Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்டின் விக்கட்..

  • Replies 110
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

நாதன் லியோனின் அபார களத் தடுப்பின் முலம் 83 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் விக்கெட்டை பறி கொடுத்த ஜேம்ஸ் வின்ஸ்..

  • தொடங்கியவர்

ஆஷஸ்... இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைக் கடந்த அரசியல் சதுரங்கம்! #VikatanExclusive #Ashes

 
 
Chennai: 

ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் தலைமையிலான இரு படைகளும் தயாராகிவிட்டன. பல இங்கிலாந்து வீரர்களின் வாழ்க்கையை முடிக்கப்போகிறோம் என சவால் விடுத்திருக்கிறார் நாதன் லயான். இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் இந்தப் போரைக் காண ஆயத்தமாகிவிட்டினர். நைட் ஷிப்ட் முடிந்து வந்தும், அதிகாலை 5 மணிக்கு சோனி சிக்ஸ் முன் அமர்ந்துவிட்டனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். இது, இங்கிலாந்து  - ஆஸ்திரேலியா மேட்ச் மட்டுமல்ல;  இரு நாடுகள் மட்டும் சம்பந்தப்பட்ட மேட்ச் அல்ல. கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் யுத்தம். ஆஷஸ்... கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய யுத்தம், தன் பாணியிலேயே தொடங்கியிருக்கிறது.

Ashes

 

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு போட்டியில் மோதுகிறதென்றால் கடைகள் சீக்கிரம் மூடப்படும். சாலைகள் வெறிச்சோடிவிடும். கல்லூரியில் ப்ராக்சிகள் அதிகம் விழும். மைதானத்தில் போலீஸ் படையே நின்றிருக்கும். முக்கியமாக வாகா எல்லையில் உஷ்ணம் அதிகரித்திருக்கும். முக்கிய போட்டியெனில் பிரதமர்கள் மைதானத்தில் அட்டெண்டன்ஸ் போட்டிருப்பார்கள். கிரிக்கெட் போட்டிதான். ஆனால், மொத்த தேசத்தையும் கட்டிப்போட்டிருக்கும். ஆஷஸ்... இதற்கெல்லாம் ஒரு படி மேல். அரசியல் பதற்றம் இல்லை. ஆனால், மொத்த உலகமுமே உற்று நோக்கும். ஒவ்வொரு வீரனின் பேட்டியிலிருந்து, களத்தில் கொடுக்கும் சின்ன ரியாக்ஷன் வரை அனைத்தும் அனல் தெறிக்கும்.

இது டி-20 யுகம். வங்கதேசம்கூட டி-20 லீக் நடத்தத் தொடங்கிவிட்டது. இந்திய அணிக்கு ஸ்பான்சர் பிடிக்க பி.சி.சி.ஐ திணற, ஐ.பி.எல் அணிகளின் சட்டை முதல் ஹெல்மட் வரை ஸ்பான்சர்களின் லோகோக்கள். இந்தியாகூட சேவாக்குக்காக மட்டும்தானே டெஸ்ட் போட்டிகள் பார்த்தது. ஆனால், இந்த இரு நாட்டவர் மட்டும் இன்னும் அந்தப் பழைய போரிங் ஃபார்மட்டையே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களே ஏன்? ஐ.பி.எல் போட்டியில் விளையாட டெஸ்ட் போட்டியிலிருந்து மலிங்கா ஓய்வுபெற்றால், டெஸ்ட் போட்டியில் விளையாட, மிட்சல் ஸ்டார்க் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுகிறாரே ஏன்? ஆஷஸ்... ஒரு சாதாரண டெஸ்ட் போட்டி என்பதற்கும் மேல்... அது கிரிக்கெட்டுக்கும் மேல்...

Ashes

கிரிக்கெட், இங்கிலாந்தில்தான் உருவம் பெற்றது. சூதாட்டம் நடத்த மிகப்பெரிய வாய்ப்பிருப்பதால், அது அவர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்காக மாறியது. உலக நாடுகளின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதில் பிஸியானவர்கள், அங்கு பொழுதுபோவதற்காக கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினார்கள். எவ்வளவு நாடுகளை ஆண்டபோது ஆஸ்திரேலியாவைத் தேர்வு செய்தது ஏன்? அதற்கு ஹிஸ்டரி, ஜியாக்ராஃபியை கொஞ்சம் தூசு தட்டவேண்டும்.

ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவில் கால்பதித்தது 1606-ல். இங்கிலாந்துக்காரர்கள் 80 ஆண்டுகள் கழித்துத்தான் ஆஸ்திரேலியாவை அடைந்தனர். 1770 வாக்கில் நியூ சவுத் வேல்ஸை சொந்தம் கொண்டாடத் தொடங்கி, தங்களின் காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். ஆஸ்திரேலியா, பரப்பளவில் இந்தியாவைவிட இரண்டு மடங்கு பெரிய நாடு. ஆனால், மக்கள்தொகை மிகவும் குறைவு. இன்றைய தேதியில் சுமார் இரண்டரைக் கோடி மக்கள்தான் அங்கு வசிக்கிறார்கள். இது, இந்தியாவைவிட 60 மடங்கு குறைவு. 18-ம் நூற்றாண்டிலோ மக்கள்தொகை மிகச்சொற்பம். அதனால், பல ஆங்கிலேயர்கள் இங்கு புலம்பெயரத் தொடங்கினர். பாண்டிச்சேரி பிரெஞ்சுக் காலனி ஆனதுபோல், ஆஸ்திரேலியாவில் பல நகரங்கள் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அதனால், இங்கிலாந்து அரச குடும்பம் இந்தியா, தென்னாப்பிரிக்காவில் செய்ததுபோல் அங்கு அடக்குமுறையைக் கட்டவிழ்க்கவில்லை.

Australia

ஆஸ்திரேலிய கலாசாரம், ஆங்கிலேய கலாசாரத்தோடு பிண்ணிப் பிணைந்தது. 'Aussies', 'Oz', 'Down under' என்ற பெயர்கள்கூட ஆங்கிலேயர்கள் வைத்ததுதான். ஒருகட்டத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியர்களுக்கும் ஃபேவரிட் கேம் ஆனது. 1872-ல் கால்பந்தை ஸ்காட்லாந்தின் துணைகொண்டு சர்வதேச அரங்குக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து, ஐந்து ஆண்டுகள் கழித்து கிரிக்கெட்டை உலகின் பார்வைக்குக் கொண்டுசெல்ல திட்டமிட்டது, அதுவும் ஆஸ்திரேலியாவின் துணையுடன்...

1877, மார்ச்  15 - உலகின் முதல் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. கிரிக்கெட்டைத் தோற்றுவித்தவர்களுக்கு முதல் போட்டியிலேயே தோல்வி. சுமார் 10 ஆண்டுகள் இந்த இரு அணிகள் மட்டுமே மோதின. ஆனால், இங்கிலாந்தால் ஆதிக்கம் செலுத்தமுடியவில்லை. ஆஸ்திரேலியாவும் ஈடுகொடுத்து வெற்றிகள் பெற்றதால், இங்கிலாந்து வேறு பிளான் போட்டது.

1889, போர்ட் எலிசபத் - அடுத்த அடிமை தென்னாப்பிரிக்காவை காலி செய்யும் பொருட்டு, கிரிக்கெட் அந்தஸ்து கொடுத்து அவர்களோடு மோதியது. இப்படித்தான், தான் ஆட்சிபுரிந்த ஒவ்வொரு நாட்டிலும் கிரிக்கெட்டை விதைத்தது இங்கிலாந்து. 1877-ல் ஆஸ்திரேலியா, 1889-ல் தென்னாப்பிரிக்கா, 1928-ல் மேற்கிந்தியத் தீவுகள், 1930-ல் நியூசிலாந்து, 1932-ல் இந்தியா என சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த ஒவ்வொரு அணிகளுமே இங்கிலாந்தின் காலனிகளாக இருந்தவை. இந்த 5 நாடுகளும் தங்களின் முதல் போட்டியில் எதிர்த்து விளையாடிய அணி -  இங்கிலாந்து. அதன்பிறகு 52-ல் பாகிஸ்தான், 75-ல் இலங்கை, 83-ல் ஜிம்பாப்வே, 86-ல் வங்கதேசம் ஆகிய அணிகள் கிரிக்கெட் அரங்கினுள் நுழைந்தன. அந்த நாடுகளும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தவையே. ஆக, கிரிக்கெட் என்பது இங்கிலாந்து எனும் எஜமான், தன் அடிமைகளை விளையாட்டு எனும் போர்வை போத்தி அடிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கேம் என்பதே நிதர்சனம். ஆனால் என்ன... காலனிகளெல்லாம் உலகக்கோப்பையை பலமுறை வென்றுவிட, இங்கிலாந்து இன்னமும் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறது.

சரி, ஆஷஸ் பக்கம் போவோம்...

England

ஆஸ்திரேலியர்களுக்கு இந்த வெற்றி முக்கியமாக இருப்பதற்குக் காரணம் இதுதான். தங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களை வீழ்த்தவேண்டும். 1982-83 சீசனில் அந்த அணிகளுக்கு இடையிலான தொடர் 'ஆஷஸ்' எனப் பெயரிடப்பட்டதும், அதன் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்தது. ஆஸி.க்கு தனி வரலாறு இல்லை. பெருமிதப்பட்டுக்கொள்ள 'கார்கில்', 'பேர்ல் ஹார்பர்' போன்ற யுத்தங்களில் அவர்கள் வென்றதில்லை. நெப்போலியன், கொலம்பஸ் என உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த ஆளுமைகளும் அங்கிருந்து வரவில்லை. அவ்வப்போது சிலர் செய்திகளில் வந்தாலும், உலக நாளிதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து இடம்பிடித்த முதல் ஆஸ்திரேலியப் பெயர் - டொனால்ட் பிராட்மேன். கிரிக்கெட் வீரர். ஆக, கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. அது ஆஸ்திரேலியாவின் அடையாளம். இங்கிலாந்தை, தங்களை ஆண்டவர்களை எதிர்த்ததால் கிடைத்த அடையாளம். 'ஆஷஸ்' வெற்றிகள் கொடுத்த அடையாளம்.

இதனால்தான், டி-20 கோலோச்சும் இந்த ஜென்Z தலைமுறையிலும் ஆஷஸ் முக்கியத்துவம் பெறுகிறது. விளையாட்டு என்பது தேசம், மொழி, கலாசாரம் கடந்தது என்பார்கள். அதற்கு ஆஷஸ் விதிவிலக்கு. இது இந்த இரு நாடுகளின் கௌரவம் சார்ந்தது. அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கு இடையேவும் மிகச்சிறந்த உறவு நிலவுகிறது. ஆனால், இந்தக் கிரிக்கெட் களத்தில் தோற்பது அரசியல் அவமானமாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தத் தொடர்களில் விளையாடியது வீரர்களின் பேட்டும், பந்தும் மட்டுமல்ல. அங்கு உணர்வுகள் பெரும்பங்கு வகித்தன. இன்று நாம் கூறும் 'ஸ்லெட்ஜிங்' எனும் வார்த்தை, இரு அணிகளின் மூதாதையர் தூவிய விதை. உண்மையில் இந்த இரு அணிகளும், ஆஷஸ் போட்டிகளை ஒரு போர் போலத்தான் பாவித்தன. ஊடகங்களும் ஏதோ உலகப் போர் ரேஞ்சுக்கு கவர் செய்தன. 

Bradman

1930 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றுவிட, 1932-33 சீசனில் 'பாடி லைன்' என்ற யுக்தியைக் கையாண்டது இங்கிலாந்து. பௌன்சர்கள் வழக்கத்துக்கு வந்தது இப்படித்தான். கள மோதல்கள் அதிகரித்தன. வார்த்தைப் போர்கள் பத்திரிகைகளில் தலையங்கமானது. ஒருநாள் போட்டி, உலகக்கோப்பை என கிரிக்கெட் மாறியது. அங்கு சாதிக்க முடியாமல்போக, 1975 முதல் 1987 வரை நடந்த 6 ஆஷஸ் தொடர்களில் ஐந்தை வென்று கொக்கரித்தது இங்கிலாந்து. ஆஷஸ் வெற்றியின்மூலம், தங்களைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டனர் இங்கிலாந்து மக்கள். ஆஷஸ் - இரு நாட்டு மக்களுக்குமே மிகமுக்கிய தொடரானது!

"நாங்கள் கார் வாங்குவது எங்கள் குழந்தைகளை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புவதற்காக. நாங்கள் விவசாயம் செய்வது எங்கள் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிடுவதற்காக. எங்கள் தேசம் மற்ற விளையாட்டுகளை விளையாடுவதன் காரணம், எல்லா விளையாட்டிலும் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக. அவர்களை தோற்கடிப்பதுதான் எங்களுக்கு ஆனந்தம். அதை எங்களுக்குத் தரும் மிகப்பெரிய ஆயுதம் ஆஷஸ்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் ஆஸ்திரேலியர் ஒருவர். ஏதோ கிரிக்கெட் வெறி முற்றிப்போன இளைஞன் எனப் பார்த்தால், புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவர். இதுதான் இத்தொடர் ஏற்படுத்தும் தாக்கம். 

இங்கிலாந்தில் ஒரு படையே இருக்கிறது - 'பார்மி ஆர்மி'. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்  'ஃபேன் க்ளப்'. இங்கிலாந்து அணியின் போட்டிகளில் அவர்களை ஆதரிக்கக் கூடினார்கள். உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாட்டுத் தொடர்களிலும் தங்கள் அணியை ஆதரிக்கச் செல்வதுதான் அவர்களின் வாழ்நாள் கடமை. அதில் மெம்பர் ஆவதற்குக் கட்டணம். வெளிநாட்டு டூர்களுக்கு பிளான்கள் என வெப்சைட் வைத்துச் செயல்படுகிறார்கள். கொடி, பேனர், பதாகைகள் எல்லாம் தயார் செய்து அரங்கினுள் வரும் இவர்களின் கூச்சலையும் சேர்ந்துதான் எதிரணி இவர்களை வெல்ல வேண்டும். இங்கிலாந்து அணியின் 12-த் மேன் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் இவர்களைக் குறிப்பிடுவதுண்டு. இவர்களின் மிகப்பெரிய இலக்கு ஆஷஸ்தான்.

Barmy army

 

https://www.vikatan.com/news/sports/108760-why-ashes-is-so-important.html

  • தொடங்கியவர்

500 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மித்: போராடி முன்னிலை பெற்ற ஆஸி. அணி! 

 

 
smith_100

 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 130.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி. அணி கேப்டன் ஸ்மித், மிகவும் பொறுப்புடன் விளையாடி சதமெடுத்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 116.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்டநேர முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 64, ஷான் மார்ஷ் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட, ஆஸ்திரேலியா மீதமுள்ள 6 விக்கெட்டுகளுக்கு 137 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இன்றைய ஆட்டம் தொடங்கியது. ஷான் மார்ஷ் 51 ரன்களில் ஆட்டமிழந்தபிறகு சீரான இடைவெளியில் மேலும் இரு விக்கெட்டுகள் விழுந்தன. 209 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் இருந்தபோது கேப்டன் ஸ்மித்துக்கு அருமையான இணையாக விளங்கினார் கம்மின்ஸ். 9 பவுண்டரிகளுடன் மிகவும் நிதானமாக விளையாடிய ஸ்மித், 261 பந்துகளில் சதத்தை எட்டினார். 139 பந்துகள் தாக்குப்பிடித்து 1 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த கம்மின்ஸ், வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் 6 ரன்களில் ஹேஸில்வுட் அவுட் ஆனபோது ஆஸி. அணி 4 ரன்கள் பின்தங்கியிருந்தது. கடைசியாகக் களமிறங்கிய நாதன் லயன் 37 பந்துகள் தாக்குப்பிடித்து அணி முன்னிலை பெற தன்னாலான உதவியைச் செய்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 130.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்மித் 512 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/25/magnificent-smith-hauls-australia-ever-closer-to-parity-2814780.html

  • தொடங்கியவர்

ஸ்மித்தை வீழ்த்த முடியவில்லை; மிகச்சிறந்த சதம்: பிரிஸ்பன் டெஸ்டில் ஆஸி. கை ஓங்கியது

Smith

மிகச்சிறந்த சதத்தை எடுத்த ஸ்மித்.   -  படம். | ஏ.பி.

ஆஷஸ் தொடர், பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த சதத்தை எடுக்க, ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்து இங்கிலாந்தைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு 5 ரன்களுடனும் ஸ்டோன்மேன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதாவது இங்கிலாந்து 7/2 என்று திணறி வர, ஸ்மித்தின் அதி அற்புத சதத்தினால் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

165/4 என்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய போது ஷான் மார்ஷ் ஒரு பவுண்டரி அடித்து தன் அரைசதத்தை எடுத்து 51 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடின் கனகச்சிதமான ஸ்லோ பந்தில் மிட் ஆஃபில் ஜிம்மி ஆண்டர்சனிடம் எளிதான கேட்ச் ஆனது ஆஸ்திரேலியா 175/5.

ஷான் மார்ஷும், ஸ்மித்தும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 99 முக்கிய ரன்களைச் சேர்த்தனர். டிம் பெய்ன் களமிறங்கியவுடன் அடுத்த 80 பந்துகள் ஸ்மித்தும், பெய்னும் இங்கிலாந்தின் கடுமையான சோதனைகளை ஏற்படுத்தும் பந்து வீச்சை எதிர்கொண்டனர், பவுண்டரிகள் வறண்டன, சிங்கிள்களும் வறண்டன. ஆனால் ஸ்மித் கவலைப்படவில்லை.

பலனளிக்காத ஷார்ட் பிட்ச் பவுலிங்

தொடக்கத்தில் 2 ஸ்லிப் கல்லி என்று இங்கிலாந்து நார்மலாகத் தொடங்கியது. பிறகு ஸ்மித்தைக் குறிவைத்து, அவரது விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து பல உத்திகளைக் கடைபிடித்தது, ஜோ ரூட் அருமையாக கேப்டன்சி செய்தார், லெக் திசையில் 6 பீல்டர்களை நிறுத்தி வைத்து ஆஃப் திசையில் சிங்கிள்களை கட் செய்யும் களவியூகம், இதில் ஸ்மித்துக்கு ஏராளமான ஷார்ட் பிட்ச் பந்துகளை சரமாரியாக வீசினர். ஸ்மித் எதற்கும் அசரவில்லை. உணவு இடைவேளை வரை ஸ்மித் 64 ரன்களில் தொடங்கி வெறும் 17 ரன்களையே எடுத்து 81 ரன்களுக்கு வந்தார். ஜோ ரூட்டின் சாதனை என்னவெனில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை வேகமாக ரன் எடுக்கவிடாமல் செய்தார். அவரைக் கட்டிப்போட்டார், ஆனால் ஸ்மித் இதனை மகிழ்ச்சியுடனேயே எதிர்கொண்டார், ஏனெனில் தான் நின்று விட்டால் நிச்சயம் முன்னிலை பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை, அதோடு இல்லாமல் இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ஸ்மித்தின் இன்னிங்ஸ் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

smith2jpg

ஷார்ட் பிட்ச் பந்துகளை மதிக்காத ஸ்மித்.   -  படம். | ஏ.பி.

 

டிம் பெய்ன் 42 பந்துகள் போராடி 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது புதிய பந்து எடுத்தவுடன் ஜேம்ஸ் ஆண்டர்சனின் துல்லியமான அவுட் ஸ்விங்கருக்கு எட்ஜ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வெளியேறினார், அந்தக் கேட்சை பேர்ஸ்டோ வலது புறம் ஒரு கையால், கால்பந்து கோல்கீப்பர் போல் பிடித்தார்.

பிராட் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் இந்த டெஸ்ட் போட்டியின் ஆகச்சிறந்த ஷாட்டை அடித்து சிக்ஸ் விளாசினார், முன்னால் காலைத்தூக்கிப் போட்டு லாங் ஆஃபில் அடித்தார், அதிக முயற்சி இல்லாத ஸ்ட்ரோக் ஆனால் சிக்ஸுக்கு பந்தை தூக்கிச் சென்றது. இதனை ஸ்டார்க்கே எதிர்பார்க்கவில்லை, பிராட் ஆச்சரியத்தில் புன்னகைத்தார். ஆனால் அடுத்ததாகவே ஒரு பந்தை சற்றே ஷார்ட் ஆஃப் லெந்தில் வீச பிராட் வலது கையை அழுத்தி தடுத்தாட அது எழும்பி பிராட் கையிலேயே கேட்ச் ஆனது ஆஸ்திரேலியா 209/7 என்று ஆனது.

ஸ்மித்தின் தனித்துவம்:

ஸ்மித்தின் தலைக்கு மேல் பவுன்சர் வீசி இடையிடையே புல் லெந்த் பந்துகளை வீச இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேக் பால், கிறிஸ் வோக்ஸ் தவறிவிட்டனர், ஸ்மித்தை வீழ்த்துவதற்கு நெருக்கமாக வந்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே. ஒரு ஓவரில் இருமுறை இன்ஸ்விங்கரில் புல் லெந்த் பந்தில் அவரைத் திணற வைத்தார். மற்றபடி ஸ்மித்தை உண்மையில் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அனைத்து பந்துகளுக்கும் பின் காலில் சென்று ஆடுவது என்பதுதான் ஸ்மித்தின் தனித்துவ உத்தி, ஓவர் பிட்ச், ஆஃப் வாலி வீசினாலும் பின் காலில் சென்றுதான் ஆடினார். இங்கிலாந்து பந்து வீச்சில் அதிவேகம் இல்லாததால் பின் காலில் சென்று பந்தை அவர் எதிகொள்ளும் போது அது ஸ்விங் ஆகி முடிந்திருந்தது.

அவரை முன்காலில் வந்து ஆடவே வைக்க முடியவில்லை, ஏறக்குறைய அவரை முன்னால் வந்து ஆட வைப்பது சாத்தியமில்லாமலேயே போய் விட்டது, ஒரு தரமான ஸ்பின்னர் அல்லது ஒரு அதிவேக பந்து வீச்சாளர், இல்லையெனில் நம் புவனேஷ் குமார், பிரவீண் குமார் போன்றவர்கள் மட்டுமே அவரை முன்னால் வந்து ஆட வைக்க முடியும் போல் தெரிகிறது, இந்திய அணி கடந்த முறை ஆஸ்திரேலியா சென்றிருந்த போது ஸ்மித்தை வீழ்த்தவே முடியவில்லை என்பதுதான் உண்மை, இந்தமுறை இங்கிலாந்து சிக்கியது. ஸ்மித் போன்ற வீரர்களை அதிகப் பந்துகளை மட்டையில் சந்திக்கவைக்க வேண்டும், ரன்கள் விரைவாக வந்தாலும் அவரை வீழ்த்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படும், மாறாக அவரை வெறுப்பேற்றி வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் அது எதிராகவே போய் முடியும் என்ற பாடத்தை ஸ்மித் இங்கிலாந்துக்குக் கற்றுக் கொடுத்தார். இங்கிலாந்து அணியில் தரமான ஸ்பின் வீச்சாளர் இல்லாததும் அவரை முன்னால் வந்து ஆடவைக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம்.

அவரை முன்னால் வந்து ஆட வைக்க 3 ஸ்லிப் ஒரு கல்லி, கவர் திசையை காலியாக வைத்து, மிட் ஆஃபை காலியாக வைத்து ஓவருக்கு 4 குட்லெந்த் அவுட்ஸ்விங்கர்களையோ இன்னும் கொஞ்சம் முன்னாலேயோ பிட்ச் செய்து இங்கிலாந்து வீசியிருக்க வேண்டும், மாறாக அவரது பொறுமையைச் சோதிக்கும் முறையைக் கடைபிடித்தது இங்கிலாந்துக்கே வினையாகப் போய்விட்டது. ஓவர் பிட்ச் பந்தையே அவர் பின்னால் சென்று பிளிக் பாணியில் மிட் ஆனில் பவுண்டரி அடித்தார். பவுன்சர்களை அவர் மதிக்கவேயில்லை. காரணம் ஒரு பவுன்சர் கூட அவரது மார்பைக் குறிவைத்து வீசப்படவில்லை, அனைத்தும் தலைக்கு மேல் சென்றது. புதிய பந்து எடுத்து 3 ஒவர்களுக்குப் பிறகு ஆண்டர்சன் காயம் காரணமாக வீச முடியாமல் போனதும் இங்கிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

ஸ்டார்க் ஆட்டமிழந்தவுடன் பாட் கமின்ஸ் களமிறங்கினார், இங்கிலாந்தின் உத்திகள் வறண்டன். அவர் 120 பந்துகளில் 42 ரன்களை எடுக்க, 8-வது விக்கெட்டுக்காக 66 ரன்கள் மிக முக்கியமாகச் சேர்க்கப்பட்டது.

மிகப்பொறுமையாக எங்கு போட்டாலும் பேக்ஃபுட் என்று முடிவெடுத்து ஆடிய ஸ்மித், கடைசியில் ஸ்டூவர்ட் பிராட் பந்தை எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து தனது 21-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார், சராசரி பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் 73 ரன்களைக் கடந்தது. 261 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் மிகச்சிறந்த சதத்தை அவர் அடித்து முடித்தவுடன் மேலும் 5 பவுண்டரிகளை அடித்து 326 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இது காவிய இன்னிங்ஸ் என்று வர்ணிக்கப்படுகிறது.

பாட் கமின்ஸ் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மென் போலவே உறுதுணையாக ஆடினார், ஒருமுறை ஆக்ரோஷமாகி மொயின் அலியை லாங் ஆனில் சிக்ஸ் விளாசினார், மொத்தம் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து வோக்ஸ் வீசிய பந்தை டிரைவ் ஆட முயன்றார் எட்ஜில் குக்கிடம் கேட்ச் ஆனது. மொயின் அலி பந்தை சுழற்ற முயற்சி செய்து ஹேசில்வுட் பவுல்டு ஆக, நேதன் லயன் விக்கெட்டை ஜோ ரூட் கைப்பற்றினார், ஸ்மித் 141 நாட் அவுட், வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலியா 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் பிராட் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஹேசில்வுட் அபாரம்: இங்கிலாந்து திணறல்

நல்ல நிலையிலிருந்து ஸ்மித்தின் சதத்தினால் 26 ரன்கள் பின் தங்கிய இங்கிலாந்து அணி களமிறங்கிய போது ஆஸ்திரேலிய அணி தன் உண்மையான தன்மையைப் பெற்றிருந்தது, ஆக்ரோஷம், பேச்சுக்கள், பரிபாஷைகள் என்று களத்தில் விளையாடத் தொடங்கின.

இதற்கிடையே ஹேசில்வுட் ஒரு நல்ல இலக்குடன் கூடிய பவுன்சரை லெக் அண்ட் மிடிலில் வீச அலிஸ்டர் குக் (7), ஹூக் செய்தார் மட்டையில் சரியாக சிக்காமல் டாப் எட்ஜ் ஆகி ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனது, இதுவும் அருமையான கேட்ச். முதல் இன்னிங்சில் சுவராக நின்ற ஜேம்ஸ் வின்ஸ் இந்த முறை 2 ரன்களில் பிரிஸ்பன் பிட்சுக்கே உரிய வகையில் ஆஃப் ஸ்டம்பில் ஷார்ட் ஆஃப் லெந்த், எகிறியது, போதுமான வேகம் இருந்தது, இவ்வகைப் பந்துகள் எட்ஜ் எடுத்தே தீரும், ஸ்மித் கேட்ச் எடுத்தார்.

ஜோ ரூட் இறங்கியவுடன் ஆஸி. அணியினர் ஒட்டுமொத்தமாக அவர் மீது ஆக்ரோஷம் காட்டினர், மிட்செல் ஸ்டார்க் வீசிய அதிவேக ப்வுன்சர் ஒன்று ஹெல்மெட்டில் வந்து வேகமாக மோதியது, ஹெல்மெட்டின் ஸ்ட்ராப் கழன்று விழுந்தது. அவர் 28 பந்துகளில் 5 ரன்களுடனும், ஸ்டோன்மேன் மீண்டும் கல்தூணாக நின்று 19 ரன்களுடனும் இருக்கின்றனர்.

பிரிஸ்பன் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது, 3-ம் நாள் ஆட்டம் ஒரு டெஸ்ட் மேட்சின் இலக்கணப்படி பந்துக்கும் மட்டைக்குமான கடும் போட்டியாக அமைந்தது.

http://tamil.thehindu.com/sports/article20894379.ece

  • தொடங்கியவர்

1.png&h=42&w=42

 
302 & 195
 
 
2.png&h=42&w=42
 
328 & 73/0 * (23.2 ov, target 170)

Day 4 Session 3: Australia require another 95 runs with 10 wickets remaining

  • தொடங்கியவர்

ஆக்ரோஷப் பந்து வீச்சில் தோல்வி வலியை எதிர்நோக்கும் இங்கிலாந்து: பிரிஸ்பனில் ஆஸி. வெற்றி உறுதி

 
lyonjpg

இங்கிலாந்தை தோல்விக்குத் திருப்பிய நேதன் லயன்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியை நன்றாகத் தொடங்கி விட்டு கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் சரணடையும் நிலைக்குச் சென்றுவிட்டது. 4-ம் நாளான இன்று தன் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 195 ரன்களுக்குச் சுருண்டது, இதனையடுத்து 170 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றி நாளை உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் வார்னர் 60 ரன்களுடனும், பேங்க்ராப்ட் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

காலையில் முதல் முக்கால் மணி நேர ஆட்டத்தில் ஜோ ரூட், ஸ்டோன்மேனை வீழ்த்த ஆஸ்திரேலியா குறைந்தது 2 மணி நேரத்துக்காவது திணறும் என்ற வகையில்தன பவுலிங் இருந்தது, ஆனால் நேதன் லயன் மீண்டும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். அவரது பந்துகள் ரவுண்ட் த விக்கெட்டில் குட்லெந்தில் பிட்ச் ஆகி இடது கை ஸ்டோன்மேனை கடும் சிக்கலுக்குள்ளாக்கியதோடு, ஜோ ரூட்டையும் திணறடித்தது, காரணம், காற்றில் பந்தின் திசை மாறி பிட்ச் ஆன பிறகு வேறு திசையில் ஸ்பின் ஆனது. இவரைத் தவிர மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ் 21 பந்துகளில் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பெவிலியன் அனுப்பினர்.

ஆகவே 3-ம் நாள் மாலை ஜோஷ் ஹேசில்வுட் ஆரம்பித்து வைத்த ஆக்ரோஷம், 4-ம் நாளில் நேதன் லயன் திருப்பு முனையுடன் ஸ்டார்க், கமின்ஸ் ஆக்ரோஷத்துடன் இங்கிலாந்தின் தோல்விக்கு இட்டுச் சென்றது.

மொயின் அலி ஸ்டம்ப்டு தீர்ப்பு சர்ச்சை:

ஆனால் சர்ச்சை இல்லாமலில்லை. எப்போதும் ஆஸ்திரேலியாவில் எதிரணியினரின் ஒரு முக்கிய விக்கெட் சர்ச்சைக்குரிய விதத்தில் கைப்பற்றப்படும். இது வரலாறு. இன்றும் மொயின் அலிக்கு, அதுவும் 3-வது நடுவர் ஏகப்பட்ட ரிவியூக்களைப் பார்த்து ஸ்டம்ப்டு தீர்ப்பு வழங்கியது உண்மையில் வேதனையான ஒரு தருணம்.

moeen%20alijpg

மொயின் அலி ஸ்டம்ப்டு ஆன காட்சி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

 

நடந்தது இதுதான். இன்னிங்சின் 53-வது ஓவரை லயன் வீசினார். முதல் பந்தை நன்றாக தடுத்தாடினார் மொயின் அலி. 2-வது பந்து நன்றாகத் தூக்கி வீசப்பட்டு பிட்ச் ஆகி பெரிய அளவில் திரும்பியது, நன்றாக முன்காலை நீட்டி ஆட முயன்றார் மொயின் அலி பந்து திரும்பியதால் பீட் ஆகி விக்கெட் கீப்பர் பெய்னிடம் சென்றது, காலை நீட்டி ஆடும் செயல்பாட்டில் ஸ்டம்ப்டு செய்யப்பட்டார், அவரது பின்னங்கால் சற்றே கோட்டுக்கு வெளியே வந்து பிறகு சற்றே உள்ளே கொண்டு வரப்பட்டது, கிரீசின் மேல் கால் இருப்பதாகத் தெரிந்தாலும், ஒரு துளிப் பகுதி உள்ளே இருந்தால் போதுமானது, அப்படித்தான் இருந்தது. ஏகப்பட்ட கோணங்களில் ரீப்ளே பார்க்கும் போதே 3-ம் நடுவருக்கும் சந்தேகம் இருப்பதாகவே பொருள்.

அப்படி சந்தேகம் ஏற்படும் போது அதன் பலனை பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக வழங்குவதுதான் கிரிக்கெட் ஆட்ட உணர்வு, மரபு எல்லாமும். ஏனெனில் பவுலர் மீண்டும் அடுத்த பந்தே கூட பேட்ஸ்மெனை வீழ்த்த முடியும், ஆனால் பேட்ஸ்மெனுக்கு ஒருமுறை அவுட் கொடுத்தால் அதோடு சரி. இதனால்தான் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மென்களுக்குச் செல்வது வழக்கம். மைக்கேல் கிளார்க் வர்ணனையில் இதனை நாட் அவுட் என்றே தெரிவித்தார், மேலும் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மென்களுக்கே என்றும் கூறினார்.

ஆனால் இன்று ஏகப்பட்ட ரீப்ளேக்குப் பிறகு ‘டைட்’ என்று 3-ம் நடுவர் கூறுவதும் நமக்கு கேட்கிறது, ஆனால் எதுவும் திட்டவட்டமாக கூற முடியாத நிலையில் மொயின் அலி ஸ்டம்ப்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டார். மொயின் 64 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 40 ரன்கள் எடுத்து குறிப்பாக நேதன் லயனை நன்றாக அடித்து ஆடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேதன் லயன் திருப்பு முனை:

மார்க் ஸ்டோன் மேன் 81 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு நன்றாக ஆடி வந்த போது. நேதன் லயன் பந்து ஒன்று சற்றே நேராக சறுக்கிக்கொண்டு வர எட்ஜ் ஆனது ஸ்மித் கேட்ச் எடுத்தார் இங்கிலாந்து 62/3.

டி.ஜே.மலான் இறங்கி 4 ரன்களில் லயனின் ரவுண் த விக்கெட் பந்து ஒன்று காற்றில் உள்ளே பிட்ச் ஆகி சற்றே திரும்பி எழும்பியது தடுத்தாடும் முயற்சியில் எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் தஞ்சமடைந்தது. இங்கிலாந்து 74/4. ஜோ ரூட் 51 ரன்கள் எடுத்து ஒருமுனையில் நிற்க எதிர்முனையில் விக்கெட்டுகள் விழுந்தன. நேதன் லயனை கிரீசிலிருந்தே ஆடுவது என்ற கெட்டப் பழக்கத்தினால்தான் இங்கிலாந்து இந்தத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஸ்மித் மிகச்சரியாக ஜோஷ் ஹேசில்வுட்டை பவுலிங்கிற்கு அழைத்தார். முதல் இன்னிங்ஸ் போலவே முன் காலை நீட்டி ஆட முயன்றார் பந்து உள்ளே வரும்போது அதனை விலக்கிக் கொண்டு மட்டையை கொண்டு வர முடியவில்லை, எல்.பி.ஆனார். ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் பயனிருந்திருக்காது, காரணம் ரீப்ளே 3 சிகப்புகளைக் காட்டியது.

முதல் இன்னிங்சிலும் இப்படித்தான் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அவரை ஒர்க் அவுட் செய்துள்ளது. திராவிடுக்கும் இந்தப் பிரச்சினை கடைசி காலங்களில் தலைதூக்க ஏகப்பட்ட பவுல்டுகள் ஆனது தெரிந்ததே. தலை நேராக இருக்க, பந்தை நேர் மட்டையில் பந்து வந்த பிரகு ஆட வேண்டும், ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட பேட்ஸ்மென்களின் பழக்க வழக்கத்துக்கு ஏற்ப சில விஷயங்களை மாற்றிக் கொள்வதில் சிரமப்படுவார்கள், அதுதான் ஜோ ரூட்டிற்கும் ஏற்பட்டுள்ளது.

மொயின் அலி இறங்கி நன்றாக ஆடினார், ஸ்வீப், மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு பவுண்டரி என்று லயனைச் சந்தித்தார், 40 ரன்கள் எடுத்த நிலையில்தான் ஸ்டம்ப்டு தீர்ப்பு வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி 42 ரன்களைச் சேர்க்க, பேர்ஸ்டோ-கிறிஸ் வோக்ஸ் ஜோடி 30 ரன்களைச் சேர்த்தனர். கிறிஸ் வோக்ஸ் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பவுன்சருக்கு 2வது ஸ்லிப்பில் இரையானார்.

ஜானி பேர்ஸ்டோ 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார், பாசிட்டிவ்வாக ஆடினார், ஆனால் அவரும், தேர்ட்மேனில் பீல்டர் கொண்டு வரப்பட்டதை தெரிந்துதான் ஆடினாரா இல்லை தெரியவில்லையா என்று புரியவில்லை, ஷார்ட் பிட்ச் பந்தை தேர்ட்மேனில் தூக்கி அடித்து கேட்ச் ஆனார். பிராடை, ஸ்டார்க்கும், பால் என்ற வீரரை கமின்சும் வீழ்த்தினர். இங்கிலாந்து 71.4 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

170 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் பேங்கிராப்ட், வார்னர் ஒன்றுமேயில்லாத இங்கிலாந்து பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் 114 ரன்கள் எடுத்தனர். நாளைக்கு வெற்றி உறுதி ஆஷஸில் ஆஸி. 1-0 என்று முன்னிலை பெறும்.

http://tamil.thehindu.com/sports/article20943871.ece?homepage=true

  • தொடங்கியவர்

நான் பவுலராக இருந்திருந்தால் அவுட் கொடுக்க வேண்டும் என நினைப்பேன் அல்லவா: ஸ்டம்பிங் குறித்து மொயின் அலி பெருந்தன்மை

 

 
moeen%20ali%20stampedjpg

சர்ச்சைக்குரிய மொயின் அலி ஸ்டம்ப்டு தீர்ப்பு.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

ஆஷஸ் டெஸ்ட், பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இன்று 40 ரன்களில் நன்றாக ஆடிய மொயின் அலி, சர்ச்சைக்குரிய ஸ்டம்ப்டு தீர்ப்பில் வெளியேறினார். இதனால் எழும் சர்ச்சைகளை அவர் பெருந்தன்மையுடன் ஒதுக்கித் தள்ளினார்.

சமூக வலைத்தளங்களில் 3-வது நடுவரின் ஸ்டம்ப்டு தீர்ப்பு குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது கிரீஸ் கோட்டின் அடர்த்தியையும், அது முதலில் நேராக இருந்ததா என்ற கேள்வியையும் சமூக வலைத்தள கிரிக்கெட் ஆர்வலர்கள் எழுப்பி வரும் நிலையில் மொயின் அலி அதனை பெருந்தன்மையாக அணுகுகிறார்.

இதே அவுட் கொடுக்காமல் இருந்தால் லயன் இப்படி கூறுவாரா என்பது சந்தேகமே, அதே போல் அவுட் கொடுக்காமல் இங்கிலாந்து நல்ல முன்னிலை பெற்றுவிட்டால் ஆஸ்திரேலிய கேப்டன் முதல் முன்னாள், இந்நாள் வீரர்கள் வரை நடுவரை பிய்த்து உதறியிருக்க மாட்டார்களா?

இந்நிலையில் ஆஷஸ் தொடரின் கடும் விளம்பரம், சூடு, சவால்கள், நெருக்கடிகளை மீறி மொயின் அலி கூறியது என்னவெனில், “நான் பந்து வீச்சாளராக இருந்திருந்தால் அதனை அவுட் கொடுக்கவே விரும்பியிருப்பேன். என்னைப் பொறுத்தவரை கிரீஸ், கால் அதில் பதிந்த இடம் ஆகியவற்றை ஒருவர் எந்த கோணத்திலிருந்து பார்க்கிறார் என்பதைப் பொறுத்ததாகும்.

நடுவர் தீர்ப்பை மதிக்க வேண்டும். பிறகு அடுத்தகட்டம் நோக்கி நகர வேண்டும் அவ்வளவே.

எனக்கு தனிப்பட்ட முறையில் அந்தத் தீர்ப்பினால் எந்த வருத்தமும் இல்லை. ரீப்ளேக்களில் மிகவும் நெருக்கமான தீர்ப்பு என்று தெரிந்தது, என்னைப்பொறுத்தவரை ஏமாற்றம் என்னவெனில் அம்மாதிரி ஆட்டமிழந்ததே.

மேலும் ஆட்டமிழந்த நேரம் பெரிதும் என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. நானும் பேர்ஸ்டோவும் நல்ல கூட்டணியை கட்டமைத்துக் கொண்டிருந்தோம்.

விரல்களில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகே கடினமாக இருந்தது. இன்று கொஞ்சம் பரவாயில்லை, ஆனால் சரியாக பந்து வீசவில்லை.

முதல் 3 நாட்கள் இந்த ஆட்டத்தில் இருந்தோம், இன்று திட்டப்படி ஆடவில்லை, அதுதான் தோல்விக்குக் காரணம்.

ஆஸ்திரேலியா சிறந்த அணிதான், ஆனால் சில வேளைகளில் நாம் நினைக்கும் அளவுக்கு சிறப்பானதல்ல. அடுத்த 4 போட்டிகளில் சவாலாக திகழ்வோம்” என்றார் மொயின் அலி.

http://tamil.thehindu.com/sports/article20944087.ece

  • தொடங்கியவர்

சர்ச்சையை தோற்றுவித்த மொய்ன் அலியின் ஆட்டமிழப்பு...

  • தொடங்கியவர்

ஆஷஸ் போட்டித் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி

Australias-victory-2.jpg Cricket – Ashes test match – Australia v England – GABBA Ground, Brisbane, Australia, November 26, 2017. England’s James Anderson and Stuart Broad walk behind Australia’s Cameron Bancroft and teammate David Warner at the end of the fourth day of the first Ashes cricket test match. REUTERS/David Gray

குளோபல் தமிழ்செய்தியாளர்
ஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகு வெற்றியீட்டியுள்ளது. அவுஸ்திரேலிய அணி முதல் போட்டியில் பத்து விக்கட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாதடியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 302 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 195 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸ் விக்கட் இழப்பின்றி 173 ஓட்டங்களையும் பெற்றக் கொண்டு வெற்றியீட்டியது. போட்டியில் அபராத சதமொன்றை அடித்து அவுஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கின்றது.

Australias-victory.jpg

http://globaltamilnews.net/archives/51687

  • தொடங்கியவர்

இங்கிலாந்தை சும்மா விட மாட்டோம்: வெற்றிக் களிப்பில் ஸ்டீவ் ஸ்மித் சூளுரை

 

 
smith

ஸ்டீவ் ஸ்மித்.   -  படம். | ஏ.எஃப்.பி.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் தனது அபார சதத்தின் மூலம் ஆஸி. அணி வெற்றி பெற்றதையடுத்து, அடிலெய்ட் டெஸ்டிலும் இங்கிலாந்து அணியை சும்மா விட மாட்டோம் என்று கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சூளுரைத்துள்ளார்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கான ரன்களை விக்கெட் எதையும் இழக்காமல் எடுத்து இங்கிலாந்தை நொறுக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கூறியதாவது:

“அடிலெய்ட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியின் சில பவுலர்களை ஆட்டத்துக்குள் வரவைக்கும். பகலிரவு டெஸ்ட் என்பதால் இரவில் அந்தப் பிட்ச் இன்னும் வேகம் காட்டும். எங்கள் பவுலர்கள் எப்படி சவாலாகத் திகழ்ந்தார்கள் என்பதை அறிவோம். எனவே மேலும் உற்சாகம் கூடியுள்ளது.

இந்த வாரம் எங்கள் அணிக்கு நன்றாக அமைந்தது. முதல் 2 நாட்கள் கடினமாக ஆடினோம், கடைசியில் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது.

அடிலெய்டிலும், ஏன் இந்த ஆஷஸ் தொடர் முழுதும் ஆஸ்திரேலிய அணியின் தீவிரம் குறையாது, இங்கிலாந்து அணியை சும்மா விடப்போவதில்லை” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article20990556.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஸ்மித் சதத்தைக் கழித்துப் பார்த்தால்... ஆஷஸ் முதல் டெஸ்ட்டில் ஆஸி வென்றது எப்படி? #Ashes #Analysis

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் (Ashes) தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. கிரிக்கெட்டில் ஸ்கோர் போர்டு விவரங்களை மட்டுமே கணக்கில்கொண்டு எதையும் கற்பனை செய்யமுடியாது. 25 ரன்கள் மட்டுமே அடித்த வீரர், அட்டகாசமாக 6 பௌண்டரிகள் அடித்து, லெக் சைடில் போகும் பந்தை ஃபிளிக் செய்ய முயன்று  துரதிருஷ்டவசமாக அவுட்டாகியிருப்பார். பலமுறை கண்டம் தப்பி ஒருவர் சதம் அடித்திருப்பார். கிட்டத்தட்ட, முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட் வித்தியாச வெற்றியும் இந்த ரகம்தான்.

ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் இருவருக்குமே கேப்டன்களாக இதுதான் முதல் ஆஷஸ் தொடர். இரு அணிகளிலுமே சில புதிய முகங்கள் இடம்பெற்றிருந்தன; எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் சிலர்; அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆஷஸ் தொடங்குவதற்கு முன், இரு அணிகளுக்கும் 50 சதவீத வாய்ப்பு இருப்பதாகவே தெரிந்தது. முதல் டெஸ்ட்டுக்குப் பின் நிலைமை வேறு. 

 

Ashes - Smith
 

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. அலெஸ்டர் குக் அனுபவத்தை  நம்பியிருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி. ஸ்டார்க், குக்கை வெளியேற்ற, ஸ்டோன்மானுடன் புதுமுக வீரர் ஜேம்ஸ் வின்ஸ் அடித்தளம் அமைத்தார். ‛பிரிஸ்பேனின்  ஒரிஜினல் ஆடுகளத்தின் தன்மையில்  பாதி கூட இல்லையே’ என ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் ஒருபுறம் புலம்ப, பந்து ரப்பர் பந்து போல விக்கெட் வீழ்த்தும் தன்மைக்கு உதவாமல் ஏனாதானோவென்று சென்றுகொண்டிருந்தது. பெரிதாக ரன்களை வாரி வழங்காமல் பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் அசத்தி  இங்கிலாந்துக்கு அணை போட்டது ஆஸி.

வாய்ப்புகள் அமையாவிடில் அதை அமைத்துக்கொள்வதில் ஆஸ்திரேலியர்கள் கில்லாடிகள். ஜேம்ஸ் வின்ஸ் அட்டகாசமாக ஆடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு ரன் எடுக்க முற்பட்டார். நேத்தன் லயன் மற்ற ஆஸி வீரர்கள் போல துடிப்பானவர் இல்லை என்றாலும், அவர் பந்தை நோக்கி ஓடி வந்தார். அவருக்கு எதுவாக பந்தும், பக்கத்து பிட்ச்சில் எழும்ப, ஒற்றைக்கையில் பிடித்து  direct hit செய்து வின்ஸின் சதமடிக்கும் கனவைத் தகர்த்தார். ஒரு விக்கெட் விழவே, கொஞ்சம் கிடுக்கிப்பிடி போட்டு, கம்மின்ஸ் துல்லியமாக பந்து வீச, ஜோ ரூட்டும் பெவிலியன் திரும்பினார். மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் சிறிது பாதிக்க, முதல் நாள் இரு அணிகளுமே தங்களுக்கு சாதகமாக சில விஷயங்களை முடித்ததாக நினைத்துக்கொண்டன.

Ashes


விக்கெட் கீப்பர் ஜானி பைர்ஸ்டோவ் சொதப்ப, மொயீன் அலி மற்றும் மாலன் சிறுக சிறுக ரன் சேர்க்க, 302 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இங்கிலாந்து. வார்னருடன், காலின் பான்கிராஃப்ட் களமிறங்க, ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட் கூட்டணி வேகமெடுத்தது. பிராட், ஆண்டர்சன், மொயீன், மற்றும் ஜேக் பால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி, ஆஸ்திரேலியாவை 76/4 என ஆட்டம் காண வைத்தனர்.  போட்டி தொடங்குவற்கு சில  மணி நேரத்துக்கு முன்புவரை ஆடுவாரா, மாட்டாரா என கண்ணாமூச்சி ஆடிய மார்ஷ், உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்தார். இருவருமே வெகு நிதானமாக ஆடி, சரிவிலிருந்து அணியை மீட்டனர். அரை சதம் சேர்த்தபின்னர் மார்ஷ் வெளியேற, ஏழு ஆண்டுகளுக்கு பின் அணிக்கு திரும்பிய பெயின் சொற்ப ரன்களில் வெளியேற, ஆல் ரவுண்டர் ஸ்டார்க்கும் ஸ்மித்துடன் ஒத்துழைக்கவில்லை. யாரும் எதிர்பாராத விதத்தில் கமின்ஸ் அட்டகாசமாக ஆடி, 42 ரன்கள் சேர்த்தார். 
 
ஸ்மித் 141*

Steve Smith Ashes


இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற பெரிதும் உதவியது ஸ்மித் அடித்த சதம்தான். ஒரு தலைவனாக அணியை இக்கட்டான சூழ்நிலையில் எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்று நிரூபிக்கும் விதத்தில் இருந்தது அவரது ஆட்டம். மற்ற அணிகளைப்போல அல்லாமல்,  ஒரு கேப்டன் இருக்கும்போதே, அடுத்தது இவர்தான் கேப்டன் என வெளிப்படையாகவே அறிவிக்கும் வழக்கம் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு உண்டு. மார்க் டெய்லர் இருந்த காலத்திலிருந்தே இது தொடர்கிறது. டெய்லருக்கு பின் ஸ்டீவ் வாஹ், அவருக்குப் பின் ரிக்கி பாண்டிங், அவரைத் தொடர்ந்து கிளார்க், தற்போது ஸ்மித் என ஒருவரின் தலைமைப்பண்பை வெகு சீக்கிரம் கண்டறிவதும், அவர்களிடம் உச்சபட்ச பொறுப்பை ஒப்படைப்பதும், அதற்கு அவர்களை முன் கூட்டியே தயார் செய்வதும் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு கைவந்த கலை. இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு வேறு எந்த நிர்வாகமும் நிகரில்லை. 
 
கடந்த 18 மாதங்களில் சென்ற இடத்தில் எல்லாம் தோல்வி என்றாலும், தலைவனாக ஸ்மித் ஜொலித்து வருகிறார். இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஐபிஎல், இந்திய அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் என எங்கும் எதிலும் முன்னின்று செயல்பட்டு வெற்றிக்காக போராடுவதில் ஸ்மித் கில்லி. அவரைப் போன்ற வீரருக்காக ஒவ்வொரு அணியும் ஏங்கும். 76/4 என அணி தத்தளித்த போதும், சிறுதும்  பதற்றப்படாமல், ஐந்தாவது ஸ்டம்ப்புக்கு வெளியே போகும் பந்துகளை கோடி ருபாய் கொடுத்தாலும் தொட மாட்டேன் என சத்தியம் செய்ததுபோல, அசராமல் ஆடிக்கொண்டே இருந்தார். பௌலர்களை தன்னுடைய பலத்துக்கு ஏற்றவாறு பந்துகளை வீச வைத்து, சிறுகச்சிறுக ரன்களை சேர்த்துக்கொண்டே வந்தார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தபோதும், தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளாமல் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் தன்னுடைய 21-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஸ்மித் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கத்ததான் செய்கிறது. பரதநாட்டியம் ஆடுகிறார் என்றெல்லாம் கிண்டல் செய்தனர். ஆனால், பேட்டை அழுத்தமாக பிடித்து விளையாடும் தன்மை, பந்தை எதிர்கொள்வதற்கு முன் லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு வந்து பந்தின் லெந்த்துக்கு ஏற்ப ஷாட்டை தேர்வு செய்வதெல்லாம் ஸ்மித் ஸ்பெஷாலிட்டி!

Steve smith - Ashes


இலங்கையின் சுழல், இந்தியாவின் 'டஸ்ட் பௌல்' என குறிப்பிடப்படும் புனே போன்ற ஆடுகளங்கள், தென்னாப்பரிக்காவின் பௌன்ஸ், இங்கிலாந்தின் ஸ்விங், சொந்த மண்ணின் பன்முகத்தன்மை கொண்ட பிட்ச் என களம் எதுவானாலும் ஸ்மித் அதில் முத்திரை பதிப்பார்.  ஆஷஸ் தொடரில் முதல் போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் போட்டியில் சொதப்பினால், அதை வைத்தே ஊடகங்கள், ரசிகர்கள், எதிரணியினர், வர்ணனையாளர்கள் என அத்தனைபேரும் கதகளி ஆடிவிடுவார்கள். இத்தனை பிரஷர் இருந்தும், கொஞ்சம் கூட அதை வெளிக்காட்டாமல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியை அடித்து மூன்றாம் நாள் இறுதியில் மீண்டும் ஆட்டத்தில் ஒரு சமநிலையை அடைய உதவினார் ஸ்மித்.
 
இரண்டாவது இன்னிங்ஸ்:
 
ஜோஷ் ஹேசல்வுட், மெக்ராத்திடம் படித்த பாடங்களைக் கொண்டு குக், வின்சை வெளியேற்ற, ஸ்மித்தை போல அணியைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு ரூட் தள்ளப்பட்டார். என்னதான் ரூட், விராட் கோஹ்லி, ஸ்மித், வில்லியம்சன், ஹாஷிம் ஆம்லா இவர்களோடு அடிக்கடி ஒப்பீட்டளவில் பேசப்பட்டாலும், ரூட் பெரிய சதங்களை அடிப்பதில்லை. இந்திய சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் 8 அரைசதங்கள் அடித்தார். அரை சதங்களை பெரிய சதங்களாக மாற்றுவதில் திண்டாடி வருவது  தொடர்கிறது.  54 ரன்கள்  அடித்திருந்த  நிலையில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற, ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய பாணியில் அடுத்தடுத்த வீரர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பேசிக்கொண்டே இருந்தனர். மொயீன் அலியின் ஸ்டம்பிங்கில் சர்ச்சை எழ, மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவித்தாலும், ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களே ‛அது அவுட் இல்லை. மொயீன் தொடர்ந்து ஆடியிருக்க வேண்டும்’ என சொன்னது ஆச்சர்யம். 

Steve Smith -Ashes
 

 

200 ரன்களுக்கு எங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தால் கூட கொஞ்சமேனும் அட்டாக் செய்திருக்கலாம். ஆடுகளத்தின் தன்மையும், பேட்டிங்  செய்வதற்கு ஏதுவாக மாற, பான்கிராஃப்ட் மற்றும் வார்னர் முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளைத் திருத்தி, முக்கியமாக ஆண்டர்சனின் பந்துவீச்சில் விக்கெட் ஏதும் கொடுக்காமல் அடிக்க வேண்டிய எண்ணிக்கையில் 75 சதவீதத்தை நான்காம் நாள் முடிவிலேயே கடந்து விட்டனர். மொயீன் அலியின் காயமும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கொஞ்சம் வழிவகை செய்தது.
 
இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. பிங்க் பந்தில் விளையாடப்படும் முதல் ஆஷஸ் போட்டி. பகலிரவு போட்டிகளில் எக்ஸ்ட்ரா  ஸ்விங் ஆக வாய்ப்புள்ளதால், தொடரை சமன் செய்ய இங்கிலாந்துக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு அவர்களது பேட்ஸ்மன்கள் துணைபுரிய வேண்டும். முக்கியமாக ரூட் பெரிய சதமடிக்க வேண்டும். ஆஷஸ் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்த நான்கு ஆட்டங்களுமே ரோலர் கோஸ்டர் போன்று அமைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இங்கிலாந்து திருப்பி அடிக்க வேண்டிய நேரமிது!

https://www.vikatan.com/news/sports/109164-what-is-special-about-the-aussies-victory-in-brisbane.html

  • தொடங்கியவர்

`இங்கிலாந்து, 2 வது ஆஷஸ் போட்டியில் உறுதியுடன் களமிறங்கும்!' - நாதன் லயன் ஆரூடம்

 
 

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. ஆயினும் அவர்கள் கண்டிப்பாக இன்னும் வீரியத்துடனும் உறுதியுடனும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவர் என்று ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கருத்து கூறியுள்ளார். 

நாதன் லயன்

 
 

இது குறித்து லயன் மேலும், `நாங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை மதிக்கிறோம். அவர்கள் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்னும் வீரியத்துடனும் உறுதியாகவும் களமிறங்குவர். ஓர் அணியை நாம் மதிக்காமல், விளையாடும்போதுதான் அவர்கள் நம்மை தோற்கடிப்பார்கள். இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாகச் சுலபமாக ஜெயிக்கக்கூடிய வகையில் இருக்காது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் எப்படி ஒரு போட்டிக்குத் தயாராவார்களோ அதைப் போன்று தயாராகி களத்துக்குச் செல்வோம். நாங்கள் முதல் போட்டியில் எப்படி விளையாடினோமோ அதைப் போன்றே விளையாடுவோம்' என்றார் நம்பிக்கையாக. ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, அடிலெயிடில் வரும் 2-ம் தேதி பகலிரவு ஆட்டமாக நடக்க உள்ளது.

https://www.vikatan.com/news/sports/109284-we-respect-the-english-we-know-theyre-going-to-come-back-bigger-nathan-lyon.html

  • தொடங்கியவர்

`எனக்கு எப்படிப் பார்த்தாலும் வெற்றிதான்..!' - ஸ்மித் பேட்டியால் சூடு பிடிக்கும் ஆஷஸ் களம்

 
 

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. நாளை ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்ட்டில் பகலிரவு ஆட்டமாக தொடங்க உள்ளது. இந்நிலையில், இரு அணியினருக்கும் இடையில் வார்த்தை யுத்தம் களத்துக்கு வெளியேயும் நீண்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், முதல் போட்டியில் 326 பந்துகள் விளையாடி 141 ரன்கள் எடுத்தார். இதை இங்கிலாந்து அணி தரப்பு, `ஸ்மித்தின் ரன் குவிக்கும் இடங்களைச் சுருக்கிவிட்டோம். இதை தொடர்வோம்' என்று கூறியது. 

ஸ்மித்

 
 
 

இதற்கு பதில் அளித்துள்ள ஸ்மித், `அவர்கள் அப்படிச் செய்தால் அது எனக்கு மகிழ்ச்சியே. எனக்கு பேட்டிங் ரொம்ப பிடிக்கும். எனவே களத்தில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் சந்தோஷமாகவே இருப்பேன். பெவிலியனில் இருக்க நான் விரும்பவே மாட்டேன். களத்திலிருந்து எனது பேட்டிங் பணியைச் செய்வதுதான் என் விருப்பத்துக்குரியது. 300 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அப்படி விளையாடுவதன் மூலம் பௌலர்களும் சோர்ந்து போவார்கள். எனக்கு எப்படிப் பார்த்தாலும் வெற்றிதான். அவர்கள் எதை என் மீது எறிந்தாலும் அதற்கு ஏற்றார் போல் என்னை மாற்றிக் கொள்வேன். எனக்கு இந்த டெஸ்ட்டிலும் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்' என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் ஸ்மித்.

https://www.vikatan.com/news/sports/109520-its-a-bit-of-a-winwin-if-thats-the-case-steve-smith.html

  • தொடங்கியவர்

ஆஷஸ் வரலாற்றின் முதல் 'டே-நைட்' மேட்ச்.... சரித்திரம் படைக்கப் போவது யார்? #Ashes

 
 
Chennai: 

கிரிக்கெட்டுக்குக் கிட்டத்தட்ட 140 வயசு. 1877-ம் ஆண்டு இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அங்கீகரிக்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. மெல்போர்னில் நடந்த இந்தப் போட்டியில் 45  ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.  டெஸ்ட் கிரிக்கெட்டின் நூறாவது வருடத்தைக் கொண்டாடும் பொருட்டு நடந்த ஆட்டத்திலும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது ஆச்சர்யம். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே கிரிக்கெட் என்றிருந்த காலத்தில், அடிக்கடி போட்டி மழையால்  பாதிக்கப்படுவதைக் கண்டு, அதே மெல்போர்ன் மைதானத்தில் ஓவருக்கு 8 பந்துகள் வீதம் 40 ஓவர் போட்டி நடைபெற்றது. அதிலும் ஆஸ்திரேலியாவே வெற்றிவாகை சூடியது. 1971-ல் செயற்கை ஒளி வெள்ளத்தில், கலர் ஆடைகள், வெள்ளை நிறத்தில் பந்து, கருப்பு நிறத்தில் சைட் ஸ்க்ரீன் என யாரும் எதிர்பாராத விதத்தில், 'வேர்ல்டு கிரிக்கெட் சீரிஸ்' ஆரம்பிக்க, புதிய பார்வையாளர்களை கிரிக்கெட் தன் பக்கம் ஈர்க்க ஆரம்பித்தது.

Ashes

 

இதுவே, கொஞ்சம் கொஞ்சமாக மருவி, 1975-ல் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கவும் வழிவகுத்தது. இப்படிப் பல மாறுதல்களுக்கு உட்பட்டுக்கொண்டிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட விளையாட்டு வேறு எதுவுமில்லை. இதேபோல, பார்வையாளர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு, ‘டெஸ்ட் போட்டிகளை ஏன் பகலிரவு ஆட்டங்களாக ஆடக் கூடாது?’ என 2007-ல் கேள்வி எழுந்தபோது, "என்ன பைத்தியக்காரத்தனம்... யாராவது டெஸ்ட் போட்டிகளைப் பகலிரவாக ஆடுவார்களா? நடக்காது, முடியாது, வேண்டாம்" என்று நெகட்டிவாகப் பேசினார்கள். மெரில்போர்ன் கிரிக்கெட் கமிட்டி அமைத்த குழுவில், டிராவிட் பங்குபெற்று,  "பிங்க் நிறப் பந்துகள் கொண்டு, பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்தால், டெஸ்ட் கிரிக்கெட் மிளிரும், கிரிக்கெட்டுக்கு வேறொரு முகம் கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார். இதோ, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் பழைமையான தொடரான 'ஆஷஸ்' தொடரிலும், பகலிரவு போட்டி வந்துவிட்டது.

பரீட்சார்த்த முறையில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் சில வருடங்களாகத் தங்களுடைய உள்ளூர் போட்டிகளில், பகலிரவு ஆட்டங்களை நடத்தி டபுள் தம்பஸ் அப் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 27, 2015-ல் முதல் பகலிரவு சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதுவரை ஆஸ்திரேலியா 3, பாகிஸ்தான் 2, இங்கிலாந்து 1 முறை பகலிரவுப் போட்டிகளை நடத்தியுள்ளன. 6 போட்டிகளுக்கும் நல்ல வரவேற்பு. டிரா ஆகாமல் ரிசல்ட் கிடைத்ததும் மற்ற அணிகளுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுத்தது.

Ashes

அடிலெய்டு மைதானத்தில், ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி. முதன்முறையாக இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் பகலிரவு போட்டியில் கலந்துகொள்கிறது. இதில், இங்கிலாந்துக்கே வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம், எப்படி? பொதுவாக, ஒவ்வொரு நாட்டிலும், சொந்த அணிக்கு எதிராகச் சில ஆடுகளங்கள் அமைந்துவிடும். இந்தியாவுக்கு மொஹாலி (ஸ்பீட் & பௌன்ஸ் அதிகம்), தென்னாப்பரிக்காவுக்கு செஞ்சுரியன் (கிட்டத்தட்ட ஹைவேஸ் போன்ற ஆடுகளம், நன்றாக அடித்து ஆடலாம்), இங்கிலாந்துக்கு கார்டிஃப். இப்படி... ஆஸ்திரேலியாவுக்கு அடிலெய்ட். ஆஸ்திரேலியாவில் அந்நிய அணிகளுக்கு ஒத்துழைக்கும் மைதானங்கள் என்று பார்த்தால் அது சிட்னி மற்றும் அடிலெய்டு மைதானங்கள் மட்டுமே. ஏனென்றால், ஸ்பின் எடுபடும், பந்து அதிகம் எகிறி அடிக்காது. களத்தில் நிறைய நேரம் செலவழித்தால் கட்டாயமாகப் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும். மேற்கொண்டு, பகலிரவுப் போட்டியாக நடைபெறுவதால், செயற்கை ஒளி வெள்ளத்தில் ஆண்டர்சன் போன்றவர்கள் பந்தை அநாயசமாக ஸ்விங் செய்வார்கள். கிரிஸ் வோக்ஸ், ஜேக் பால் போன்றவர்கள் கொஞ்சம் ஆண்டர்சனுக்கு உறுதுணையாக இருந்துவிட்டால், விக்கெட்டுகளைக் கொத்தாக வீழ்த்தலாம்.

Ashes
 

ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் கொஞ்சம் நன்றாகவே விளையாடியது. ஸ்டோன்மென், ரூட், வின்ஸ், மாலன், அலி, பேர்ஸ்டோவ் என எல்லோரும் நல்ல அடித்தளம் அமைத்துவிட்டு வெளியேறிவிட்டார்கள். இம்முறை அந்தத் தவறை திருத்திக்கொண்டுவிட்டால் நிச்சயம் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா ஸ்மித்தை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளது. முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி வெற்றிபெற்றாலும், ஆடிய ஆட்டம் அவ்வளவு நேர்த்தியாக இருக்கவில்லை. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் அலெஸ்டர் குக் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பது, ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கக்கூடிய விஷயம். குக்கை ஃபார்முக்கு வரவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்தால், இந்தத் தொடரே அவரது வாழ்வின் கடைசித் தொடராக அமையலாம்!

Ashes
 

 

ஆஸ்திரேலியாவுக்கு குக் எப்படியோ, அதேபோல, இங்கிலாந்துக்கு டிம் பெயின். ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர்கள் வரிசையில் வேட் மற்றும் பெயின், கில்கிறிஸ்ட், ஹாடின் போன்றவர்களின் ஆட்டத்தில் கால்பங்கைக் கூட வெளிப்படுத்துவதில்லை. இதனைக் கருத்தில்கொண்டு, மிடில் ஆர்டரில் களமிறங்கும் பெயினை சோதித்து ஒட்டுமொத்த லோயர் மிடில் ஆர்டரையும் பதம் பார்த்து விடலாம். இதுவரை நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் ஒன்று கூட ஐந்தாவது நாளை எட்டியதில்லை. ஏனென்றால், இரவில் பந்து அப்படி ஸ்விங் ஆகும். மேலும், அடிலெய்டு மைதானத்தில் மழையும் வெயிலும் மாறி மாறி வருவது ஆடுகளத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவே செய்யும். நாளை மழையும், அதன் பின்பு வெயிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரைச் சமன்படுத்தி தொடருக்கு உயிர் கொடுக்குமா இல்லை, ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 2-0 என முன்னேறுமா என்று 4-5 செஷன்களில் தெரிந்துவிடக்கூடும்!

https://www.vikatan.com/news/sports/109509-2017-ashes-second-test-preview.html

  • தொடங்கியவர்

2.png&h=42&w=42

 
141/3 * (52.2 ov)
  • தொடங்கியவர்

அடிலெய்ட் டெஸ்ட்: முதலில் பேட் செய்ய அழைத்த ஜோ ரூட்- ஆஸி. 209/4

 
steve%20smith

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அறிமுக இங்கி. வீச்சாளர் ஒவர்டன் பந்தில் பவுல்டு ஆன ஸ்மித்.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

அடிலெய்ட் பகலிரவு, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜோ ரூட் ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைக்க, ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை அறிமுக வீச்சாளர் கிரெய்க் ஓவர்டன் வீழ்த்த, 138/2 என்று நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, உஸ்மான் கவாஜா (53) விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்ற, கிரெய்க் ஓவர்டன், ஸ்மித்தை (40) வீழ்த்த 209/4 என்று முடிந்தது.

ஆட்ட முடிவில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 36 ரன்களுடனும் ஷான் மார்ஷ் 20 ரன்களுடனும் ஆடிவருகின்றனர்.

பகலிரவு ஆட்டம், பிங்க் பந்து என்பதால் ஸ்விங்கை எதிர்பார்த்து ஜோ ரூட் முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார், ஆனால் டேவிட் வார்னர் (47) அருமையாக ஆடி அச்சுறுத்தினார்.

பகலிரவு டெஸ்ட் என்பதால் முதலில் தேநீர் இடைவேளை வரும். மழை காரணமாக அதுவரை 13.5 ஓவர்களே சாத்தியமாயின. ஆண்டர்சன், பிராட், கிறிஸ் வோக்ஸ் சற்றே ஷார்ட்டாக வீசினர். பேங்கிராப்ட் பெரும்பாலும் வசதியாகவே ஆடினார், ஆனால் புரிதல் கோளாறினால் அவர் 10 ரன்களில் ரன் அவுட் ஆக நேரிட்டது.

ரன் ஓட வந்தவரை வார்னர் திருப்பி அனுப்ப ரன்னர் முனையில் கிறிஸ் வோக்ஸ் த்ரோ நேரடியாக ஸ்டம்பைப் பெயர்த்தது. மிஸ்பீல்டினால் ஏற்பட்ட ரன் அவுட் வாய்ப்பை கிறிஸ் வோக்ஸ் சாதகமாக மாற்றினார்.

வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 ரன்களில் நன்றாக ஆடிவர, கவாஜாவுடன் சேர்ந்து 53 ரன்கள் சேர்க்கப்பட்டது. அப்போது கவனச்சிதறலினால் கிறிஸ் வோக்ஸ் பந்தை எட்ஜ் செய்ய பேர்ஸ்டோ கேட்ச் எடுத்தார். கவாஜா 44 ரன்களில் இருந்த போது வோக்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை டாப் எட்ஜ் செய்ய ஸ்கொயர் லெக் திசையில் ஓடி வந்து கேட்சை விட்டார் ஸ்டோன்மேன்.

கவாஜா 89 பந்துகளில் அரைசதம் எடுத்தார். ஸ்மித்துடன் இணைந்து டின்னர் இடைவேளை வரை 50 ரன்களைச் சேர்த்திருந்தார்.இடைவேளை முடிந்தவுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் கல்லியில் வின்ஸின் அபாரமான கேட்சுக்கு 53 ரன்களில் கவாஜா வெளியேறினார்.

ஸ்மித் வழக்கம்போல் 90 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் என்று சுவராக முயற்சி செய்து கொண்டிருந்தார், இம்முறை இங்கிலாந்து அவரைக் கொஞ்சம் அதிகம் மட்டையில் ஆடவிட்டது. அதனால்தான் அவர் ஓவர்டன் வீசிய லெந்த் பந்தில் தடுத்தாடும் முயற்சியில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். ஓவர்டனின் முதல் டெஸ்ட் விக்கெட்டே பரிசு விக்கெட்டான ஸ்மித்தாக அமைந்தது.

161/4 என்ற நிலையிலிருந்து இங்கிலாந்து சற்றே தொய்வு கண்டது இதனால் ஹேண்ட்ஸ்கம்ப், மார்ஷ் 209 வரை மேலும் சேதமில்லாமல் கொண்டு சென்றனர்.

பிராட், ஆண்டர்சன் ஆகியோருடன் ஸ்மித் வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபட்டதைப் பார்க்க முடிந்தது.

http://tamil.thehindu.com/sports/article21250560.ece

  • தொடங்கியவர்

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியா 442 ரன்கள் குவித்து டிக்ளேர்

 

அடிலெய்டில் நடைபெற்று வரும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஷேன் மார்ஷ் சதத்தால் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 442 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்துள்ளது.

 
அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியா 442 ரன்கள் குவித்து டிக்ளேர்
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல் - இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

டேவிட் வார்னர் (47), கவாஜா (53), ஸ்மித் (40) ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல்நாள் ஆட்ட முடிவில் 81 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்திருந்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 36 ரன்னுடனும், ஷேன் மார்ஷ் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201712031522553818_1_1pain-s._L_styvpf.jpg
அரைசதம் அடித்த பெய்ன்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் நேற்று எடுத்திருந்த 36 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து ஷேன் மார்ஷ் உடன் விக்கெட் கீப்பர் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்தனர். பெய்ன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்டார்க் 6 ரன்னில் வெளியேறினார்.

201712031522553818_2_1Joeroot-s._L_styvpf.jpg
விக்கெட் வீழ்த்த முடியாத விரக்தியில் ஜோ ரூட்

வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் துணையுடன் ஷேன் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஷேன் மார்ஷ் அரைசதத்தை சதமாக மாற்றினார். ஆஷஸ் தொடரில் ஷேன் மார்ஷின் முதல் சதம் இதுவாகும். கம்மின்ஸ் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

201712031522553818_3_1cummins-s._L_styvpf.jpg
பந்தை விளாசும் கம்மின்ஸ்

ஆஸ்திரேலியா 149 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 442 ரன்கள் குவித்திருந்த நிலையில் முதல்இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஷேன் மார்ஷ் 126 ரன்களுடனும், கம்மின்ஸ் 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/03152252/1132367/Adelaide-Test-Australia-442-declared-in-1st-innings.vpf

  • தொடங்கியவர்

ஆஷஸ்: ஆஸ்திரேலியா மீண்டும் ஆதிக்கம்! 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இங்கிலாந்து!

 

 
lyon22

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அடிலெய்டில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் ஷான் மார்ஷ் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 126 ரன்கள், நாதன் லயன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்தது. அலாஸ்டர் குக் 11, ஜேம்ஸ் வின்ஸ் ரன்கள் இன்றி களத்தில் இருந்தார்கள். முன்னதாக ஸ்டோன்மேன் 18 ரன்களில் வீழ்ந்தார்.

இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 76.1 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஓவர்டன் 41 ரன்களும் குக் 37 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள். மொயீன் அலி 25 ரன்களில் இருந்தபோது பந்துவீசிய லயன், அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் பெற்றாலும் ஆஸ்திரேலியா மீண்டும் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/04/england-are-all-out-for-227-2820201.html

  • தொடங்கியவர்

இங்கிலாந்து 227 ரன்களுக்குச் சுருண்ட பிறகு ஆண்டர்சன் அற்புதம்: ஆஸ்திரேலியா 268 ரன்கள் முன்னிலை

 
anderson

ஆஸி. தொடக்க வீரர் பேங்கிராப்ட் விக்கெட்டை வீழ்த்தியபோது ஆண்டர்சன்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்குச் சுருண்டு ஆஸ்திரேலியாவுக்கு 215 ரன்கள் முன்னிலையைக் கொடுத்தாலும் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.

காரணம் நவீன கேப்டன்களின் பாலோ ஆன் மறுப்புக் கோட்பாடுதான்.

இதனையடுத்து 53/4 என்று சரிவு கண்ட ஆஸ்திரேலியா 268 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 330-340 ரன்கள் வெற்றி இலக்கென்றால் இங்கிலாந்து நிச்சயம் முயன்று வெற்றி பெற வாய்ப்பு உருவாகியுள்ளது, ஆனாலும் மிகமிகக் கடினம்.

ஆட்ட முடிவில் நேதன் லயன் 3 ரன்களுடனும் ஹேண்ட்ஸ்கம்ப் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தின் இந்த 40% சாதக நிலைக்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் அதி அற்புத ஸ்விங் பவுலிங்கே காரணம், அவர் 11 ஓவர்கள் வீசி 7 மெய்டன்களுடன் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் 7 ஓவர்களில் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸி.கொடுத்த நெருக்கடியில் 227 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து:

இன்று காலை 29/1 என்று தொடங்கிய இங்கிலாந்து குளிர்பான இடைவேளையின் போது 76/3 என்றும் பிறகு தேநீர் இடைவேளையில் (தேநீர் இடைவேளை பகலிரவு போட்டியில் டின்னருக்கு முன்பாக வரும்) 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் என்றும் சரிந்தது. மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ நன்றாகத் தொடங்கியும் இருவரும் முறையே 25 மற்றும் 21 என்ற சொந்த எண்ணிக்கையில் வெளியேற இங்கிலாந்து 142/7 என்று ஆனது. ஆனால் அதன் பிறகு கிறிஸ் வோக்ஸ் (36), ஓவர்டன் (41) இணைந்து 66 ரன்களைச் சேர்த்தனர். அப்படியும் பாலோ ஆன் தவிர்ப்பு எண்ணிக்கையை எட்ட முடியாமல் 227 ரன்களுக்குச் சுருண்டது.

பிராட் மற்றும் ஆண்டர்சனை வீழ்த்திய நேதன் லயன் 2017-ம் ஆண்டில் இப்போதைக்கு அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவரானார். ஆஸ்திரேலியா தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, கமின்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்று காலை ஜேம்ஸ் வின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் பந்தை பின் காலில் சென்று அடிக்க முனைந்தார் எட்ஜ் செய்து வெளியேறினார். ஜோ ரூட் கொஞ்சம் பாசிட்டிவாக ஆடுவோமே என்று முயற்சி செய்தார், ஆனால் பயனளிக்காமல் 9 ரன்களில் பாட் கமின்ஸ் புல் லெந்த் பந்தை டிரைவ் ஆடி 3-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். அலிஸ்டர் குக் 37 ரன்களில் நேதன் லயன் ஆஃப் பிரேக்கை தேவையில்லாமல் ஆடப்போய் ஸ்மித்திடம் கேட்ச் வழங்கினார். டேவிட் மலான் 19 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கமின்ஸின் பந்து ஒன்று எழும்பி உள்நோக்கி கட் ஆனது, மட்டையின் உள்விளிம்பில் பட்டு பெய்னிடம் கேட்ச் ஆனது.

தேநீர் இடைவேளையின் போது 128/5 என்று இருந்த இங்கிலாந்து அணி அதன் பிறகு சுதாரிக்க முயன்றது. தேநீர் இடைவேளைக்கும் இரவு உணவுக்கும் இடையிலான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் காட் அண்ட் பவுல்டு முறையில் விழுந்தன. மொயின் அலி 25 ரன்களில் லயன் பந்தை டிரைவ் ஆடினார், அது லயனுக்கு இடது புறம் காற்றில் வந்தது, ஒரு முழு நீள டைவ் அடித்தார், பிடித்தார்.

அடுத்ததாக மிட்செல் ஸ்டார்க் பந்தை நன்றாகவே அடித்தார் ஜானி பேர்ஸ்டோ (21), ஸ்டார்க் அதனை கொஞ்சம் சிரமப்பட்டாலும் பிடித்து விட்டார். கிறிஸ் வோக்ஸ் போராடி விளையாடிய 36 ரன்கள் இன்னிங்சை சரியாக ஆடாத புல் ஷாட் மூலம் அருகிலேயே கொடியேற்ற அதனை ஸ்டார்க்கே பிடித்தார். இப்படியாக 227 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது. அறிமுக பவுலர் ஓவர்டன் 79 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து ஆஸ்திரேலியாவின் கடும் ஸ்லெட்ஜிங்கையும் மீறி தன் உறுதியை அறிவித்தார்.

ஜேம்ஸ் ஆண்டர்சனின் அற்புத வீச்சு:

215 ரன்கள் முன்னிலையில் அதி தன்னம்பிக்கையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்க் ஸ்விங் பந்து வீச்சின் வீச்சை காட்டினார் ஆண்டர்சன். கேமரூன் பேங்க்ராப்டிற்கு அவுட் ஸ்விங்கர் ஒன்றை ஆசைகாட்டி மோசம் செய்தார், எட்ஜ் ஆனது கேட்ச் அவுட். உஸ்மான் கவாஜா சிலபல நெருக்கடியான தருணங்களுக்குப் பிறகு 20 ரன்களில் ஆண்டர்சன் பந்து ஒன்று அவரது நிலையையே திருப்ப கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். டேவிட் வார்னரால் கூட இங்கிலாந்து பந்து வீச்சை ஒன்றும் செய்ய முடியவில்லை 60 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார், ஆண்டர்சன் இவருக்குச் சில கவலைதரும் தருணங்களை அளித்தார்.

வார்னர் கடைசியில் 14 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

woakesjpg

ஆஸி. கேப்டன் ஸ்மித்தை வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

 

மேலும் ஸ்மித்துக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசி பந்தின் கோணத்தையும் ஸ்விங்கையும் எதிரெதிர் திசையில் வைத்து படாதபாடு படுத்தினார், ஒரு பந்து ஆஃப் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி சற்றே உள்ளே வர ஸ்மித் ‘பிளம்பாக’ வாங்கினார், கள நடுவர் கொடுத்த அவுட் தீர்ப்பை ஸ்மித் ரிவியூ செய்து திருப்பினார். முதல் இன்னிங்ஸில் ஷான் மார்ஷ், கமின்ஸ் ஆகியோருக்கு எல்.பி.கேட்டு, ரிவியூ கேட்டுக் கேட்டு நாட் அவுட்டாகி அலுத்துப் போனார் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த இன்னிங்ஸிலும் 3-ம் நடுவரின் முரண்பாடுகள் வெட்ட வெளிச்சமாகியது.

6 ரன்கள் எடுத்த ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்.பி தீர்ப்பளிக்கப்பட்டார் மீண்டும் ரிவியூ, இம்முறை பலனளிக்கவில்லை வெளியேறினார். ஆஃப் ஸ்டம்பில் பந்து லேசாக உள்ளே வந்து நேரானது, அருமையான பந்து பேக்ஃபுட்டைத் தவிர வேறு எதுவும் செய்யமாட்டேன் பராபரமே என்று ஆடியதால் பின் கால்காப்பு மேல் பகுதியில் வாங்கினார், இந்த முறை தப்பமுடியவில்லை.

http://tamil.thehindu.com/sports/article21260348.ece?utm_source=pushnotifications&utm_campaign=pushnotifications

  • தொடங்கியவர்

2.png&h=42&w=42

442/8d & 138
 
 
1.png&h=42&w=42
227 & 1/0 * (2.6 ov, target 354)
  • தொடங்கியவர்

வெற்றிக்குத் தேவை இன்னும் 178 ரன்கள், இருப்பது 6 விக்கெட்டுகள்: சாதனை வெற்றியை ஈட்டுமா இங்கிலாந்து?

 

 
root-anderson

வெற்றி வாய்ப்பை உருவாக்கிய ஆண்டர்சன், கேப்டன் ரூட்.   -  படங்கள்: ஏ.பி. ஏ.எஃப்.பி.

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஸ்திரேலியாவில் தன் முதல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 138 ரன்களுக்குச் சுருண்டது. இதனையடுத்து 354 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி வரும் இங்கிலாந்து 4-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றிக்குத் தேவை இன்னும் 178 ரன்கள், கையிலிருப்பதோ 6 விக்கெட்டுகள் என்ற நிலையில் கேப்டன் ஜோ ரூட் ஆணித்தரமான ஒரு இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். கிறிஸ் வோக்ஸ் 5 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ஆஷஸ் தொடர் விறுவிறு கட்டத்தை எட்டியுள்ளது.

டேவிட் மலானின் ஆஃப் ஸ்டம்பைப் பெயர்த்த பாட் கமின்ஸ், கிறிஸ் வோக்ஸையும் யார்க்கரில் வீழ்த்த முயற்சி செய்தார், ஆனால் நடக்கவில்லை. ஸ்மித் 2 ரிவியூக்களிலும் தோல்வி அடைந்து இழந்ததால் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டார்.

4-வது இன்னிங்ஸில் 354 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றதேயில்லை, எனவே இதில் வெற்றி பெற்றால் அது இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் சாதனை வெற்றியாகும். மேலும் டெஸ்ட் வரலாற்றில் டாப் 10 விரட்டல்களில் இதுவும் ஒன்றாக மாறும்.

இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய போதே ஆஸ்திரேலிய பதற்றம் தெரிந்தது, காரணம் ஜோஷ் ஹேசில்வுட் ரவுண் த விகெட்டிலிருந்து ஒரு பந்தை உள்ளே செலுத்த அலிஸ்டர் குக் கால்காப்பில் வாங்கினார், கடும் முறையீடு எழ நடுவர் நாட் அவுட் என்றார். ஸ்மித் சந்தேகத்துடனேயே ரிவியூ வேண்டாம் என்று முடிவெடுத்தார், ஆனால் ரிப்ளேயில் லெக் ஸ்டம்பை அந்தப் பந்து தாக்கும் என்று தெரிந்தவுடன் பெரிய திரையில் பார்த்து விட்டு ஸ்மித் பெரிய அளவில் ஏமாற்றமடைந்தார்.

ஆனால் குக், மார்க் ஸ்டோன்மேன் திடமான ஒரு தொடக்கத்தை கொடுத்து நம்பிக்கை அளித்தனர். 53 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். மார்க் ஸ்டோன்மேன் மிட்செல் ஸ்டார்க் அவரது பேடைக் குறி வைத்து வீசிய போது 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு 3 ரன்களை ஒரே திசையான மிட்விக்கெட்டிலேயே அடித்து 15 ரன்கள் விளாசினார், பிறகு அலிஸ்டர் குக், ஜோஷ் ஹேசில்வுட்டை இரண்டு புல்ஷாட் பவுண்டரிகளை விளாசினார், முதல் 36 ரன்களில் 7 பவுண்டரிகள் விளாசப்பட்டன.

நேதன் லயன் பந்து வீச வந்தவுடன், இங்கிலாந்து பதற்றமடைந்தது, காரணம் அவர் மிக அருமையாக வீசினார், தொடர்ந்து பந்துகளைத் திருப்பி கடுமையாக பீட் செய்தார்.கடைசியில் ஒரு பந்தை திருப்பாமல் நேராக செலுத்த குக் எல்.பி.ஆனார். இதுவும் ரிவியூவில்தான் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ஸ்மித் சரியாகவே ரிவியூவில் இம்முறை தவறிழைக்கவில்லை.

ஸ்டோன்மேன் பந்துக்கு 1 ரன் என்ற விகிதத்தில் எடுத்து வந்தவர் கட்டிப்போடப்பட்டார் 65 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க்கின் ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை தொட்டார் கெட்டார், கவாஜா அருமையாகக் கேட்ச் எடுத்தார்.

ஜோ ரூட், வின்ஸ் சேர்ந்து ஸ்கோரை 54/2 என்ற நிலையிலிருந்து 91 ரன்களுக்கு உயர்த்தினர் வின்ஸ் 15 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் தளர்வான ஷாட்டுக்கு ஹேண்ட்ஸ்கம்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் கடும் நெருக்கடியில் ரூட்டுடன் இணைந்தார் டேவிட் மலான், இருவரும் கடும் அழுத்தங்களுக்கிடையே 78 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஜோ ரூட் வெறுமனே அவுட் ஆகாமல் இருந்தால் போதும் என்று ஆடவில்லை, அடித்தும ஆடினார், ஒருமுறை லயன் பந்து ஒன்றை ஆடாமல் கால்காப்பில் வாங்க நடுவர் அவுட் கொடுத்தார், ஆனால் ரிவியூவில் அவுட் இல்லை என்று மாறியது. 80 பந்துகளிக்ல் 4 பவுண்டரிகளுடன் டேவிட் மலான் 29 ரன்கள் எடுத்த நிலையில் கமின்ஸ் வேகத்தில் ஆஃப் ஸ்டம்பை இழந்தார். 169/4 என்று ஆன பிறகு மேலும் சேதமில்லாமல் இந்த தினத்தை 176/4 என்று முடித்துள்ளனர்.

இன்று காலை 53/4 என்று தொடங்கியது. நேதன் லயன் 14 ரன்களுக்கு உறுதியாகவே ஆடிவந்தார், ஸ்டூவர்ட் பிராட் ஒரு பவுன்சரை வீச ஹெல்மெட் கம்பியில் அடிவாங்கி நிலைகுலைந்தார், அதன் பிறகு ஒரு பவுன்சரை அப்பர் கட் செய்தார், இன்னொரு பவுன்சர் என்று பயந்து நகர்ந்து சென்று பாயிண்டில் பவுண்டரி அடித்தார், இன்னொரு பவுன்சர் தலையை நோக்கி வர விலகினார், ஆனால் அவர் கண்களில் பயம் தெரியத் தொடங்கியது. அதே பயத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஒரு டெய்ல் எண்டர் பாணி ஷாட் ஆட பார்த்தார் மிட் ஆஃபில் பிராடிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஆண்டர்சன் பிறகு பீட்டர் ஹேண்ட்ஸ்கம்பையும் ஸ்லிப் கேட்சில் வீழ்த்தினார். டிம் பெய்ன் 11 ரன்களில் வோக்ஸ் பந்தை ஹூக் செய்தார், ஆனால் கிரெய்க் ஓவர்டன் அருமையாக பைன்லெக்கிலிருந்து ஓடிவந்து டைவ் அடித்துக் கேட்ச் எடுத்தார். அபாய வீரரும் பார்மில் உள்ளவருமான முதல் இன்னிங்ஸ் சதநாயகன் ஷான் மார்ஷ் அருமையான பந்தை அக்ராஸ் த லைனில் ஆடி ஸ்டம்ப்களை இழந்தார், வோக்ஸ் 4-வது விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டார்க் 20 பயனுள்ள ரன்களை எடுத்து ஆண்டர்சனின் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஹேசில்வுட், ஓவர்டன் பந்தை கல்லியில் கேட்ச் கொடுக்க கமின்ஸ் 11 ரன்களில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆஸ்திரேலியா 58 ஓவர்களில் 138 ரன்களுக்குச் சுருண்டது.

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஆண்டர்சன். நாளை 5-ம் நாள் ஆட்டம் பயங்கர விறுவிறுப்பாக அமையும் என்று ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article21267997.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

எனக்கு விளங்கவில்லை..:rolleyes: வீடியோ தெரியவில்லையா சுவைப்பிரியன்

3 minutes ago, சுவைப்பிரியன் said:

:unsure:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.