Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவ­லூர் ஏ.எஸ்.பி. குறித்து ஐவர் இர­க­சிய வாக்­கு­மூ­லம்

Featured Replies

காவ­லூர் ஏ.எஸ்.பி. குறித்து ஐவர் இர­க­சிய வாக்­கு­மூ­லம்

ஊர்­கா­வற்­றுறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு எதி­ராக ஐவர் இர­க­சிய வாக்கு­ மூல­ம­ளித்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஊர்­கா­வற்­று­றைப் பகு­தி­யில் நீண்­ட­கா­ல­மா­கப் பணி­யாற்­றிய உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் அங்­குள்ள சில­ரி­டம் கையூட்டு மற்­றும் பொருள்­க­ளைப் பெற்­ற­தோடு ஊர்­கா­வற்­று­றைப் பகு­தி­யில் இருந்து பலரை அழைத்­துச் சென்று கண்­டி­யில் வீடு­ கட்­டி­னார் என அவர் மீது பல குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

சக பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­னா­லும் அந்­தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

எனி­னும் அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­ப­டாது அவர் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக அதே பிர­தே­சத்­தில் பணி­யாற்­றிமை தொடர்­பில் விச­னம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த விட­யம் ஊட­கங்­கள் வாயி­லாக பொ லிஸ்மா அதி­ப­ரின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

இது தொடர்­பில் ஆரா­யப்­ப­டும் என பொலிஸ் மா அதி­பர் கடந்த 3 மாதங்­க­ளுக்கு முன்­னர் ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் அந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பில் கடந்த 15 ஆம் திகதி கொழும்­பில் இருந்து வந்த அதி­கா­ரி­கள் விசா­ர­ணை­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

அந்த அதி­கா­ரி­கள் குழு பொலிஸ் மா அதி­பர் பூஜித ஜெய­சுந்­த­ர­வால் நிய­மிக்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஊர்­கா­வற்­று­றைப் பிர­தே­சத்­தில் கையூட்­டல்­களை வழங்­கி­ய­தாக இனம்­கா­னப்­பட்­ட­வர்­க­ளி­டம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் நிலைத்­துக்கு அழைத்து விசா­ரணை செய்­யாது தனித்­த­னி­யாக இர­க­சி­ய­மாக இந்த விசா­ர­ணை­கள் இ்டம்­பெற்­றன.

பொலிஸ் அதி­கா­ரி­யால் கண்­டி­யில் கட்­டப்­பட்ட வீட்­டுக்கு ஒப்­பந்­தப் பணி மேற்­கொண்­ட­வர், அதற்­கான பொருள்­களை விநியோ­ கித்­தோர், வர்­ணம் பூசி­ய­வர்­க­ளி­டம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன-.

இந்த விசா­ர­ணை­க­ளில் ஐவர் இர­க­சிய வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ள­னர்.

அதில் ஒரு­வர் மட்­டும் குறித்த பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்­காக மன­மு­வந்தே வழங்­கி­னேன் எனத் தெரி­வித்­துள்­ளார்.

விசார­ணைகள் முடி­வ­ டைந்­துள்ள நிலை­யில் அதி­கா­ரி­கள் இங்­கி­ருந்து சென்­றுள்­ள­னர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

http://newuthayan.com/story/38731.html

  • தொடங்கியவர்

காவ­லூர் ஏ.எஸ்.பி மீது குற்­றச்­சாட்டு; மூடி மறைப்­ப­தற்­குப் பெரும் முயற்சி

வாக்­கு­மூ­ல­ம­ளித்­த­வர்­க­ளின் பணம் மீண்­டும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கி­றது என தெரி­விப்பு

 

ஊர்­கா­வற்­றுறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு எதி­ரா­கச் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை மூடி­ம­றைக்­கும் செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன.

வாக்­கு­மூ­ல­ம­ளித்­த­வர்­க­ளு­டைய பணம் மீண்டும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கி­றது என தெரி­விக்­கப்­பட்­டது.

ஊர்­கா­வற்­று­றைப் பகு­தி­யில் நீண்­ட­கா­ல­மா­கப் பணி­யாற்­றிய உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் அங்­குள்ள சில­ரி­டம் கையூட்­டல்­க­ளைப் பெற்­ற­தோடு ஊர்­கா­வற்­று­றைப் பகு­தி­யில் இருந்து பல­ரைக் கண்­டிக்கு அழைத்­துச் சென்று அங்கு தனக்கு வீடு கட்­டி­னார் என்று அவர் மீது குற்­றச் சாட்டு க்கள் முன்­வைக்­கப்­பட் டன.

சக பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­னா­லும் அந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்கப் பட்டன.

எனி­னும் அவ­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­ப­டாது, அவர் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக அதே பிர­தே­சத்­தில் பணி­யாற்­றிமை தொடர்­பில் விச­ன­மும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

இந்த விட­யம் பத்­தி­ரி­கை­கள் வாயி­லாக பொலிஸ்மா அதி­ப­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

இது தொடர்­பில் ஆரா­யப்­ப­டும் என தெரி­வித்த பொலிஸ் மா அதி­பர் 3 மாதங்­க­ளின் பின்­னர் அந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்கு அதி­கா­ரி­களை நிய­மித்­தார்.

அத­ன் அடிப்­ப­டை­யில் கடந்த 15 ஆம் திகதி கொழும்­பில் இருந்து ஊர்­கா­வற்­று­றைக்கு வந்த அதி­கா­ரி­கள் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ர­ணை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு கையூட்­டல்­களை வழங்­கி­னார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்ட ஐவ­ரி­டம் இருந்து அவர்­கள் வாக்­கு­மூ­லங்­க­ளைப் பெற்­ற­னர். இர­க­சி­ய­மான முறை­ யில் வாக்­கு­மூ­லங்­கள் பெறப்­பட்­டி­ருந்­தன.

 

இந்த நிலை­யில் வாக்­கு­மூ­ல­ம­ளித்­த­வர்­க­ளில் இரு­வ­ருக்கு நேற்றுமுன்­தி­னம் மாலை அவர்­க­ளு­டைய பணம் மீண்­டும் கொடுக்­கப்­பட்டுள்­ளது.

ஏனை­ய­வர்­க­ளு­ டைய கொடுப்­ப­னவு தொடர்­பி­லும் கணக்­கு­கள் திரட்டப்ப டு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்­வாறு பணம் வழ ங் கப்­ப­டு­வ­தன் மூலம் குறித்த மோச­டியை மூடி­ம­றைக்க முற்­ப­டு­கின்­ற­னர் என்ற குற்­றச்­சாட் டு அங்கு முன்­வைக்­கப் பட்­டுள்­ளன.

http://newuthayan.com/story/40074.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.