Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டை முதலான புகையிரதச் சேவைகள் இரத்து!

Featured Replies

கோட்டை முதலான புகையிரதச் சேவைகள் இரத்து!

 

 

புகையிரதச் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

9_Train.jpg

இதனால், தற்போது முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கும் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கோட்டை புகையிரத நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/25628

  • தொடங்கியவர்

கோட்டை, மருதானை தொடருந்து நிலையங்களில் அமளி!

 
கோட்டை, மருதானை தொடருந்து நிலையங்களில் அமளி!
0
SHARES
 

தொடருந்துச் சாரதிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிப் புறக்கணிப்புத் தொடரும் என்று தொடருந்துச் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடருந்துச் சாரதி உதவியாளர்களை இணைத்துக் கொள்ளும் ஒழுங்கு விதிகள் திருத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலை முதல் தொடருந்துச் சாரதிகள் பணிப் புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

தொடருந்துச் சாரதிகள் பணிப் புறக்கணிப்பால் கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்துத் தொடருந்துச் சேவைகளும் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதனால் பயணிகள் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் பயணிகள் பெரும் எண்ணிக்கையில் குழுமியுள்ளனர். அவர்கள் அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.

மருதானை தொடருந்து நிலையத்திலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது. அங்கு சிறப்பு பொலிஸ் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/36094.html

  • தொடங்கியவர்

ரயில் பயணிகளே பேச்சுவார்த்தை தோல்வி : போராட்டம் தொடரும்

 

 

தமக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையானது தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தமது போராட்டம் தொடருமென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

train.jpg

 இரு தரப்பினருக்குமிடையில் இன்று முற்பகல் 9.30  மணி முதல் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை நண்பகலுடன் நிறைவுக்கு வந்தநிலையில், தம்மால் முன்வைக்ப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென ரயில்வே சாரதிகள் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் தம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25668

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.