Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைக்குழந்தைகளுடன் வியாபாரத்திலீடுபட்ட ஐவர் கைது

Featured Replies

கைக்குழந்தைகளுடன் வியாபாரத்திலீடுபட்ட ஐவர் கைது 

Published by Priyatharshan on 2017-10-12 23:33:04

 

வவுனியா நகரப்பகுதியில் ஊதுபத்தி பொருட்கள் விற்பனையில் பல மாதங்களாக சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த  5 பேரை இன்று இரவு 7 மணியளவில் குடியிருப்பு  பூங்கா வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

20171012_175114.jpg

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

 

கடந்த பல மாதங்களாக புத்தளம் பகுதியிலிருந்து வவுனியா நகரப்பகுதிகளில் ஊதுபத்திகளை வீதியோரங்களில் விற்பனை செய்து வருவதாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

20171012_175155.jpg

இதையடுத்து அவர்களை அவதானிப்பதற்குச் சென்ற வவுனியா உதவிப்பிரதேச செயலாளர் இன்று மாலை குறித்த சிறுவர்களுடனும் இரண்டு மாத கைக்குழந்தையுடனும் சிலர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். உடனடியாக இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு ஊடகவியலாளர்களின் உதவியுடன் குறித்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். 

20171012_175318.jpg

குறித்த நபர்கள் வியாபார நிலையங்களுக்கு முன்பாக சிறுவர்களையும், கைக்குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து குடியிருப்பு பூங்கா வீதியில் வைத்து இன்று இரவு பொலிசாரினால் ஒரு கைக்குழந்தை உட்பட 4 சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களின் பாவனைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி என்பவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர்கள் ஒரு கூட்டாக செயற்பட்டே இவ் வியாபரத்தை மேற்கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது. 

இவர்கள் மீது சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வழங்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிசாருடன் இணைந்து சிறுவர் மற்றும் மகளீருக்கான  பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/25688

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.