Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நொச்சிமோட்டையில் வாள்வெட்டு!

Featured Replies

நொச்சிமோட்டையில் வாள்வெட்டு!

 

 

ஒமந்தை, நொச்சிமோட்டையில் இன்று (13) மாலை 3 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த மூவர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6_Sword.jpg

புதியசின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த  இளைஞர் குழுவுக்கும் நொச்சிமோட்டை இளைஞர் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கமே மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இதுபற்றி அறிந்த ஓமந்தை பொலிஸார், காயமடைந்த மயூரன் (29), நிதர்சன் (22), சங்கீதன் (38) ஆகிய மூவரையும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காட்டுக் கத்தி, முற்கம்பி, கத்திகள் என்பனவற்றையும் கைப்பற்றினர்.

குறித்த இரு கிராமங்களையும் சேர்ந்த இளைஞர் குழுக்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

http://www.virakesari.lk/article/25736

  • தொடங்கியவர்

வவுனியாவில் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில் அனுமதி

 

வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் இன்று மாலை குறித்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில் அனுமதி

ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் உணவகத்திற்கு முன்பாக இன்று மதியம்  புதிய சின்னக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும், நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி பின்னர் வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த மூவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வவுனியாவில் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில் அனுமதி

அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காட்டுக்கத்தி, முள்ளுக்கம்பி, கத்திகள், என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

தற்போது குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் 22, 29 மற்றும் 38 வயதுடைய நபர்களே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில் அனுமதி

https://news.ibctamil.com/ta/internal-affairs/Shouting-in-Vavuniya--Three-admitted-to-hospital

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.