Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி நாளை யாழ் விஜயம்; போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை

Featured Replies

மைத்திரி நாளை யாழ் விஜயம்; போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை

 

மைத்திரி நாளை யாழ் விஜயம்; போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் ஜனாதிபதி பயணிக்கும் பகுதியில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ செய்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகம் இன்றைய தினம் இதற்கான கோரிக்கையை யாழ் நீதவான் நீதிமன்றத்திற்கு விடுத்திருந்தது.

இதற்கமைய நாளைய தினம் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ அல்லது கவனயீர்ப்பு போராட்டங்களோ நடத்த முடியாத வகையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் வடமாகாணத்தில் பாரிய ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை ஜனாதிபதி குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடும் என்ற காரணத்தினால் நீதிமன்றத்தில் பொலிஸார் தடையுத்தரவை கோரியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவிற்குத் தெரிவித்தது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/courts-banned-protest-in-jaffna

  • தொடங்கியவர்

நீதிமன்ற தடை உத்தரவைப் யாழ்ப்பாண காவ்லதுறையினர் பெற்றுள்ளனர்:-

Judgement-300x225.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம்  யாழப்பாணத்துக்கு  சென்றுள்ள  நிலையில், போராட்டம், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்காதவாறும், யாழ்ப்பாண காவ்லதுறையினர்  நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இதற்கமைய, யாழ்ப்பாணத்துக்கு அருகில், யாழ். இந்துக் கல்லூரி, யாழ் ஆளுநர் காரியலயத்துக்கு அருகில் எவ்வித எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ள முடியாதவாறு,  இந்த  நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, எம்.கே..சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும்  போராட்டங்களில்  பங்கேற்க முடியாதவாறு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/archives/45280

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.