Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” - மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா

Featured Replies

“காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” - மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா

 

 

 

43 டிகிரி வெயில் சென்னையை கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் மத்தியான நேரம். விடுமுறைக்கு வந்திருக்கும் தென் தமிழக சுற்றுலா குடும்பம் ஒன்று போலீஸ் எச்சரிக்கையும் மீறி மெரினா கடலில் குளித்து ஈரம் சொட்டச் சொட்ட அந்த தார்ப்பாய் நிழலுக்குள் வந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் பசித்த கண்களுடன் மீன் பொரித்துக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து, "என்னா இருக்கு" என்றார்.

மெரினா

"ம்ம்..கடை கீது"  என்று வந்த சென்னைத்தமிழ் பதிலில் கொஞ்சம் பேஸ்த்தடித்துதான் போய்விட்டார் அந்தப்பெண். 

லேசான கோபத்தோடு நகர்ந்த அந்தக்குடும்பத்தை "அட இன்னாம்மா நீயி.. அக்கா பொறிக்கிற மீன் வாசனை மெரினா பூராம் அடிக்குது. பாத்துகிட்டே கேக்குறீயே" என்றபடி சமாதானம் சொல்லி தட்டில் சோற்றைப் போட்டு  கொடுக்கிறார் சுந்தரி அக்கா. கடலில் குளித்த பசியில் சோற்றை அள்ளி உண்ணும் பெண்ணின் முகம் மாறுகிறது. அதன் ருசி அவரைக் கவர்ந்து விட்டதைக் காட்டிக் கொடுக்கிறது கண்கள். 

"சோறு எவ்வளவு" என்கிறார். 

"30 ரூபாதாம்மா..பயப்படாமா சாப்பிடு" என்கிறார் சுந்தரி 

'சுந்தரி அக்கா' கடைக்கு மதியம் 12 மணியில் இருந்து ஒன்றிரண்டாய் ஆட்கள் வரத்தொடங்கிவிடுகிறார்கள். ஆட்டோக்காரர்கள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள், சிறுசிறு வியாபாரம் செய்பவர்கள் என அடிமட்ட மக்கள் கூடிவிடுகிறார்கள். இந்தக் கடையில் சாம்பார் முதல் கருவாட்டுக்குழம்பு வரை எதுவுமே சுமார் ரகமில்லை. எல்லாமே சூப்பர்தான். 

"எம் புள்ள கண்ணன்தான் இங்க கடை போடுறதுக்கு காரணம். இவன் சின்ன வயசில ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவுடன் மெரினாவில இருக்கிற கடைக்கு சாப்பாடு கொடுக்குற வேலைக்கு வந்துடுவான். வீட்டுக்காரரு ட்ரைவர் வேலைக்கு போய்டுவாரு. நான் வீட்டுக்கிட்டவே இட்லிக்கடை போட்டிருந்தேன்." என்று சுந்தரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே "அக்கா இறா கொடு" என தட்டுடன் ஒருவர் வந்துவிட கண்ணன் தொடர்ந்தார். 

சுந்தரி அக்கா கடை

"அப்பல்லாம் இங்க பகல்ல 'பெரியவர் வீரமணி'  வருவார். அப்படி வரும்போதெல்லாம் என்னை ஸ்கூல் யூனிபார்மோடவே பார்த்திருக்காரு. ஒரு நாள் என்னைப் பக்கத்தில வரச்சொல்லி 'ஒரு வண்டி கொடுக்கச் சொல்றேன். கடை போட்டு வியாபாரம் பார்த்துக்கோ'ன்னு சொல்லிட்டு போய்ட்டார். வண்டியில் திண்பண்டம், டீக்கடைன்னு போட்டு அப்படியே சோத்துக்கடையும் ஆரம்பிச்சாச்சு. அம்மா வந்து கடையை  பாத்துக்கிட்டு, என்னை கேட்டரிங் படிக்க வச்சது. 17 வருஷமா இங்க கடை போட்டிருக்கோம்." என்றார். 

"எதைச் செஞ்சாலும் நம்மால முடிஞ்ச அளவுக்கு ஒழுங்கா செய்யணும்ன்னு நினைப்பேன். எனக்குத் தெரிஞ்சதை சமைச்சு வியாபாரம் பார்த்துகிட்டு இருக்கும்போது, என் ஒரு பையனை கேட்டரிங் படிக்க வச்சேன். அவன் படிச்சு வந்த பிறகுதான் கலப்படம் இல்லாத பொருட்களை எப்படி வாங்குறது; கடையில வாங்குறதைவிட நாமே தயாரிக்கிற மசாலா பொருட்களில்தான் செலவு குறைவு தரம் அதிகம்ன்னு நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தான். நான் இங்க எல்லாத்துக்குமே செக்குல ஆட்டின கடலை எண்ணைதான் பயன்படுத்துறேன். பல ஊருக்காரங்க வர்ற இடம். வேற காரணத்துக்காக வயிறு வலிச்சாலும் சாப்பாடு சரியில்லைன்னுதான் பேசுவாங்க. அதனால லாபம்லாம் கணக்கு பாக்காம, சமைக்கிறது மீன் பொரிக்கிறதுன்னு எல்லாமே கடலை எண்ணையிலதான். எனக்கு காசு முக்கியமில்ல தம்பி" என்றவரிடம் மீன் எப்படி இவ்வளவு டேஸ்டா இருக்கிறதுன்னு கேட்டோம்.   

"காலையில அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு நேரடியா போய் நல்ல மீனா பார்த்து  வாங்கிட்டு வருவேன். இப்ப மீன்பிடி தடைக்காலம் என்பதால மீன் வரத்தே இல்ல. அலைஞ்சு திரிஞ்சு வள்ளத்துல போய் பிடிச்சு வர்ற மீனுங்களா பார்த்து வாங்கிட்டு வந்தேன். இன்ன மீனுதான் கிடைக்கும், இன்ன விலைதாம் அப்படிங்கிறதே இல்ல. இன்னைக்கு என்ன மீன் ப்ரஷ்சா இருக்கோ அதைதான் வாங்குவேன். மீனு விலைக்கு தகுந்த விலையைதான் வச்சு விக்கிறது. இன்னைக்கு கருப்பு வவ்வால் பொறிச்சது 100 ரூபா. ஆனா இந்த விலைக்கு இவ்வளவு பெரிய மீன் கிடைக்காது. அது ரெகுலரா சாப்பிடுறவங்களுக்குத் தெரியும். நாளைக்கு விலை குறைச்சலா வாங்கினு வந்தா விலை மலிவான பொரிச்ச மீன் கிடைக்கும்" என்றார்.

சுந்தரி அக்கா கடை


எக்ஸ்பிரஸ் அவன்யூவிலும், போனிக்ஸ் மால்களில் மட்டுமே தென்படும் ‘ஹைஃபை’ உடைகளுடன்  அந்த இடத்துக்குப் பொருந்தாமல் கையில் தட்டேந்தி சாப்பிட்ட பெண்  சுந்தரியின் அருகில் வருகிறார். 

"அம்மா..ஊர்ல எங்க பாட்டி வீட்டில சாப்பிட்ட மாதிரியே இருந்துச்சு" என்று கையைப் பிடித்து சொல்லிவிட்டு போனார். 

"டேய்..அந்த பிள்ளைட்ட 20 ரூபா கம்மியா வாங்குடா. என்னை ஃபீலாக்கிடுச்சு" என்று குறும்பாக சொல்லி இறாலை கரண்டியில் அள்ளி தோசைக்கல்லில் போடுகிறார் சுந்தரி அக்கா. 

 

 

(சுந்தரி அக்காவின் கடை - மெரீனாவில் உள்ள நீச்சல் குளத்தின் வலது பக்கத்தில் உள்ளது.) 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெரினாவை கலக்கும் சுந்தரி அக்கா கடை. நன்றி: தினமலர்

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஃபேஸ்புக், யூடியூபால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு கொள்ளை லாபம்!

 

 
0000sundhari

 

ஃபேஸ்புக், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களால் யாருக்கு லாபமோ இல்லையோ சுந்தரி அக்காவுக்கு மட்டும் லாபமோ லாபம்! 24 மணி நேரமும் இணையத்திலேயே குடும்பம் நடத்துபவர்களுக்கு சுந்தரி அக்காவைத் தெரியாமலிருக்க முடியாது. ஃபேஸ்புக்கிலும், யூ டியூபிலும் சுந்தரி அக்காவைத் தேடிப்பாருங்கள், அவரது ரசிக சிகாமணிகள் சுந்தரி அக்காவின் சமையல் சேவையைப் பற்றிப் பக்கம், பக்கமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஏனெனில், சென்னை போன்ற பெருநகரங்களில் நட்சத்திர உணவகங்களுக்குச் சென்று மதியச் சாப்பாடு சாப்பிட்டால் இன்றைய ஜிஎஸ்டி யுகத்தில் பில்லைப் பார்த்ததும் பிரஸ்ஸர் எகிறி ஹார்ட் அட்டாக் வரக்கூடிய நிலையிலிருக்கும் நம் அனைவருக்குமே மதிய உணவை மீன், கறி, முட்டை, சிக்கன் என சகலவிதமான செளகரியங்களுடன் வெறும் 30, 400 ரூபாய்களுக்குள் முடித்து திருப்தியாக ஏப்பம் விட்டுக் கொள்ள அனுமதிக்கும் சுந்தரி அக்கா மாதிரியானவர்களின் சாப்பாட்டுக்கடை நிச்சயம் தேவகிருபையில்லாமல் வேறென்ன?! விலை குறைவு என்பது மட்டுமல்ல, வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்காவண்ணம் தனது கடையில் சுத்தம், சுகாதாரத்தையும் தொடர்ந்து பேணி வருகிறார் சுந்தரி அக்கா. இவரது உணவகத்தின் பெயர் கானாவூர் உணவகம். ஆனால் நெட்டிஸன்களுக்கு ‘சுந்தரி அக்கா கடை’ என்று சொன்னால் தான் சட்டெனப் புரியும். இங்கே அசைவ உணவுகள் மட்டுமல்ல சைவ உணவு வகைகளும் கிடைக்கும். முன்பெல்லாம் மதிய உணவு மட்டும் தான் சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருந்ததாகவும் தற்போது வெகு தூரத்திலிருந்து வரும் சில வாடிக்கையாளர்களுக்காக இரவுச் சாப்பாடும் தயார் செய்து தருவதாகவும் சுந்தரி அக்கா யூ டியூப் வீடியோ ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

 

சுந்தரி அக்கா கடையில் அப்படி என்ன விசேஷம்?!

மெரினா பீச்சில் சாப்பாட்டுக் கடை போட்டிருக்கும் சுந்தரி அக்கா கடையில் சாப்பிட இப்போதெல்லாம் கூட்டம் கும்முகிறதாம். வாடிக்கையாளர்களில் ஒருவர், தயவு செய்து டோக்கன் முறை இல்லாவிட்டால் சுந்தரி அக்கா கடைக்கென தனி ஆப் மூலமாக முன்னரே ஆர்டர் செய்துகொள்ளும் வசதி என எதையாவது ஏற்பாடு செய்யுங்கள். சுந்தரி அக்கா கடையில் சாப்பிடும் ஆசையுடன் நேரடியாக கடை இருக்கும் இடத்துக்கே வந்தால் இங்கிருக்கும் கூட்டத்தைச் சமாளித்து சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிப்பதற்குள் மூச்சு முட்டி உயிர் போகிறது என்று  குதூகலமாகத் தனது சாப்பாட்டு அனுபவத்தை விவரிக்கிறார். இப்படி கூட்டம், கூட்டமாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு சுந்தரி அக்கா சமைக்கும் உணவுகளில் அப்படி என்ன விஷேசம் என்று சுந்தரி அக்காவிடமே கேட்டால்;

 

 
0000sundhari

 

‘காலையில 3 மணிக்கெல்லாம் காசிமேட்டுக்குப் போய் மீன் வாங்கி வருவேன். என் கடையில மீன் எல்லாம் அன்னன்னைக்கே வாங்கி, அப்பப்போ வெட்டி சமைக்கிறது தான். 3 மணிக்கு எழுந்து மீன், கோழி, கறி, மரக்கறி எல்லாம் வாங்கியாந்து வச்சாத்தான் அதையெல்லாம் பக்குவமா சுத்தப் படுத்தி நறுக்கி சமையலுக்குத் தயார் செஞ்சு சமைச்சு முடிச்சு 1 மணிக்கு டான்னு சாப்பாட்டுக் கடையைத் திறக்க சரியா இருக்கும். என் கடைல எப்பவுமே 1 மணிக்கு சாப்பாடு தயாரா இருக்கும். நைட்டு பத்துமணி வரைக்கும் கடை தான். அப்புறம் 11 மணிவாக்குல கடையை மூடிட்டு தூங்கப் போவேன். மறுநாள் 3 மணிக்கெல்லாம் எந்திருக்கனுமே. எனக்கு தினமும் தூக்கம் வெறும் 4 மணி நேரம் தான். இல்லனா 1 மணிக்கு எந்தக்குறையுமில்லாம எல்லா கஸ்டமர்ங்களுக்கும் சாப்பாடு போட முடியாத போய்டுமே. அதான். இங்க அல்லாமே ஃப்ரெஷ் மீனு,  கொஞ்சம் மின்னால கடல்ல எண்ணெய் கொட்டிச்சுன்னாங்களே அப்பக்கூட நான் நாகபட்டிணத்துல இருந்து ஐஸ்பொட்டில மீன் எறக்கி என் கஸ்டமர்ங்களுக்கு சாப்பாடு செஞ்சு போட்டேன். அவங்க அதையெல்லாம் நேர்ல பார்க்கறாங்க இல்ல. நான் என்ன பொய்யா சொல்லப்போறேன். இங்கே சமையலும் கஸ்டமர்ங்க முன்னாடி வச்சுத்தான் நடக்குது. நான் என்னல்லாம் பொடி போடறேன், எப்படியெல்லாம் சமைக்கிறேன்? நான் எப்படியெல்லாம் மீன் சுத்தம் செய்றேன்னு அல்லாத்தையும் அவங்க பார்க்கறாங்க. அது அவங்களுக்கு பிடிச்சிருக்கு சுத்தமா சமைக்கிறாங்க, சாப்பாடு ருசியாவும் கீதுன்னு தான் ஒரு நம்பிக்கைல என் கடைல வந்து சாப்பிட்டுப் போறாங்க. அப்புறம் இப்ப ஃபேஸ்புக் எல்லாம் வந்ததாங்காட்டி என் கடைல சாப்பிட்டுப் போறவங்க அதுல போய் எழுதி வைக்கிறாங்க, அதைப் பார்த்தும் இப்ப நிறைய பேர் இங்க சாப்பிட வர்றாங்க. அதான் நம்ம கடையோட விசேஷம். என்கிறார் சுந்தரி அக்கா!

மீனோ, கறியோ மிஞ்சிப்போனா என்ன செய்வீங்க, வச்சிருந்து மறுநாள் சமைப்பீங்களா? என்றால்;

அய்யே... அதெல்லாம் கூடாது, நம்மள நம்பி சாப்பிட வரவங்கள ஏமாத்தலாமா, அது கூடாது,  இன்னைக்கு இவ்ளோ மிஞ்சப் போகுதுன்னு சமைக்கிறவங்களுக்கு முன்னவே தெரிஞ்சுடும்ல,  ராத்திர சாப்பிட வர கஸ்டமருங்க கிட்ட, இன்னைக்கு இவ்ளோ மீந்திருக்கு பாதி விலைக்குத் தாரேன் நீங்க எடுத்துக்குங்க.. இதை வச்சிருந்து நாளைக்கு வர கஸ்டமருங்களுக்குத் தர எனக்கு விருப்பமில்லன்னே கேட்டுப் பார்ப்பேன். நிறைய பேர் சாப்பாடு ருசியா இருக்கறதாலயும், விலை குறைவுங்கறதாலயும் இல்லாத ஏழை, பாழைங்க வாங்கிச் சாப்பிட்டுப்பாங்க. வச்சிருந்து மறுநாள் அதையே சமைச்சுப் போட்டா என் கடைக்கு இவ்ளோ கூட்டம் வருமா? அதெல்லாம் நம்பிக்கை! என்கிறார் சுந்தரி அக்கா.

2000 ஆவது ஆண்டில் கணவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட கடை வேண்டாம் என ஒதுங்கியவரை மெரினா பீச்சில் சுந்தரி அக்கா கடையின் அருகிலிருந்த ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் தான் ‘அக்கா, மறுபடியும் சாப்பாட்டுக்கடையைப் போடுங்க, நாங்க இருக்கோம் உங்களுக்கு’ என்று ஊக்கப்படுத்தி மீண்டும் பீச்சில் மீன் கடையும், சாப்பாட்டுக்கடையும் போட உதவியிருக்கிறார்கள். அந்த நன்றியை மறவாமல், ஒவ்வொரு ஆண்டும் தன் கணவர் இறந்த தேதியில் அவரது நினைவு நாளன்று அக்கம் பக்கமிருக்கும் ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் அசைவ உணவு வகைகளைச் சமைத்து இலவசமாகச் சாப்பாடு போட்டு வரும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறாராம் சுந்தரி அக்கா!

சாப்பாட்டுக் கடை வருமானத்தை வைத்தே தனது இரு மகன்களின் ஒருவரை கப்பல் படிப்பும், சமையற்கலையும் படிக்க வைத்தேன் என்கிறார் சுந்தரி அக்கா.

 
 
0000sundhari

 

சுந்தரி அக்கா கடையைப் பற்றி இணையத்தில் வாசித்தும், வீடியோ பார்த்தும் அறிந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களும் வந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள் இப்போது. இதை, சுந்தரி அக்கா ஸ்டைலில் சொல்வதென்றால், ‘என் கடைல இப்போ A டு X   வரைக்கும் ஜனங்க வந்து சாப்பிட்டுப் போயிட்டாங்க Y யும் Z ம் தான் பாக்கி, அப்படியாப்பட்ட மக்களும் வந்து சாப்பிடத்தான் போறாங்க. நம்ம கடை ருசி அப்படி என்கிறார் அந்த வெள்ளந்தி சாப்பாட்டு வியாபாரி.

அவரது நம்பிக்கை பலிக்கட்டும். 

எளியவர்களின் கடின உழைப்பும், முயற்சியும் எப்போதும் வெல்லும் என்பதற்கு சுந்தரி அக்கா ஒரு உதாரணம்.

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/dec/01/marina-beach-sundhari-akka-kadai-2818522--2.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.