Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா மக்களுக்கான உடனடி அறிவித்தல் :தொடரும் சீரற்ற காலநிலை-அபாய எச்சரிக்கை!

Featured Replies

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு : மக்களே அவதானம்

 

 

மலையகத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.

DSC01333.jpg

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது.

DSC01322.jpg

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

DSC01320.jpg

மேலும் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதிகளில் மற்றும் தலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC01318.jpg

 

 

http://www.virakesari.lk/article/25805

 

 

தொடர் மழை : மலையகத்தில் பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

 

 

DSC01322.jpg

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மலையகத்தில் பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய, கெனியன் நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு விமலசுரேந்திர நீர்தேக்கத்திலிருந்து மேலதிக நீர் வெளியாகுவதுடன், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் பிரதான வான்கதவு ஒன்றும் திறந்து விடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25807

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா மக்களுக்கான உடனடி அறிவித்தல் :தொடரும் சீரற்ற காலநிலை-அபாய எச்சரிக்கை!

 

ஸ்ரீலங்காவில்   அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் போது கடல் பகுதிகள் கொந்தழிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, வட மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும்  இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா மக்களுக்கான உடனடி அறிவித்தல் :தொடரும் சீரற்ற காலநிலை-அபாய எச்சரிக்கை!

குறிப்பாக மத்திய மாகாணத்தின் மலையகப்பிரதேசங்களிலேயே இடியுடன் கூடிய மழை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தில் நேற்று காலை முதல் நிலவி வரும் சீரற்ற கால நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப் படைந்துள்ளது.

பனி மூட்டம் நிறைந்து காணப் படுவதால் ஹட்டன், தலவாக்கலை  மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கு பயணிப்போர் அவதானத்துடன் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா மக்களுக்கான உடனடி அறிவித்தல் :தொடரும் சீரற்ற காலநிலை-அபாய எச்சரிக்கை!

மேலும் வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் கடல் பிரதேசங்களில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற் றர் வரை  காற்றின் வேகம் காணப்ப டும்.

இந்த நிலைமை  எதிர்வரும் 5 நாட்களுக்கு தொடரும். எனவே இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி எஹலியகொட பகுதியிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கை அதிகமாக நிலவுவதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா மக்களுக்கான உடனடி அறிவித்தல் :தொடரும் சீரற்ற காலநிலை-அபாய எச்சரிக்கை!

கலபட பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் சுமார்  80 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக நிறுவகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, எஹலியகொட, அயகம, கிரிஅல்ல, நிவித்திகல, கொலன்ன மற்றும் பல்மடுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்தர, கொட்டபொல பகுதிகளிலும் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, புலத்கொகுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ,கோரளை மற்றும் காலி மாவட்டத்தின் நெலுவ, நாகொட,தவலம, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா மக்களுக்கான உடனடி அறிவித்தல் :தொடரும் சீரற்ற காலநிலை-அபாய எச்சரிக்கை!

களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா, மாத்தறை, கேகாலை, மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா மக்களுக்கான உடனடி அறிவித்தல் :தொடரும் சீரற்ற காலநிலை-அபாய எச்சரிக்கை!

குறிப்பாக தாழ்நிலப்பகுதியில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/immediate-announcement-of-the-Sri-Lankan-people

  • தொடங்கியவர்

மஸ்கெலியாவில் மினி சூறாவளி : 16 பேர் பாதிப்பு

 

 

மஸ்கெலியா - சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

DSC01359.jpg

இச்சூறாவளியினால் 5 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் சேமாகியுள்ளது.

மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.

DSC01357.jpg

பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்கு நிவாரணங்களை வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேசவாசிகள், கிராம சேவகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மலையக பகுதிகளில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது.

DSC01356.jpg

இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

DSC01365.jpg

 

 

http://www.virakesari.lk/article/25826

  • தொடங்கியவர்

குடா மஸ்கெலியா பிரதேசத்தில் மண்சரிவு அபாயம்

 

 

மஸ்கெலியா - குடா மஸ்கெலியா பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு குடியிருப்பைச் சேர்ந்த 5 பேரை வேறு இடங்களுக்கு இடம்பெயருமாறு இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DSC02736.jpg

குடா மஸ்கெலியா பகுதியில் குறித்த வீட்டிற்கு அருகில் ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால், வீட்டிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதிலும் சேதமாகியுள்ளது.

DSC02737.jpg

இதன் காரணமாக குடியிருப்பில் தங்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு கிராம சேவகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா மவுசாகலை பகுதியில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக, அதனை அண்டிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

DSC02745.jpg

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/25821

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.