிரதம நீதியரசர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

அதுவும் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  

அவ்வாறு. நாடாளுமன்றத்தில், கடந்த 20ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட, மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை, இரத்துச்செய்யுமாறே அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது,  

மனுவில் சட்டமா அதிபர், சபாநாயகர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரே பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.  

 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தில், மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் உறுதிப்படுத்தவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சரத்தின்-மனுவை-விசாரணைக்கு-எடுக்க-தீர்மானம்/175-205252

  • தொடங்கியவர்

சரத் என் சில்வாவும் சுமந்திரனும்- சட்டத்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வருமா?

 

தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை உயர் நீதிமன்ற தீர்ப்பினால் பிரித்தெறிந்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, தற்போது மாகாண சபைகள் திருத்தச்சட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளமை எந்த அடிப்படையில் என சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறை தவறானது என்று, அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது இரண்டாவது திருத்தம் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளது. முதலாவது திருத்தம் இணைக்கப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் என் சில்வாவும் சுமந்திரனும்- சட்டத்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வருமா?

ஆகவே அந்தச் சட்டமூலத்தை ரத்துச் செய்ய வேண்டும் என தனது மனுவில் கோரியுள்ள சரத் என் சில்வா, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இங்கு கேள்வி எழுப்பிய சட்ட வல்லுநர்கள், நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் செய்யப்பட்ட சில ஏற்பாடுகளை, சரத் என் சில்வா, 2006ஆம் ஆண்டு நீதிமன்ற விவாதத்திற்கு உள்ளாக்கி, வடக்கு கிழக்கை பிரித்தமை அரசியல் குற்றம் எனவும் குறிப்பிட்டதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.

சர்வதேச உடன்படிக்கை மூலமான, சட்டம் ஒன்றை ரத்துச் செய்வது அல்லது யாப்பில் சோ்ப்பது என்றால் நாடாளுமன்றமே அதனை தீர்மானிக்க வேண்டும். ஆனால் சட்டம் தெரிந்த சரத் என் சில்வா அன்று பிரதம நீதியரசராக பதவி வகிக்கும்போது, தமிழ் இனவாத நோக்கில் உயர் நீதிமன்றத்தை பயன்படுத்தி, அரசியல் பிரச்சினை ஒன்றை மேலும் குழப்பத்திற்கு உள்ளாக்கினார் எனவும் குற்றம் சுமத்தினர்.

இவ்வாறு ஒரு சமூகத்தின் அரசியல் பிரச்சினையை குழப்பத்திற்கும் சிக்கலுக்கும் உள்ளாக்கிய சரத் என் சில்வா, தற்போது மாகாண சபைகள் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தமை வேடிக்கையானது. மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு என்பது வேறு.

ஆனால் சரத் என் சில்வா கொழும்பு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தவே மனுத்தாக்கல் செய்துள்ளார் என்றும் அது ஏனைய சமூகங்களின் நன்மைக்கானது அல்ல எனவும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்தில் சரத் என் சில்வாவுக்கு எதிராக முன்வைத்த வாதங்கள் நியாயமானவைதான்.

ஆனால் இவ்வாறான இனவாதம் கொண்ட உயர் நீதிமன்றம் ஒன்றை நம்பி அதுவும் அரசியலமைப்புச் சட்டத்தால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என சுமந்திரன் நம்புவதுதான், பட்டறிவற்ற அரசியல் எனவும் சட்ட வல்லநர்கள் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை நீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இரு உயர் சபைகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காது. என 1969ஆம் ஆண்டு நவரட்ணம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததாகவும் சட்ட வல்லூநர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
கடந்த செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/politics/Srath-N-Silva-and-Sumanthiran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.