Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

எனக்கு விளங்கவில்லை..:rolleyes: வீடியோ தெரியவில்லையா சுவைப்பிரியன்

 

வீடியோ தெரியவில்லை

  • Replies 110
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ம்ம் நான் கைத்தொலைபேசி மூலமும் பார்த்தேன் தெரிகிறது.:rolleyes:

firefox இணைய உலாவி மூலம் முயற்சி செய்து பாருங்கள்.

5 minutes ago, சுவைப்பிரியன் said:

வீடியோ தெரியவில்லை

 

  • தொடங்கியவர்

இங்கிலாந்து ஏமாற்றம்: ஸ்டார்க், ஹேசில்வுட்டிடம் சரண்; 233 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி

 

 
bairstow

பேர்ஸ்டோ ஆட்டமிழந்து செல்கிறார். வெற்றியைக் கொண்டாடும் ஆஸி.   -  படம். | ராய்ட்டர்ஸ்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறப் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து 5-ம் நாளான இன்று ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்துக்குச் சரணடைந்து 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவ, ஆஸ்திரேலியா 2-0 என்று ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் முன்னிலை பெற்றது.

உண்மையில் இன்று ஆஸ்திரேலியாதான் பதற்றத்தில் களமிறங்கியது. ஒன்று ரிவியூ மீதமில்லை, இன்னொன்று ஜோ ரூட் க்ரீசில் அரைசதம் எடுத்து நின்றது. ஹேசில்வுட் இதனை ஒப்புக் கொண்டார், “அணியாகவும் சில தனிப்பட்ட வீரர்களிடத்திலும் பதற்றம் காணப்பட்டது உண்மை” என்றார்.

பேர்ஸ்டோ மிக அருமையாக ஸ்டார்க் பந்தை கவர் திசையில் ஒரு விளாசு விளாச பந்து பவுண்டரிக்குத் தெறித்தது, ஜேம்ஸ் ஆண்டர்சனை வைத்துக் கொண்டு கொஞ்சம் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்டம் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க்கின் அடுத்த பந்தை தடுத்தாட முற்பட்டார், போதிய அவகாசம் கிடைக்கவில்லை, பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்ய ஆஸ்திரேலியா 120 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

மிட்செல் ஸ்டார்க் 19.2 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 88 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் லயன் 2 விக்கெட்டுகளையும், கமின்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்று 178 ரன்கள் எடுத்தால் சாதனை வெற்றி என்ற நிலையில் களமிறங்கினர் ஜோ ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ். மொத்தம் 57 ரன்களையே சேர்த்து 6 விக்கெட்டுகளையும் இழந்து சரணடைந்தனர்.

ஜோ ரூட் முதலில் டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்து அவர்களை 442 ரன்கள் அடிக்கவிட்டது தவறு. பிறகு தவறான ஷாட்கள் அடங்கிய இன்னிங்சில் 227 ரன்களுக்குச் சுருண்டது, நேதன் லயனை இறங்கி வந்து ஆடாமல் கிரீசிலிருந்தபடியே ஆட முயற்சிப்பது ஆஸ்திரேலியாவுக்கு நிகரான உடல் மொழியில்லாதது, ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்து வீச்சுக்காகவாவது இன்னும் அதிகமாகப் போராடி 353 ரன்களுக்கு அருகிலாவது வர வேண்டும் என்ற உறுதியும் உத்வேகமும் இல்லாதது என்று இங்கிலாந்தின் பிரதிகூலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்று காலை வந்தவுடனேயே ஸ்கோர் 1 ரன் கூட ஏறாத நிலையில் கிறிஸ் வோக்ஸ் 2-வது பந்திலேயே ஹேசில்வுட் ஓவரில் மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில் ஒரு ரிவியூவையும் விரயம் செய்து விட்டுச் சென்றார்.

ஹேசில்வுட் மீண்டும் அடுத்த ஓவரை வீச இந்த முறை ஜோ ரூட் மட்டை விளிம்பை கனகச்சிதமாகப் பிடித்தார், நேற்றைய ஸ்கோரான 67 ரன்களிலேயே ஜோ ரூட் வெளியேறினார். சற்றே உள்ளே வந்த ஹேசில்வுட் பந்து நின்று சற்றே தாழ்வாக வந்தது ஜோ ரூட் மட்டையின் கீழ்ப்பகுதி விளிம்பில் பட்டு பெய்னிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கொஞ்சம் தாமதமாக மட்டையைக் கொண்டு வந்தார். அனைத்து எதிர்பார்ப்புகளும் 2 ஓவர்களில் சரிந்தது.

அதன் பிறகு மற்றதெல்லாம் சம்பிரதாயமே. மொயின் அலி 2 ரன்களில் ’அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது’ என்ற கவனமில்லாமல் லயன் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி. ஆனார். புதிய பந்தில் ஸ்டார்க் புகுந்தார், முதல் பந்திலேயே கிரெய்க் ஓவர்டனுக்கு ஒரு பந்தை உள்ளே செலுத்த கால்காப்பு, எல்.பி. 7 ரன்களில் ஓவர்டன் அவுட். பிராட் இறங்கினார், கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறைக்குள் இறக்கி விட்டது போல் குதித்துக் குதித்து ஓவர் பிட்ச் பந்துகளையும் பின்னால் சென்று ஆடிக் கொண்டிருந்தார், பவுன்சரை எதிர்பார்த்த பயத்தினால் விளைந்த பின்னோக்கிய நகர்வாகும் அது, முற்றிலும் தன்னம்பிக்கை இழந்த ஒரு பேட்டிங், 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். ‘நான் எப்போதும் உங்கள் விக்கெட், எப்போது வேண்டுமானாலும் என்னை அவுட் செய்யலாம்’ என்ற ரக பேட்டிங்கை வெளிப்படுத்தினார் பிராட்.

ஜானி பேர்ஸ்டோ 36 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சனை வைத்துக் கொண்டு ஏதாவது கொஞ்சம் போராடிப்பார்ப்பார், அல்லது 4,5 ஷாட்களையாவது ஆடி ஆஸ்திரேலியாவுக்குக் கொஞ்சமாவது தலைவலி கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒர் ஆக்ரோஷ பவுண்டரிக்கு அடுத்த பந்தே மட்டையில் பட்டு பவுல்டு ஆனார்.

அடுத்த டெஸ்ட் போட்டி பெர்த்தில். அங்கும் டாஸ் வென்று ஜோ ரூட் பீல்டிங்கைத் தேர்வு செய்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆட்ட நாயகனாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவும் தங்கள் பேட்டிங் பற்றி கவலைப்பட நேரிட்டுள்ளது, 200ரன்களுக்கும் மேல் முன்னிலை வைத்துக் கொண்டு 2-வது இன்னிங்சில் வார்னர் உட்பட அனைவரும் பம்மியது ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இங்கிலாந்துக்கு முழு ஏமாற்றம் தரும் மதியமாக இது அமைந்தது.

http://tamil.thehindu.com/sports/article21273448.ece

  • தொடங்கியவர்

கடந்த இரவு தூக்க மாத்திரை தேவைப்பட்டது: பதற்றமடைந்த ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

 

 
Steve%20Smith

அடிலெய்ட் டெஸ்ட் வெற்றி மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித்.   -  படம். | ஏ.எஃப்.பி.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் கொடுக்காமல் விட்டதையடுத்து ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்ப இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தான் கடும் பதற்றமடைந்ததாக ஆஸி.கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து ரசிகர்கள் கூட்டமான பார்மி ஆர்மி ஆஸ்திரேலிய அணி 4-ம் நாள் ஆட்டத்தில் 3 பந்து இடைவெளியில் 2 ரிவியூக்களை இழக்க நேரிட்டது குறித்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட ஸ்மித் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு ஸ்மித் கூறும்போது, “கடந்த இரவு நான் தூக்கமாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. நேர்மையாகக் கூற வேண்டுமென்றால் கடந்த 24 மணிநேரம் மிகக்கடினமாக அமைந்தது. ஒருநாட்டின் கேப்டனாக இருக்கும் போது இவையெல்லாம் அதன் அங்கம்தான். கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரும், சில வேளைகளில் தவறான முடிவுகளை எடுப்பதும் நடக்கும்.

இவையெல்லாம் கற்றுக்கொள்வதின் ஒரு அங்கம்தான். இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டேன்.

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டரை நாட்கள் ஆதிக்கம் செலுத்தினோம். இங்கிலாந்து மீண்டும் வெற்றி வாய்ப்புப் பாதைக்குள் நுழைய முடிந்தது. எனவே நான் உண்மையிலேயே பதற்றமடைந்தேன். அவர்கள் நன்றாக விளையாடியதாகவே நான் கருதுகிறேன், குறிப்பாக ஜோ ரூட், டேவிட் மலான். ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்பது தெரியும், ஆனால் ஜோ ரூட் ஒரு அபாயகரமான வீரர். அவர் ஆடியிருந்தால் எங்களுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்திருப்பார். அதிர்ஷ்டவசமாக அவரை வீழ்த்தினோம் மீதி வரலாறு.

ஜோஷ் ஹேசில்வுட் இன்று காலை அற்புதமாக வீசியது மகிழ்ச்சியளிக்கிறது. 180 ரன்கள் என்பது மிகப்பெரிய ரன்களாகும், அது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்திருந்தோம். ஹேசில்வுட் லெந்த் தனித்துவமானது, ஜோ ரூட்டை வீழ்த்தியது எங்களை நல்ல நிலைக்குத் திருப்பியது. அதன் பிறகுதான் மூச்சைக் கொஞ்சம் எளிதாக விட்டேன்.

பாலோ ஆன் ஏன் கொடுக்கவில்லையெனில் நல்ல முன்னிலையில் இருந்தோம், 2-வது இன்னிங்ஸில் நன்றாக ஆடியிருந்தால் வலுவான் நிலைக்குச் செல்லலாம் என்றே நினைத்தேன். ஆனால் மோசமாக ஆடினோம். 400 ரன்கள் முன்னிலை பெற்றிருக்க வேண்டும், இருந்தாலும் நல்ல முன்னிலையில் இருந்ததால் பாலோ ஆன் தேவையில்லை என்று நினைத்தோம்.

மேலும் இது பெரிய தொடர் பவுலர்களைப் பாதுகாப்பதும் அவசியம், எனவே அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு அளிப்பதும் முக்கியமாகப் பட்டது. மாறாக இங்கிலாந்து பவுலர்களை அதிகம் வீச வைத்தால் அவர்கள் களைப்படைவார்கள். தொடரின் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து பவுலர்களை களைப்படைய வைத்தால் தொடர் முழுதும் அது பயனளிக்கும் என்று கருதினேன்” என்றார் ஸ்மித்.

http://tamil.thehindu.com/sports/article21278186.ece

  • தொடங்கியவர்

இங்கிலாந்து சொதப்பியது எங்கே...? மீண்டும் ஆஸ்திரேலியா ஆதிக்கம்! #Ashes

 
 
Chennai: 

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. தொடரிலும், 2-0 என முன்னிலை. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. பிங்க் நிற பந்துகள் கொண்டு முதன்முறையாக பகலிரவு ஆட்டமாகத் தொடங்கியது இந்த ஆஷஸ் போட்டி. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையாக ரன்களைச் சேர்க்க, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே, ஸ்டுவர்ட் பிராட் விக்கெட் கீப்பரிடம், ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இல்லை எனக் கூற,  வாடிப்போனது இங்கிலாந்து. 

Ashes

 
 

விக்கெட்டுகளைத் தேடி, ஃபுல் லெந்த், குட், ஷார்ட் என மாறிமாறி பொறுமையிழந்து பந்துவீசியது வார்னருக்குச் சாதகமாகிவிட்டது. வார்னர் கொஞ்சம் செட்டில் ஆனதும், பாங்க்ராஃப்ட் ரன் அவுட்டாகி வெளியேற, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடெமியில், தங்கப்பதக்கம் வென்ற உஸ்மான் கவாஜா சேர்ந்தார். கவாஜாவின் திறமைக்கு அவர் என்றோ அணியில் தன்னைப் பெரிய ஃபோர்ஸாக மாற்றியிருக்க வேண்டும். வார்னருடன் சேர்ந்து, Floodlight வருவதற்கு முன்பே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு அடித்தளமிட்டார் கவாஜா. 47 ரன்கள் எடுத்திருந்தபோது வோக்ஸ் பந்தில், வார்னர் வெளியேற, ஸ்மித் உள்ளே வந்தார்.

பந்து பழையதாகிவிட்டதும், ஒரு செஷன் முடிந்து அடுத்த செஷனின் களைப்பு தெரியாத விதமும், கவாஜா, ஸ்மித்துக்குக் கைகொடுக்க, அடுத்த 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைக் கொஞ்சம் நிமிர்த்தினர். கவாஜா தன்னுடைய அரை சத்தை எட்டியவுடன் ஆண்டர்சன் வீச்சில் விழ,  ஸ்மித் அவுட்டே ஆக மாட்டாரா என வேதனைப்பட்ட இங்கிலாந்து ரசிகர்களுக்கு வரமாக வந்தார் அறிமுக வீரர் ஓவர்டன். ஆட்டம் கொஞ்சம் இங்கிலாந்தின் பக்கம் சென்றபோது, ஷான் மார்ஷ் உள்ளே வந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் உடன் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 206/4.

Ashes

இரண்டாம் நாள் ஆரம்பத்திலேயே, ஹாண்ட்ஸ்கோம்ப் விக்கட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்த, அணிக்காக ஏதாவது செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் வந்த பெயின், இருமுறை தப்பிப்பிழைத்தாலும், அரை சதம் அடித்தார். மார்ஷ் அவர் பங்குக்குப் பொறுமையாக ரன்களைச் சேர்த்தார். 57 ரன்கள் எடுத்திருந்த வேளையில் பெயின் அடிக்க முற்பட்டு அவுட் ஆக, ஸ்டார்க் அவரைப் பின்தொடர்ந்தார். கம்மின்ஸ் சந்தித்த முதல் 24 பந்துகளில் ரன் எடுக்கவில்லை. மார்ஷ் ரன் எடுக்கட்டும் என்று உறுதுணையாக நின்றார். அதன்பின் ஆட்டம் சூடுபிடித்தது. இருவரும் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி, 400 ரன்களுக்கு மேல் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். மார்ஷ் சதமடித்த பின், ஸ்மித் டிக்ளேர் செய்தார். 

இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, மார்ஷை சேர்க்கலாமா, மேக்ஸ்வெல்லை எடுக்கலாமா எனக் குழம்பிய நிர்வாகத்துக்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது மார்ஷின் இந்த சதம். "என் மீது போட்ட இன்வெஸ்ட்மென்ட்டை, டபுளாகக் கொடுத்துவிட்டேன்" என்று சொல்வதைப்போல அமைந்துவிட்டது அவரது பேட்டிங். அவரது இன்னிங்ஸ் நன்கு கட்டமைக்கப்பட்ட இன்னிங்ஸ். முதல்நாள் Floodlight வெளிச்சத்திலும், இரண்டாம் நாள் புதிய பந்துக்கு எதிராக தடுப்பாட்டம் ஆடியும், சதமடித்தது சிறப்பு.

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் ஸ்டோன்மேன் எல்பிடபுள்யூ முறையில் வெளியேற, ஆட்டமும் மழையால் தடைபட சரியாக இருந்தது. மூன்றாவது நாள் முதல் ஓவரிலேயே ஹேஸல்வுட், வின்ஸை மெக்ராத் ஸ்டைல் துல்லியமாக அவுட்டாக்கினார். காற்று ஆஸ்திரேலியா பக்கம் அடிக்கத் தொடங்கியது. ரூட், குக், மாலன் என அடுத்தடுத்து ஆஸ்திரேலியாவின் வேகத்துக்கும், நாதன் லயனின் சூழலுக்கும் விக்கெட்டுகளை இழக்க, அலி - பைர்ஸ்டோவ் ஜோடி கொஞ்சம் போராடியது. ஆனாலும், நாதன் லயன் ஒற்றைக்கையில் டைவ் அடித்து அலியை காட் & பௌல் செய்ய, இங்கிலாந்து சரியத் தொடங்கியது. அந்தச் சரிவை பௌலர்கள் கொஞ்சம் மீட்டனர். வோக்ஸ் 36 ரன்கள் எடுக்க, மொத்தமாக, 215 ரன்கள்  பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இங்கிலாந்து.  மூன்றாவது நாளில் பந்துவீச்சுக்கு ஏதுவான தருணத்தில் இன்னிங்ஸ் முடிந்தது இங்கிலாந்துக்குச் சாதகமே. நன்றாகப் பந்துவீசினால், நிச்சயமாக ஆஸ்திரேலியாவுக்குத் தண்ணி காட்ட முடியும் என்கிற நம்பிக்கையில் ஆண்டர்சன் பந்தைக் கையில் எடுத்தார்.

Ashes

ஆண்டர்சன், வோக்ஸ், பிராட் மூவரும் தங்களது 20+ ஓவர் ஸ்பெல்லில், சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களைப்போல பந்தை அங்குமிங்கும் ஸ்விங் செய்ய, ஆஸ்திரேலியர்கள் பந்தை தவறாகக் கணித்ததால், நான்கு விக்கட்டுகளை இழந்தனர். இதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இருவர், கவாஜா, ஸ்மித் விக்கெட்டுகளும் அடங்கும். வெகு நாள்களுக்குப் பிறகு, இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதமடிக்காமல் ஸ்மித் வெளியேறுவது இதுவே முதன்முறை. நைட் வாட்ச்மேனாக லயன் வந்து இரண்டு ஓவர்களைக் கடத்த, 53/4 என மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நான்காவது நாளில், இன்னமும் வீறுகொண்டெழுந்தனர் இங்கிலாந்து பெளலர்கள். 138 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட். ஒரு செஷன் நன்றாக ஆடினால் கூட, வெற்றிக்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு பெவிலியன் திரும்பியவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக, குக், ஸ்டோன்மான்மேன் நன்கு அடித்தளமிட்டனர்.

எப்படியாவது ஒரு பிரேக் கிடைத்துவிடாதா என்று அல்லாடியபோது, லயன், குக்கை வெளியேற்றினார். அடுத்த ஒவேரிலேயே ஸ்டோன்மேனை பௌன்ஸ் செய்து ஸ்டார்க் பெலிவியன் அனுப்பிவைத்தார். அணியைக் காப்பாற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில் ரூட் பேட் பிடிக்க, ஆட்டம் சூடுபிடித்தது. ஜேம்ஸ் வின்ஸ் மீண்டும், ஏழாவது ஸ்டம்பில் வீசப்பட்ட பந்தை துரத்தி அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்க, மாலன் ரூட்டுடன் சேர்ந்து விக்கெட் விழாமல் தடுக்க முற்பட்டார்.

Ashes

இதனிடையே, ஆஸ்திரேலியா ரிவ்யூ சிஸ்டத்தை கண்டமேனிக்கு வீணடிக்க, இங்கிலாந்தின் பார்மி ஆர்மி ஆஸ்திரேலிய வீரர்களைக் கிண்டலடிக்க,  ஆஷஸ் தொடங்கிய ஒன்பதாவது நாளில் அதன் உண்மைமுகம் வெளிவந்தது. ஆட்டமும் விறுவிறுப்பானது. பேட்டின்சன் அரௌண்ட் தி விக்கட் வந்து, மாலனின் ஸ்டம்பை குறிவைத்து பந்துவீச, நாள் முடியும் தருவாயில் இங்கிலாந்து தன்னுடைய நான்காவது விக்கெட்டை இழந்தது. ரூட் மட்டும் அரை சதமடித்து நிலைத்து நிற்க, மறுமுனையில் சப்போர்ட் ஏதுமின்றி தவித்தாலும் வெற்றிக்குத் தேவையான ரன்களில் பாதியை எட்டியதில் மகிழ்ச்சியாகவே நான்காவது நாளை இங்கிலாந்து முடித்துக்கொண்டது.

இதுவரை பகலிரவு டெஸ்ட் மேட்ச் ஐந்தாவது நாள் வரை சென்றதில்லை. ஆனால், அடிலெய்ட் டெஸ்ட் அந்தக் கணக்கை உடைத்து, இரு அணிக்கும் சமமான வெற்றி வாய்ப்பை ஐந்தாம் நாளில் கொடுத்தது. ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் பந்திலேயே வோக்ஸ், ஹேஸல்வுட் பந்துவீச்சில் வெளியேற, ஆஸ்திரேலியா மேலும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. துரதிருஷ்டவசமாக, பேட்டின் நுனியில் பந்து உரசி, ரூட்டும் 67 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க, ஆஸ்திரேலியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. ஸ்டார்க் லோயர் ஆர்டரை பதம் பார்க்க 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 2-0 முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா.

 

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது தோல்விக்குக் காரணம் என்றாலும், இங்கிலாந்தின் பேட்டிங்கில் வீரியம் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. ரூட்டும் அரை சதங்களைச் சதமாக மாற்றமுடியாமல் தவிக்கிறார். வின்ஸ், ஸ்டோன்மேன், மாலன் என பேட்டிங் வரிசையில் அனுபவமில்லை. அணியை உடனே மீட்டெடுக்க ஒரு ஆல் ரவுண்டரும், டாப் ஆர்டரின் ரன் அடிக்கக்கூடிய சிறந்த பேட்ஸ்மேனும் உடனடித் தேவை. ஆனால் எங்கிருந்து யார் வருவார்கள், அதுதான் கேள்வி!

https://www.vikatan.com/news/sports/109987-australia-beat-england-in-adelaide-test.html

  • தொடங்கியவர்
ஆஷஸின் மூன்றாவது டெஸ்ட் நாளை
 

image_acab7ca648.jpgimage_68aaaef363.jpg

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பேர்த்தில், இலங்கை நேரப்படி நாளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கிறது.

ஆஷஸின் முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு வாழ்வா, சாவா என்றவாறு குறித்த போட்டி அமைந்துள்ளதுடன், இப்போட்டியுடன் சேர்த்து 150ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவரான அலிஸ்டியர் குக் போன்ற வீரர்களின் விளையாடும் காலத்திலான திருப்புமுனைப் போட்டியாகவும் காணப்படுகிறது.

இந்த டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ள பேர்த் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கருதப்படுகையில், மீண்டுமொரு முறை பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் மார்ஷ் ஆகியோர் ஆபத்தானவர்களாக இருக்கலாம் என்று கருதலாம். மறுபக்கம் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் அபாரமாக செயற்பட்ட ஜேம்ஸ் அன்டர்சனும் அச்சுறுத்தலாம் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியில், துடுப்பாட்ட வீரர் பீற்றர் ஹன்ட்ஸ்கொம்பை மிற்செல் மார்ஷ் பிரதியீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு மாற்றங்கள் இருக்காது.

இங்கிலாந்து அணியில், வேகமாகப் பந்துவீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளரின் தேவை குறித்து உரையாடல்கள் இடம்பெற்றபோதும் இரண்டாவது போட்டியில் அதேயணியே இப்போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ ஐந்தாமிடத்தில் துடுப்பெடுத்தாடக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி: டேவிட் வோணர், கமரோன் பன்குரோப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), ஷோர்ன் மார்ஷ், மிற்செல் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், நேதன் லையன், ஜொஷ் ஹேசில்வூட்.

எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி: அலிஸ்டியக் குக், மார்க் ஸ்டோன்மன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ றூட் (அணித்தலைவர்), ஜொனி பெயார்ஸ்டோ (விக்கெட் காப்பாளர்), டேவிட் மலன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரேய்க் ஒவெர்ட்டன், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்.  

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஆஷஸின்-மூன்றாவது-டெஸ்ட்-நாளை/44-208843

  • தொடங்கியவர்

பெர்த் டெஸ்ட்: மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 91/2; குக் ஏமாற்றம்

 

ஆஷஸ் தொடரின் பெர்த் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. குக் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 
பெர்த் டெஸ்ட்: மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 91/2; குக் ஏமாற்றம்
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

201712141038263895_1_3Cook-s._L_styvpf.jpg
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸ்டோன்மேன்

இந்நிலையில் 3-வது போட்டி உலகின் அதிகவேக ஆடுகளம் என்று அழைக்கப்படும் பெர்த் வாகா (WACA) மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஹேண்ட்ஸ்காம்ப் நீக்கப்பட்டு மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.

201712141038263895_2_3cook001-ss._L_styvpf.jpg

இங்கிலாந்து அணியின் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக்கிற்கு இது 150-வது டெஸ்ட் போட்டியாகும். முதல் இரண்டு போட்டியில் சோபிக்காத குக், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பா்க்கப்பட்டது. ஆனால், 7 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஏமாற்றமடைந்தார். அடுத்து வின்ஸ் களம் இறங்கினார்.

201712141038263895_3_3cook003-ssss._L_styvpf.jpg
பவுன்சர் பந்து தாக்காமல் இருக்கு குனிந்து பந்தை லீவ் செய்யும் ஸ்டோன்மேன்

ஸ்டோன்மேன் - வின்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஸ்டோன்மேன் அழகான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் மதிண உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. வின்ஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.

3-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேன் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 27 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோன்மேன் 48 ரன்னுடனும், ஜோ ரூட் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/14103814/1134496/Ashes-Perth-Test-England-91-for-two-cook-7-out.vpf

  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடரில் ஆட்ட நிர்ணயம்; அதிர்ச்சிக்குள்ளான இரசிகர்கள்

 

 
 

கிரிக்கெட் உலகின் பெருமரியாதைக்குரிய தொடராகக் கருதப்படும் ஆஷஸ் தொடரில் ஆட்ட நிர்ணயம் நடக்கவிருந்தது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

5_Match_Fixing.jpg

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்தின் ‘த சன்’ பத்திரிகையே இத்தகவலை வீடியோ ஆதாரத்துடன் வெளியாக்கியுள்ளது. ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட இரண்டு ‘புக்கி’களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஓவரில் இத்தனை ஓட்டங்கள் பெறப்படும் என்று வீரர்கள் சமிக்ஞை செய்வதைத் தொடர்ந்து பந்தயப் பணம் கட்டப்படும் என்றும் தாம் தயாராக இருப்பதை வீரர்கள் கையுறைகளை மாற்றி சமிக்ஞை செய்வர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் பிரபல வீரர் ஒருவர் உட்பட அவ்வணியின் சில வீரர்களுக்கு இந்த ஆட்ட நிர்ணயத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

http://www.virakesari.lk/article/28216

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா
179/4 * (56.4 ov
  • தொடங்கியவர்

முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து... 305/4 * (89 ov)

  • தொடங்கியவர்

பெர்த் டெஸ்ட்: மலான் தைரிய சதம்; ஸ்டோன்மேன், பேர்ஸ்டோ அரைசதம்; இங்கிலாந்து 305/4

 

 

malan

பெர்த் டெஸ்ட் போட்டியில் சதமெடுத்த இங்கிலாந்து வீரர் டேவிட் மலான்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டி இன்று (வியாழன்) பெர்த்தில் தொடங்கியது, முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட முடிவில் டேவிட் மலான் 110 ரன்களுடனும், பேர்ஸ்டோ 75 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 52 ஓவர்களில் 174 ரன்கள் கூட்டணியை இதுவரை அமைத்துள்ளனர். ஒரு நேரத்தில் இங்கிலாந்து 131/4 என்று சரிவு அபாயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட் முடிவிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இம்முறை டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பெர்த்தில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கும் மேல் எடுத்த தருணங்களில் தோல்வியடைந்ததில்லை என்பது புள்ளிவிவரம்.

அலிஸ்டர் குக் தனது 150-வது டெஸ்ட் போட்டியை நல்ல இன்னிங்ஸ் மூலம் கொண்டாட முடியவில்லை. 7ரன்களில் மிட்செல் ஸ்டார்க்கின் 149 கிமீ யார்க்கர் முயற்சி அதிவேக பந்தில் மட்டையை விரைவில் இறக்க முடியாமல் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ரிவியூ செய்யவில்லை, காரணம் அவருக்கே அவர் அவுட் என்று தெரிந்திருந்ததே.

இன்று அருமையாக ஆடிய ஸ்டோன்மேன், டேவிட் மலான் ஆகியோருக்கு ஆஸ்திரேலியா அணி ஸ்லிப் பீல்டர்கள் 2 நேரடி வாய்ப்புகளைத் தவற விட்டனர். முதலில் ஹேண்ட்ஸ்கம்ப் இடத்தில் தேர்வு செய்யப்பட்ட மிட்செல் மார்ஷ் முதல் ஸ்லிப்பில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் வந்த வாய்ப்பை தவற விட்டார், பிற்பாடு மலான் 92 ரன்களில் இருந்த போது 3-வது ஸ்லிப்பில் கேமரூன் பேங்கிராப்ட் ஒரு வாய்ப்பை தவற விட்டார். இம்முறை துரதிர்ஷ்டசாலி மிட்செல் ஸ்டார்க்.

குக் ஆட்டமிழந்தவுடன் ஸ்டோன்மேன், வின்ஸ் இணைந்தனர் பெர்த் பிட்சின் பவுன்ஸ், வேகத்துக்கு ஓவர் ஆர்வம் காட்டி ஷார்ட் பிட்ச் பந்து வீசாமல் புல் லெந்த் பந்துகளையே ஆஸி.யினர் வீசினர், ஆனால் ஸ்டோன்மேன், வின்ஸ் இருவரும் சில அபாரமான ட்ரைவ்களை ஆடி அசத்தினர். 63 ரன்களை இருவரும் சேர்த்து ஆஸி.க்கு லேசான மன உளைச்சலை உணவு இடைவேளை வரும் நேரம் அளித்த வின்ஸ், மலான் ஜோடி உணவு இடைவேளைக்குச் சற்றும் உன் உடைக்கப்பட்டது, 25 ரன்கள் எடுத்த வின்ஸ் அதுவரை காட்டிய பொறுமையை இழந்து ஜோஷ் ஹேசில்வுட் ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஜோ ரூட் அருமையான டச்சில் இருந்தார், ஜோஷ் ஹேசில்வுட் பந்தை அருமையான டிரைவ் பவுண்டரி அடித்து 23 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் என்று நல்ல மூடில் இருந்தார். கமின்ஸின் ஆபத்தில்லாத லெக் திசைப் பந்தை பிளிக் செய்ய முயன்று கிளவ்வில் பட்டு பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியது இங்கிலாந்து முகாமில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

stoneman%20hitjpg

மார்க் ஸ்டோன்மேன், ஹேசில்வுட் பந்தை ஹெல்மெட்டில் வாங்கினார்.   -  படம். | ஏ.எஃப்.பி.

 

முன்னதாக நேதன் லயனை ஸ்வீப் செய்தும், மிட்செல் ஸ்டார்க்கை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளையும் அடித்த ஸ்டோன்மேன் நெருக்கடி அதிகரிக்க ஹேசில்வுட் ஆக்ரோஷ பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அடுத்த பவுன்சர் பேட்டில் பட்டும் பாயிண்டில் நேதன் லயனுக்கு முன்னால் விழுந்தது, அவர் டைவ் அடித்தார் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் 56 ரன்களில் அவர் 10 பவுண்டரிகளை அடித்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் துல்லிய பவுன்சர் ஸ்டோன்மேன் தொண்டைக்குக் குறி வைக்கப்பட்டது. பந்து கிளவ்வைக் கடந்து சென்ற போது பட்டது போல் ஒலி எழ முறையீடும் எழுந்தது, கள நடுவர் இராஸ்மஸ் நாட் அவுட் என்றார், ஆனால் பெய்ன் மிக அருமையாக ஒரு கையில் தலைக்கு மேல் பிடித்ததை மறுக்க முடியாது. ஆஸ்திரேலியா ரிவியூ செய்தனர். பந்து கிளவ்வில் பட்ட போது வலது கை மட்டையின் தொடர்பில் இல்லை. ஒரு கையை அவர் எடுத்து விட்ட பிறகே கிளவ்வில் பட்டதாகத் தெரிந்தது. ஆனால் 3-ம் நடுவர் அலீம் தார் அதனை அவுட் என்று தீர்ப்பளித்தார். பிற்பாடு காட்டப்பட்ட கோணங்களில் பந்து முன் கை கிளவ்வில் பட்டதாகத் தெரிந்தாலும் அலீம் தார் அந்தக் கோணங்களைக் காட்டுமாறு கேட்கவில்லை. அதனால் அலீம் தார் அதனை எப்படி அவுட் கொடுத்தார் என்ற கேள்வி நிச்சயம் இங்கிலாந்து முகாமில் எழுந்திருக்கும்.

மலான் சதம்; பேர்ஸ்டோவுடன் சதக்கூட்டணி:

ஸ்டோன்மேன் விக்கெட்தான் இன்று கடைசி விக்கெட் என்பதை ஆஸ்திரேலியா எதிர்பார்க்கவில்லை, காரணம் பேர்ஸ்டோ, மலான் அபாரமாக ஆடினர், ஆக்ரோஷமாக ஆடினர். அனைத்திற்கும் மேலாக ஆஸி.க்கு எந்தக் காலத்திலும் பிடிக்காத ஆதிக்கம் செலுத்தினர். ஒவர் பிட்ச் செய்யும் போதெல்லாம் மலான் அருமையான கவர் டிரைவ்களை ஆடினார், அப்படிப்பட்ட ஒரு கவர் டிரைவ் மட்டையில் பட்டதும் பவுண்டரிக்குப் பறந்ததும் கேமராவினால் பிடிக்க முடியவில்லை, இதனை வர்ணணையாளர்கள் ‘இன்றைய தினத்தின் சிறந்த ஷாட்’ என்று வர்ணித்தனர்.

ஸ்டார்க் பந்தை ஹூக் செய்யும் போது டாப் எட்ஜ் ஆகி சென்ற சிக்ஸ் உட்பட மலான் 15 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று ஆக்ரோஷம் காட்டினார். ஹேசில்வுட் வீசிய பவுன்சரை புல்ஷாட் ஆடி டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரி மூலம் தன் சதத்தை எட்டினார் மலான். 159 பந்துகளில் பெர்த் பிட்சில் முதல் நாளில் சதம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல.

பேர்ஸ்டோவும் அருமையான லெக் திசை ஆட்டத்தின் மூலம் 10 பவுண்டரிகளை விளாசி 149 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இருவரும் இணைந்து 174 ரன்களைச் சேர்த்தனர். 2010-11 தொடருக்குப் பிறகு இங்கிலாந்தின் சிறந்த ரன் கூட்டணியாகும் இது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் ஒரு ஓவருக்கு 4.15 என்ற விகிதத்தில் ரன்களை விட்டுக் கொடுத்து 19 ஓவர்களில் 79 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 7 ஓவர்கள் வீசி 25 ரன்களுக்கு விக்கெட் இல்லை. ஹேசில்வுட், கமின்ஸ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற, நேதன் லயன் 19 ஒவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.

http://tamil.thehindu.com/sports/article21663848.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆஷஸில் சூதாட்டமாம்.! வீரர்களை விலைக்கு வாங்கியதாம் இந்திய கும்பல்

 

 
 

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சூதாட்டம் நடை­பெற போவ­தா­கவும் வீரர்கள் விலைக்கு வாங்­கப்­பட உள்­ள­தா­கவும், இதில் இந்­திய சூதாட்ட கும்­ப­லுக்கு தொடர்பு உள்­ள­தாகவும் கூறப்­ப­டு­கி­றது.

அவுஸ்­தி­ரே­லிய – இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஆஷஸ் தொடர் தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. இந்தத் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்­டிகள் முடிந்­துள்ள நிலையில் நேற்று மூன்­றா­வது போட்டி ஆரம்­ப­மா­னது. 

இந்த போட்­டியில் சூதாட்டம் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்­கி­றதாம். இந்த சூதாட்­டத்தை இந்­தி­யாவை சேர்ந்த சூதாட்ட நபர்­க­ளான சோபர் ஜோபன், பிரியங் சக்­சேனா ஆகியோர் செய்­ய­வி­ருக்­கின்­றனராம். இவர்­க­ளுக்கும் அவுஸ்­தி­ரே­லிய, இங்­கி­லாந்து வீரர்­க­ளுக்கும் இடையில் நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

இவர்­க­ளுக்கு பின் இந்­தி­யாவை சேர்ந்த முக்­கிய நபர் ஒருவர் இருப்­ப­தாக தனியார் பத்­தி­ரிகை ஒன்றில் இவர்கள் கூறி­யுள்­ளனர். மேலும் அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் 'தி சைலன்ட் மேன்' என்ற நபர் இவர்­க­ளுக்கு பின் இருப்­ப­தாக கூறி­யுள்­ளனர். 

இவர்கள் இரு­வ­ரும்தான் சூதாட்டம் குறித்த விவ­ரங்­களை கேட்­பதும், தரு­வ­து­மாக இருப்­பார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

சோபர் ஜோபன், பிரியங் சக்­சேனா ஆகியோர் எப்­படி சொல்­கி­றார்­களோ அதை வைத்து மற்ற நபர்கள் அனை­வரும் சூதாட்­டத்தில் பணம் கட்­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சோபர் ஜோபன், பிரியங் சக்­சேனா ஆகிய இரு­வரும் சேர்ந்து அவுஸ்­தி­ரே­லி­யா­விலும், இங்­கி­லாந்­திலும் சில கிரிக்கெட் வீரர்­களை விலைக்கு வாங்கி இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. அந்த வீரர்கள் அனை­வரும் இவர்கள் சொல்­வதை அப்­ப­டியே கேட்­பார்கள். எந்த ஓவரில் எத்­தனை ஓட்டம் கொடுக்க வேண்டும் என்­பதை இவர்கள் ஏற்­க­னவே சொல்லி இருப்­பார்கள். அதை வைத்து சூதாட்ட உல­கத்தில் இருக்கும் பெரிய நபர்கள் இவர்கள் மீது பணம் கட்­டு­வார்கள்.

சோபர் ஜோபன், பிரியங் சக்­சேனா ஆகிய இரு­வரும் இந்­திய சூதாட்ட உலகில் மிகவும் முக்­கி­ய­மான நபர்கள் ஆவர். மேலும் இதில் சோபர் ஜோபன் இந்­திய கிரிக்கெட் அணியில் சேர்­வ­தற்­காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். 

தற்­போது இவர்­கள்தான் இந்த சூதாட்டம் குறித்து பத்­தி­ரி­கைக்கு தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். 

இதற்­காக அவர்கள் அந்த பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திடம் கோடிக்­க­ணக்கில் பணம் கேட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இந்த சூதாட்டம் 'சிக்னல்' முறைப்­படி நடக்கும். இதற்­காக மைதா­னத்தில் வீரர்­களை எளி­தாக பார்க்கும் வகையில் சிலர் நிற்க வைக்­கப்­பட்­டி­ருப்­பார்கள். 

எந்த ஓவரில் சூதாட்டம் நடக்­குமோ அந்த ஓவரில் வீரர்கள் கையு­றையை கழற்றுதல், முகத்தை துணியால் துடைப்­பது, தலைக்­க­வ­சத்தை கழற்றுதல் என சில சைகைகளை கொடுப்­பார்கள். 

அதை வைத்து மைதா­னத்தில் இருக்கும் நபர்கள் சோபர் ஜோபன், பிரியங் சக்­சே­னா­ ஆகியோருக்கு தகவல் கொடுப்­பார்கள். அவர்கள் அதன்­மூலம் சூதாடுவார்கள். 

இந்த சூதாட்­டத்தில் ஈடு­பட முடிவு

செய்து இருக்கும் வீரர்கள் யார் என்­பது

இது­வரை தெரி­ய­வில்லை. ஆனால் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இங்­கி­லாந்து என இரண்டு அணி­களிலும் சில வீரர்கள் இதற்கு ஒப்புக் கொண்

டதாக சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா

ஆகியோர் பேட்டியில் குறிப்பிட்டுள்ள

னர். மேலும் 110 சதவிகிதம் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

http://www.virakesari.lk/article/28256

1.png&h=42&w=42

 
403
 
 
2.png&h=42&w=42
 
5/0 * (4 ov)
 
 
  • தொடங்கியவர்

3-வது ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டீவ் ஸ்மித் நிதான ஆட்டம் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 203/3

பெர்த்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்துள்ளது.

 
3-வது ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டீவ் ஸ்மித் நிதான ஆட்டம் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 203/3
 
 
பெர்த்:
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் (7), ஸ்டோன்மேன் (56), வின்ஸ் (25), ஜோ ரூட் (20) விரைவில் அவுட் ஆனார்கள். இதனால் இங்கிலாந்து 131 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.
 
5-வது விக்கெட்டுக்கு தாவித் மலன் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. தாவித் மலன் சதமும், பேர்ஸ்டோவ் அரைசதமும் அடித்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்திருந்தது. தாவித் மலன் 110 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 75 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவ் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தாவித் மலன் 140 ரன்களில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்தது. மலன் அவுட்டான சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவ் 119 ரன்களில் ஆட்டமிழந்தார். 
 
201712151800321230_1_ashes1._L_styvpf.jpg
 
தாவித் மலன் அவுட்டாகும்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த மொயின் அலி ரன்ஏதும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வோக்ஸ் 8 ரன்னிலும், ஓவர்டன் 2 ரன்னிலும், பிராட் 12 ரன்னிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 403 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கடைசி 6 விக்கெட்டுக்களை 36 ரன்னுக்குள் இழந்து 
இங்கிலாந்து ரன்குவிக்கும் வாய்ப்பை இழந்தது. ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
தொடர்ந்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெமரான் பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 22 ரன்கள் எடுத்து ஓவர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பான்கிராப்ட்டும் 25 ரன்களில் ஓவர்டன் பந்தில் போல்டாகி வெளியேறினார். அதைத்தொடர்ந்து உஸ்மான் கவாஜாவுடன், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் குவித்தது.
 
201712151800321230_2_ashes-overton._L_styvpf.jpg
வார்னர் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஓவர்டன்
 
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். கவாஜா 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வோக்ஸ் பந்தில் எல்.பி.டபுல்யூ ஆனார். இருப்பினும் ஸ்மித் நிதானமாக விளையாடினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 92 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/15180017/1134812/Steve-Smiths-brilliance-restores-balance-on-Day-2.vpf

  • தொடங்கியவர்

 

 

 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியின் ஒரு சில காணொளிப்பதிவுகள்

  • தொடங்கியவர்

 

பேர்ஸ்டோ, மலான் சதத்தில் இங்கிலாந்து 403! - பிரமாதமான பேட்டிங்கினால் அச்சுறுத்தும் ஸ்டீவ் ஸ்மித்

 

YouTube

smith%20six

பெர்த் டெஸ்ட்டில் பிராட் எகிறு பந்தை பைன் லெக் திசையில் சிக்சருக்குத் தூக்கிய ஆஸி. கேப்டன் ஸ்மித்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலிய அணி ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதி அற்புத அதிரடி டெஸ்ட் இன்னிங்ஸை ஆடி 122 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 92 ரன்களுடன் களத்தில் நின்று இங்கிலாந்தை அச்சுறுத்தி வருகிறார். ஷான் மார்ஷ் 7 ரன்களுடன் இருக்கிறார். முன்னதாக பேங்கிராப்ட், வார்னர் ஆகியோர் ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்டு வெளியேற, உஸ்மான் கவாஜா 50 ரன்கள் எடுத்து எல்.பி.ஆகி வெளியேறினார்.

தேநீர் இடைவேளக்கு சற்று முன்பாக எகிறு பந்து ஒன்றில் கிளவ்வில் அடி வாங்கி சற்றே கோபமடைந்ததைத் தவிர ஸ்மித் இன்னிங்ஸில் அப்பழுக்கில்லை, அவரது மட்டையை பந்தால் கடக்க முடியவில்லை, அதாவது அவராக ஆடாமல் விட்டால்தான் உண்டு, அவர் ஆடி பந்து கடந்து செல்ல முடியவில்லை. மீண்டும் அதே வலது கால் ஆஃப் ஸ்டம்பை நோக்கி பேக் அண்ட் அக்ராஸ் டெக்னிக் அனைத்துப் பந்துகளுக்கும்! இறங்கியவுடனேயே அபாரமான கவர் டிரைவ் பவுண்டரி மூலம் தொடங்கினார், பிறகு நேராக மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி இப்படியே ஆடிச் சென்றார், தற்போது 21-வது டெஸ்ட் சதத்திற்கு அருகில் உள்ளார்.

பேர்ஸ்டோ சதம், இங்கிலாந்து சரிவு!

 

bairstowjpg

சதம் எடுத்த பேர்ஸ்டோ.   -  படம். | ஏ.எஃப்.பி.

 

இன்று காலை 305/4 என்று தொடங்கியது இங்கிலாந்து, பேர்ஸ்டோ, மலான் கூட்டணி தங்களது 174 ரன் கூட்டணியிலிருந்து தொடங்கி மேலும் 63 ரன்களை சேர்த்து ஆஷஸ் சிறந்த 5-வது விக்கெட் கூட்டணியான 237 ரன்களைச் சேர்த்தனர். இதில் பேர்ஸ்டோ தனது 18 மாதங்களுக்குப் பிறகான முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார், இன்று காலை சிறப்பான பந்து வீச்சு சிலவற்றை எதிர்கொண்டு மீண்டு பிறகு ரன்கள் அடிக்கத் தொடங்கினர்.

மலான் ஒரு எல்.பி.ரிவியூவில் தப்பினார். பேர்ஸ்டோ கண்கவரும் பவுண்டரிகள் சிலவற்றை அடித்தார், கவர் டிரைவ்கள் பிரமாதம். இருவரும் சவுகரியமாக ஆடிவந்த நிலையில் ஆஸ்திரேலியர்கள் பாய்வதற்கான அந்தத் தருணம் நேதன் லயன் பந்தை மலான், லயன் பந்தை ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர்த் திசையில் மிட், ஆன், மிட்விக்கெட் இடையில் தூக்க நினைத்தார். வெளி விளிம்பில் பட்டு பேக்வர்ட் பாயிண்டுக்குக் கேட்சாகச் சென்றது. பதிலி வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் அட்டகாசமாகக் கணித்து மிகப்பிரமாதமாக எடுத்தார், கடினமான கேட்ச் 237 ரன்கள் கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவந்தது. டேவிட் மலான், 227 பந்துகளில் 19 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மொயின் அலி, கமின்ஸின் பேக் ஆஃப் லெந்த், ரவுண்ட் த விக்கெட் பந்தை ஸ்லிப்பில் கேட்சிங் பயிற்சி அளித்து ரன் எடுக்காமல் வெளியேறினார். 3 ஓவர்கள் சென்று கிறிஸ் வோக்ஸ் (8) ஒரு அற்புத கவர் டிரைவுக்குப் பிறகு ஜோஷ் ஹேசில்வுட் பந்தை பைன் லெக்கில் கமின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டெய்ல் எண்டர்கள் முன்னிலையில் ஸ்கோரை உயர்த்த பேர்ஸ்டோ முயன்றார், ஆனால் மிட்செல் ஸ்டார்க் இவரது மிடில் ஸ்டம்பை பறக்க விட்டார். பேர்ஸ்டோ 215 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிறகு ஓவர்டன் விக்கெட்டை பவுன்சரில் வீழ்த்தினார் ஹேசில்வுட். ஸ்டூவர் பிராட் பிறகு ‘பச்’ என்று ஒரு பவுன்சரை அறைய ஸ்கொயர்லெக்கில் 104 மீ சிக்ஸ் ஆனது. ஆனால் 12 ரன்களில் மீண்டும் ஒரு பந்தை ஒதுங்கிக் கொண்டு பைன் லெக்கில் அடிக்கும் முயற்சியில் ஷார்ட் பைன்லெக்கில் முடிந்தார் பிராட். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இங்கிலாந்து கடைசி 6 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்து 403 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 500 ரன்கள் ஆஸி.க்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கும்.

ஸ்மித் ஆக்ரோஷ இன்னிங்ஸ்:

ஆஸ்திரேலியா தன் இன்னிங்ஸை தொடங்கிய போது ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சில் தாக்கம் எதுவும் இல்லை, ஆனாலும் வார்னர் நிதானமாகவே ஆடினார், அவர் 36 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஓவர்டனின் அயராத உழைப்புக்கு வெற்றி கிட்டியது. வார்னருக்கு அருமையான ஒரு பந்தை மிகச்சரியாக ஓவர் த விக்கெட்டிலிருந்து ஆங்கிள் செய்து சற்றே பந்து நேராக வார்னர் மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் கையில் உட்கார்ந்தது.

பேங்கிராப்ட் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு நன்றாகத்தான் ஆடினார், ஆனால் கூர்மையான இன்ஸ்விங்கரை வைட் ஆப் த கிரீசிலிருந்து வீச கால்காப்பில் வாங்கினார், இங்கிலாந்து ரிவியூவில்தான் அவுட் தீர்ப்பு வெளியானது.

உஸ்மான் கவாஜா இறங்கியவுடனேயே கட் அண்ட் பவுல்டு ஆகியிருப்பார், பந்து ஓவர்டன் விரல்களில் பட்டுச் சென்றது. பிறகு 28 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஸ்லிப்பில்

ஸ்மித், கவாஜா கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 124 ரன்களைச் சேர்த்தனர். ஸ்மித் இறங்கியது முதலே தன் இஷ்டத்துக்கு பவுண்டரிகளை அடித்தார். முதல் கவர் டிரைவ், பிறகு ஒரு ஆஃப் டிரைவ், பின்னங்காலில் சென்று ஆஃப் திசையில் பஞ்ச், பிளிக் ஷாட்கள், ஒன்றிரண்டுகள் என்பதோடு பிராட் ஒருமுறை குத்தி எழுப்பிய பந்தை ஃபைன் லெக்கில் ஹூக் செய்து ரசிகர்கள் பகுதிக்கு சிக்ஸருக்கு அனுப்பினார். 58 பந்துகளில் அரைசதம் கண்டார், பிறகும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. 14 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 122 பந்துகளில் 92 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். மார்ஷ் 7 ரன்களுடன் உள்ளார். ஆஸ்திரேலியா 203/3 என்று இரண்டாம் நாளை முடிதுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/article21694457.ece

பெற்றோர் செய்த தியாகத்தை நினைத்து கண்ணீர் வந்தது: முதல் சதம் கண்ட டேவிட் மலான் உருக்கம்

 

maolanjpg

140 ரன்களில் வெளியேறிய டேவிட் மலான்.   -  படம்.| ஏ.பி.

ஆஷஸ் தொடர் என்றாலே உணர்ச்சிகளின் மோதல் களத்திலும் களத்திற்கு வெளியேயும் விரவிக் கிடப்பது அதிசயமல்ல. இதன் தொடர்ச்சியாக பெர்த்தில் தன் முதல் டெஸ்ட் சதம் கண்ட டேவிட் மலான் தன் தாய் தந்தையர் முன்னிலையில் இந்த ‘முக்கிய’ சதம் எடுத்தது தன் கண்களில் அழுகை பீறிடச் செய்தது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நேற்று 110 ரன்களில் இருந்த மலான் இன்று 140 ரன்கள் எடுத்து லயனின் ஒரேவிக்கெட்டாக வீழ்ந்தார்.

இந்நிலையில் தன் உணர்ச்சிகர சதம் குறித்து உருக்கமாகப் பேசிய டேவிட் மலான் கூறியதாவது:

மிகவும் உணர்ச்சிகரமான தருணம், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்காக என் தந்தையும் தாயும் செய்த எண்ணற்ற தியாகங்களை நினைத்து அவர்கள் முன்னிலையில் இந்தச் சதம் கண்ட போது நிதானம் உடைந்து என் கண்களில் அழுகை பீறிட்டது உண்மையே.

எனக்காக அவர்கள் செலவழித்த நேரத்துக்கு சதம் மூலம் திருப்பிச் செலுத்த முடிந்தது எனக்கு திருப்தி அளிக்கிறது.

தவறான காரணங்களுக்காக எங்கள் அணி வீரர்கள் பெயர் தலைப்புச் செய்தியான தருணத்தில் அவற்றை தணிப்பது வெற்றியே என்பதை உணர்கிறேன். இதனை நாங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

என்னுடைய முதல் 2 போட்டிகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் எடுப்பேன் என்று நான் நினைக்கவில்லை. மிகவும் கடினம், நான் என் ஆட்டத்தில் சிறிய மாற்றங்களைச் செய்தேன்.

இந்தப் போட்டிக்கு வருவதற்கு முன் சற்று அழுத்தம் ஏற்பட்டது. இன்னிங்ஸ் தொடக்கத்தில் கடினமாக இருந்தது, பிறகு நான் என்னை கடினமாக்கிக் கொண்டேன். அணிக்குத் தேவைப்படும் தருணத்தில் ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு முறை செய்தித்தாளை திறக்கும் போதும் நாம் இவ்வளவு மோசமாகவா ஆடுகிறோம் என்று நினைக்கும் போது, கேப்டன், பயிற்சியாளர் ஆதரவே உதவியது.

2-3 ஷாட்கள் சதத்தைப் பெற்றுத் தரும் என்று தெரிந்தது, அதனால் கொஞ்சம் முன் கூட்டியே ஷாட்களை தீர்மானித்தேன். ஆஸ்திரேலியர்கள் வீசும் வேகத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். இது நம்மை பல சோதனைகளுக்கு உட்படுத்துவதாகும். கவுண்ட்டி கிரிக்கெட்டில் 78 மைல்கள் வேகப்பந்துகள் எட்ஜ் எடுக்கும் என்று கவலைப்படுவோம், இங்கு வேகம் எனக்கு கை கொடுத்தது.

இவ்வாறு கூறினார் மலான்.

http://tamil.thehindu.com/sports/article21687263.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா

405/4 * (110.4 ov)

  • தொடங்கியவர்

ஸ்மித்- 229 , மிட்செல் மார்ஷ் - 181: பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 554 ரன்கள் குவிப்பு

ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்துள்ளது.

 
ஸ்மித்- 229 , மிட்செல் மார்ஷ் - 181: பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 554 ரன்கள் குவிப்பு
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2--வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 92 ரன்னுடனும், ஷேன் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201712161538491511_1_4smith002-ssss._L_styvpf.jpg

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 138 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 22-வது சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஷேன் மார்ஷ் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது.

201712161538491511_2_4smith001-sss._L_styvpf.jpg

5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்தின் 7 பந்து வீச்சாளர்கள் பந்து வீசி பார்த்தார்கள். எந்த பலனும் இல்லை. இருவரும் ரன்கள் குவித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300, 400 என ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

மிட்செல் மார்ஷ் தனது சொந்த மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். ஸ்மித்தின் இரட்டை சதத்தாலும், மிட்செல் மார்ஷின் சதத்தாலும் 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 229 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 181 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

201712161538491511_3_8australia001-s._L_styvpf.jpg

தற்போது வரை ஆஸ்திரேலியா 145 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிவேகமாக விளையாடி 350 ரன்களுக்கு மேல் முன்னிலை வகித்தால் இன்னிங்சை வெற்றி பெற வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/16153849/1134980/Perth-Test-smith-double-century-mitchell-marsh-181.vpf

  • தொடங்கியவர்

ஸ்மித் 229*, மிட்செல் மார்ஷ் 181*: ஆஸி. 549/4; மழையை எதிர்நோக்கும் இங்கிலாந்து

 

 

marsh-smith

இரட்டை சதம் முடித்த ஸ்மித்துடன் இரட்டைச் சதம் எதிர்நோக்கும் மிட்செல் மார்ஷ்.   -  படம். | ஏ.எஃப்.பி.

பெர்த் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து பந்து வீச்சை மைதானம் நெடுக சிதறடித்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஜோடி ஆட்டமிழக்காமல் 5-வது விக்கெட்டுக்காக இதுவரை 301 ரன்களைச் சேர்க்க, ஆஸ்திரேலிய அணி ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 549 ரன்கள் குவித்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்தைக் காட்டிலும் 146 ரன்கள் முன்னிலை வகிக்கும் ஆஸி. அணியில் ஸ்டீவ் ஸ்மித் 390 பந்துகளில் 28 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 229 ரன்கள் எடுத்தும் முதல் டெஸ்ட் சதம் கண்ட மிட்செல் மார்ஷ், 234 பந்துகளில் 29 பவுண்டரிகளுடன் 181 ரன்களையும் குவித்து நாட் அவுட்டாக இருக்கின்றனர்.

4-ம் நாள், 5-ம் நாள் மழை பெய்யலாம் என்ற வானிலை முன்னறிவிப்பு உள்ளதால் இப்போதைக்கு இங்கிலாந்து அணியினர் Waiting for Godot போல் மழைக்கடவுளை வரவேற்கக் காத்திருக்கின்றனர். வேறு வழி தெரியவில்லை. காரணம் நாள் முழுதும் ஒரே விக்கெட்தான், அதுவும் நல்ல வேளையாக ஷான் மார்ஷை (28) மொயின் அலி வீழ்த்தினார். மற்றபடி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஒரு எல்.பி. வாய்ப்பு நோபாலில் ஸ்மித்துக்குச் சாதகமாக, ஒன்றிரண்டு பந்துகள், அதிகமில்லை ஜெண்டில்மேன், ஒன்றிரண்டு பந்துகள் ஸ்மித்துக்கு எட்ஜ் ஆகி ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது, மற்றபடி ஸ்மித் சுதந்திரப் பறவையாக ஆடினார்.

ஒருவேளை மழை வந்து டெஸ்ட் டிரா ஆகி விட்டால், ஆஷஸ் கோப்பையை வைத்திருக்கும் அணி என்று இங்கிலாந்து பக்கம் ஒரு 10% நம்பிக்கை துளிர் விடும், அதாவது அடுத்த டெஸ்ட் போட்டிக்கான எனெர்ஜி அது. ஆனால் மனத்தளவில் அந்த அணியினருக்கு பெரிய அடி விழுந்துள்ளது. இது போன்ற பேட்டிங் ஆதிக்கத்தை எந்த ஒரு இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவில் சந்தித்திருக்குமா என்பது ஆய்வுக்குரியது.

203/3 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, ஸ்மித் உடனடியாகவே தன் 22-வது சதத்தை எடுத்தார். இன்று ஒரு விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. ஸ்மித் ஆட்டம் சரி, ஆனால் 22 டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் கண்ட மிட்செல் மார்ஷ் எப்படி இரட்டைச் சதத்துக்கு அருகில் வந்துள்ளார்? நிச்சயம் ஜோ ரூட் கேப்டன்சி, இங்கிலாந்து பேட்டிங் என்று நிறைய கேள்விகளை அந்த அணியினர் வரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டி வரும்.

இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சு கடும் ஏமாற்றமளித்தது, இவர்கள் இருவருடன் மொயின் அலி ஓவர் டன் ஆகியோரும் பந்து வீச்சில் சதம் அடித்தனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் 85 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார், இவரும் சதம் கண்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 8-வது முறை, ஒரு அணியில் 5 பவுலர்கள் 100-க்கும் மேல் ரன்களை விட்டுக் கொடுப்பது என்ற நிகழ்வு சாத்தியமாகும்.

நூற்றுக்கணக்கான அசைவுகளில் நகர்ந்து நகர்ந்து கவர் டிரைவ், பிளிக், ஆன் டிரைவ் என்று ஸ்மித்தை நிறுத்த முடியவில்லை. 138 பந்துகளில் தன் சொந்த வேக சதத்தை எட்டினார். மிட்செல் மார்ஷ் இறங்கியவுடன் பதற்றத்தில் ஒரு பந்தை அறியாமல் தூக்கினார், ஆனால் அது ஆளில்லா இடத்தில் விழுந்தது. ஆனால் அதன் பிறகு கட், டிரைவ், சிப் ஷாட்கள் என்று அசத்தினார், தேநீர் இடைவேளைக்கு முதல் ஓவரில் தன் முதல் சதத்தை அரங்கேற்றினார், பெர்த் அவரது சொந்த மண் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரோட்டமில்லாத பிராட் பந்து வீச்சில் 2 பவுண்டரிகளை பாயிண்டில் அடித்து சதம் கண்டார். 130 பந்துகளில் அதிரடி சதமாக அது அமைந்தது.

ஸ்மித் தன் இரட்டைச் சதத்தை எடுத்தார், ஆஷஸ் தொடரில் இரட்டைச் சதம் காணும் 5-வது கேப்டனானார் ஸ்மித், முன்னதாக பில்லி முர்டாக், டான் பிராட்மேன், பாப் சிம்சன், ஆலன் பார்டர் ஆகியோர் இரட்டைச் சதம் கண்ட கேப்டன்கள். இந்தத் தொடர் முடிந்தவுடன் ஸ்மித் பேட்டிங் அசைவுகள் இங்கிலாந்து அணியினரின் கனவுக்குள் புகுந்து அச்சுறுத்தும் என்றே தெரிகிறது.

மிட்செல் மார்ஷும் இரட்டைச் சதத்துக்கு அருகில் உள்ளனர், நாளை ஆஸ்திரேலிய அணியின் டிக்ளேரையும், மழையையும் எதிர்நோக்குகிறது இங்கிலாந்து. ஒருவேளை தோல்வியிலிருந்து இந்த டெஸ்ட்டை இங்கிலாந்து காப்பாற்றலாம், ஆனால் உளவியல் ரீதியாக பெரிய சோர்வை இந்தப் போட்டி இங்கிலாந்து அணியினடத்தில் ஏற்படுத்தியிருந்தால் அதற்குக் காரணம், அவர்களது பேட்டிங் சரிவு மற்றும் குக்கின் பார்ம், அனைத்திற்கும் மேலாக ஸ்டீவ் ஸ்மித்தின் இன்னிங்ஸ் என்றே கூற வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/article21822160.ece

  • தொடங்கியவர்

பெர்த்தில் ஆஸ்திரேலியா 662 ரன்கள் குவித்து டிக்ளேர்; இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து?

 

 
 

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் இங்கிலாந்து 4 விக்கெட்டை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

 
பெர்த்தில் ஆஸ்திரேலியா 662 ரன்கள் குவித்து டிக்ளேர்; இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து?
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த் வாகா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

ஸ்டோன்மேன் (56), தாவித் மலன் (140), பேர்ஸ்டோவ் (119) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டும், ஹசில்வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஸ்மித் இரட்டை சதமும், மிட்செல் மார்ஷ் 150 ரன்னும் அடித்தனர்.

இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்திருந்தது. ஸ்மித் 229 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 181 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201712171535383702_1_10vince001-s._L_styvpf.jpg
2-வது இன்னிங்சில் 55 ரன்கள் சேர்த்த வின்ஸ்

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் மேலும் 10 ரன்கள் எடுத்து 239 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் நேற்றைய 181 ரன்னுடன் வெளியேறினார். அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் பெய்ன் (49 அவுட் இல்லை), கம்மின்ஸ் (41) அதிரடியாக விளையாட ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 662 ரன்கள் குவித்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 3 ரன்கள் எடுத்த நிலையிலும், அலஸ்டைர் குக் 14 ரன்கள்  எடுத்த நிலையிலும் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த வின்ஸ் நிலைத்து நின்று விளையாட ஜோ ரூட் 14 ரன்னில் வெளியேறினார். வின்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு தாவித் மலன் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார்.

201712171535383702_2_10hazlewood001-s._L_styvpf.jpg
குக் அடித்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்த ஹசில்வுட்

இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. தாவித் மலன் 28  ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தாவித் மலன், பேர்ஸ்டோவ் விக்கெட்டை நாளை காலையில் விரைவாக வீழ்த்திவிட்டால், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 3-0 எனக் கைப்பற்றிவிடும்.

 

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/17153535/1135105/Perth-Test-AUSvENG-Australia-662-declared-england.vpf

132/4 * (38.2 ov)

Day 4: England trail by 127 runs with 6 wickets remaining

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியாவுக்கெதிரான 3ஆது ஆஷஸ் டெஸ்டில் போராடுகிறது இங்கிலாந்து
 

image_7fb9dd1009.jpgimage_5894706968.jpg

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், பேர்த்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக முடிவுக்கு வந்தபோது இங்கிலாந்து போராடி வருகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 403 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டேவிட் மலன் 140, ஜொனி பெயார்ஸ்டோ 119, மார்க் ஸ்டோன்மன் 56 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் 4, ஜொஷ் ஹேசில்வூட் 3, பற் கமின்ஸ் 2, நேதன் லையன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 9 விக்கெட் இழப்புக்கு 662 ஓட்டங்களைக் குவித்தபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 239, மிற்செல் மார்ஷ் 181, உஸ்மான் கவாஜா 50, டிம் பெய்ன் ஆட்டமிழக்காமல் 49, பற் கமின்ஸ் 41 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேம்ஸ் அன்டர்சன் 4, கிரேய்க் ஒவெர்ட்டன் 2, கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, இன்றைய நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக முடிவுக்கு வரும்போது, 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலிய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 127 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. தற்போது களத்தில், டேவிட் மலன் 28, ஜொனி பெயார்ஸ்டோ 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக, 55 ஓட்டங்களுடன் ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில், ஜொஷ் ஹேசில்வூட் 2, மிற்செல் ஸ்டார்க், நேதன் லையன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/அவுஸ்திரேலியாவுக்கெதிரான-3ஆது-ஆஷஸ்-டெஸ்டில்-போராடுகிறது-இங்கிலாந்து/44-208962

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியின் ஒரு சில காணொளிப்பதிவுகள்

  • தொடங்கியவர்

இங்கிலாந்து

149/5 *

 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியின் ஒரு சில காணொளிப்பதிவுகள்

  • தொடங்கியவர்
இங்கிலாந்திடமிருந்து ஆஷஸை மீளக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
 

 

image_9e9ec36bf2.jpgஅவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், முதலாவது, இரண்டாவது போட்டிகளில் ஏற்கெனவே வென்றிருந்த அவுஸ்திரேலியா, பேர்த்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட்டை இன்றைய ஐந்தாம் நாளில் வென்று, இங்கிலாந்தில் வைத்து 2015ஆம் ஆண்டு இழந்த ஆஷஸை, மீதம் இரண்டு டெஸ்ட்கள் இருக்கும் நிலையிலேயே கைப்பற்றிக் கொண்டது.

மழை பெய்தமை காரணமாக, ஆடுகளம் ஈரமாகக் காணப்பட்டதனால், இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் மதிய நேர உணவு நேர இடைவேளைக்குப் பின்னரே ஆரம்பித்த நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்பட்ட இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இனிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில்,  ஜேம்ஸ் வின்ஸ் 55, டேவிட் மலன் 54 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில்,  ஜொஷ் ஹேசில்வூட் 5, பற் கமின்ஸ், நேதன் லையன் ஆகியோர் தலா 2, மிற்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, அவுஸ்திரேலிய அணியின் இனிங்ஸில் 239 ஓட்டங்களைப் பெற்ற அவ்வணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவானார்.

ஸ்கோர் விபரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 403/10 (துடுப்பாட்டம்: டேவிட் மலன் 140, ஜொனி பெயார்ஸ்டோ 119, மார்க் ஸ்டோன்மன் 56 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 4/91, ஜொஷ் ஹேசில்வூட் 3/92, பற் கமின்ஸ் 2/84)

அவுஸ்திரேலியா: 662/9 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 239, மிற்செல் மார்ஷ் 181, உஸ்மான் கவாஜா 50, டிம் பெய்ன் ஆ.இ 49, பற் கமின்ஸ் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 4/116, கிரேய்க் ஒவெர்ட்டன் 2/110)

இங்கிலாந்து: 218/10 (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் வின்ஸ் 55, டேவிட் மலன் 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 5/48, பற் கமின்ஸ் 2/53, நேதன் லயன் 2/42)

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்திடமிருந்து-ஆஷஸை-மீளக்-கைப்பற்றியது-அவுஸ்திரேலியா/44-209030

  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடர்: 6 இன்னிங்சில் 5 முறை மொயீன் அலியை வீழ்த்திய நாதன் லயன்

ஆஷஸ் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 3 டெஸ்டில் 5 முறை மொயீன் அலியை நாதன் லயன் வீழ்த்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்

 
ஆஷஸ் தொடர்: 6 இன்னிங்சில் 5 முறை மொயீன் அலியை வீழ்த்திய நாதன் லயன்
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 3-வது போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

201712181239164467_1_1lyon002-s._L_styvpf.jpg

இந்த டெஸ்டில் ஒரு வேடிக்கை என்னவெனில், இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயீன் அலி மூன்று போட்டிகளில் 6 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். இதில் 5 முறை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார்.

201712181239164467_2_1lyon001-s._L_styvpf.jpg

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மொயீன் அலி 38. 40 ரன்களும், அடிலெய்டில் நடைபெற்ற பகல் - இரவு டெஸ்ட் ஆட்டததில் 25, 2 ரன்களும், தற்போது பெர்த்தி்ல் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 11 ரன்கள் எடுத்து லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்சில் ரன்ஏதும் எடுக்காமல் கம்மின்ஸ் ஆட்டமிழந்தார்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சுக்கு மொயீன் அலி திணறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/18123911/1135256/Nathan-Lyon-gotten-Moeen-Ali-five-times-out-of-six.vpf

  • தொடங்கியவர்

ஆஷஸ் மகுடத்தை இங்கிலாந்திடமிருந்து பறித்தது: பெர்த்தில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி!

 

 
ashes

ஆஷஸ் கலசத்தை இங்கிலாந்திடமிருந்து பறித்த ஆஸி. பெர்த்தில் கொண்டாட்டம்.   -  படம். | ஏ.எஃப்.பி.

பெர்த் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை மழையும் கைவிட அந்த அணி 2-வது இன்னிங்சில் 218 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஆஷஸ் மகுடத்தை இங்கிலாந்திடமிருந்து மீட்டு தொடரில் 3-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இன்று மழை காரணமாக ஆட்டம் 3 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது, பிட்ச் விளையாட முடியாத அளவுக்கு இரட்டை நிலை எய்தியது, சில பந்துகள் தாழ்வாக வர, பல பந்துகள் எழும்ப, கடுமையாக ஸ்விங்கும் ஆனது, டேவிட் மலான் மட்டுமே முதல் இன்னிங்ஸ் சதத்தைத் தொடர்ந்து அபாரமாக நின்று 2-வது இன்னிங்ஸிலும் 54 ரன்கள் எடுத்துத் தாக்குப் பிடித்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 18 ஓவர்கள் வீசி 6 மெய்டன்களுடன் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, கமின்ஸ். லயன் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் 368/4லிருந்து 403 ஆல் அவுட் ஆகி, ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டியும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆக்ரோஷ 239 ரன்கள் மற்றும் மிட்செல் மார்ஷின் அராஜக 181 ரன்களுடன் ஆஸ்திரேலியா 662/9 என்று டிக்ளேர் செய்தது.

இன்று அந்து நொந்து போன நிலையில் இங்கிலாந்து முழு சரணடைந்த போதும் ஜேம்ஸ் ஆண்டர்சன், கமின்ஸ் பவுன்சரில் காதோரம் ஹெல்மெட்டில் ஒரு அடி வாங்கியது இங்கிலாந்து அணியின் பரிதாப நிலையை தொகுத்துக்கூறுமாறு அமைந்தது.

3 மணி நேர மழை தாமதத்துக்குப் பிறகு இங்கிலாந்து அணி கடினமான பிட்சில் 70 ஓவர்கள் பக்கம் ஆட வேண்டியிருந்தது, அப்படி ஆடியிருந்தால் ஆஷஸ் மகுடத்தை இந்த டெஸ்ட் முடிந்த நிலையிலும் இங்கிலாந்து பக்கமே இருந்திருக்கும். ஆனால் தற்போது 5-0 ஒயிட்வாஷைத் தடுப்பது பற்றி அந்த அணி யோசிக்க வேண்டியுள்ளது, இது மட்டுமல்ல ஏகப்பட்ட விஷயங்களை இங்கிலாந்து தற்போது பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

முதல் நாள் பெய்த மழை நீர் மைதானத்தில் பிட்ச் கவருக்கு அடியிலும் ஊடுருவியது. இதன் தாக்கம் காரணமாக ஹேசில்வுட் பந்து ஒன்று தாழ்வாக வந்து பேர்ஸ்டோ மட்டையின் கீழ் சென்று ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. இதே ஓவரில் மொயின் அலி 2-வது ஸ்லிப்புக்கு எட்ஜ் செய்ய ஸ்மித் கேட்ச் எடுத்தார், ஆனால் நடுவர் சந்தேகம் மொயின் அலிக்குச் சாதகமாக அமைந்தது.

மொயின் அலி, டேவிட் மலான் சுமார் 15 ஓவர்கள் ஓட்டினர். நேதன் லயன் வழக்கம் போல் மொயின் அலியை ரவுண்ட் த விக்கெட் கோணங்களில் படுத்தினார், கடைசியில் ஒரு பந்து திரும்பாமல் நேரே செல்ல 11 ரன்களில் மொயின் நேராக வாங்கி வெளியேறினார்.

டேவிட் மலான் சுவராக நின்றார், புல் ஷாட்டில் பலமானவராக தெரிந்தாலும் 54 ரன்களில் லெக் திசையில் வந்த ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்றார், கிளவ்வில் பட்டு பெய்னிடம் கேட்ச் ஆனது, இதற்கு முதல் ஓவரில் மலானை அவர் படுத்தி எடுத்தார், அதன் விளைவாக தடுமாற்றமடைந்த மலான் கடைசியில் ஒன்றுமில்லாத பந்தில் அவுட் ஆக நேரிட்டது. கிரெய்க் ஓவர்டன், ஹேசில்வுட் பந்தை கவாஜாவிடம் கல்லியில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டூவர்ட் பிராடும் ஷார்ட் பிட்ச் பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

22 ரன்கள் எடுத்த கிறிஸ் வோக்ஸ், கமின்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தை விக்கெட் கீப்பரிடம் கிளவ் செய்து ஆட்டமிழந்தார், ஆஸ்திரேலியர்களின் கட்டிப்பிடி கொண்டாட்டம் தொடங்கியது. இங்கிலாந்து 72 ஓவர்களில் 218 ரன்களுக்குச் சுருண்டது. 41 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி தழுவியது. சுத்தமாக ஆஸ்திரேலியா இங்கிலாந்தை முழு ஆதிக்கம் செலுத்தி மனத்தளவில் பெரிய அச்சத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த டெஸ்ட் பாக்சிங் டே டெஸ்ட், டிசம்பர் 26-ம் தேதி மெல்பர்னில் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/article21831699.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.