Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுத்தடிப்பு வேண்டாம்!

Featured Replies

இழுத்தடிப்பு வேண்டாம்!

 

வடக்­கில் படை­யி­னர் வசம் உள்ள மக்­க­ளின் காணி­களை விடு­விக்க இன்­னும் 2 வருட கால அவ­கா­சம் தேவை என்று இரா­ணு­வம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. அதனை அர­சும் ஆமோ­தித்­தி­ருக்­கி­றது. இது தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­ வ­ரை­யில் ஏற்­பு­டையதல்ல.

தாங்­கள் ஆட்­சிக்கு வந்­த­தும் மக்­க­ளின் காணி­கள் அனைத்­தும் அவர்­க­ளி­டமே உட­ன­டி­யா­கத் திருப்பி ஒப்­ப­டைக்­கப்­ப­டும் என்று கூறியே மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரண்டு பேரும் ஆட்­சிக்கு வந்­தார்­கள்.

வடக்­கில் நடந்த பரப்­பு­ரைக் கூட்­டங்­கள் எல்­லா­வற்­றி­லும் அவர்­க­ளும் அவர் க­ளு­டன் கூடவே வந்த சந்­தி­ரிக்கா அம்­மை­யா­ரும் இந்த வாச­கத்தை மறக்­கா­மல் முழங்­கி­னார்­கள்.

ஆனால், பத­விக்கு வந்து இரண்டு வருட காலம் முழு­மை­யா­கப் பூர்த்­தி­யாகிய நிலை­யி­லும் படைகள் வசம் உள்ள காணி­ க­ளில் பெரும்­பா­லா­னவை விடு­விக்­கப்­ப­ட ­வில்லை.

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் மட்­டும் சில ஆயி­ரம் ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­டன. அங்­கும்­கூட இன்­ன­மும் 5 ஆயி­ரம் ஏக்­கர் மக்­கள் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டி ­யுள்­ளன.

தவிர, வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்­னார், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளி­லும் பல ஆயி­ரம் ஏக்­கர் மக்­கள் காணி­கள் படை­யி­னர் வசம் உள்­ளன என்று அரச புள்ளி விவ­ரங்­களே கூறு­கின்­றன.

இவற்­றை­யெல்­லாம் விடு­விப்­ப­தற்கு ஒரு காலத் திட்­டம் தயா­ரித்து படிப்­ப­டி­யாக அவற்றை விடு­விக்க வேண்­டும் என்று அரச தலை­வ­ரும் தலைமை அமைச்­ச­ரும் படை­யி­ன­ருக்கு அறி­வு­றுத்­தி­யி­ருந்­த­னர்.

அந்த அறி­வு­றுத்­த­லுக்கு 2 வருட காலத்­தின் பின்­னர் மேலும் இரண்டு வருட காலத்­திற்­குள் தாம் காணி­களை விடு­விப்­போம் என்று இரா­ணு­வத்­தி­னர் கூறு­கின்­ற­னர்.

அதி­லும் மக்­க­ளின் காணி­களை முற்­று­மு­ழு­தாக விடு­விப்­போம் என்று அவர்­கள் கூற­வில்லை. பாது­காப்­புத் தேவைக்­கான காணி­கள் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டும் என்­றும் அப்­ப­டிக் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டும் மக்­க­ளின் காணி­க­ளுக்­குப் பதி­லாக மாற்­றுக் காணி­கள் வழங்­கப் படும் என்­றும் கூறி­யி­ருக்­கி­றார்­கள்.

தேர்­தல் வாக்­கு­று­தி­க­ளில் அர­சி­யல் தலை­வர்­கள் கூறி­ய­தற்கு மாறா­ன­தாக இது இருக்­கின்­றது. மக்­க­ளின் காணி­கள் அனைத்­தும் அவர்­க­ளி­டமே திருப்பி வழங்­கப்­ப­டும் என்­று­தான் தலை­வர்­கள் வாக்­கு­று­தி­ய­ளித்­தார்­கள்.

ஆனால், இரா­ணு­வமோ காணி­கள் முழு­மை­யாக வழங்­கப்­ப­டாது என்று கூறு­கின்­றது. தங்­க­ளுக்­குத் தேவை­யான காணி­கள் வசப்­ப­டுத்­தப்­ப­டும் என்­றும் கூறு­கின்­றது. இது தமிழ் மக்­களை ஏமாற்­றும் செயல்.

வடக்­கில் அள­வுக்­க­தி­க­மான இரா­ணு­வத்­தி­னரை வைத்­தி­ருப்­ப­தா­லேயே அவர்­க­ளுக்கு காணி­க­ளும் அள­வுக்­க­தி­க­மா­கத் தேவைப்­ப­டு­கின்­றன. இரா­ணு­வத்­தி­னர் 1980களில் இருந்த நிலை­க­ளுக்­குத் திரும்ப வேண்­டும் என்ற கோரிக்­கையை அழுத்­த­மாக முன்­வைத்து அதற்­கான தமிழ் மக்­க­ளின் ஆணை­யை­யும் பெற்­றி­ருந்­தது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

இந்த அர­சுக்கு வெளி­யி­லி­ருந்து ஆத­ர­வ­ளித்து வரும் கூட்­ட­மைப்பு மக்­கள் தனக்­க­ளித்த ஆணையை வலி­யு­றுத்தி செயற்­ப­ட­வேண்­டிய அவ­சி­யம் இப்­போது வந்­துள்­ளது.

காணி­களை விடு­விப்­ப­தற்கு இன்­ன­மும் இரண்டு வருட காலம் என்­பது காலத்தை இழுத்­த­டிக்­கும் போக்கே. தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி முல்­லைத்­தீவு மாவட்­டம் கேப்­பாப்­பி­ல­வில் 220 நாள்­க­ளுக்கு மேலாக போராட்­டம் நடத்தி வரும் மக் க­ளுக்கு அவர்­க­ளின் காணி­களை விடு­விப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்து 6 மாதங்­கள் கடந்­த­போ­தும் அது நிறை­வேற்­றப்­ப­ட­ வில்லை.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது 2 வருட காலத்­தில் காணி­களை விடு­விப்­ப­தாக இரா­ணு­வம் அளித்­தி­ருக்­கும் வாக்­கு­றுதி மட்­டும் அச்­சொட்­டாக அப்­ப­டியே செயற்­ப­டுத்­தப்­ப­டும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

அந்த 2 வருட காலத்­தின் பின்­னர் மேலும் ஒரு வருட காலத்­தில் இந்த அர­சின் ஆயுள் காலம் முடிந்­து­வி­டும். அது­வரை இந்­தப் பிரச்­சி­னையை இரா­ணு­வம் இழுத்­த­டித்­து­விட்­டால், மீண்­டும் புதிய அரசு இதே பழைய பல்­ல­வி­யைப் பாடி­ய­படி காலத்தை இழுத்­த­டிக்க ஆரம்­பிக்­கும்.

இது­தானே ஆண்­டாண்டு கால­மா­கத் தமி­ழர்­கள் எதிர்­நோக்கி வரும் அவ­லம். எனவே காணி விடு­விப்பை இழுத்­த­டிக்­கா­மல் ஒரு சில மாதங்­க­ளுக்­குள் அதனை முடிக்க கூட்­ட­மைப்­பும் பன்­னாட்­டுச் சமூ­க­மும் கொழும்­புக்­குப் போதிய அழுத்­தம் கொடுக்­க­வேண்­டும்.

http://newuthayan.com/story/36570.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.