Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் நியூசீலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 231

 

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஐம்பது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்களை இழந்த நியூஸிலாந்து அணி மொத்தமாக 230 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

7_NZ.JPG

இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இன்று புனேயில் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது.

பகலிரவு ஆட்டமாக ஆடப்படும் இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி துடுப்பாடத் தீர்மானித்தது. எனினும், சீரான இடைவெளியில் விக்கட்களை இழந்த அவ்வணி, ஐம்பது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்களை இழந்து 230 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

நியூஸிலாந்து சார்பில் ஹென்றி நிக்கலஸ், கொலின் டி கிராண்டோம் ஆகிய பின்வரிசை ஆட்டக்காரர்கள் முறையே 42 மற்றும் 41 ஓட்டங்களைப் பெற்றனர். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் புவனேஷ்குமார் அபாரமாகப் பந்துவீசி மூன்று விக்கட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்களைப் பறித்தனர்.

தற்போது இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.

http://www.virakesari.lk/article/26277

  • தொடங்கியவர்

பழி தீர்த்தது இந்தியா!

நியூஸிலாந்துக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

12_India.JPG

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, ஐம்பது ஓவர்கள் முடிவில் 230 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

231 என்ற ஓட்ட எண்ணிக்கையை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, நாற்பத்தாறு ஓவர்களில் 232 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் 68 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றியையடுத்து, மூன்று ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் 1-1 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சம நிலையில் இருக்கின்றன.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி கான்பூரில் நடைபெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/26282

  • தொடங்கியவர்

தவண், தினேஷ் கார்த்திக் அரைசதங்களுடன் இந்திய அணி போராடி வெற்றி

 

 
dk1

தினேஷ் கார்த்திக், தோனிக்குக் கை கொடுக்கும் மார்டின் கப்தில்.   -  படம். | ஏ.பி.

புனேயில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தின் 230 ரன்களை விரட்டிய இந்திய அணி 46வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்தது.

அடித்து ஆட கடினமான பிட்சில், நியூஸிலாந்தின் கிடுக்கிப் பிடி பந்து வீச்சு, நல்ல களவியூகம் ஆகியவற்றுக்கு எதிராக இந்திய அணி இறுதியில் தினேஷ் கார்த்திக் உறுதியினால் சவுகரியமாக வெற்றி பெற்றது போல் தோன்றினாலும் உண்மையில் இந்திய அணியை வெற்றிக்காக நியூஸிலாந்து போராட வைத்தது என்றே கூற வேண்டும்.

இப்படிக் கூற காரணமுள்ளது, இந்திய பிட்ச்களில், ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக ஆடும் இந்திய அணிக்கு எதிராக, நியூஸிலாந்தின் இடது கை ஸ்பின்னர் சாண்ட்னர் வீசியது மிகுந்த கவனத்துக்குரியதே. சாண்ட்னர் தனது வேகம், லெந்த், பிளைட் என்று மாற்றிக் கொண்டேயிருந்தார், இதனால் அவரை அடித்து ஆடுவதற்கு இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர், அருமையாக ஆடிய தினேஷ் கார்த்திக்கே இருமுறை அவர் பந்தில் பீட் ஆனார். நல்ல பீட்டன், பந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி மட்டையின் விளிம்பைக் கடந்து சென்றது. 10 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே கொடுத்து அவர் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார். 10 ஓவர்களில் ஒரேயொரு சிக்சரை மட்டுமே விட்டுக் கொடுத்தார் சாண்ட்னர். ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. சிறிய இந்திய மைதானங்களில் அயல்நாட்டு ஸ்பின்னர் ஒருவர் 40 ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுத்து இந்திய அணியைப் போராட வைத்தது நிறைய பாராட்டுதலுக்குரியது.

ஆனால் வர்ணனையில் ஒரு வர்ணனையாளர் மட்டுமே சாண்ட்னரை பாராட்டினார். மற்றபடி இந்திய வீரர்களை புகழ்வதற்கே நேரம் சரியாக இருந்தது, அதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்ன, 140-145 கிமீ வேகத்தில் கூடுதல் பவுன்ஸுடன் வீசி இந்திய பேட்ஸ்மென்களின் சவுகரிய நிலையைக் கேள்விக்குட்படுத்தினார், இவரும் 8 ஓவர்களில் 1 மெய்டனுடன் 21 ரன்களுக்கு ஷிகர் தவன் விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷிகர் தவண் இவரது வேகமறியாமல் மேலேறி வந்து ஆடப்போய் பந்து வேகமாக வர திணறி கேட்ச் கொடுத்து வெளியேறினார். டிம் சௌதி 9 ஓவர்களில் 60 ரன்களையும் டிரெண்ட் போல்ட் 10 ஓவர்களில் 54 ரன்களையும் கொடுத்தனர்.

காரணம் இவர்கள் இருவரும் குறைந்த இலக்கு என்பதால் இந்திய பேட்ஸ்மென்களை வீழ்த்துவதற்காக சில பல ஷாட் பிட்ச் பந்துகளை வீசினர், இதனால் ரன்களை வழங்க நேரிட்டது.

இந்திய அணியில் முதலில் ரோஹித் சர்மா 19 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் சௌதி பந்தில் பேலன்ஸ் தவறி ஷார்ட் மிட்விக்கெட்டில் மன்ரோவுக்கு கேட்சிங் பயிற்சி அளித்து வெளியேறினார்.

விராட் கோலி, ஷிகர் தவண் இணைந்து அதன் பிறகு ஸ்கோரை கொஞ்சம் வேகமாகவே உயர்த்தினர். தவண் ஏற்கெனவே ஒரு அப்பர் கட் பவுண்டரியையும் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரியையும் அடித்திருந்தார். மேலும் சவுதியை மிக அருமையாக பாயிண்ட் கவர் இடைவெளியில் ஒரு பவுண்டரியையும் அடித்தார் தவண். கோலி இறங்கி சௌதி பந்தை ஸ்கொயர் லெக் பிளிக் பவுண்டரி அடித்து தொடங்கினார்.

7-வது ஓவரில் சௌதி, விராட் கோலிக்கு ஷார்ட் பிட்ச் பந்து முயற்சியை மேற்கொள்ள முதலில் ஸ்கொயர் லெக்கில் ஒரு புல்ஷாட் பவுண்டரி அடித்தார், அதே ஓவரில் மீண்டும் தவணுக்கு ஒரு ஷார்ட் பிட்ச் வீச தவன் அதனை முறையாக ஸ்கொயர்லெக்கில் சிக்சருக்குத் தூக்கினார். இதே ஓவரில் மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து தவணின் மூக்கு உயரத்துக்கு வர திணறினார், எட்ஜ் என்று மிகப்பெரிய முறையீடு எழுந்தது ரிவியூவில் இல்லை என்று முடிவானது. ஷார்ட் பிட்ச் பந்துகள் உயரம் குறைவாக வரும்போது விளாசும் தவண், மூக்குயரம் வந்த போது திணறியது தெரிந்தது.

சிறிய மைதானம் என்பதால் கோலி, போல்ட்டின் ஷார்ட் பிட்ச் பந்தில் பிழைத்தார். ரவுண்ட் த விக்கெட்டில் வந்து கோலியின் இடது தோள்பட்டைக்கு சற்றே கூடுதல் உயரத்தில் பவுன்சர் வீச கோலி புல்ஷாட்டை சரியாக ஆடவில்லை, ஆனாலும் சிறிய பவுண்டரி என்பதால் பந்து சிக்சருக்குப் பறந்தது. மீண்டும் மில்ன பந்தை கவர் ட்ரைவ் ஆட நினைத்தார் கோலி, பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு மிட் ஆன் பீல்டரைக் கடந்து பவுண்டரி ஆனது, கொஞ்சம் டைமிங்கில் கோலி திண்டாடினார்.

10 ஓவர்களில் 64 ரன்களை இந்தியா எடுக்க அதில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று விரைவுத் தொடக்கம் கண்டது. சாண்ட்னர் வீச வந்த போது மீண்டும் கோலி தொடையில் வாங்க எல்.பி.முறையீடு எழுந்தது. இப்படியேப் போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் கொலின் டி கிராண்ட்ஹோம் பந்து வீச வந்தார், 5வது பந்தில் பந்தின் தையலை குறுக்காக வைத்து வீசினார் கிராண்ட் ஹோம் இதனால் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் கிடைத்தது, உடலை விட்டு விலகி மட்டையைக் கொண்டு சென்று டிரைவ் ஆட முயன்ற விராட் கோலி எட்ஜ் செய்ய விக்கெட் கீப்பர் லேதம் மிக அருமையாகப் பிடித்தார். இந்தியா 13.5 ஒவர்களில் 79/2.

கார்த்திக், தவண் அரைசதங்கள்:

கோலி அவுட் ஆகி இறங்கிய கார்த்திக் அதே ஓவரில் பேக்வர்ட் பாயிண்ட், தேர்ட்மேன் இடையே பவுண்டரியுடன் எண்ணிக்கையைத் தொடங்கினார். கடைசியில் மிக அருமையான கவர் டிரைவில் போட்டியை வெற்றி பெறச் செய்தார், இடையில் கொஞ்சம் போராடவே செய்தார் கார்த்திக். சரளமாக ஆடியதாகக் கூற முடியாது.

தவணும் இவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 66 ரன்களைச் சேர்த்தனர். கார்த்திக்கும் பாண்டியாவும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 59 ரன்களையும் தோனியுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 28 ரன்களையும் சேர்த்தார் தினேஷ் கார்த்திக்.

ஷிகர் தவண் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 84 பந்துகளில் 68 ரன்களை எடுத்து மில்ன பந்தில் அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா 31 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து சாண்ட்னர் வீசிய புல்டாஸை முன் கூட்டியே ஸ்வீப் ஆடும் முயற்சியில் ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். தோனி பலத்த கரகோஷத்துக்கிடையே இறங்கி 3 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார், இந்த 3 பவுண்டரிகளில் ஒரு பிளிக் பிரமாதம் இன்னொன்று கவர் திசையில் அடித்த பஞ்ச் மிகப்பிரமாதம். தினேஷ் கார்த்திக் 92 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article19919502.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

சரி அடுத்த முறை பார்ப்பம்.:)

  • தொடங்கியவர்

புவனேஷ்வர் குமார் - இந்திய அணியின் சைலன்ட் மேட்ச்வின்னர்! #INDvNZ

புவனேஷ்வர் குமார் - இளம் இந்திய அணியின் பவுலிங் அட்டாக்குக்கு, இன்று இவர்தான் முதல்வன். நியூசிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றவரிடம் எந்த அலட்டலும் இல்லை. ஃபீல்டிங் நிற்கும்போது, பவுலிங்கில் பவுண்டரிகள் வழங்கும்போது, முன்னணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தும்போது, ஆட்டநாயகன் விருது வாங்கும்போது, இவ்வளவு ஏன், ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பர்ப்பிள் கேப் வாங்கும்போதும்கூட அதே எக்ஸ்ப்ரஷன். கொஞ்சம்கூட அவரிடம் ஆர்ப்பரிப்போ, ஆக்ரோஷமோ நாம் கண்டதில்லை. சைலன்டாக இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் புவி!

புவனேஷ்வர் குமார்

 

முதல் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி வீழ்ந்ததும், வீரர்கள் மீதான பிரஷர் எகிறியது. ஆனால், பயங்கர பிளானோடு வந்திருந்தார் புவி. மும்பையில் நல்ல தொடக்கம் தந்திருந்த முன்ரோவை வீழ்த்த, அடிக்கடி விரல் நுனியிலிருந்து ரிலீஸ் செய்யும்  'நக்கிள் பால்' (Knuckle ball) வீசினார். ஆனால், மற்றொரு ஓப்பனரான குப்திலுக்கு வேரியேஷன் காட்டினார். குட் லென்த்தில் வீசப்பட்ட பந்துக்கு குப்தில் காலியாக, அவர் ப்ளானின்படி நக்கிள் பாலின் மாயத்தில் வீழ்ந்தார் முன்ரோ. நியூசிலாந்து படகை கரைசேர்த்துக் கொண்டிருந்த ஹென்றி நிக்கோல்ஸையும் தன் அடுத்த ஸ்பெல்லில் போல்டாக்கினார். 10 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள். தன் முதல் ஸ்பெல் (5-0-18-2) முடிவின்போதே நியூசி-யின் ஆட்டத்தை அடக்கியதுதான் அவர் ஆட்டநாயகன் ஆகக் காரணம். இவரை 11 வீரர்களில் ஒருவர் என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது. பேட்டிங்குங்குக் கோலி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு பௌலிங்குக்கு புவி முக்கியம். 

ஒருநாள் கிரிக்கெட்டில் தான் வீசிய முதல் பந்திலேயே உலகை உறையவைத்தவர் புவி. ஆறாவது ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட அந்தப் பந்து, உச்சகட்ட ஸ்விங் ஃப்ரண்ட்லி பிட்சில்கூட ஆஃப் ஸ்டிக்குக்கு வெளியேதான் போயிருக்கும். ஆனால், புவனேஷின் அந்த சர்ப்ரைஸ் பால், முகமது ஹஃபீசின் ஆஃப் ஸ்டம்பைப் பதம்பார்த்தது. என்ன நடந்தது என்று தெரியாமல், ஆடிப்போய் நின்றிருந்தார் ஹஃபீஸ். வெகுநாள்களாக அப்படியொரு ஸ்விங்கை, இந்திய பௌலர் ஒருவரிடம் பார்த்திடாத இந்திய ரசிகர்களுக்கும் அது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அடுத்த ஜாகீர் இவர்தானோ என மகிழ்ந்தனர். இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா, முகமது ஷமி, உனத்கட் என்று சீசனுக்கு சீசன் இந்திய அணிக்கு பவுலர்கள் வருவதும் போவதுமாக இருக்க, ஜாகீர் கானுக்கு ஒரு 'சக்சஸர்' இல்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. புவியின் அடுத்தடுத்த பெர்ஃபாமென்ஸ்கள், அன்று அவரை ஜாகீருக்கு மாற்றாக முன்னிருத்தவில்லை.  நல்ல ஸ்விங், நல்ல டெக்னிக். ஆனால், அதிகம் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. 2015 உலகக்கோப்பையில் பிளேயிங் லெவனிலேயே இடம் கிடைக்கவில்லை. ஷமி, உமேஷ் இருவரும் 'விக்கெட் டேக்கர்ஸ்' என்ற வகையில் அணியில் இடம்பிடிக்க, புவியின் இடம் கேள்விக்குள்ளானது.

புவி

ஒரு சிலரின் 'கம்-பேக்'குகள் மிகவும் பேசப்படுவதாய் இருக்கும். ஆனால் புவியின் கம்-பேக் கூட சத்தமில்லாமல்தான் நடந்தேறியது. 2016 ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முதல் காரணம் இவர்தான். அதற்குப் பிறகுதான் முஸ்தாஃபிசுர், வார்னர் எல்லாம். அதுவரை ஸ்விங்கையே பிரதான ஆயுதமாகக் கொண்டிருந்த அவர், ஸ்டம்புகளைக் குறிவைக்கத் தொடங்கினார். இன்ஸ்விங்கர்கள் மட்டும் வீசாமல் அவுட் ஸ்விங்குகளும் வீசத் தொடங்கினார். ஓப்பனிங் ஸ்பெல் பௌலர் என்ற அடையாளத்தை உடைத்து 'டேஞ்சரஸ் டெத் பௌலர்' ஆனார். துல்லியமான யார்க்கர்களால் விக்கெட் வேட்டை நிகழ்த்தினார். 23 விக்கெட். பர்ப்பிள் கேப் வசமானது. ஆனால், அந்தப் பழைய புவி தொலையவில்லை. 408 ரன்கள் எடுக்கப்பட்ட ஃபைனலில், கெய்ல், விராட், ஏ.பி என்ற மாபெரும் படையை பெட்டிப்பாம்பாய் வைத்திருந்தார். அந்தப் போட்டியில் எகானமி 7.5-க்கும் குறைவாக இருந்தது இவருக்கு (6.25) மட்டுமே. 4 ஓவர்களில் 13 'டாட் பால்'கள். புவி வெர்ஷன் 2.0 கிளம்பியது அப்போதுதான்.

ஆரம்ப கட்டத்தில் முதல் ஸ்பெல்லிலேயே 7 ஓவர்கள் வீசிவிட்டு, சம்பரதாயத்துக்காக 10 ஓவர் கோட்டாவை கடைசியில் நிறைவு செய்துகொண்டிருந்தார். பல போட்டிகளில் 6,7 ஓவர்கள் மட்டுமே வீசுவார். ஆனால், இப்போது, உலகின் தலைசிறந்த டெத் பௌலர்களில் ஒருவர். ஆரம்ப ஸ்பெல்லில், ஓப்பனர்களைத் திண்டாடவைப்பவர், 40-வது ஓவருக்கு மேல் அதிரடி காட்டக் காத்திருப்போருக்கு எமனாய் மாறுகிறார். பிட்ச் ஸ்விங்குக்கு உதவுகிறதோ, இல்லையோ, புதுப் பந்தை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு பயன்படுத்துகிறார். வார்னர், ஃபின்ச், ஆம்லா, ஜேசன் ராய் போன்ற டாப் ஓப்பனர்கள்கூட, இவரின் ஓப்பனிங் ஸ்பெல்லில் தடுமாறினர். காரணம் வெறும் ஸ்விங்கோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு வேரியேஷன்களைத் தனது பௌலிங்கில் காட்டினார். நக்கிள் பால்களை அவ்வப்போது பயன்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். 

SRH

புவியின் இந்தப் புது வெர்ஷனை, 2017-ல் அவருடைய செயல்பாடே விளக்கிவிடும். 2016 வரை ஒருநாள் போட்டிகளில் 59 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். சராசரியாக, அவர் வீசிய ஒவ்வொரு 51 பந்துக்கும் ஒரு விக்கெட். ஆனால், இந்த ஆண்டு மட்டும் 19 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சராசரியாக 37 பந்துகளுக்கு 1 விக்கெட். இந்த ஸ்டாட்டிஸ்டிக்ஸே, புவி தன் பந்துவீச்சில் கொண்டுவந்த மாற்றத்தைச் சொல்லிவிடும். எந்தக் காரணத்தால், 2015 உலகக்கோப்பையில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கத் தினறினாரோ, அதை இன்று மெருகேற்றிவிட்டார். அதேசமயம், ஷமியைப் போல் விக்கெட் வீழ்த்துவதற்காக ரன் கொடுப்பதில் இவர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. இந்த ஆண்டு அவரது எகானமி ரேட் 4.83. ஒருநாள் போட்டிகளில் அவரது ஒட்டுமொத்த எகானமி 4.87. இந்த கன்சிஸ்டன்ஸிதான் அவருக்கான வெற்றி. 19 போட்டிகளில் 25 விக்கெட் என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனால் அந்த ஓப்பனிங் ஸ்பெல்லில் இவர் வீழ்த்தும் அந்த ஒரு விக்கெட், இவர் கொடுக்கும் அந்தப் பிரஷர், எதிரணியின் சைக்காலஜியை ஆரம்பத்திலேயே தாக்கிவிடுகிறது. அதன் பலனை இந்தியா அனுபவிப்பது உண்மை. 

பழைய அஷ்வின் - ஜடேஜா கூட்டணியும் சரி, இன்றைய சாஹல் - குல்தீப் கூட்டணியும் சரி, புவி - பூம்ராவின் அற்புத முதல் ஸ்பெல் கொடுக்கும் ஆதாயங்களைக் கொஞ்சம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியைச் சொல்லலாம். 21 ஓவர்களில் 164 ரன்கள் எடுக்கவேண்டும். அடிக்கடி மழைக்குறுக்கீடு வேறு. முதல் பந்திலிருந்தே அடித்தாட வேண்டும் என்ற ப்ளானோடுதான் களம் கண்டிருப்பார் வார்னர். ஆனால், புவி வீசிய முதல் ஓவரில் அவரால் ஒரு சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள். அதில் ஒரு விக்கெட் இழப்பு வேறு. ரன் ரேட் எகிற, பிரஷர் ஏறிப்போய் நிதானம் இழந்து, பாண்டியாவிடம் ஸ்மித்தும், குல்தீப்பிடம் வார்னரும் வீழ்ந்தனர். கடைசிவரை ஆஸி அணியால் நிமிர முடியவில்லை. இரண்டாவது போட்டியில் வெறித்தனம் காட்டிய புவி 37 பந்துகள் வீசி, வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். அந்த 37 பந்துகளில் 31 டாட் பால்கள்! புவியின் தேவை அந்தத் தொடரின் 4-வது போட்டியில் தெளிவாகத் தெரிந்தது. உமேஷ் யாதவ் -ஷமி கூட்டணியின் முதல் ஸ்பெல்லில் 63 ரன்கள் எடுத்தனர் வார்னரும், ஃபின்சும். விளைவு, ஆஸி அணி 334 ரன்கள் குவித்தது. இந்திய அணி அத்தொடரில் தோற்ற ஒரே போட்டி அது. சிக்கனமான முதல் ஸ்பெல் என்பது அவ்வளவு முக்கியம். அந்த வகையில் புவனேஷ்வர் குமார், இந்தியாவுக்கு அத்யாவசியம்.

Bhuvi

வெற்றிகளில் மட்டுமல்ல, தோல்வியுற்ற பல்வேறு போட்டிகளிலும் கூட இவரது பௌலிங் தனித்துத் தெரியும். சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான் அணி 338 ரன்களைக் குவித்தது. அந்தப் போட்டியில் இவர் 10 ஓவர்களில் கொடுத்த ரன்கள் வெறும் 44. அதில் 2 மெய்டன் ஓவர்கள் வேறு. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி-20 போட்டியில் 18.3 ஓவர்களில் 194 ரன்களை வாரி வழங்கியிருப்பார்கள் நம் பெளலர்கள். அந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பார் புவி. ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸி அணி ஓவருக்கு 7.87 ரன்கள் வீதம் எடுத்து வென்றிருக்கும். அந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பார் இந்த சிக்கன நாயகன். இந்த ஆண்டு இந்தியா தோல்வியுற்ற 6 ஒருநாள் போட்டிகளில் 4 போட்டிகளில்தான் இவர் ஆடினார். அந்தப் போட்டிகளில் எதிரணியின் ரன்ரேட் 6.84. ஆனால், புவியின் எகானமி 5.42 தான். அந்தப் போட்டிகளிலும் சிக்கனமாகவே பந்துவீசியவர், விக்கெட் வீழ்த்தவும் தவறவில்லை. அந்த 4 போட்டிகளிலும் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். இப்படி தோற்ற போட்டிகளில்கூட இவர் சோபிக்கத் தவறவில்லை. இந்த ஆண்டு இவர் விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கியுள்ளார். 

"ஃபாரீன் சாயில்ல பெர்ஃபார்ம் பண்ணியிருக்காரா?" - இந்தக் கேள்வியையும் 'டிக்' அடிக்கிறார் புவி. இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர் இரண்டிலும் இவரின் செயல்பாடு பக்கா. சாம்பியன்ஸ் டிராபி தொடரில், 4 விக்கெட்டுக்கு மேல் எந்த இந்திய பௌலரும் வீழ்த்தவில்லை. புவி மட்டும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அத்தொடரில் எகானமி ஐந்துக்கும் குறைவாக (4.63) வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2 ஒருநாள் போட்டிகளிலும், 1 டி-20 போட்டியிலும் மட்டுமே பந்துவீசினார். ஒருநாள் தொடரில் 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார். இப்படி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வெளியில் ஆடிய போட்டிகளிலும் புவி டாப் கிளாஸ்.

India

பௌலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார் புவி. இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனியோடு சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து, அணியைத் தோல்விப் பாதையிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டியில், பொறுமையாக விளையாடி 80 பந்துகளில் அரைசதம் அடித்து அந்தப் போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுடனான சென்னை போட்டியிலும், நியூசிலாந்துடனான முதல் போட்டியிலும்கூட கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி, அணியின் ஸ்கோர் அதிகமாக உதவியுள்ளார். வெறுமனே பவுண்டரி, சிக்சர்களுக்குக் குறிவைக்காமல், ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் போல் அணியின் நிலைமைக்குத் தகுந்தவாறு விளையாடுகிறார். இவரது பேட்டிங் திறன், பாண்டியா போன்ற வீரரின் பிரஷரைக் குறைத்து, அவர் ஃப்ரீயாக விளையாட உதவுகிறது. இந்த வகையிலும் இவர் அணிக்குப் பெரும்பலம்.

77 ஒருநாள் போட்டிகளில் 84 விக்கெட்டுகள் என்பதொன்றும் பெரிய விஷயம் இல்லைதான். ஆனால், கொத்துக்கொத்தாக விக்கெட் வேட்டை நடத்துவது மட்டும் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு அடையாளம் என்பதில்லை. முதல் ஸ்பெல்லில் பிரஷர் கொடுத்து, ஆரம்பத்தில் இருந்தே சைக்கலாஜிக்கலாக அட்டாக் செய்ய வேண்டும். மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப்களை உடைக்க வேண்டும். நன்றாக அடித்து ஆடும் ஒரு பேட்ஸ்மேனின் ஃப்ளோவை, கான்ஃபிடன்ஸை, ஓர் அற்புத ஓவரால் உடைக்க வேண்டும். இன்றைய பேட்டிங் ஃப்ரெண்ட்லி சூழ்நிலையில் டெத் ஓவர்களில் முடிந்தவரை ரன்குவிப்பைத் தடுக்க வேண்டும். இவையெல்லாம்தான் திறமையான வேகப்பந்துவீச்சாளருக்கான அடையாளங்கள். சமிந்தா வாஸ் - இலங்கையின் தலைசிறந்த ஃபாஸ்ட் பௌலர். 322 போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு 1.24 விக்கெட்டுகள். 393 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷான் போலக், ஒரு போட்டிக்கு சராசரியாக வீழ்த்திய விக்கெட்டுகள் 1.30. இவர்கள் தலைசிறந்த பௌலர்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லையே...

vaas & pollock

 

அந்த வகையில் புவி இந்த ஃபார்மைத் தொடர்ந்தால், அவர்களைப் போல் ஓர் உலகத்தரம் வாய்ந்த பௌலராக உருவெடுக்கலாம். இந்த ஆண்டு ஒரு போட்டிக்கு அவர் சராசரியாக வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 1.32. இந்த வேகத்தில் சென்றால் அவரால் நிச்சயம் இந்தியாவின் தலைசிறந்த ஃபாஸ்ட் பௌலராக உருவெடுக்க முடியும்.  நெஹ்ரா, பதான், ஹர்பஜன் ஆகியோரைத் தளபதிகளாகக் கொண்டு ஒருகாலத்தில் ஆட்சி புரிந்தார் ஜாகீர். அதன்பின் ஒரு கன்சிஸ்டன்ட்டான ஃபாஸ்ட் பௌலர் நம் அணிக்குக் கிடைக்கவே இல்லை. அந்த வகையில் நாம் நம்பக்கூடிய ஒரு பௌலர் புவி. பூம்ரா, பாண்டியா, சாஹல், குல்தீப் என்ற இளம் படையை இந்த இரண்டு தொடர்களிலும் நன்றாக வழிநடத்துகிறார். அடிக்கடி அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். எந்தச் சூழ்நிலையிலும் கூலாக இருக்கிறார். விக்கெட் எடுப்பதில் இன்னும் கொஞ்சம் வீரியத்தைக் கூட்டினால், சந்தேகமே இல்லை புவனேஷ்வர் குமார்தான் இந்தியாவின் வலதுகை ஜாகீர்.

http://www.vikatan.com/news/sports/106037-success-story-of-matchwinner-bhuvaneshwar-kumar.html

  • தொடங்கியவர்

இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைக்க நியூஸி.க்கு வாய்ப்பு: கான்பூரில் 3-வது ஒருநாள் போட்டி

 

 
kohli-williamson

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெறுகிறது. ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகள் இடையே கடும் மோதல் இருக்கக்கூடும்.

நியூஸிலாந்து வென்றால் இந்தியாவில் ஒருநாள் தொடரை முதன்முதலாக கைப்பற்றிய அணியாக இது திகழும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை விட நியூஸிலாந்து தொடர் சவாலாக உள்ளது, இந்த இந்திய அணியிடம் பலவீனம் உள்ளது, அதனைப் பயன்படுத்தி வெற்றிபெற முடியும் என்பதை நியூசிலாந்து முதல் போட்டியில் நிரூபித்தது, 2-வது போட்டியிலும் 231 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட இந்திய அணியை படுத்தி எடுத்தது.

இந்நிலையில் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாக கான்பூரில் இரு அணிகளும் 29-10-17 அன்று கடைசி ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் பகலிரவு ஒருநாள் போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறை. இந்திய அணி மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் கள மிறங்குகிறது. தொடர்ச்சியாக 6 இருதரப்பு ஒருநாள் போட்டி தொடர்களை வென்றுள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் 7-வது தொடரை கைப்பற்றும்.

புனே ஆட்டத்தில் அசத்திய புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் மிரட்ட காத்திருக்கின்றனர். முதல் ஆட்டத்தில் விக்கெட்கள் வீழ்த்த தவறிய யஜுவேந்திர சாஹல் கடந்த ஆட்டத்தில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தியது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. குல்தீப் யாதவுக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட அக்சர் படேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி பந்து வீச்சில் பலம் சேர்த்திருந்தார். குறிப்பாக இவர் லேதமுக்கு அருமையாக வீசினார், அவரை ஸ்வீப் ஆடவிடாமல் செய்தார், ஆனாலும் குல்தீப் யாதவ்தான் ஒரு எக்ஸ் ஃபேக்டர், அவருக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும். பகுதி நேர பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் விக்கெட் கைப்பற்றவில்லை என்றாலும் 8 ஓவர்கள் வீசி வெறும் 31 ரன்கள் மட்டுமே வழங்கியிருந்தார்.

எனினும் இந்திய அணியின் காலங்கடந்த வெற்றிக் கூட்டணியை மாற்றாத ‘செண்டிமெண்ட்’ தொடரும் என்றே கருதப்படுகிறது. இதனால் சொந்த மைதானத்தில் களமிறங்கும் குல்தீப் யாதவின் கனவு நிறைவேறுமா என்பது சந்தேகம்தான். பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 64 ரன்கள் சேர்த்து அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இந்த இடத்தில் கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் 11 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிய பிறகும் ஒருவர் கூட நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இன்றைய ஆட்டத்திலும் தினேஷ் கார்த்திக் 4-வது இடத்திலேயே களமிறக்கப்படக்கூடும். மீண்டும் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அணியில் தனக்கான இடத்தை வேரூன்றிக்கொள்ள முடியும். தொடக்க வீரரான ஷிகர் தவண் பார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம் சேர்த்துள்ளது. புனே ஆட்டத்தில் 68 ரன்கள் சேர்த்த அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். அதேவேளையில் இரு ஆட்டங்களிலும் முறையே 20 மற்றும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்த ரோஹித் சர்மா மட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடரை வெல்ல முயற்சிக்கக் கூடும். மும்பையில் சிறப்பாக விளையாடி வெற்றியை வசப்படுத்திய அந்த அணி, புனேவில் நேர்த்தியான திறனை வெளிப்படுத்தியது ஆனாலும் வெற்றி கைகூடவில்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய மண்ணில், அந்த அணி அரிதான முறையில் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கக் கூடும். முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ராஸ் டெய்லர், டாம் லதாம் கூட்டணி புனே ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தது.

மேலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரும் சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுத்தத் தவறினார்கள். அணியினருக்கு முன்னுதாரனமாக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு வில்லியம்சனுக்கு இன்றைய ஆட்டம் உதவக்கூடும். பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுவார்கள் என கருதப்படுகிறது. கப்தில், வில்லியம்சன், கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டால் இந்திய அணி நிச்சயம் சிரமப்படும். நாளை அதைச் செய்ய முடிகிறதா என்பதைப் பார்கக் வேண்டும்.

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் கடந்த இரு வருடங் களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் ஒருநாள் போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்க அணி 303 ரன்கள் குவித்தது. இலக்கை விரட்டிய இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த ஆண்டு ஜனவரியில் இதே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லதாம், ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், மேட் ஹென்றி, காலின் முன்ரோ, காலின் டி கிராண்ட்ஹோம், டிரென்ட் போல்ட், ஆடம் மில்னே, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்டர், டிம் சவுத்தி, ஜார்ஜ் வோர்க்கர், இஸ் சோதி.

http://tamil.thehindu.com/sports/article19940434.ece

கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்
  • தொடங்கியவர்

சதமடித்தார் ரோஹித் சர்மா, கோலி அரைசதம்: நியூஸி. திணறல்

 

 
rohitjpg

கான்பூரில் நடைபெறும் 3-வது, கடைசி ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது 15-வது ஒருநாள் சதத்தை எடுத்து ஆடிவருகிறார், விராட் கோலி அரைசதம் எடுத்து ஆடிவருகிறார்.

இருவரும் இணைந்து 167 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்து ஆடிவருகின்றனர்.

52 பந்துகளில் அரைசதம் கண்ட ரோஹித் சர்மா 106 பந்துகளில் சதம் கண்டார், அவர் தற்போது 113 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்களுடனும், விராட் கோலி அருமையான 5 பவுண்டரிகளுடன் 77 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.

ரோஹித் சர்மா 2017-ல் எடுத்த 5-வது சதமாகும் இது. ஷிகர் தவணுக்குப் பிறகு விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் நியூஸிலாந்து திணறி வரும் நிலையில் இந்திய அணி 35.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் அறிக்கை:

கான்பூரில் தொடங்கிய 3-வது, கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

இந்திய அணி 6.1 ஓவர்களில் ஷிகர் தவண் விக்கெட்டை இழந்து 29 ரன்கள் எடுத்துள்ளது. 20 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த ஷிகர் தவண், சவுதி பந்தை மிட் ஆஃபுக்கு மேல் தூக்கி அடிக்க நினைத்தார். வில்லியம்சனிடம் கேட்ச் ஆனது.

விராட் கோலி இறங்கியவுடன் ஒரு பவுண்டரி அடித்துள்ளார், அதுவும் ஆஃப் ஸ்டம்ப் பந்தை லெக் திசையில் அபாரமாக பிளிக் செய்தார் கோலி. ரோஹித் சர்மா 13 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

இரு அணிகளிலும் மாற்றமில்லை, பிட்ச் கொஞ்சம் ஹார்டாக உள்ளது என்று கூறிய கேன் வில்லியம்சன் பின்னால் பனிப்பொழிவு இருக்கலாம் என்பதால் பீல்டிங்கைத் தேர்வு செய்வதாகத் தெரிவித்தார்.

விராட் கோலி தானும் முதலில் பவுலிங் செய்திருப்பேன் என்றார். நியூஸிலாந்து அணி களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஜெண்டில்மேன்களாக செயல்படுவதாக கோலி பாராட்டினார்.

http://tamil.thehindu.com/sports/article19944022.ece?homepage=true

 
253/1
 
  • தொடங்கியவர்

கான்பூர் ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம்

 
273/3 (43.2/50 ov)
 
 
  • தொடங்கியவர்

கான்பூர் ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் சர்மா, கோலி சதத்தால் நியூசிலாந்துக்கு 338 ரன்கள் வெற்றி இலக்கு

கான்பூரில் நடைபெற்று கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, கோலி சதத்தால் நியூசிலாந்து அணிக்கு 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

 
கான்பூர் ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் சர்மா, கோலி சதத்தால் நியூசிலாந்துக்கு 338 ரன்கள் வெற்றி இலக்கு
 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இரு அணிகளும் களம் இறங்கின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அணியின் ஸ்கோர் 29 ரன்னாக இருக்கும்போது தவான் 14 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது.

இவர்களது ஆட்டத்தால் இந்தியா 9.4 ஓவரில் அரைசதத்தையும், 18.4 ஓவரில் சதத்தையும் எட்டியது. 52 பந்தில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா 106 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய விராட் கோலி 59 பந்தில் அரைசதம் அடித்தார்.

அதன்பின் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி 83 ரன்னை தொட்டபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இந்திய அணியின் ஸ்கோர் 259 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 138 பந்தில் 147 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது.

201710291711374603_1_3dhawan-s._L_styvpf.jpg

அடுத்து விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 44-வது ஓவரை சான்ட்னெர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து விராட் கோலி சதம் அடித்தார். அவர் 96 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.

அடுத்த பந்தில் ஹர்திக் பாண்டியா 6 பந்தில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். சதம் அடித்த விராட் கோலி 106 பந்தில் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 46.4 ஓவரில் 302 ரன்கள் எடுத்திருந்தது.

201710291711374603_2_3kohli-s._L_styvpf.jpg

அடுத்து கேதர் ஜாதவ் களம் இறங்கினார். போல்ட் வீசிய 48-வது ஓவரிலும், சவுத்தி வீசிய 49-வது ஓவரில் இந்தியா தலா 12 ரன்கள் சேர்த்தது.

கடைசி ஓவரை மில்னே வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். மில்னே நேர்த்தியாக பந்து வீச இந்தியா மேலும் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் சேர்த்தது.

201710291711374603_3_3RohitSharma001-s._L_styvpf.jpg

கேதர் ஜாதவ் 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தினேஷ் கார்த்திக் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி, மில்னே, சான்ட்னெர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/29171134/1125756/INDvNZ-Kanpur-ODI-india-338-runs-target-to-new-zealand.vpf

  • தொடங்கியவர்

விராட் கோலியை வாழ்த்த மைதானத்துக்குள் புகுந்த ரசிகர்!

விராட் கோலியை வாழ்த்துவதற்காக மைதானத்துக்குள் புகுந்த ரசிகரை போலீஸார் கைது செய்தனர். 

Virat_Fan_18301.jpg

 


இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோகித் ஷர்மா மற்றும் கேப்டன் விராட் கோலியின் சதங்களின் உதவியால் 337 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 147 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் எடுத்தனர். 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 32ஆவது சதத்தைப் பதிவு செய்த விராட் கோலியை வாழ்த்துவதற்காக ரசிகர் ஒருவர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி மைதானத்துக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மைக்கேல் சாட்னர் வீசிய 44ஆவது ஓவரில் ஒரு ரன் எடுத்து சதமடித்த விராட் கோலியை நோக்கி ஓடிய அந்த ரசிகரை லெக் அம்பயர் தடுத்து நிறுத்தினார். விராட் கோலி பெயருடன் கூடிய ஜெர்ஸியை அணிந்தபடி மைதானத்துக்குள் சென்ற அந்த ரசிகரால் போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. இதையடுத்து மைதான காவலர்கள் அவரை வெளியில் அழைத்துச் சென்றனர். பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் சென்ற அந்த ரசிகரை போலீஸார் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

http://www.vikatan.com/news/sports/106264-kanpur-odivirat-kohli-fan-enters-ground-to-wish-him-gets-detained.html

  • தொடங்கியவர்

கான்பூர் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ரன்னில் வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

கான்பூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ரன்னில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

 
 
கான்பூர் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ரன்னில் வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா (147), விராட் கோலி (113) ஆகியோரின் சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.

பின்னர் 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர்குமார் முதல் ஓவர் வீசினார். கொலின் முன்றோ ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி என கடைசி நான்கு பந்தில் 16 ரன்கள் சேர்த்தார்.
201710292205562525_1_10bumrah01._L_styvpf.jpg
மறுமுனையில் பும்ரா சிறப்பாக பந்து வீசினாலும் புவனேஸ்வர் குமார் ரன்கள் கொடுத்த வண்ணம் இருந்தார். 6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மார்ட்டின் கப்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 14 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார்.

2-வது விக்கெட்டுக்கு கொலின் முன்றோ உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. முன்றோ 38 பந்தில் அரைசதம் அடித்தார். நியூசிலாந்து 15 ஓவரில் 100 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில் விளையாடிய கேன் வில்லியம்சன் 59 பந்தில் அரைசதம் அடித்தார்.  சிறப்பாக விளையாடிய கொலின் முன்றோ 62 பந்தில் 75 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
201710292205562525_2_10kanewilliams._L_styvpf.jpg
அடுத்து ராஸ் டெய்லர் களம் இறங்கினார். கேன் வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது நியூசிலாந்து வெற்றிக்கு 128 பந்தில் 170 ரன்கள் தேவைப்பட்டது.

4-வது விக்கெட்டுக்குக்கு ராஸ் டெய்லருடன் டாம் லதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இதனால் ஆட்டத்தால் பரபரப்பு நிலவியது. நியூசிலாந்து அணி 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. 60 பந்தில் 91 ரன்கள் தேவைப்பட்டது.

41-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராஸ் டெய்லர் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆட்டம் இந்தியாவிற்கு சாதகமாக இருந்தது.

5-வது விக்கெட்டுக்கு டாம் லாதம் உடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். டாம் லாதம் 36 பந்தில் அரைசதம் அடித்தார். 44 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது. 36 பந்தில் 55 ரன்கள் தேவைப்பட்டது.

201710292205562525_3_10latham._L_styvpf.jpg
45-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 5 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது. 46-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்தில் நிக்கோல்ஸ் 10 ரன்கள் சேர்த்தார். இதனால் கடைசி 24 பந்தில் 35 ரன்கள் தேவைப்பட்டது.

47-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் நிக்கோல்ஸ் க்ளீன் போல்டானார். அவர் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். இந்த ஓவரில் புவனேஸ்வர் குமார் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி 18 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் லாதம் ரன்அவுட் ஆனார். அவர் 52 பந்தில் 65 ரன்கள் சேர்த்தார். லாதம் அவுட்டானதும் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.

கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். 2-வது பந்தில் சான்ட்னெர் சிக்ஸ் விளாசினார். என்றாலும் அடுத்த நான்கு பந்தில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க, கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் நியூசிலாந்து 3 ரன்கள் எடுத்தது. 4-வது பந்தில் சான்ட்னெர் ஆட்டமிழந்தார்.

கடைசி இரண்டு பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஒரு ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடிக்க, இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/29220552/1125790/INDvNZ-3rd-ODI-india-Beats-newzealand-by-6-runs.vpf

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிக்கு அருகே நெருங்கி வந்து தோல்வியடைந்தது எரிச்சலூட்டுகிறது: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கருத்து

 

 
31CHPMUKANEWILLIAMSON

வில்லியம்சன்   -  AFP

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிக்கு மிக அருகே நெருங்கி வந்து தோல்வியடைந்தது எரிச்சலூட்டுவதாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

கான்பூரில் நேற்று முன்தினம் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 337 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணியால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 331 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த தோல்வியால் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 1-2 என்ற கணக்கில் இழந்தது.

கடந்த முறையும் நியூஸிலாந்து அணி கடைசி கட்டத்தில் கோட்டை விட்டே தொடரை (2-3) இழந்திருந்தது. இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் 29 வருடங்களுக்கு ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்ற முடியாத நியூஸிலாந்து அணியின் சோகம் தொடர் கதைக்கு உள்ளாகி உள்ளது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:

இந்தத் தொடர் முழுவதுமே பாடங்கள் இருந்தன. உலகளவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது இதுபோன்று நிகழும். இந்தத் தொடரை பொறுத்தவரையில் நாங்கள் மும்பையில் வெளிப்படுத்திய திறன் தான் மிகச்சிறப்பானது. கான்பூர் ஆட்டமும் அதுபோன்று அமைந்திருக்கும். ஆனால் அந்தவகையில் அது அமையவில்லை. எனினும் இந்தத் தொடரில் எங்களுக்கு சில சிறப்பம்சங்கள் கிடைத்துள்ளன.

எங்களது மிடில் ஆர்டர் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக டாம் லதாம், தொடக்க வீரரில் இருந்து நடுகள வீரராக மாறிய நிலையில் அந்த இடத்தை தகவமைத்துக் கொண்டு அருமையாக பேட்டிங் செய்தார். இது எங்களுக்கு இந்தத் தொடரில் கிடைத்த சிறந்த விஷயம். பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களால், சிறந்த பேட்டிங் குழுவை உள்ளடக்கிய இந்திய அணியை அதிக நேரம் கட்டுப்படுத்த முடிந்தது.

பெரிய இலக்கை துரத்தும்போது அதிலும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைவது என்பது எரிச்சலூட்டுகிறது, ஏமாற்றமாகவும் உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் வகையில் இந்தியாவில் மற்றொரு ஆட்டத்தில் விளையாடுவது கடினம் தான். நாங்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தியதாகவே கருதுகிறேன். ஆனால் இந்திய அணிக்கு எதிராக அதிலும் அவர்களது சொந்த மண்ணில் வெற்றி பெறவேண்டுமானால் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு வில்லியம்சன் கூறினார்.

அணியின் வெற்றியே நோக்கம்: விராட் கோலி

வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நியூஸிலாந்து அணி கடைசி வரை எங்களுக்கு சவால் கொடுத்தது. இந்தத் தொடரில் 3 ஆட்டங்களிலுமே அந்த அணி சவாலாக இருந்தது. இதனால் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். அந்த அணி போராடிய விதம் பாராட்டுக்குரியது. பேட்டிங்கின் போது கடைசி 15 ஓவர்களில் பந்து வீச்சு மெதுவாக அமைந்ததால் ரன்களை வேகமாக குவிக்க முடியவில்லை. இதனால் 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இந்த ஆட்டம் எங்களுக்கு நாக் அவுட் போன்று இருந்தது. அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். எனது நோக்கமே அணி வெற்றி பெற வேண்டும், தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது தான். தனிப்பட்ட முறையில் நானும் சிறப்பாக விளையாடியது போனஸாக அமைந்து விட்டது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article19954354.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.