Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்‌ஷ

Featured Replies

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்‌ஷ

 

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்‌ஷ

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்திருந்தது.

எவ்வாறாயினும் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாகவும், எனினும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட உள்ளார்.

இந்த திட்டத்தின் போது, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 90 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=96577

  • தொடங்கியவர்

கோத்தாவிடம் 3 மணி நேரம் விசாரணை

 
கோத்தாவிடம் 3 மணி நேரம் விசாரணை
 
 

அமெரிக்காவுக்குச் சென்று இன்று அதிகாலை நாடு திரும்பிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தை வந்தடைந்த அவரிடம் பொலிஸ் நிதி மோசடிப்பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது.

மகிந்த அரசின் காலத்தில் அருங்காட்சியம் மற்றும் நினைவகம் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நிதி மோசடி தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் திட்டத்தில் சுமார் 90 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

http://newuthayan.com/story/38401.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் தங்களுக்கை கள்ளன்பொலிசு விளையாட்டு விளையாடி எங்களுக்கு  காட்டுறான்....நாங்களும் ஆவெண்டு பாத்துக்கொண்டிருக்கிறம்..:grin:

  • தொடங்கியவர்

கோத்தா கைதாவார் எனப் பரவிய தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு : எந்த சிக்கலும் இன்றி வீடு திரும்பினார் 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் முன்னெடுத்திருந்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.

gotabaya-rajapaksa.jpg 

இந் நிலையில் அவர் இன்று கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்படுவார் என பரவலாக தகவல்கள் அரசியல் வட்டரங்களில் இருந்து பரவிய போதும், எந்த சிக்கலும் இன்றி அவர் வீடு திரும்பினார்.

 

 கோத்தாபய கைது செய்யப்படவுள்ளதாக இன்று பரவிய வதந்தியால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. ஊடகவியலாளர்கள் பலரும் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். கோத்தபாய ராஜபக்ஷ எந்த சிக்கலும் இன்றி விமான நிலையத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

 

டி.ஏ. ராஜபக்ஷ மன்ற நிர்மாணத்தின் போது அரச  பணம் மோசடி தொடர்பில் கோத்தபாய கைது செய்யப்படப்போவதாக பரவலாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில் இது தொடர்பில் வீரகேசரி இணையத்தளம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவிடம் வினவியபோது,

இன்று காலை கோத்தாபய கைது செய்யப்படப் போவதாக தகவல்கள் பரவலாக பரவிய போதும், அவ்வாறு எந்த கைது நடவடிக்கைகளுக்கும் பொலிஸார் தயாராக இருக்கவில்லை என தெரிவித்தார். 

அத்துடன் விமான நிலையத்தில் வைத்து கோத்தாபய தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியுள்ளதாகவும் அவ்வாறு  எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

http://www.virakesari.lk/article/26029

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.