Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி

Featured Replies

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி

 

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

11_S_Yogeswaran.jpg

இன்று (11) பிற்பகல் 3.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளர் பாராளுமன்ற உறுப்பினர் தன்மீது அவதூறு தெரிவித்து வருவதாகவும் ஏன் அவ்வாறு தெரிவித்துவருகின்றீர்கள் என்றும் கேட்டுள்ளார்.

அதன்போது,  ‘‘உங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியானதுபோது உங்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடாத்தினேன். ஆனால் நீங்கள் சூடுபட்டது தொடர்பில் பல்வேறு விதமான கருத்துகள் வெளிவந்தன. அதுதொடர்பிலேயே நான் மாவட்ட செயலகத்திற்கு சென்று அன்றைய மாவட்ட செயலாளரிடம் உண்மை நிலைமை தொடர்பில் கேட்டேன்” என்று யோகேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினருக்கும் காணி ஆணையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை காணி ஆணையாளர் தாக்க முற்பட்டதாகவும் அதன்போது அதனைத் தடுக்க முனைந்த பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இதன்போது பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் தலைப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட உதவி காணி ஆணையாளரிடம் கேட்டபோது, தன்னைப்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவதூறான கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும் அது தொடர்பில் உண்மை நிலையை அறியச்சென்றபோது பொலிஸார் வந்து தன்னைத் தாக்கமுற்பட்டதாகவும் தெரிவித்தார்.

“என்னைப்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்பில் நான் தெளிவுபடுத்தவே சென்றேன்” என்று கூறிய அவர், “தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் சென்று எங்களது கருத்துகளை பகிர்வதற்கான சுதந்திரம்கூட இல்லையா” எனவும் கேள்வியெழுப்பினார்.

http://www.virakesari.lk/article/25631

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.