Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு (படங்கள்)

Featured Replies

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு (படங்கள்)

 

 

விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டாங்குளத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.

7_Malathy1.jpg

ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணித் தலைவர் சி.வேந்தன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

7_Malathy3.jpg

இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

7_Malathy2.jpg

மாவீரர் மாலதியின் நினைவாக, அப்பிரதேசத்தில் உள்ள போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியினரினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

http://www.virakesari.lk/article/25566

  • தொடங்கியவர்

தமிழீழ பெண்கள் எழுச்சிநாள் முல்லைத்தீவில் அனுட்டிப்பு

 

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளான இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் தளபதிகளில் ஒருவரான 2ஆம் லெப்ரினன்ட் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலக வளாகத்தில் இந்த நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது பெண் தற்கொலைப் பேராளியான மாலதி தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன்னர் இன்று போன்ற ஒரு நாளில் நள்ளிரவு நேரத்தில், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினரை இலக்கு வைத்து கோப்பாய் கிறேசர் வீதியில் நள்ளிரவு 1 மணியளவில் தாக்குதலொன்றை நடத்தி இந்திய இராணுவத்தை நிலைகுலையச் செய்திருந்தார்.

இந்ததத் தாக்குதலில் காலில் காயமுற்ற மாலதி, கழுத்திலிருந்த நஞ்சை அருந்தி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்த பெண் போராளி மாலதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் உள்ளூர் நேரப்படி இன்று முற்பகல் இடம்பெற்றது.

கைவேலி பெண்கள் அமைப்பைச் சேர்ந்த எம்.பி.ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், 2 ஆம் லெப்ரினன்ட் மாலதியின் திருவுருவப்படத்திற்கான பொதுச்சுடரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தி.கிந்துஜன் ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து கேப்பாபுலவு – முள்ளிவாய்க்கால் கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சுடரேற்றினர்.

தொடர்ந்து கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதியான சிறிறஞ்சினி மலர்மாலை அணிவித்த நிலையில் அகவணக்கமும் மலரஞ்சலியும் இடம்பெற்றன.

இதனையடுத்து அங்கு அஞ்சலி உரை நிகழ்த்திய கைவேலி பெண்கள் அமைப்பின் உறுப்பினர் எம்.பி.ராஜேஸ்வரி, தற்போது தாம் பெண்களாக தலைநிமிர்ந்து வாழ்வதற்கும் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், அரசியலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் வித்திட்டது தமீழீழ பெண்களின் எழுச்சி நாள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சிறப்புரையை கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதியும் அறநெறி ஆசிரியையுமான மல்லிகா நிகழ்த்தினார்.

இதில் தமிழ்த் தேசியத்தில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதனை எமது முன்னாள் போராளிகள் எடுத்துக்காட்டியுள்ளனர் என தெரிவித்தார். 

தமிழீழ பெண்கள் எழுச்சிநாள் முல்லைத்தீவில் அனுட்டிப்பு

தமிழீழ பெண்கள் எழுச்சிநாள் முல்லைத்தீவில் அனுட்டிப்பு

தமிழீழ பெண்கள் எழுச்சிநாள் முல்லைத்தீவில் அனுட்டிப்பு

தமிழீழ பெண்கள் எழுச்சிநாள் முல்லைத்தீவில் அனுட்டிப்பு

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Women-of-Tamil-Eelam-Day-in-Mullaitivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.